தண்ணீர் மையமான சுற்றுலா தினம்
மூன்றாவது
உலகப்போர் மூண்டால் அது தண்ணீருக்காகத் தான் தொடங்கும் என்று அறிவிய
லாளர்கள் கடந்த சில ஆண்டு களாக எச்சரித்து வருகின்றனர். அந்த அளவுக்கு
தண்ணீர் பற்றாக் குறை உருவாகி வருகிறது. தண் ணீர் பற்றாக்குறைக்கு இயற்கை
யை மட்டும் காரணமாக கூறமுடி யாது. தண்ணீர் பற்றாக்குறைக்கு முழு
முதற்காரணமாக மனிதனை கூற வேண்டும். தமிழகத்தில் அண்மையில் பெய்த மழையில்
எட்டு டிஎம்சி தண்ணீர் கேட்பா ரற்று கடலில் கலந்து வீணானது. இதையெல்லாம்
மனதில் கொண்டு தான் ‘சுற்றுலாவும், நீரும் - நமது பொதுவான எதிர்காலத்தை
பாது காப்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து செப்டம்பர் 27 அன்று உலக
சுற்றுலா தினம் கொண்டா டப்பட்டது. ஐ.நா. அமைப்புகளில் ஒன்றான உலக சுற்றுலா
அமைப்பின் மூன் றாவது பொதுக்குழு கூட்டத்தில் ஆண்டு தோறும் செப்டம்பர் 27 ஐ
உலக சுற்றுலா தினமாக கொண்டா டுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
சுற்றுலாவின் முக்கியத்துவம் குறித்து உலகெங்கும் விழிப்புணர்வு
ஏற்படுத்தவும், சுற்றுலா எவ்வாறு உலக நாடுகளின், உலக மக்களின் சமூக,
கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது
என்பதை உலக மக்களுக்கு எடுத்துக்கூறவும் இந்த உலக சுற்றுலா நாள் கடைப்
பிடிக்கப்படுகிறது.
1997ல் நடந்த உலக சுற்றுலா அமைப்பின் கூட் டத்தில் ஒவ்வோரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் இந்த விழா வை நடத்துவது என்று முடிவெடுக் கப்பட்டது. உலக சுற்றுலா அமைப்பு இவ்வாண்டில் சுற்றுலாவை தனது பொருளாதார அடித்தளமாக கொண்டு செயல்பட்டு வரும் மாலத் தீவுகளில் உலக சுற்றுலா தினத்தை கொண்டாடுகிறது. மனித நாகரீகங்கள் அனைத் தும் நதிக்கரைகளில் தான் உரு வாயின என்பதை மனிதகுல வர லாற்று ஆய்வாளர்கள் அறுதியிட்டு கூறுகிறார்கள். மனித குலத்தின் வளர்ச்சிக்கு தண்ணீர் ஆற்றியுள்ள பங்கினை யாரும் மதிப்பிட்டு கூறமுடியாது. அதே போல் மனித குலம் நடத்திய பல யுத்தங்களுக்கு நீர், நீர் வழிகள், நீர் நிலைகள் காரண மாகவும் இருந்துள்ளன. சூயஸ் கால்வாய்க்காக நடந்த யுத்தத்தை இதற்கு உதாரணமாக கூறலாம். உலகளவில் தண்ணீர் பராமரிப்பு , சேகரிப்பு, பாதுகாப்பு ஆகியவற்றின் மீது சுற்றுலா ஏற்படுத்தும் தாக்கத் தையும், அவற்றில் சுற்றுலாவுக்கு உள்ள பங்கினையும் அழுத்தமாக கூறுவதற்காக இந்த முழக்கத்தை இவ்வாண்டு சுற்றுலா தினத்தில் உலக சுற்றுலா அமைப்பு முன் வைத்துள்ளது. சுற்றுலாவில் தண்ணீர்க் கென்று ஒரு ஈர்ப்பு சக்தி உண்டு. குற்றாலம் நீர்வீழ்ச்சி போன்ற நீர்வீழ்ச்சிகளும், கேரளாவின் உப் பங்கழிகளும், காஷ்மீரின் தால் ஏரியும், இமாலயத்தின் கங்கோத்ரி யும், மானசரோவர் ஏரியும், வெனி சின் நீர் வீதிகளும், ஆம்ஸ்டர்டா மின் கால்வாய்களும் இன்றும் மக் களை சுற்றுலாவை நோக்கி ஈர்ப்ப தில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஜோர்டானில் உள்ள சாக்கடல் என்று கூறப்படும் உப்புக்கடலும் பெருமளவு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. தண்ணீர் சேகரிப் பில் சுற்றுலா துறைக்கு ஆணி வேராக விளங்கும் ஓட்டல்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின் றன. அதே போல் கோல்ப் விளை யாட்டு மைதானங்களின் பராமரிப் பும் தண்ணீர் சேகரிப்புக்கு எதிர் விளைவை ஏற்படுத்துகின்றன. எனவே தண்ணீரை பராமரிப்பது, பாதுகாப்பது, பகிர்வது, மற்றும் நிர்வகிப்பது ஆகியவை சுற்றுலா துறைக்கு மிகவும் இன்றியமையா செயல்களாகும். வெனிசின், ஆம்ஸ்டர்டாமின் நீர்வழிகள் சுற்றுலா பயணிகளை கவர்வதின் மூலம் நாட்டின் செல் வாதாரத்தை உயர்த்துகின்றன.
மாலத்தீவு, இந்தோனேசியாவின் பாலி தீவுகள், பிஜி, ஹவாய், காம் பியா, கரிபியன் தீவுகள் ஆகியவை சுற்றுலா மூலம் பெரும் வருமா னத்தை அடைகின்றன. இவை யெல்லாம் முறையாக பராமரிக்கப் படுகின்றனவா என்ற கேள்வி மனதுக்குள் எழுவது இயல்பு. நீர் வழி களான கால்வாய்களை எவ் வாறு பராமரிப்பது என்பதை ஆம்ஸ் டர்டாம், வெனிஸ் நகர்களில் கற் றுக்கொள்ள வேண்டும்நமது நாட்டில் நீர்நிலைகள் எல்லாம் கான்கிரீட் காடுகளாக மாற்றப்பட்டு விட்டன. மதுரை நகரில் தல்லாகுளம் கண்மாயை அழித்து அண்ணா மாளிகையும், சட்டக் கல்லூரியும், மதிச்சியம் கண்மாயை அழித்து பேருந்து நிலையமும், உலகநேரி கண்மாயை அழித்து உயர்நீதிமன்றமும் கட்டப் பட்டன. மதுரையை சுற்றி கிடக்கும் தரிசு நிலங்கள் இன்றும் தரிசா கவே உள்ளன. இருக்கும் நீர்நிலை களுக்கு தண்ணீர் கொண்டு வரும் கால்வாய்கள் ஆக்கிரமிப்புக்கு ஆளாகிக் கிடக்கின்றன. பல பரா மரிப்பு இன்றி சிதைக்கப்பட்டுள் ளன. பல மூடப்பட்டுவிட்டன. சென்னையில் பள்ளிக்கரணை என்ற சதுப்பு நிலம் குப்பைகளால் மூடப்பட்டு வருகிறது.நீர்நிலைகளை பராமரிப்பதில் அரசின் பங்கு மிக அவசியமான தாகும். அரசு அவற்றை அன்று மூடியதால் இன்று மக்கள் நிலத்தடி நீருக்கு திண்டாடுகிறார்கள். இருக் கும் நீர்நிலைகளை அரசு தன் பரா மரிப்பில் எடுத்துக் கொண்டு அவற்றை பராமரிக்க வேண்டும். நீர் நிலைகளை பாதிக்கும் தொழிற் சாலைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. நீர்நிலைகளில் கழிவு நீரைக் கொட்டும் நிறுவனங்களை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் சாய ஆலை கள் நொய்யல் ஆற்றை சீரழித்து விட்டன.
அரசுடன் மக்களும் நீர்நிலை களை பாதுகாப்பதில் ஆர்வத்து டன், கவனத்துடன் செயல்பட வேண்டும்.கழிவுகளையும், பிளாஸ்டிக் பொருட்களையும் அங்கு கொட்டக்கூடாது.சுற்றுலா பயணிகள் படகுகளில் செல்லும் போது கழிவுகளை நீரில் எறிவதை தடுக்க வேண்டும். சுத்தமான தண்ணீர் மனித ஆரோக்கியத்துக்கு அவசியமானதாகும். எனவே நீரை அசுத்தம் செய்வதை தடுக்க வேண் டும். சுற்றுலா பயணிகள் நீர்நிலை களில் அல்லது நீர்வழிகளில் செய் யக்கூடாதவை என்ன, செய்ய வேண்டியவை என்ன என்று எடுத் துரைக்கும் அறிவிப்புகள் வைக்கப் பட வேண்டும், சிறு பிரசுரங்கள் கொடுக்கப்பட வேண்டும். சுற்றுலா தொடர்புடைய தொழில்களில் த்ண் ணீர் சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கப்படுவதை கட்டாயமாக்க வேண்டும் தண்ணீரை பாதுகாப்போம், எதிர்கால சந்ததியினர் மகிழ்ச்சி யாக வாழ நாம் பாடுபடுவோம் என்ற பொருள் கொண்ட முழக்கம் இந்த சுற்றுலா தினத்தின் மையக்கருத் தாக அமைந்தது சாலப்பொருத் தமே

No comments:
Post a Comment