Friday, October 25, 2013

மறைப்பதும் மறப்பதும் மார்க்சிஸ்ட்டுகள் அல்ல!
- க.ராஜ்குமார்
தமிழருவி மணியன் அவர்கள், 25-10-13 தேதிய தினமணியில் தெரிவித்துள்ள கருத்துக்கள், மதச்சார்பற்ற கட்சிகளின் அணிச்சேர்க்கை அவரை எந்த அளவிற்கு பாதித்துள்ளது என்பதையே வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. மார்க்சியர்கள் ஏதோ செய்யக் கூடாததை செய்துவிட்டதாக ஒரே அடியாக புலம்பித் தள்ளியுள்ளார். அவரது பதற்றத்தில், அவரை அறியாமல் பல விஷயங்கள் குறித்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அவர் மறைக்க நினைத்தாலும், மறக்க நினைத்தாலும் அவரது மனசாட்சி அதற்கு தயாராக இல்லை.எனவேதான் தனது கட்டுரையில், ‘குஜரத்தில் 2002-ல் நடந்த படுகொலை’ என்ற வார்த்தையை அவர், அவரை அறியாமலேயே திரும்ப, திரும்ப குறிப்பிட வேண்டியதாயிற்று. இந்த படுகொலைக்கு தலைமை தாங்கியவர், பின்பலமாக இருந்தவர் திருவாளர் மோடிதான் என்று, அம்மாநில முன்னாள் காவல்துறைத் தலைவர் கூறியிருப்பதை ஏன் நண்பர் மணியன் மறைக்கப்பார்க்கிறார்? பல்வேறு மொழிகள், பல மதங்கள், பல கலாச்சாரங்கள் உள்ள இந்திய நாட்டு மக்களுக்கு தலைமை தாங்க மோடி போன்ற, குறுகிய நோக்கங்கள் கொண்ட தலைவர்களுக்கு தகுதி இல்லை என்பது தெரியாதா?“ பாபர் மசூதி இடிப்பு கடவுளின் தீர்ப்பு” என்று பரவசப்பட்ட கல்யாண்சிங் பாஜகவிலிருந்து வெளியேறி முலாயம் சிங் கூட்டணிக்கு சென்றதை மேற்கோள் காட்டும் நண்பர் மணியன், இதன் மூலமாக, அவரை அறியாமல் பாபர் மசூதி இடிக்கப்பட்டது எவ்வளவு பெரிய தவறு என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த பாபர் மசூதி இடிப்புக்கு பின்னால் கல்யாண்சிங் மட்டும்தான் உள்ளாரா? பிஜேபி தலைவர்கள், அத்வானி, உமாபாரதி போன்ற வர்களுக்கு பங்கில்லையா? மசூதியை இடிக்க ‘சங் பரிவார்’; கூட்டத்திற்கு உத்தரவு போட்டது ஆர்.எஸ்.எஸ் என்பதை நண்பர் மணியன் மறந்து விட்டாரா? இன்று அந்த ஆர்.எஸ்.எஸ். வேட்பாளராகத்தானே மோடி உருவெடுத்திருக்கிறார்? இதை நண்பர் மணியன் மறைக்கலாமா? மறக்கலாமா? இதற்கு அவரது மனசாட்சி இடம் தராது என்பதைதானே அவரது எழுத்துக்கள் வெளிப்படுத்தியுள்ளன.
சிறுபான்மையின மக்களின் வாக்குகளை பெறுவதற்காகவே அதிமுக இப்போது பாஜக விடமிருந்து விலகி நிற்கிறது என்று அவர் ஆரூடம் சொல்லும்போதே, பாஜக சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்ற செய்தியையும் நண்பர் மணியன் ஒப்புக்கொளள்ளத்தானே செய்கிறார்? மலினமான மக்கள் விரோத அரசை அகற்ற மார்க்சியர்கள் அமைக்கும் மூன்றாவது அணி… என அவர் குறிப்பிடும் இடத்தில் மக்கள் விரோத காங்கிரஸ் அரசுடன், இந்த 5 ஆண்டுகாலம் இரகசியமாக கூட்டு வைத்து, பொருளாதார சீர்திருத்தம் என்று, வங்கிகளை சீரமைப்பது என்ற பெயரில் தனியார் மயமாக்கவும், காப்பீட்டுத்துறையில் அந்நிய முதலீடுகளை அனுமதிக்கவும், பொதுத்துறை நிறுவன பங்குகளை விற்பதற்கும்,
புதிய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கும், மற்றும் பல மக்கள் விரோத மசோதாக்களை காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கும் கையை தூக்கி உடந்தையாக இருந்த பாரதிய ஜனதா கட்சியை மக்களிடமிருந்து தப்பிக்க வைத்துவிடலாம் என்றால் முடியுமா இந்த காலக்கட்டத்தில், காங்கிரஸ் தலைவர்களுக்கு இணையாக, பங்காரு இலட்சமணன், எடியூரப்பா, நிதின்கட்காரி போன்ற பிஜேபி தலைவர்களும் போட்டி போட்டுக் கொண்டு ஊழலில் திளைத்துப்போய், கையும் களவுமாக பிடிபட்டு அம்பலப்பட்டு போயிருப்பதை நண்பர் மணியன் மறைக்கப் பார்க்கிறாரா? இவர் வக்காலத்து வாங்கும் திருவாளர் மோடி ஆட்சிசெய்யும் குஜராத்தில் நடைபெற்று வருகின்ற ஊழல் பட்டியல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளதே? இதற்கு அவர் என்ன செய்யப் போகிறார்?மதச்சார்பற்ற கட்சிகளின் அணிச் சேர்க்கை தவிர்க்க முடியாதது.
காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய கட்சிகளை, அவர் களின் செயல்பாடுகள் காரணமாக, இந்திய மக்கள் நிராகரிக்க முடிவு செய்து விட்டனர். ஆங்காங்கே உள்ள மாநிலக் கட்சிகளே மக்கள் முன் சரியான மாற்றாக பார்க்க முடிகிறது. இதன் வெளிப் பாடே ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், தேசிய ஜனநாயக கூட் டணியும் சிதைந்து வருவதும், இவ்விரு கூட்டணிகளில் இடம் பெற்றிருந்த பல்வேறு மாநிலக் கட்சிகள் வெளியேறுவதுமாக உள்ளன. இவற்றையெல்லாம் மறந்து விட்டு, மறைத்துவிட்டு நண்பர் மணியன் மார்க்சியர்களை விளாசி தள்ளுகிறார்.
மாநிலக் கட்சிகள் வலுப்பெறுவதற்கு காங்கிரஸ் மற்றும் பிஜேபியின் மக்கள் விரோத நடவடிக்கைகளே காரணம் என்பதை அவர் சொல்ல தயாராக இல்லை. காங்கிரஸை விமர்சிக்க துணிவுள்ள அவருடைய எழுதுகோலுக்கு பிஜேபியை விமர்சிக்கத் துணிவில்லை; திராணி இல்லை.தேர்தலுக்கு முன் மூன்றாவது அணி இல்லை என்பதை இடதுசாரிகளும், மதச்சார்பற்ற கட்சிகளின் தலைவர்களும் திரும்ப திரும்ப சொன்னப்பிறகும் மூன்றாவது அணி குறித்து திரு மணியன் அச்சப்படுவது, தேர்தலுக்குப் பிறகு நிச்சயம் மாநி லக்கட்சிகள் வெற்றி பெற்று காங்கிரஸ்- பிஜேபிக்கு மாற்றாக ஒரு கூட்டணி ஆட்சி அமையும் என்பதை அவர் நன்கு உணர்ந்துள்ள காரணத்தினாலேயே அவருக்கு இந்த பதற்றம் ஏற்பட்டுள்ளது.
அவர் தூக்கி பிடித்துள்ள, பிரதமர் நாற்காலி மீது ஆசை வைத்துள்ள மோடியை இந்திய மக்கள் ஏற்க மாட்டார்கள் என்ற முடிவிற்கு நண்பர் மணியன் வந்து விட்டதாலேயே அவர் அச்சப்படுகிறார். இந்திய நாட்டின் பிரதமர் பதவியே மாhக்சிஸ்ட்டுகளை தேடிவந்து, காத்துக்கொண்டிருந்தபோது அதை ஏற்க மாட்டோம் என்று சொல்லக் கூடிய துணிவு மிக்கவர்கள் மார்க்சிஸ்ட்டுகள். எந்த அமைச்சர் பதவியைக் கேட்டிருந்தாலும் கிடைக்கும் என்ற நிலையில், ஐக்கிய முற்போக்கு கூட்டணி -1 ஆட்சிக்கு வெளியே இருந்து ஆதரவு தந்தவர்கள் இடதுசாரிகள். அவர்கள் நினைத் திருந்தால் அமைச்சரவை பதவி மட்டுமல்ல பல மாநிலங்களின் ஆளுநர்களாகக் கூட சென்றிருக்க முடியும். ஆனால் குறைந்த பட்ச செயல் திட்டத்தை உருவாக்கி, அதன் மூலம் இன்று கிராம மக்களின் உயிர் மூச்சாக உள்ள, கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தை உருவாக்கியவர்கள் மார்க்சியர்கள் என்பதை எல்லாம் மறந்து விட்டு மார்க்சிஸ்ட் கட்சியின் மீது அவதூறு எழுத நண்பர் மணியனுக்கு எப்படி துணிவு வந்ததோ?காங்கிரஸ் மற்றும் பிஜேபி ஆகிய கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர். இந்த இரு கட்சிகளின் கூட் டணி கூடாரங்களிலிருந்தும் பல கட்சிகள் ஏற்கனவே வெளி யேறிவிட்டன.
இதன் காரணமாக மாநிலக்கட்சிகள் வலுப்பெறும் நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அரசியல் அறிந்தவர்கள் அனைவரும் அறிவர். இன்றைய இந்திய அரசியல் போக்கு தவிர்க்க முடியாதது என்பதும், இதில் சில மாநிலக் கட்சிகளிடம் தடுமாற்றம் இருக்கும் என்பதும் அறிந்ததே. இதை காங்கிரசும் பிஜேபியும் மீண்டும் பயன்படுத்திக்கொண்டு மக்களை சுரண் டும் ஆட்சியை அமைத்துவிடக்கூடாது என்பதற்காகவே மார்க் சிஸ்ட்டுகளின் இன்றைய செயல்பாடு என்பதை மணியன் அறியாவிட்டாலும் மக்கள் அறிவர்.
ஏனெனில் மார்க்சிஸ்ட்டுகள் மறக்க கூடியவர்களும் அல்ல மறைப்பவர்களும் அல்ல என்பது அவர்களுக்கு தெரியும்

Friday, October 18, 2013

நாம் எப்போதும் சகோதரர்களாகவே இருப்போம்!



1919 ஏப்ரல் 13. நாற்புறமும் மதிற்சுவரால் சூழப்பட்ட ஜாலியன் வாலாபாக் திடலில் அறுவடைத் திருவிழாவைக் கொண்டாடுவதற்காக கூடியிருந்த அப்பாவி மக்கள் மீது போலீஸ் அதிகாரி டயர் துப்பாக்கிச் சூடு நடத்தினான். வேட்டையாடலுக்குப் பின் குவிந்து கிடந்த காட்டுக் கோழிகள் போல் கொல்லப்பட்ட உடல்கள் தாறுமாறாகக் கிடந்தன.பிணங்களின் மீது நின்று ஆங்கிலேய அதிகார வெறி, டயர் வடிவில் எக்காளமிட்டது. தேசம் பதறியது. பஞ்சாப் மாகாணத்தின் லாகூர் நகரும் அமிர்தசரசும் போராட்ட வெக்கையில் தகித்துக் கொண்டிருந்தன.
அந்தச் சூட்டை அடைகாத்து அதிலிருந்து தன் முதல் கதையைப் பிரசவித்தவர்தான் எழுத்தாளர் சாதத் ஹசன் மண்ட்டோ. அதன் பெயர் ‘தமாஷா’.1936-ல் அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு ‘மண்ட்டோ கி. அப்சானே’ வெளியானது. உருது இலக்கியத்தில் வெளியான புத்தகங்களில் தன்னுடைய படத்தை மேல் அட்டையில் போட்ட முதல் எழுத்தாளர் மண்ட்டோ தான். தலைமுடி எல்லாம் கலைந்தபடியும் சட்டைக்காலர் தூக்கிவிடப்பட்டும் அவரது ஓவியம் அழுக்கேறிய அட்டையில் வரையப்பட்டிருந்தது. பளபளப்பாகத் தோன்றும் அதிகார மையங்களுக்கு எதிரான உணர்வுகளோடும் தன்மானமிக்க அகங்காரத்தோடும் எப்போதும் இருக்க வேண்டுமென மண்ட்டோ விரும்பினார். மரபான அடக்குமுறைச் சிந்தனைகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதில் கவனமாக இருந்தார்.1912-ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி பஞ்சாப் மாகாணம் லூதியானா மாவட்டம் சாம்ராலா வட்டாரத்தின் பாப்ரோடி கிராமத்தில் பிறந்தவர் சாதத் ஹசன். காஷ்மீர் முஸ்லிம் குடும்பத்தைச் சார்ந்த இவரது தந்தை அதிகாரத் தோரணையோடு வாழ்ந்தவர். தாயோ மிகவும் இளகிய மனம் படைத்தவர். இரண்டு முரண்பட்ட சக்திகளுக்கிடையில் சிக்கி உருப்பெற்றவர் தான் மண்ட்டோ.உருது இலக்கியத்தில் முத்திரை பதித்த மண்ட்டோ மெட்ரிக் தேர்வில் உருது மொழிப் பாடத்தில் தேர்ச்சியடையவில்லை என்பது வேடிக்கையான உண்மையாகும். ஆங்கிலத்தில் வெளி வந்த ரஷ்ய, ஃபிரெஞ்சு இலக்கியங்களை வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டு செகாவ், மாக்சிம் கார்க்கி, விக்டர் ஹியூகோ, ஆஸ்கர் ஓயில்ட் ஆகியோரின் புதினங்களால் கவரப்பட்டார்.
அவரது தொடக்க கால இலக்கியப் பணியானது மொழி பெயர்ப்பாகவே அமைந்தது.1936-ம் ஆண்டு இந்திய முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்ததுடன் ஆரம்ப காலத்தில் அதன் உயிர்த்துடிப்பு மிக்க சக்தியாகவும் விளங்கினார். பேச்சு மொழி பஞ்சாபி என்றாலும் இலக்கியத்தை கடைசி வரை உருது மொழியிலேயே படைத்தார்.இந்திய - பாகிஸ்தான் பிரிவினையும் அதையொட்டி நடந்த மரணங்களும் பாலியல் வன்கொடுமைகளும் மண்ட்டோவைத் துடிக்க வைத்தன.குற்ற உணர்வு கொண்டு மண்ட்டோ எழுதுகிறார் ‘ஒரு லட்சம் இந்துக்களும், ஒரு லட்சம் முஸ்லிம்களும் இறந்து போனார்கள் என்று சொல்லாதீர்கள், இரண்டு லட்சம் மனிதர்கள் இறந்து போனார்கள் என்று சொல்லுங்கள். இரண்டு லட்சம் மனிதர்கள் மரணமடைந்ததில் துயரம் கொள்வதற்கு ஏதுமில்லை. உண்மையில் துயரம் கொள்ள வைப்பது எதுவென்றால் கொல்லப்பட்டவர்களும் கொலை செய்தவர்களும் ஒரே வகையைச் சார்ந்தவர்கள் என்பது தான்...’ சஹாய் கதை இப்படித்தான் தொடங்கி விரிகிறது.தேசப் பிரிவினையின் வரலாறு இந்திய - பாகிஸ்தான் பெண்களின் உடம்பின் மீது எழுதப்பட்ட வன்முறையின் வரலாறாகும். சில்லிட்டுப்போன சதைப்பிண்டம் போன்ற கதைகள் அந்த வன்முறையை அதே வலியுடன் நுட்பமாகப் பேசியவை. துணைக்கண்டத்தின் மாபெரும் ராணுவத்திலிருந்து இந்து, சீக்கிய, முஸ்லீம் வீரர்கள் - குடியிருப்புகளிலிருந்தும் படை வீடுகளிலிருந்தும் இரண்டு துண்டாகப் பிரிக்கப்பட்டனர். ராவல் பிண்டியில் இருந்த முஸ்லீம் வீரர்கள் இந்தியாவுக்குச் செல்லவிருக்கும் இந்து, சீக்கியத் தோழர்களுக்கு ‘படாகானா’ எனும் விடைதரும் விருந்தினை அளித்தார்கள். பிரிவு உபசார விருந்தளித்துப் பேசிய ஒவ்வொரு சீக்கிய இந்து அதிகாரிகளும் கண்ணீர் விட்டனர். பதிலளித்துப் பேசிய கர்னல் முகமது இத்ரிஸ், ‘எங்கு சென்றாலும் நாம் எப்போதும் சகோதரர்களாகவே இருப்போம். ஏனெனில் நாம் நமது ரத்தத்தை ஒன்றாகவே சிந்தி இருக்கிறோம்’ என்றார்.அதே போல தில்லியில் இருந்த இந்து, சீக்கிய வீரர்கள் பாகிஸ்தானுக்கு பிரிந்து செல்லவிருக்கும் முஸ்லிம் தோழர்களுக்கு படாகானா விருந்தளித்தனர். விழாவில் ஏழாவது ராஜபுத்திரப் படையின் முதலாவது பிரிகே டியர் கரியப்பா பேசினார்.
‘வெகுகாலமாகவே நாம் பொதுவான வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டிருக்கிறோம். நமது வரலாறு பிரிக்கப்பட இயலாதது. நாம் சகோதரர்களாக இருந்திருக்கிறோம். நாம் எப்போதும் சகோதரர்களாகவே இருப்போம்’. உணர்ச்சிக் கொந்தளிப்பில் நா தழுதழுத்தது அவருக்கு.இந்தியா - பாகிஸ்தான் விடுதலைக்குப்பின் மண்ட்டோ பாகிஸ்தானிலுள்ள லாகூரை வாழ்விடமாகத் தேர்ந்தெடுத்தார். வாழ்க்கைக்கு முழுவதுமாக எழுத்தையே நம்பி இருந்தார். எனவே ஏழையாகவே இருந்தார். ‘என்நாடு ஏழ்மையில் இருப்பதால் நான் ஏழையாக இருக்கிறேன்... எங்கு என்னைப் போன்ற ஏழைகளும் என்னை விட ஏழைகளும் வாழ்கிறார்களோ அதுவே என்னுடைய நாடு’ என்று பிரகடனம் செய்து கொண்டார்.‘அங்கிள் சாம்’ என்பது அமெரிக்க அரசாங்கத்தை குறிக்கும் பெயர். ரnவைநன ளவயவநள என்பதன் சுருக்கமான ரு.ளு என்பதிலிருந்து ருnஉடந ளயஅ என்பது உருப்பெற்றது. 1951 டிசம்பர் முதல் 1954 ஏப்ரலுக்குள் மண்ட்டோ 9 கடிதங்களை ‘அங்கிள் சாம்’ க்கு எழுதி உள்ளார். அமெரிக்க ஏகாதியத்திபத்தின் கலாச்சார மற்றும் அரசியல் ஆக்கிரமிப்புகளையும் மத அடிப்படை வாதத்தையும் நுகர்வுக் கலாச்சாரம் உருவாக்கிய மனிதர்களையும் எள்ளல் சுவையுடன் எழுதிச் சென்றுள்ளார். மண்ட்டோவின் உலக அரசியல் அறிவை தெளிவுபடுத்துகின்றன இக் கடிதங்கள்.
250க்கும் மேற்பட்ட கதைகளையும் கட்டுரைகளையும் வாரிசுகளாக விட்டு விட்டு 1955 - ஜனவரி 18ம் நாள் தனது 42வது வயதில் லாகூரில் மரணமடைந்தார்.மத அடிப்படைவாதத்தால், அரசின் அதிகார மையத்தால், ஏகாதிபத்திய கொள்கையால் மனித மாண்புகள் சிதைவுக் குள்ளாக்கப்படும் சூழலில் இவற்றிற் கெதிராக நாம் மண்ட்டோவின் படைப்புகளை முன்வைத்து விவாதிக்க முடியும்.அக்டோபர் 20 - மண்ட்டோவின் நூற்றாண்டு விழா சென்னை தாம்பரத்தில் நடைபெறுகிறது.

Thursday, October 17, 2013

குரல் கொடுக்க வேண்டிய விவகாரங்கள்

போர் தந்த கொடும் இழப்புகளுக்கும், பெருந்துயரத்துக்கும் பிறகு, மீள் குடியேற்றத்தில் உள்ள பிரச்சனைகள், ராணுவமயமாக்கல், சிங்களமயமாக்கல், பொருளாதார நெருக்கடிகள்... இவ்வளவுக்கும் நடுவில், கால் நூற்றாண்டுக்குப் பின் இப்போதுதான் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடந்திருக்கிறது. 70சதவீத மக்கள் அதில் வாக்களித்திருக்கிறார்கள். மொத்தம் உள்ள 38 இடங்களில் 30 இடங்களில் வெற்றியைக் குவித்திருக்கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட சி.வி. விக்னேஸ்வரன் விருப்ப வாக்குகள் பட்டியலிலும் முதலிடம் பெற்றிருக்கிறார். விக்னேஸ்வரனின் வெற்றி அவர் மீது தமிழ் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கைக்கான அத்தாட்சி மட்டும் அல்ல; அவர்களுடைய இன்றைய எண்ணங்களின் உறுதியான போக்கையும் பிரதிபலிக்கின்றன.
முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதில் தொடங்கி, துணிச்சலான கருத்
துகளை முன்வைக்கிறார் விக்னேஸ்வரன். தமிழகத்தின் தமிழீழ ஆதரவாளர்கள் தொடர்பாகக் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கை விவகாரம் கணவன் - மனைவிக்கு இடையிலான பிரச்சனையைப் போன்றது; இதில் பக்கத்து வீட்டுக்காரர் புகுந்து தம்பதிக்குள் விவாகரத்து கோர முடியாது; மேலும், அது தமிழகத் தலைவர்களின் வேலையும் அல்ல” என்றார். இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று தமிழகத்தில் முதல் குரல் எழுந்தபோதே, “இந்த மாநாட்டில் இந்தியா பங்கேற்க வேண்டும். எதிலும் ஒதுங்கியிருந்து சாதிக்க முடியாது; இந்த மாநாட்டில் பங்கேற்று தமிழர்கள் நலன் சார்ந்து இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்” என்றார். தேர்தலுக்குச் சில நாட்கள் முன்னர், “நாங்கள் கேட்பது பிரிவினையை அல்ல; சுயாட்சியை” என்றார். இவ்வளவுக்கும் பிறகுதான் பிரமாண்ட வெற்றியை விக்னேஸ்வரனுக்குத் தமிழ் மக்கள் அளித்துள்ளனர்.தேர்தலுக்குப் பின், “மாகாண சபைகளுக்கு நில நிர்வாகம், காவல்துறை நிர்வாக அதிகாரம் கிடையாது” என்று இலங்கை அரசு அறிவித்தபோது இந்தியாவின் தலையீட்டைக் கோரினார் விக்னேஸ்வரன். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் சமீபத்திய இலங்கைப் பயணத்தைத் தமிழக அரசியல் கட்சிகள் தோல்வி என்று வர்ணித்த நிலையில், “இந்தியா கொடுத்த அழுத்தங்களினால்தான், வடக்கு மாகாண சபைக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. நான் இன்றைக்கு முதல்வராக நிற்கிறேன் என்றால், அதற்கு இந்தியாதான் காரணம். இந்தியா எந்த அளவுக்கு உதவ முடியும் என்பது நுட்பமான விவகாரம். நாங்கள் காத்திருக்கிறோம்” என்றார். சமீபத்தில்கூட, “நீண்ட காலத் திட்டங்கள் அனைத்தும் அரசியல் அபிலாஷைகள்.
அவற்றை உடனடியாக நிறைவேற்றுவது கடினம். போரினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவது, அவர்களின் புனர்வாழ்வுப் பணிகள் ஆகிய குறுகிய காலப் பணிகளே இன்றைய உடனடித் தேவைகள்” என்று பேசியிருக்கிறார்.இவை எல்லாம் விக்னேஸ்வரனின் குரல் மட்டும் அல்ல. இலங்கைத் தமிழர்களின் குரலாகவும் நாம் கொள்ள வேண்டும். போருக்குப் பின் அங்கு நிரந்தரமான அமைதி ஏற்பட சர்வதேசச் சமூகம் குறிப்பாக இந்தியா - தொடர்ந்து வலியுறுத்திவந்த விஷயம் அதிகாரப் பகிர்வு. இலங்கைப் பிரச்சனையில் ஆரம்பம் முதலே, மாகாணங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்றும் அவற்றுக்கு அதிகாரங்கள் பிரித்தளிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா தீர்வை முன்வைத்துவருகிறது. இன்றுவரை சிங்கள இனவாத அரசியலின் நடுவே அது சாத்தியமாகவில்லை. மாகாணங் களுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாகச் சமீபத்தில் பேசிய இலங்கை அரசு, “அனைத்து மாகாணங்களுக்கும் சமமான அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்” என்று அறிவித்திருக்கிறது. போரினால் சிதைந்த வடக்கு மாகாணத்தை மறுநிர்ணயம் செய்யக் கூடுதலான நிதியை விக்னேஸ்வரன் எதிர்பார்க்கிறார். ராணுவமயமாக்கல், சிங்களக் குடியேற்றத்தைக் குறைக்க வலியுறுத்துகிறார்.
தமிழக அரசியல்வாதிகளுக்கு இலங்கைத் தமிழர்கள் மீது உண்மையான அக்கறை இருக்கும்பட்சத்தில், நாம் இப்போது குரல் கொடுக்க வேண்டிய விவகாரங்கள் இவைதான். “போருக்குப் பின்னரான காலகட்டத்தில் எம் மக்கள் அனைத்தையும் இழந்த நிலையில் வாழ்ந்துவருகிறார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். பலவற்றால் அடிபட்டு தமது சுய கௌரவத்தை இழந்திருந்த மக்கள் தற்போதுதான் எழுந்து நிற்கிறார்கள். தங்கள் தங்கள் சுயலாபங்களுக்காக மக்களை மீண்டும் கலவரத்துக்குள் திணிக்கக் கூடாது என்பதுடன், ஒரு வன்முறைக் காலத்தைத் தாண்டி வந்துள்ளோம் என்பதையும் யாரும் மறந்துவிடக் கூடாது” என்று சில நாட்களுக்கு முன் கூறியிருக்கிறார் விக்னேஸ்வரன். தமிழகத் தலைவர்கள் கொஞ்ச நாட்களுக்கேனும் அந்த அபலைகளை விட்டுவைக்க வேண்டும்!நன்றி : இந்து அக்.17(தமிழ்) ஏட்டில் வெளியான கட்டுரையின் பகுதிகள்.

Tuesday, October 15, 2013

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பாஜக!

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவது என்பதே ஆர்எஸ்எஸ்/பாஜக தலைவர்களின் முத்திரையாகும். இவ்வாறு அவர்கள் பேசுவதென்பது ஒன்றும் புதிதல்ல. பாபர் மசூதி இடித்துத் தரை மட்டமாக்கப்படுவதற்கு முன்பு தன் ‘‘ரதயாத்திரை’’யைத் துவங்கும்போது எல்.கே. அத்வானி மக்கள் மத்தியில் ஆவேசத்தைக் கிளப்பும் வகையில் பேசிய பேச்சுக்களை எல்லாம் நினைவு கூர்க. ‘‘இராமர் கோவில் அங்கே கட் டியே தீருவோம்’’ என்று செல்லும் இடங் களில் எல்லாம் அவர் இடிமுழக்கம் இட்டதை நாமறிவோம்.
பாபர் மசூதி இடிக் கப்பட்டபின்னர்தான் இந்தப் பேச்சு நின்றது. பல நூற்றாண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட, மிகவும் சிறப்பு வாய்ந்த, பாபர் மசூதியை கரசேவகர்கள் இடித்துத் தரைமட்டமாக்குவதற்கு இவரது ஆத்திரமூட்டும் பேச்சுக்கள் நேர டியாகவே உதவின. பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டதற்குப்பிறகு, அத்வானி என்ன கூறுகிறார்? 1992 டிசம்பர் 6 தன்னுடைய வாழ்நாளிலேயே மிகவும் துக்ககரமான நாள் என்று கூறிக்கொண்டிருக்கிறார்.
மேலும் ரத யாத்திரையைத் துவங்குவதற்கு முன் எல்.கே. அத்வானி ‘மதச்சார்பின்மை குறித்து தேசிய அளவில் விவாதம் நடத்த வேண்டும்’ என்று கூறிக் கொண் டிருந்ததையும் நாம் பார்த்தோம்.இவை மட்டுமல்ல, ஆர்எஸ்எஸ்/பாஜகவின் தற்போதைய பிரதமர் வேட்பாளரும், அத்வானியைப் போன்றே உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில் வல்லவராக இருக்கிறார். குஜராத்தில் 2002 முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனப் படுகொலைகளுக்குத் தலைமை தாங்கிய இந்த மனிதர், இப்போது தில்லியில் மாணவர்கள் மத்தியில் ஒரு கூட்டத்தில் உரை நிகழ்த்துகையில், ‘‘கழிப்பறைகளே முதலில், கோவில்கள் பின்னர்தான்’’ என்று கூறியிருக்கிறார். இந்த ஆண்டு ஏப்ரலில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதுபோன்றே இவரும் எதிரொலித்திருக்கிறார்.கழிப்பறைகள் கட்டுவோம் போன்றுவாக்குறுதிகள் வருவது நல்ல விஷயம்தான்.
ஆனால் குஜராத்தில் பாஜகவின் ஆட்சியின் கீழ் சுகாதாரம் சம்பந்தமான திட்டங்கள் அப்படி ஒன்றும் சிறப் பானமுறையில் இல்லை என்பதே எதார்த்த நிலை. 2012-13 இந்திய ஊரக வளர்ச்சி அறிக்கையின்படி நாட்டில், கிராமப்புறங்களில் உள்ள குடும் பங்களில் ஐந்தில் ஒன்றில், மூன்று அடிப்படை வசதிகளான - குடிநீர் வசதி, மின்சார வசதி, சுகாதார வசதி - ஆகிய மூன்றும் இல்லாதிருக்கின்றனர் என்றும் கிராமப்புறத்தில் உள்ளோரில் 18 விழுக் காட்டினருக்கு மட்டுமே இம்மூன்றையும் பெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியிருக்கிறது. குஜராத்திலும் நிலைமை அப்படி ஒன்றும் சிறப்பானதாக இல்லை. இம்மூன்று வசதிகளும் பெற்ற குடும்பங்கள் நான்கில் ஒன்று கூட அங்கே கிடையாது.
கேரளாவில் 71 விழுக்காட்டினர் இவ்வசதிகளைப் பெற்றிருக்கின்றனர். வேறு மாநிலங்களில் 13 மாநிலங்கள் இதனைவிட அதிகமான அளவில் பெற்றிருக்கின்றன. மலம் அள்ளும் இனத்தினரின் (அருந்ததியினரின்) உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும் மணவ் கரிமா என்னும் ஸ்தாபனம், சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் ஓர் ஆய்வினை மேற் கொண்டு, அகமதாபாத் மாநகராட்சியின் ஆதரவின் கீழ் 126 இடங்களில் மலத்தைத்தலையில் சுமக்கும் பணியாளர்களால் மலம் அள்ளுவது நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அம்பலப் படுத்தியிருக்கிறது. இந்த நடைமுறை 1993ஆம் ஆண்டுசட்டத்திற்கு விரோதமாக அங்கேதொடர்ந்து இருந்து வருகிறது. இவ்வாறு மலத் தைத் தலையில் சுமக்கும் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தினால் அவ்வாறு வேலைக்கு அமர்த்துவோரை இச்சட்டத்தின்படி தண்டிக்க முடியும்.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் இதுதொடர்பாக ஆட்சேபணை எழுப்பியபோது, அதற்கு குஜராத் அரசு என்ன பதில் அளித்தது தெரியுமா? குஜராத் அரசு 1993ஆம் ஆண்டு சட்டத்தை அமல்படுத்துவதில் மிகவும் அக் கறையுடன் இருக்கின்றதாம், குஜராத்தில் மலத்தைத் தலையில் சுமப் போரே கிடையாதாம். இவ்வாறு அளந்து விட்டிருக்கிறது. இவை அனைத்தும் குஜராத் முதல்வரின் கூற்றுகளில் உள்ள வெறுமையை வெட்ட வெளிச்ச மாக்குகின்றன. ஆர்எஸ்எஸ்/பாஜகவினரால் மிகவும் தம்பட்டம் அடிக்கப்பட்ட ‘‘வீர்யம் மிகுந்த குஜராத்’’ என்னும் பிரச்சாரமும், குஜராத் அனைத்து மனிதவள வளர்ச்சிக் குறியீடுகளின் தேசிய சராசரியைவிட கீழான நிலையில் இருக்கிறது என்று வெளிவந்துள்ள உண்மைகளின் மூலம் புஸ்வானமாகிப் போனது. தேசிய சராசரியில் குஜராத் மிகவும் பின்தங்கியிருப்பது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. மேலும் தற்போது வெளியாகியுள்ள, இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரின் தலைமையில் இயங்கிய ‘மாநிலங்களின் பலவகை வளர்ச்சி அட்டவணைகளைப் பரிசீலனை செய்த குழுவின் அறிக்கையானது, பலமுனைகளில் குஜராத் முன்னேறியிருப்ப தாகத் தம்பட்டம் அடிக்கப்பட்டதையும் தரைமட்ட மாக்கியுள்ளது.
அந்த அறிக்கையில், நாட்டின் வளர்ச்சி அட்ட வணையில் குஜராத் 12ஆவது இடத் தினை வகிப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. இதுதான் பாஜக மாநில அரசான குஜராத்தின் ‘‘வீர்யம்’’ ஆகும். மோடி இப்போது கூறியதைப்போன்ற ஒரு கருத்தை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியபோது அதனைக் கண்டித்து, ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் அவரது இல்லத்திற்கு முன்பு எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது நினைவுகூரத்தக்கது. அப்போது இதுதொடர்பாகப் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர், இத்தகைய கருத்துக்கள் ‘‘மதம் மற்றும் மக்களின் நம்பிக்கைகள் என்னும் அற்புதமான மாண்பினை அழித்துவிடும்” என்றும் குறிப்பிட்டார். எதிர்பார்த்ததைப் போலவே, விஸ்வ இந்து பரிசத் தலைவரான பிரவீண் தொகாடியாவும், ``இந்து சமூகத்திற்கு இதைவிட அவமானம்”வேறெதுவும் இருக்க முடியாது என்று குஜராத் முதல்வர் மோடியின் ‘கழிப்பறைகள்/கோவில் கள்’ கருத்தைக் கடுமையாகக் கண்டனம் செய்திருக்கிறார். அவர் மேலும்,“கோவில்கள் குறித்து இவ்வாறு தேவையற்ற கருத்துக்கள் பற்றிக் கேள்விப் பட்டதும் அதிர்ச்சியடைந்தோம், நிலைகுலைந்து நிற்கிறோம், ... சிறந்தமுறையில் சுகாதார வசதிகள் செய்யப்பட வேண்டியது தேவைதான் என்று நாங்களும் நம்புகிறோம். ஆனால் அதற்காக கோவில்களை இழுத்திருப்பது தேவையில்லாதது” என்று குறிப் பிட்டிருக்கிறார். இதேபோன்று மத்திய அமைச்சர் கூறியபோது கிளர்ச்சிகள் நடத்தியதை நினைவுகூர்ந்த அவர், மேலும் கூறுகையில், ``இந்த சமயத்தில் பாஜக மீண்டும் ஒருமுறை முன்வந்து தன்னுடைய சொந்தப் பிரதமர் வேட் பாளர் அளித்துள்ள அறிக்கையைக் கண்டிக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் இத்தகைய பேச்சுக்களை, கார்ப்பரேட்டுகளில் சில பிரிவினர் மோடிக்குஅளிக்கும் ஆதரவுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். அவை, மோடியை, நவீன தாராளமய பொருளாதாரச் சீர்திருத்தங்களை முன்னிலும் மிகத்தீவிரமாக முன்னெடுத்துச் செல்லக் கூடிய நபராக சித்தரித்துக் கொண் டிருக்கின்றன. வாஜ்பாயின் தலை மையில் அமைந்திருந்த பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்காலத்தின்போது ‘இந்தியா ஒளிர்கிறது’ என்றும் ‘எல்லாம் நன்றாகவே நடக்கிறது’ என்றும் அறிவிக்கப்பட்டவைகளை நினைவுகூர்க.
இவ்வாறு, அவர்கள் இரு இந்தியர்களுக் கும் இடை யிலான ஏற்றத்தாழ்வு வளர்ந்து கொண் டிருப்பதுடனேயே அவர்களை ஒருங் கிணைப்பதற்கான வேலையையும் செய்தார்கள். பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கிடவும்ஏழைகளை மேலும் பரம ஏழைகளாக மாற்றிடவும் நடவடிக்கைகளை அவர்கள் தொடர்ந்து எடுத்துக்கொண்டுதான் இருந்தார்கள். அதனை இப்போதும் அவர்கள் தொடர்கிறார்கள். 2013 செப்டம்பரில் ஊடகங்களில் வெளியான இரு செய்திகள் இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றன. முதலாவது, உலக அளவிலான செல்வந்தர்களை உருவாக்கியதில், உல கில் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சொத்துக்கள் வைத்திருப்பவர்களில் ( ஸ்ரீ 1 அடைடiடிn = சுமார்5 ஆயிரம் கோடி ரூபாய்) இந்தியா இரண்டாவது இடத்திற்கு வந்திருக்கிறது.2012இல் இவர்களின் எண்ணிக் கை 22.2 விழுக்காடாக இருந்ததுதற்போது 23.4 விழுக்காடாக அதி கரித்திருக்கிறது. இவ்வாறு நாட்டில் உள்ள 1,53,000 உலக அளவிலான செல் வந்தர்களின் சொத் துக்கள் 589 பில்லியன் டாலர்கள் மதிப்புடையதாகும்.
இரண்டாவது செய்தி அகிலஇந்திய ஊரக வளர்ச்சி அறிக்கைதொடர்பானதாகும். இது கிராமப்புறங் களில் சுயமாக வேலை பார்த்து வந்த விவசாயிகளின் எண்ணிக்கை மிகவும் சுருங்கிவிட்டதாகவும், இவர்கள் விவ சாயம் அல்லாத வேலைக்கு மாறி விட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறது. இவ்வாறு விவசாயம் அல்லாத வேலைக்கு மாறியவர்களில் 42 விழுக்காட்டினர், தொழில்திறமை தேவைப்படாத வேலைகளான கட்டிடத்தொழிலாளர்கள் மற்றும் வர்த்தகங் களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எந்தப் பாதுகாப்புமின்றி கேசுவல் தொழிலாளி களாகவே வேலை செய்து கொண்டிருக் கிறார்கள். அறிக்கை மேலும், கடந்த பத்தாண்டு களில் வேளாண்மையில் பொது முதலீடு என்பது தேக்க நிலையில் இருப்பது தொடர்கிறது என்றும் அதாவது வேளாண் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 விழுக்காடு அளவிற்குத்தான் இருக்கிறது என்றும், இதன்காரணமாக எழுந்துள்ள விவசாய நெருக்கடியின் விளைவாக விவசாயிகள் தற்கொலைகள் செய்துகொள்வது அதிகரித்திருப்பதில் பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டுள் ளது.
1995ல்10ஆயிரத்து 700 விவசாயிகள் என்றிருந்தது, 2009ல் 17 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது. கடன்களைக் கட்ட முடியாமை, பயிர்களின் விளைச்சலின்மை பெரும்பாலான தற்கொலை களுக்குக் காரணங்களாகும். அரசாங் கத்தின் உதவிகள் மக்களுக்கு நேரடி யாக மாற்றம் செய்யப்படும் என்று அரசுத்தரப்பில் பலமான முறையில் தம்பட்டங்கள் அடிக்கப்பட்டு வந்த போதிலும், கிராமப்புறங்களில் வங்கி சேவை யைப் பெற்ற குடும்பங்கள் என் பவை 2011ல் 54 விழுக்காடு மட்டுமே என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், விவசாயிகளுக்கு அளித்துள்ள வங்கிக்கடன்கள் குறித்து ஆய்வு செய்தோ மானால், சிறு விவசாயிகள் 42,600 கோடி ரூபாய் கடன் உதவி பெற்றிருக்கிறார்கள், நடுத்தர மற்றும் பணக்கார விவசாயிகள் 73 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவி பெற்றிருக்கிறார்கள். இதுதான் இவர் கள் ஏழை மக்கள் மீது காட்டும் கரிசனமாகும்.குழந்தைகள் ஊட்டச் சத்தின்றி வாடுவது என்பது கிராமப்புறங்களில் இன்னமும் தொடர்கிறது. ஒவ்வொரு தனி நபரும் 2,153 கலோரி உணவு உட்கொண்டு வந்த நிலைமைகள் 2009-10ஆம் ஆண்டில் 2,020 கலோரியாகக் குறைந்துள்ளது.
சுகாதாரம் தொடர்பாகவும், கிராமப்புற இந்தியா கடுமையாகப் பாதிக்கப் பட்டிருக்கிறது. உடல் நலிவுற்றவர்களில் 28 விழுக்காட்டினர் எவ்விதச் சிகிச்சையும் எடுத்துக்கொள்வதில்லை. ஏனெனில் அதற்கான வசதிகள் அவர் களிடம் இல்லை. இது தலித்துகள் மத்தி யில் 37 விழுக்காடாகவும், பழங்குடியினர் மத்தியில் 32 விழுக்காடாகவும் இருக்கிறது. இவர்களில் பெரும்பான்மையினர் அரசின் சுகாதார வசதிகளைத்தான் பயன் படுத்தி வந்தார்கள். சுகாதார மையங்களில் போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லாமையும், சுகாதாரத்துறை பெரிய அளவிற்கு தனியார்மயத்தை நோக்கித் தள்ளிவிட்டிருப்பதும், இவர்களைக் கடுமையாகப் பாதித்திருக்கின்றன. தேசிய கிராமப்புற சுகாதார நிறுவனம் என்று ஒன்று செயல்பட்ட போதிலும், கிராமப்புற சுகாதாரப் பாதுகாப்பு என்பது தகுதிவாய்ந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவர் அல்லாத பணியாளர்கள் ஒவ்வொரு மட்டத்திலும் போதிய அளவிற்கு இல்லாமல் இருப்பதால் மிகவும் நலிவடைந்துதான் காணப்படுகிறது. இவற்றை வலுப்படுத்திட க்கூடிய விதத்தில் மிகப்பெரிய அளவிற்கு முதலீடுகள் தேவைப்படுகின்றன.
கிராமப்புறங்களில் பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளின் பதிவு அதிகரித்துள்ள போதிலும், ஆரம்பக் கல்வியைக் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 78 விழுக்காட்டிலிருந்து இடைநிலைக்குச் செல்கையில் 29 விழுக்காடாக சரிந்துள்ளது என்று 2009-10 ஆண்டின் ஆய்வுகள் காட்டுவதாக அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. மாணவர்களின் கற்றறிந்த நிலையும் மிகவும் மோசமாக இருப்பதாகவும் ஐந் தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு பாடங்களைக் கூட படிக்க முடியாமல் திணறுகிறார்கள் என்றும் அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில் பாதிக்கும் மேற் பட்டவர்களுக்கு கூட்டல், கழித்தல் கணக்குகளைக் கூட போட முடியவில்லை என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறது.அதிகாரப்பூர்வமான அறிக்கை களின்படி இருவித இந்தியர்களின் எதார்த்த நிலை இதுதான். இத்த கையதோர் அமைப்பைதான் இந்தியக் கார்ப்பரேட்டுகள் முன்னெடுத்துச் செல்ல விரும்புகிறார்கள். இத்தகைய அமைப்பைத்தான் பாஜகவின் பிர தமர் வேட்பாளர் மிகச் சிறப்பாக மேற்கொள்வார் என்று இவர்கள் நம்புகிறார்கள்.மதவெறித் தீயைக் கொழுந்து விட்டெரியச் செய்வதும், நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்களைத் தீவிரமாகப் பின்பற்றுவதும் நாட்டு மக்க ளின் வாழ்வாதாரங்களைக் கடுமையாகத் துன்பத்திற்குள்ளாக்கும் என்பதிலும், நம் நவீன குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை வேர றுத்து நாட்டின் ஒற்றுமையையும் ஒரு மைப்பாட்டையும் குலைத்துவிடும் என்பதிலும் சந்தேகமில்லை.
எனவே, நம்மக்களுக்கும், நம் நாட்டிற்கும் சிறந்த தோர் இந்தியாவை உருவாக்கிட நம் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றிட வேண்டுமானால் இவர்களின் இத்தகைய இழி நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.
(தமிழில்: ச.வீரமணி

Wednesday, October 9, 2013

ஆர்எஸ்எஸ் அனுப்பும் மாரீசமான் மோடி!
- டி.கே.ரங்கராஜன் எம்.பி.,


எகிப்து நீண்ட நெடுங்காலமாகவே மதச்சார்பின்மைக்கொள்கையை பின்பற்றி வரும் நாடு. வரலாற்று பெருமைமிக்க நாடு. அந்தநாட்டின் அரசியல் சாசனம் மதச்சார்பின்மையை அடிப்படையாக கொண்டது. அங்கு ஆட்சியில் இருந்த முபாரக் அமெரிக்க ஆதரவு பொருளாதாரக் கொள்கையை பின்பற்றியதால் மக்களின் அதிருப்தி அதிகரித்தது.
இந்நிலையில் முஸ்லிம் சகோதரத்துவ கட்சி தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்தது. முர்சி பிரதமராக பொறுப்பேற்றார். ஆனால் இந்த ஆட்சி மதவாத பழமைகண்ணோட்டம் கொண்டதாக இருந்ததோடு, முபாரக் ஆட்சி பின்பற்றிய அதே பொருளாதாரக் கொள்கையையே பின்பற்றியது. இதனால் இந்த அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி வெடித்தது. இதை பயன்படுத்திக் கொண்டு ராணுவம் ஆட்சியை பிடித்துள்ளது. முர்சி ஆதரவாளர்களுக்கும், ராணுவத்தினருக்கும் தொடர்ந்து மோதல் நடந்து வருகிறது.
எகிப்தில் தொடர்ந்து ஆட்சியாளர்கள் பின்பற்றிவரும் வலதுசாரி பொருளாதாரக் கொள்கை அந்த நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற தன்மைக்கு இட்டுச் சென்றுள்ளதோடு, பாரம்பரியமான மதச்சார்பின்மை கோட்பாட்டையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. எகிப்து இஸ்லாமியர்களை பெரும்பான்மையாக கொண்ட நாடு. இந்தியா இந்துக்களை பெரும்பான்மையாகக் கொண்ட நாடு. முஸ்லிம் சகோதரத்துவக் கட்சி இஸ்லாமிய அடிப்படை வாதத்தை முன்னிறுத்தும் கட்சி. பாஜக இந்துத்துவாவை முன்னிறுத்தும் கட்சி.
இரண்டு கட்சிகளைப் பொறுத்தவரை மதங்கள் வேறாயினும், நாடுகள் வேறாயினும் அடிப்படை வாதம் ஒன்றே. இருகட்சிகளுமே வலதுசாரி பொருளாதாரக் கொள்கையில் பின்பற்றுபவை. இரு கட்சிகளுமே அமெரிக்கா மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆசி பெற்றவை. அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் மற்றும் சர்வதேச நிதி மூலதனம், கார்ப்பரேட் நிறுவனங்கள் வலதுசாரி பொருளாதார கொள்கையை கொண்ட கட்சிகள் ஆட்சி நடத்துவதையே விரும்புகிறது.
அந்தக் கட்சிகள் மதரீதியாக பழமைவாத கண்ணோட்டம் கொண்டதாக இருந்தாலும் அது குறித்து ஏகாதிபத்தியமோ சர்வதேச நிதி மூலதனமோ கவலைப்படுவதில்லை. மாறாக இத்தகைய கட்சிகளின் ஆட்சி தங்களது தாராளமய பொருளாதாரக் கொள்கையை பின்பற்றுவதற்கு மேலும் வசதி என்றே அவை கருதுகின்றன.இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு பின்பற்றும் பொருளாதாரக் கொள்கையால் அனைத்துப் பகுதி மக்களும் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
நவீன தாராளமயமாக்கல் கொள்கையில் தவிர்க்க முடியாத விளைவாக அனைத்துத் துறைகளிலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. இதனால் ஏற்பட்டுள்ள மக்களின் அதிருப்தியை இந்துத்துவா கொள்கையுடைய பாஜக பயன்படுத்திக்கொள்ள முயல்கிறது. ஆனால் இவர்களும் கூட காங்கிரஸ் கட்சி பின்பற்றும் அதே பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்றுபவர்களே ஆவார்கள். நவீன தாராளமயமாக்கல் கொள்கையை தீவிரமாக பின்பற்றுவது யார் என்பதில்தான் இவர்களுக்குள் போட்டியே தவிர ஒருவருக்கு ஒருவர் இந்த விஷயத்தில் சளைத்தவர்கள் அல்ல.
தேசிய முன்னணி ஆட்சிக்காலத்தில் பிரதமராக இருந்த வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்த மண்டல்குழு சிபாரிசை செயல்படுத்த முயன்றார். அதை தடுக்கும் நோக்கத்துடன் பாஜக தலைவர் எல்.கே.அத்வானி ரதயாத்திரை மேற்கொண்டார். கலவரத்தை தடுக்க அத்வானி கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து வி.பி.சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் பாஜக விலக்கிகொண்டது. உ.பி.யில் ராமர்கோவில் கட்டப்போவதாக கூறிக்கொண்டு ரதயாத்திரை, செங்கல் பூஜை என தொடர்ச்சியாக மத வெறியைத் தூண்டிவிட்டு பாபர் மசூதியை இடித்து தரைமட்டமாக்கினர்.
உண்மையில் இவர்களுக்கு ராமர் மீது பக்தி இல்லை. மாறாக தேவை ஏற்படும்போதெல்லாம் ராமர் கோவில் பிரச்சனையை கையிலெடுப்பதே இவர்களது வழக்கம். அண்மையில் கூட வி.எச்.பி மீண்டும் அயோத்தி பிரச்சனையை கையிலெடுத்தது. எதிர்வரும் மக்களவைத் தேர்தலை மனதில்கொண்டே இந்தப்பிரச்சனையை மீண்டும் ஊத முயன்றனர். ஆனால் அது பொதுமக்களின் கவனத்தை பெறவில்லை.பாபர் மசூதி இடிப்பு உள்ளிட்ட பல்வேறு நாச வேலைகள் காரணமாகவே பாஜக தலைமையிலான கூட்டணி மத்தியில் ஆட்சிக்கு வந்தது.
பசுவதை கூடாது என்பது எங்களது கொள்கை என்று ஆர்.எஸ்.எஸ் பாஜக பரிவாரம் கூறும். ஆனால் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில்தான் இந்தியாவிலிருந்து பெருமளவு மாட்டுத்தோல் ஏற்றுமதி செய்யப்பட்டது. வித்தியாசமான கட்சி என்று கூறிக்கொண்ட பாஜக தலைமையிலான மத்திய ஆட்சி எந்த வகையிலும் வித்தியாசமானதாக இல்லை. முந்தைய காங்கிரஸ் ஆட்சியைப் போலவே அனைத்துத் துறைகளிலும் ஊழலும் லஞ்ச லாவண்யமும் தலைவிரித்தாடியது. அத்வானியைவிட வாஜ்பாய் மென்மையானவர் என்று கூறினர்.
இப்போது அத்வானியைவிட நரேந்திரமோடி தீவிரமானவர் என்று அவரை முன்னிறுத்தும் வேலையில் ஆர்எஸ்எஸ் அமைப்பு இறங்கியுள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மோடி வருவது தங்களுக்கு மிகவும் வசதியானது என்று கருதி அவரை வெகு வேகமாக ஆதரிக்கத் துவங்கியுள்ளனர். மோடி இந்துத்துவாக் கொள்கையில் பிடிப்புள்ளவர் என்று கூறி மட்டும் பெரும் பகுதி மக்களை கவர முடியாது என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். எனவேதான் மோடி ஆட்சியில் குஜராத் பெருமளவு வளர்ச்சி பெற்றுவிட்டது என்று ஒரு பொய்யான தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர். ஆனால் தேசிய அளவிலான புள்ளி விபரங்கள் இவர்கள் கூறுவது முழு பொய் என்பதை நிரூபித்து வருகின்றன.
பல்வேறு துறைகளில் குஜராத் பின்தங்கியுள்ளது என்பதே உண்மையாகும்.ராமாயணத்தில் ‘சீதையைக் கவர இராவணன் ஒரு சூழ்ச்சி செய்வான். தன்னுடைய மாமனான மாரீசனை மாய மான் வேடம் பூண்டு சீதையைக் கவருமாறு கூறுவான். அதன் படி மாரீசன் பொய் மான் வேடம்பூண்டு சீதை முன் செல்வான். இதை உண்மையான மான் என்று நம்பும் சீதை அதைப்பிடித்து தருமாறு ராமனிடம் கூறுவார். மாய மானின் பின்னால் ராமன் சென்றுவிட, மாரீச மான் மீது ராமன் அம்பு எய்த அந்த மாயமான் ஆபத்து என்று கூற காவலுக்கு நின்ற லட்சுமணனையும் சீதை அனுப்பிவிடுகிறார். பின்னர் சீதையை ராவணன் கடத்திச் சென்று அசோக வனத்தில் சிறை வைத்தான்‘ என்பது கதை.
மாரீச மானின் பொய்த் தோற்றத்தை கண்ட சீதை மயங்கி ‘மாற்றுயர்ந்த பொன்னால் ஆனது இந்த மான்; அதன் காதுகளும் கால்களும் மாணிக்கத்தால் அமைந்துள்ளன. அதன் ஒளி நெடுந்தூரம் வரை பரவி நிற்கிறது. வந்து பாருங்கள்” என்று ராமனை சீதை அழைத்ததாக கம்பர் கூறுகிறார். அந்த பொய் மானைப் பார்த்து ராமனும் கூட மயங்கிப்போனார். “இம்மான் இந்நிலத்தினில் இல்லை; என,எம்மான் இதனைச் சிறிதும் எண்ணல் செயான்“என்று ராமனும் கூட இப்படி ஒரு மான் இருக்கக்கூடுமா என்று ஆராயாமல் மயங்கிவிட்டான் என்கிறார் கம்பர். பின்னர் அசோக வனத்தில் பாடும் போது சீதை இப்படிப் புலம்புவதாக கம்பர் எழுதுகிறார்.
“வஞ்சனை மானின் பின் மன்னைப்போக்கி, என்மஞ்சனை வைது, பின்வழிக் கொள்வாய் எனாநஞ்சு அவையான் அகம்புகுந்த நங்கையான்உய்ஞ்சனென் இருத்தலும் உலகம் கொள்ளுமோ”அதாவது வஞ்சனையே உருவெடுத்து வந்த மானின் பின்னால் ராமனையும் பின் லட்சுமணனையும் அனுப்பியதால் இன்றைக்கு நஞ்சு போன்ற கொடிய மனம் கொண்ட ராவணணின் சிறையில் வாடும் நிலை ஏற்பட்டுவிட்டதே. நான் உயிர்வாழத் தகுமோ என்று சீதை வேதனையில் விம்மினாராம்.ஆர்எஸ்எஸ் என்கிற ராவணனால் அனுப்பப்பட்ட மாரீச, மாய மானே நரேந்திர மோடி யாகும். மாரீச மான் பொன்னால் இழைக்கப்பட்டதாகவும், வைரம், வைடூரியத்தால் மின்னுவதாகவும் தோற்றம் காட்டியது போலத்தான் குஜராத் வளர்ச்சி பெற்றுவிட்டது என்று பொய்த்தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.
இந்த மாரீச மானின் பொய்வேடத்தை மக்கள் நம்பினால் சீதைக்கு ஏற்பட்ட கதியே இந்திய வாக்காளர்களுக்கு ஏற்படும். இந்திய மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நேரம் இது.

Monday, October 7, 2013

காம்ரேட் கியாப்

இருபதாம் நூற்றாண்டில் நடந்த ஏராளமான ஏகாதிபத்திய எதிர்ப்பு போராட்டங்களில் முதன்மையானது வியட்நாமில் நடந்த போராட்டங்களாகும். இங்கு பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய ஏகாதிபத்திய நாடுகளுக்கு எதிராக நடந்த போர்களுக்கு ராணுவத்தலைமையேற்ற ஜெனரல் வோ நகுயென் ஜியாப் தனது 102ம் வயதில் அக்டோபர் 4ந்தேதியன்று ஹோ சி மின் நகரில் மருத்துவமனையில் காலமானார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் வியட்நாமின் தொலைதூரத்தில் உள்ள டியன் பியன் பு பள்ளத்தாக்கில் நடந்த போரில் பிரான்ஸ் படை படுதோல்வி அடைந்தது. அது அப்பகுதியில் காலனியாதிக்கத்துக்கு முடிவு கட்டியது. 1954ம் ஆண்டில் வியட் மின் படைகளுக்கு இவர் தலைமை தளபதியாக இருந்தார். வியட்நாமை ஆக்கிரமித்திருந்த பிரெஞ்சு படைகளை விரட்டி அடிப்பதற்காக டியன் பியன் பு பள்ளத்தாக்கில் நடந்த மக்கள் யுத்தத்தில் வியட் மின் படைகள் வெற்றி கண்டன. இந்த வெற்றியின் பின்னணியில் ஏற்பட்ட அமைதி ஒப்பந்தத்தின்படி வியட்நாம் வடக்கு, தெற்கு என பிரிக்கப்பட்டது.
1956ம் ஆண்டில் ஒன்றுபட்ட வியட்நாமில் தேர்தல் நடைபெறும் வரையிலான ஒரு தற்காலிக நடவடிக்கை என்று வியட்நாம் பிரிவினை ஒப்பந்தத்தில் விவரிக்கப்பட்டிருந்தது இருபதாம் நூற்றாண்டு வியட்நாம் அனுபவத்தில் ஹோ சி மின்னுக்கு அடுத்த முக்கிய இடத்தை கியாப் பெற்றிருந்தார் என்று வியட்நாம் யுத்தத்தை நேரிடையாக பார்த்து செய்தியாக்கிய புலிட்சர் விருது பெற்ற எழுத்தாளர் ஸ்டான்லி கர்னோவ் 2008ம் ஆண்டில் அளித்த தொலைக்காட்சி பேட்டியில் கூறியிருந்தார். ராணுவ நடவடிக்கைகளை சுயமாக கற்றுக்கொண்ட ஒரு தளபதி அவர் என்று மேலும் அவர் குறிப்பிடுகிறார். அவருடைய போர்த்தலைமையின் மூலமந்திரமே சகிப்புத் தன்மைதான் என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். மேற்கத்திய நாடுகளை வெல்லமுடியாது என்று கூறப்பட்டு வந்ததை இந்த வெற்றி முறியடித்தது.ஒன்றுபட்ட வியட்நாம் தேர்தல்கள் நடைபெறவில்லை. மாறாக அமெரிக்க துருப்புகள் நவீன ஆயுதங்களுடன் தென் அமெரிக்காவில் வந்திறங்கின. 1964 முதல் 1975 வரை நடைபெற்ற அமெரிக்க யுத்தத்தின் போதும் இவர்தான் வடக்கு வியட்நாம் படைகளின் தளபதியாக இருந்தார். மற்றுமொரு மேற்கத்திய ஏகாதிபத்திய நாட்டுடன் நடந்த நீண்டநெடிய போராட்டத்திலும் வியட்நாம் பெரும் வெற்றி பெற்றது. எங்கள் மண்ணின் மீது படையெடுத்தவர்களுக்கு கிடைத்த தோல்வியில் இருந்து, ஏராளமான ஆயுதங்களுடனும், வெடிபொருட்களுடனும் வந்து ஆக்கிரமித்துள்ள அமெரிக்க ஏகாதிபத்திய படைகளும் தப்பிக்க முடியாது என்று 1972ம் ஆண்டில் கியாப் எழுதியிருந்தார். வியட்நாம் போரில் ஐந்தரை ஆண்டுகள் போர்க்கைதியாக இருந்தவர். அமெரிக்க செனட்டர் ஜான் மக்கெயின், கியாப் ஒரு மகத்தான ராணுவதந்திரி என்று கியாப் இறந்த செய்தி கேட்டவுடன் தனது டுவிட்டரில் மக்கெயின் பாராட்டியுள்ளார்.
கியாப் பதின்மூன்று வயதிலேயே பிரான்ஸ் ஆக்கிரமிப்பை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்களில் கலந்து கொண்டார். இதனால் இவர் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இவர் கைது செய்யப்பட்டார். இளமையில் இவருடைய தந்தை இவருக்கு தேசபக்தியை ஊட்டியிருந்தார். தேசபக்தி மிக்க இவருடைய தந்தை ஒரு விவசாயி. விடுதலைக்கு பின்னர் ஹனோய் சென்ற இவர் பிரெஞ்சு பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று பட்டதாரியானார். 1924ம் ஆண்டில் இவர் டான் வியட் புரட்சிக்கட்சியில் சேர்ந்தார். இங்கு இவர் கம்யூனிசத்தைக் கற்றறிந்தார். பின்னர் 1931ம் ஆண்டில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியில் செர்ந்தார். இவர் ஒரு போராளி ஆன நகுயென் தி மின் ஜியாங் என்பவரை மணந்தார். இவருடைய மனைவி பிரெஞ்சு துருப்புகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு அங்கு மரணத்தை தழுவினார். பின்னர் கியாப் சீனாவுக்கு சென்றார். அங்கு இவருக்கு ஹோ சி மின்னுடன் தொடர்பு ஏற்பட்டது.வியட்நாம் திரும்பிய இவர் வியட் மின் என்ற கொரில்லா படையை உருவாக்கினார். அதற்கு தலைவராக இருந்து செயல்பட்டார்.அமெரிக்காவுடன் வியட்நாம் நடத்திய மக்கள் யுத்தத்தின் போது இவர் வியட்நாம் படைகளின் தலைமை தளபதியாக இருந்தார்.கம்யூனிஸ்ட் அரசுகள் கொடுத்துதவிய நவீன ஆயுதங்களுடன் வடக்கு வியட்நாம் ராணுவம் ஒரு மரபு ரீதியான ராணுவமாகச் செயல்பட்டது. வியட்நாம் போரில் பல முனைகளில் அமெரிக்கா தோல்வியைத் தழுவியது.
அமெரிக்க மக்களின் போர் எதிர்ப்பும் அமெரிக்காவை சமாதானப் பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்தது.சமாதான ஒப்பந்தத்துக்குப் பின் அமெரிக்க படைகள் 1973ல் வியட்நாமை விட்டு வெளியேறின.கியாப் வழிகாட்டலின்படி அன்றைய தென் வியட்நாம் தலைநகர் சைகோனுக்குள் வடக்கு வியட்நாம் படைகள் புகுந்தன.1975 மார்ச் 30 அன்று இருநாடுகளும் இணைந்து ஒன்றுபட்ட வியட்நாம் உருவானது.பாதுகாப்பு அமைச்சராக இருந்த கியாப் துணை பிரதமராக நியமிக்கப்பட்டார்.1980ம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.1982ம் ஆண்டில் வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோவில் இருந்து ஓய்வு பெற்றார். 1991 வரை கட்சியின் மத்தியக்குழுவிலும், துணைபிரதமராகவும் நீடித்தார். ராணுவ நடவடிக்கைகள், தந்திரங்கள் பற்றியும் வியட்நாமில் நடந்த யுத்தங்கள் பற்றியும் இவர் பல நூல்களை எழுதியுள்ளார்.
இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் பதவியேற்றார்


கொழும்பு, அக். 7-
இலங்கையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் முதலமைச்சரான நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன், வடக்கு மாகாண முதலமைச்சராக திங்களன்று கொழும்புவில் பதவியேற்றுக் கொண்டார்.
அகதிகள் முகாம்களில் 40ஆயிரம் முஸ்லிம்கள்
முசாபர் நகர் வன்முறை : சிபிஎம் கவலை


முசாபர் நகர் அருகே ஒரு அகதிகள் முகாமில் தங்கியுள்ள மக்கள்.
புதுதில்லி, அக். 7 -
உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் ஆர்.எஸ்.எஸ். பரிவாரத்தால் நடத்தப்பட்ட மதவெறி வன்முறையில் பாதிக்கப்பட்டு இன்றளவும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான சிறுபான்மை மக்கள் அகதிகள் முகாம் களில் தஞ்சமடைந்துள்ளனர் என் றும், எதிர்காலத்தில் இத்தகைய மதவெறி வன்முறை பரவாமல் தடுத்திட மதவெறி வன்முறை தடுப்பு மசோதாவை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது

Friday, October 4, 2013

நீங்களும் மீளலாம்



எங்களால் மீள முடியும் என்றால் நீங்களும் மீளலாம் என்று புற்றுநோயால் அவதிப்படும் பலலட்சம் நோயாளிகளுக்கு உற்சாகமான ஊக்கக்குரல் கொடுத்துள்ளனர் புற்றுநோயில் இருந்து மீண்ட இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும், பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலாவும் . அவர்கள் இருவரும் புற்றுநோய்க்கு மருந்தில்லை என்ற வாதத்தை இருவரும் நிராகரித்துள்ளனர். எந்த கட்டத்தில் வியாதி கண்டறியப்பட்டிருந்தாலும், நீங்கள் உடைந்து போகலாம். ஆனால் நீங்கள் அதைப்பற்றிக் கவலைப்படாமல் மனதை திடப்படுத்தி எதிர் போராட்டம் நடத்துங்கள் யுவியால் முடியும் என்றால் உங்களாலும் முடியும் என்று யுவ்ராஜ்சிங் கூறினார். கொல்கத்தா ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த ‘பிரதிக்யா, கேன்சர் மித்ஸ் ரியலிட்டி’ என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர். புற்றுநோயில் பிழைத்தவர் என்று தான் அழைக்கப்படுவதை மனீஷா விரும்பவில்லை என்று கூறினார். அது கோழைத்தனமான வார்த்தை என்று குறிப்பிட்ட அவர் தன்னை ஒரு புற்றுநோய் எதிர்போராளி என்று அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். புற்றுநோய்க்கு ஆளாகி, சிகிச்சைக்குப் பின் நலமாக இருக்கும் பலரை தனக்கு தெரியும் என்றும் அவர் கூறினார். எனவே எந்தவொரு சவாலையும் எதிர்த்து போராடுவோம் என்று மனீஷா கொய்ராலா தெரிவித்தார்.

Thursday, October 3, 2013

விருது தொகைரூ. 1.5 லட்சம் தமுஎகசவிற்கு சங்கரய்யா வழங்கினார்


கு. சின்னப்ப பாரதி இலக்கிய அறக்கட்டளை சார்பில் விருதுகள் வழங்கும் விழா அக்டோபர் 2ம் தேதி நாமக்கல்லில் நடைபெற்றது.
இந்த விழாவில் சுதந்திரப் போராட்ட வீரர் தோழர் சங்கரய்யாவுக்கு முதன்மை விருதாக ரூ. 1லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டது. தமக்கு அளிக்கப்பட்ட ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்திற்கு அளிப்பதாக சங்கரய்யா அறிவித்தார்
அதிகரிக்கும் நெருக்கடி : அமெரிக்க உளவுத்துறை கடும் பாதிப்பு

வாஷிங்டன், அக்.3-
அமெரிக்கவில் தற்போது ஏற்பட்டிருக்கம் நிதி நெருக்கடியின் காரமாக அந்நாட்டின் பெடரல் அரசின் ( மத்திய அரசின்) அலுவலகங்களில் அத்தியாவசியமில்லாத அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. இதில் அமெரிக்க உளவுத்துறையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில் பணியாற்றிய 70 சதவிகிதம் பேர் விடுப்பில் அனுப்பபட்டனர். அமெரிக்காவில் கடுமையான நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்நாட்டின் கடன் உச்ச வரம்பை உயர்த்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டிற்கான மசோதா பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்டது. அப்போது குடியரசு கட்சியினர் கடன் உச்ச வரம்பை உயர்த்துவதற்கு அனுமதிக்க முடியாது. அதற்கு பதிலாக ஒபாமா கேர் திட்டத்திற்கு கூடுதல் நிதிஒதுக்குவதை நிறுத்த வேண்டும் என கோரியது. இதனை ஒபாமாவின் ஜனநாயக கட்சி ஏற்கவில்லை. இந்நிலையில் குறிப்பிட்ட காலம் கடந்ததால் அக்டோபர் 1 முதல் அந்நாட்டில் ஷட் டவுன்( இழுத்து மூடல் ) அறிவிக்கப்பட்டது.
அமெரிக்கா முழுவதும் உள்ளஅத்தியாவசிய அரசு நிறுவனங்களைத் தவிர மற்ற அரசு நிறுவனங்களை மூடவெள்ளை மாளிகைஉத்தரவிட்டது. இதனால் 8 லட்சம் அரசுஊழியர்கள் சம்பளம்இல்லாமல்கட்டாய விடுப்பில்அனுப்பப்பட்டனர். இப்போதுஅமெரிக்க உளவுத்துறையான தேசிய புலனாய்வு நிறுவனத்தில் பணியாற்றும் 4 ஆயிரம் கம்ப்யூட்டர் நிபுணர்கள் உள்பட 70 சதவிகிதம் பேர் கட்டாய விடுப்பில்வீட்டுக்கு அனுப்பபட்டுள்ளனர். இதனால் ராணுவத்துக்கு உதவும்உளவுப்பணி, தூதரக உளவுப்பணி, எம்.பி.களுக்கான உளவுபணிஆகியவை கடுமையாக பாதிக்கப்படும் என்று தேசிய புலனாய்வு நிறுவன இயக்குநர் ஜெம்ஸ் கிளப்பர் தெரிவித்தார்.இது பற்றி அமெரிக்க ராணுவதலைமை தளபதி ரே ஒர்டினோ கூறும்போது, இதே போன்ற நெருக்கடி முதன் முதலில் அமெரிக்காவில் கடந்த 1996-ம் ஆண்டுஏற்பட்டது. அதன் பாதிப்பு ராணுவத்தின்தினசரி செயல்பாட்டிலும் எதிரொலித்தது.
நீண்ட நாள்களுக்குபிறகு இப்போது மீண்டும்பட்ஜெட் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற 8 லட்சம்அரசு ஊழியர்கள் சம்பளம் இல்லாமல் விடுப்பில் அனுப்பப் பட்டுள்ளனர். இதனால் மனிதசக்தியும், திறமையும் வீணடிக்கப்படுகிறது. தற்போது வெளிநாடுகளில் அமெரிக்க ராணுவத்தில் உள்ள போரில் ஈடுபடாத வீரர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.இந்த நிலையில் ஒபாமாவின் கெல்த் கேர் திட்டத்துக்கு முக்கியஎதிராளியான அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் டெட் குரூஸ்கூறும்போது,ராணுவம் மற்றும்பாதுகாப்பு பணியில் உள்ளவர்களுக்கு, கட்டாய விடுப்பில் செல்வதில் இருந்து விலக்கு அளிக்க பிரதிநிதிகள் சபையில் விசேஷ தீர்மானம் நிறைவேற்றப்படும். போது மான நிதி இல்லாமல் உளவுத்துறை இப்போது நெருக்கடியில் உள்ளது. இதனால் இறைவன் தடுக்கா விட்டால் அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்பட லாம் என்று தெரிவித்தார்
மோடி துதிபாட கையாட்கள் நியமனம்



குஜராத் மாநிலத்திலிருந்து 700 பாஜக ஊழியர்கள் ‘மோடியின் புகழ்’பாடுவதற்காக நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட இருக்கிறார்கள் என்று ‘ஓபன்’ என்னும் வார இதழில் திரேந்திரா கே ஜா என்பவர் எழுதியிருக்கிறார்.பாஜக-வின் மத்தியத் தலைமை நரேந்திர மோடியின் பெயரை பிரதமர் பதவிக்கு அறிவித்ததைத் தொடர்ந்து கட்சிக்குள் குடுமிபிடிசண்டை இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே சமயத்தில்,நரேந்திர மோடியின் லெப்டினன்டுகள் நாடு முழுவதும் உள்ள மக்களின்மனங்களில் ‘நரேந்திரமோடி இந்துத்துவாவின் சின்னம் மட்டும் அல்ல, ‘வளர்ச்சி’யின் நாயகனுமாவார்’ என்று பதிய வைப்பதற்காக கட்சி ஊழியர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்ப இருக்கிறார்கள். நன்கு பொறுக்கி எடுக்கப்பட்ட இவர்கள் அனைவரும் நரேந்திரமோடியின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படுவார்கள் என்றுகுஜராத் மாநில பாஜக தலைவர் ஒருவர் தெரிவிக்கிறார்.
தேர்தலையொட்டி மோடி நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்வதற்குமுன் இவர்கள் அவர் குறித்து மக்கள் மனதை நன்கு பதப்படுத்தும்வேலையைச் செய்ய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.நரேந்திர மோடியைத் துதிபாடி துண்டுப்பிரசுரங்கள், குறுந்ததடுகள்தயாராக இருக்கின்றன. ‘‘குஜராத் வளர்ச்சிக்கான சிறந்த முன்மாதிரி(ரோல் மாடல்) மாநிலம் என்று உயர்த்திப்பிடிக்கும் வண்ணம் பதிவுசெய்யப்பட்ட துண்டுப்பிரசுரங்கள், குறுந்தகடுகள் தயாராக இருக்கின்றன. இவைகள் பாஜக-வின் மத்தியத் தலைமை ஒப்புதலுக்குப்பின்இவ்வாறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட ஊழியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று பாஜக-வின் குஜராத் மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.மோடிக்கு ஆதரவு நாடு தழுவிய அளவில் ‘அலை’யை உருவாக்குவதற்காகஅனுப்பப்படும் இத்தகைய ஊழியர்கள் ‘செய்ய வேண்டியதுஎன்ன?’, ‘செய்யக்கூடாதது என்ன?’ என்று ஒரு பட்டியலே கொடுக்கப்பட்டிருக்கிறது.
எடுத்துக்காட்டாக, இந்த ஊழியர்கள் கார்களில் பயணம்செய்யக்கூடாது என்றும், மக்கள் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்துவசதிகளையே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அதேபோன்று ஓட்டல்களில் தங்குவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் முடிந்த அளவிற்கு கட்சி ஊழியர்களின்இல்லங்களிலேயே தங்கிக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக் கிறார்கள். இவ்வாறு அனுப்பப்படும் ஊழியர்கள் பெரும்பாலும் கிராமப்பகுதிகளுக்கே சென்று வேலை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தபோதிலும், குர்ஷீத் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோமற்றும் வாரணாசி செல்வதற்குத் தயாராக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார். ‘‘எங்களில் பலர் கிராமங்களில்தான் வேலை செய்யப் போகிறோம்,’’ என்று கூறிய குர்ஷீத், ‘‘நானும், வேறு சிலரும் மட்டுமே நகரங்களில் வேலை செய்யக் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறோம்,’’ என்றும் கூறினார். காந்திநகரில் கட்சி வட்டாரங்களிலிருந்து வந்த தகவல்களின்படி மேற்படி ஊழியர்களின் பட்டியல் தில்லிஅசோகா ரோட்டில் உள்ள மத்திய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், அங்கிருந்து செயல்படுத்துமாறு கட்டளை வந்தபின் இவர்கள் புறப்பட்டுச் செல்வார்கள்என்றும் தெரிகிறது. இவர்களுடன் வைக்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்களும், குறுந்தகடுகளும் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிகிறது.மோடி இவ்வாறு நாடு முழுவதும் ஊழியர்களைத்தன் மாநிலத்திலிருந்தே அனுப்பி வைப்பதற்கு முக்கியகாரணம் என்ன? அவர் நாட்டின்பிற பகுதிகளில் உள்ள பாஜக எந்திரத்தை முழுமையாக நம்பாததே காரணமாகும். பாஜகவிற்குள் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது தொடர்பாககுடுமிபிடி சண்டை இப்போதும் நடந்து கொண்டிருந்தபோதிலும், தலைமை, மோடியைத்தான் பிரதமருக்கான வேட்பாளர் என்றுஅறிவித்துவிட்டது. அகில இந்திய அளவில் மற்ற மாநிலங்களில் உள்ளபாஜகவினரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய அளவிற்குத் தனக்குப் பலம் இல்லை என்று மோடி கருதுவதுபோல் தோன்றுகிறது. அதன்காரணமாகத்தான் அவர் தன் மாநிலத்திலிருந்து ஆட்களை அனுப்பிவைக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவின் தலைவராக தனக்குமிகவும் நெருங்கிய சகாவான அமித் ஷாவை மோடி அனுப்பி வைத்ததற்கு அதுதான் காரணம். அவர் சென்றபின்னர்தான் முசாபர்நகரில் முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. அகில இந்தியஅளவில் தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தனக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணிசமான இடங்கள் கிடைக்க வேண்டும் என்றநோக்கத்தோடுதான் அமித் ஷா அங்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அமித் ஷாவை உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அனுப்பி வைப்பதுதொடர்பாக மத்தியத் தலைமை சென்ற மே மாதத்தில் அனுமதிஅளித்தபோது, பாஜகவிற்குள் இருப்பவர்கள், இல்லாதவர்களில்பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில் பின்பற்றப்பட வேண்டியதேர்தல் உத்திகள் என்பது இரு மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியானவை அல்ல. ஆயினும் மோடி அமித் ஷாவை அனுப்புவதில் மிக உறுதியாக இருந்தார்.
குஜராத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள் அனைத்திற்குப் பின்னாலும் அமித் ஷா இருந்தார். அதேபோன்று உத்தரப்பிரதேசத்திலும் உருவாக்குவதற்கான பொறுப்பு அமித் ஷாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவின் அரசியல் பொறுப்பை அமித் ஷா ஏற்றுக்கொண்டபின்னர்தான் மாநிலத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான வகுப்புக் கலவரங்கள் நடைபெறத்துவங்கின. இதேபோல் மோடியின் ஆட்கள் 700 பேரும் நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும்அனுப்பி வைக்கப்பட்டு அவர்களும் தங்கள் செயல்களில் இறங்கிவிட்டால் நாடு என்னாகுமோ என்று அரசியல் நோக்கர்கள் அஞ்சுகிறார்கள்.- ச.வீரமணி.

Wednesday, October 2, 2013

இவருடைய கொள்கைகளுக்கு அழிவில்லை



நரேந்திர தபோல்கர் மராட்டியம் இந்திய நாட்டுக்கு அளித்த சமூக சீர்திருத்தவாதிகளில் ரத்தம் சிந்திய தியாகி . இவருடைய மூடநம்பிக்கை எதிர்ப்பு போரால் ஆத்திரமடைந்த சனாதனவாதிகள் திட்டமிட்டு அவரை தீர்த்துக் கட்டி விட்டனர். இறந்தவர்களின் இறுதிச்சடங்குகள் நடக்கும் ஓம்காரேஸ்வர் கோவிலுக்கு செல்லும் பாலத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த நரேந்திர தபோல்கரை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கியால் பின் தலையில் சுட்டுக் கொன்றனர். இன்று வரை அவரைக் கொன்றவர்கள் கைது செய்யப்படவில்லை என்பது அரசின் கையாலாகாத் தனத்தை வெளிப்படுத்துகிறது.
பகுத்தறிவு இயக்கத்தின் மாபெரும் முன்னோடி இவர். மூடநம்பிக்கைகள், கறுப்பு மேஜிக் என்று சொல்லப்படும் செய்வினை செய்தல் போன்றவற்றை எதிர்த்து மிகப்பெரும் இயக்கத்தை நடத்தி வந்தார். இதற்கென இவர் நடத்தி வந்த அந்தஷிரதா நிர்மூலன் சமிதி மகாராஷ்டிராவில் 200 கிளைகளுடன் வலுவாக செயல்பட்டு வருகிறது. இவர் கல்வியின் மூலம் ஒரு மருத்துவர், தன்னுடைய அணுகுமுறை மூலம் ஒரு எழுத்தாளர்-செய்தி ஆசிரியர், சுயதேர்வின் மூலம் ஒரு பிரச்சாரகர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஒரு சிறந்த கபடி வீரர் என்பது பலர் அறியாத செய்தியாகும் . இந்திய கபடி அணியில் இடம் பெற்று பல பதக்கங்கள் வென்று வந்தவர். அவர் தன்னுடைய பொதுவாழ்வை மருத்துவத் தொழிலில் தொடங்கியவர். ஆனால் மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கம் அவரை தன்னுள் ஈர்த்துக்கொண்டது.சோசலிஸ்ட் தலைவர்களில் ஒருவரான டாக்டர் பாபா ஆதவ் நடத்திய ‘ ஒரு கிராமம், ஒரு கிணறு ‘ இயக்கத்தில் தன்னை இவர் அர்ப்பணித்துக் கொண்டார். வாழ்க்கையில் வெற்றி காண பகுத்தறிவு இயக்கம் என்ற தனது தத்துவ நூலில் அவர் இவ்வாறு கூறுகிறார் : காலம் காலமாக பின்பற்றப்படும் மரபுகள், சடங்குகள், மனதைக் குழப்பும் வழிமுறைகள், போன்றவைகளை உள்ளடக்கிய மூட நம்பிக்கைகள் தனிநபர்களின், சமுதாயத்தின் பணம், மனித உழைப்பு ஆகியவற்றை பாழாக்குகின்றன. இவை போன்ற விலைமதிப்பில்லா ஆதாரங்கள் வீணடிக்கப்படுவதை நவீன சமுதாயம் பொறுத்துக் கொள்ளாது. உண்மையில் இந்த மூடநம்பிக்கைகள் ஏழைகளும் அடித்தட்டு மக்களும் தொடர்ந்து அதே நிலையில் நீடிப்பதை உறுதி செய்கின்றன என்பதுடன், அவர்கள் அந்த நிலைமைகளில் இருந்து மீள்வதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு அளிப்பதில்லை. மூடநம்பிக்கைகளைப் பின்பற்ற மாட்டோம் என்றும் ஆதாரங்களை பாழாக்க மாட்டோம் என்றும் நாம் அனைவரும் உறுதியேற்போம்.
வரி செலுத்துவோரின் பணத்தை கும்பமேளா போன்ற விழாக்களிலும் கோவில், மசூதி, ஆலயம் ஆகியவற்றின் பராமரிப்புகளிலும் உள்ளூர் திருவிழாக்களிலும் வீணடிக்கும் அதிகாரிகளை நாம் அனைவரும் ஒருங்கிணைந்து எதிர்ப்போம். அதில் செலவிடப்பட்ட நிதிகளை குடிநீர், மின்சக்தி, தகவல் தொடர்பு, போக்குவரத்து, சுகாதார பராமரிப்பு, தொடக்கக்கல்வி போன்ற கட்டமைப்பு திட்டங்களிலும், மற்ற நலத்திட்டங்களிலும், மேம்பாட்டு செயல்பாடுகளிலும் செலவிட ஒதுக்கிடுவோம். என்று கூறினார். மதத்தின் பெயரால் சாமியார்களால் பெண்கள் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்படுவதை தபோல்கர் எதிர்த்தார்.ஜோசியம், மந்திரசக்தி போன்ற மூடநம்பிக்கைகளை எதிர்த்து சமரசமில்லாத கருத்துப்போரை இவர் நடத்தி வந்தார். மகாராஷ்டிராவில் இன்றும் நிலவும் தேவதாசி முறைக்கு எதிராக குரல் கொடுத்தவர். மனநோயாளிகள் கொடுமைப்படுத்தப்படுவதை எதிர்த்து போராடியவர். பெரியார் போன்று மூடநம்பிக்கைக்கு எதிராகவும், பெண்களுக்காகவும், ஒடுக்கப்பட்டவர் களுக்காகவும், புறக்கணிக்கப் பட்டவர்களுக்காகவும் போராடி வந்த இவரை ஆகஸ்ட் மாதம் 20ம் தேதியன்று திட்டமிட்டு கொலை செய்து விட்டனர். 68ம் வயதில்கொலை செய்யப்பட்ட இவருக்கு மனைவியும் ஒரு மகனும் மகளும் உண்டு. இவருக்கு பலமுறை கொலை மிரட்டல்கள் வந்த போதும் இவர் காவல்துறையை அணுகவில்லை. “அறியாமையை ஒழிக்க” நடத்தப்படும் போராட்டம் இது என்று அவர் கருதினார். அந்தப் போராட்டத்திற்கு அவருக்கு ஆயுதங்கள் தேவைப்படவில்லை” என்று அவருடைய மகன் ஹமித் கூறினார். வட இந்தியாவில் நிலவிவந்த கட்டைப்பஞ்சாயத்துகளை இவர் சாடிவந்தார். சாதிமுறையை எதிர்த்து அவர் பிரச்சாரம் செய்து வந்தார். மகாராஷ்டிராவில் விநாயக சதுர்த்தி முடிந்தவுடன் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுவதை எதிர்த்த இவர் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.அந்த வழக்கில் மும்பை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் சிலைகளை ஆறுகளிலோ, ஏரிகளிலோ கரைக்கக் கூடாது என்றும் செயற்கையான நீர்நிலைகளை உருவாக்கி அதில் கரைக்க வேண்டும் என்றும் பிளாஸ்டர் ஆப் பாரீஸ் பயன்படுத்தி சிலைகள் செய்யக்கூடாது என்றும், இயற்கைக்கு உகந்த பொருட்களை மட்டும் பயன்படுத்தி சிலைகள் தயாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
இவருடைய பிரச்சாரம் சிறார் திருமணம், மதுஒழிப்பு, கௌரவக்கொலைகள் உள்ளிட்ட பல்வேறு சமூகக்கொடுமைகளை எதிர்த்து நடைபெற்று வந்தது.தபோல்கரின் கொலைக்கு பின்னர் மாநில அரசு வெகுகாலமாக நிறைவேற்ற தயங்கி வந்த மூடநம்பிக்கைக்கு எதிரான அவசரச்சட்டத்தை பிறப்பித்தது. இச்சட்டத்தில் பல குறைகள் இருக்கின்றன. இச்சட்டம் குறித்து தபோல்கர் பல்வேறு அரசியல் கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அவருடைய உயிரை மதவெறியர்கள் பலி வாங்கிய பின்னராவது சட்டத்தை நிறைவேற்ற அரசுக்கு தைரியம் வந்தது பாராட்டத்தக்கது. பகுத்தறிவு வாதி நரேந்திர தபோல்கரின் பெயரை இச்சட்டம் என்றும் நினைவுபடுத்திக் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. இவருடைய கொள்கைகளுக்கு ஆதரவான போராட்டங்களும் தொடரும் என்பது நிச்சயம்
பணியிடங்களில் பாலியல் வன்முறைகள் : சட்ட விதிகளை அமுலாக்குக!
உழைக்கும் பெண்கள் மாநாடு வலியுறுத்தல்

மாநாட்டில் சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென் எம்.பி. பேசினார்.
பூரி, அக். 2 -
பணியிடங்களில் பெண்களுக்குஎதிரான பாலியல் வன்கொடுமை களை தடுக்கும் விதமாக சட்டவிதிகளை முழுமையாக அமல் படுத்த வேண்டும் என அகில இந்திய உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழு(சிஐடியு)வின் தேசிய மாநாடு வலியுறுத்தியுள்ளது.
உழைக்கும் பெண்கள் ஒருங் கிணைப்புக்குழுவின் அகில இந்திய மாநாடு ஒடிசா மாநிலம் பூரியில் செப்டம்பர் 30, அக்டோபர் 1 தேதிகளில் நடைபெற்றது. இம்மாநாட்டில், 2013 டிசம்பர் 12 அன்று அனைத்து தொழிற்சங்கமும் இணைந்து அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தை நோக்கி முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்பது என்றும் இடதுசாரி கட்சிகளின் மூன்றாவது மாற்று அணிக்கு ஆதரவளிப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.மேலும், குறைந்தபட்ச ஊதியம் மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களை அமல்படுத்த வேண்டும்; பெண்களுக்கான 33சதவீத இடஒதுக்கீடு சட்டம் கொண்டுவர வேண்டும்;
பெண்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்; பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டும்; 44வது, 45வது ஐஎல்ஓ பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும்;அனைவருக்கும் பயன்படும் வகையில் உணவுப்பாதுகாப்பு மசோதாவை திருத்த வேண்டும் என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இடதுசாரிகளுக்கு எதிராக மேற்குவங்கத்தில் நடைபெறும் திரிணாமுல் ஆட்சியின் அட்டூழியங்களைக் கண்டித்தும் வரதட்சணைக் கொடுமைகளுக்கு எதிராகவும் விவசாய நெருக்கடிக்கு தீர்வுகாண வலியுறுத்தியும் சமூகத்தில் நிலவும் வன்கொடுமைகளை எதிர்த்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள் தேர்வு : மாநாட்டில் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக்குழுவின் அகில இந்திய அமைப்பாளராக டாக்டர் கே.ஹேமலதா, பொருளாளராக ரஞ்சனா நிருலா உறுப்பினர்களாக ஏ.ஆர்.சிந்து, எஸ்.வரலட்சுமி, ரோஜா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். தமிழகத்திலருந்து மாலதி சிட்டிபாபு, டி.ஏ.லதா, எம்.பகவதி, எம்.மகாலட்சுமி ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

Tuesday, October 1, 2013

திவாலாகிறது அமெரிக்கா? : அரசு நிறுவனங்களைமூட வெள்ளைமாளிகை உத்தரவு
8 லட்சம் அரசு ஊழியர்கள் வெளியேற்றம்
வாஷிங்டன், அக்.1-
அமெரிக்காவில் அடுத்தாண்டிற்கான பட்ஜெட்டிற்கு போதிய நிதியில்லாத காரணத்தால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் ‘ஒபாமா கேர்’ என்று அழைக்கப்டும் தனி நபர் சுகாதார காப்பீட்டு திட்டத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய குடியரசுக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வரவு செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.
குறிப்பிட்ட காலத்திற்குள் மசோதா நிறைவேறாத காரணத்தால் அத்தியாவசிய அரசுநிறுவனங்கள் தவிர மற்ற அரசு நிறுவனங்களை மூட வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது. இதனால் 8 லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளமின்றி கட்டாய விடுப்பில் அனுப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் தேதியன்று அமெரிக்காவின் நிதியாண்டு துவங்கும். அதற்கு முன்னதாக செப்டம்பர் 30ம் தேதி நள்ளிரவிற்குள், வரவு செலவுத் திட்டத்திற்கான ஒப்புதலை அந்நாட்டின் மேல்சபை எனப்படும் செனட் மற்றும் காங்கிரஸ் என்றழைக்கப்படும் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அதன் பின்னர் ஜனாதிபதி ஒப்புதலுடன் வரவு செலவுத் திட்டம் செயல்படுத்தப்படும். ஒரு வேளை ஒப்புதல் கிடைக்காத பட்சத்தில் அதிபர் தனக்கிருக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த திட்டத்தை அமலாக்கம் செய்ய முடியும். ஆனால் இந்த நடவடிக்கை எல்லாம் செப்டம்பர் 30ம் தேதி நள்ளிரவிற்குள் முடிந்து விட வேண்டும். தவறும் பட்சத்தில், முதல் கட்டமாக ’ஷட் டவுன்’ என்ற அடிப்படையில் நாட்டில் இருக்கும் அத்தியாவசியத் துறைகள் தவிர்த்து மற்ற துறைகள் மூடப்படும். அதில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.
தற்போதைய நிலவரப்படி செனட் சபையில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையாகவும், பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையாகவும் இருந்து வருகின்றனர். இதனால் குடியரசுக் கட்சியினர் ஒப்புதலுடனே எந்த ஒரு மசோதாவையும் நிறைவேற்ற முடியும். தேவைப்படும் பட்சத்தில் ஜனாதிபதி தனக்குரிய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாவை செயல்படுத்தலாம். பொருளாதார நெருக்கடிஅமெரிக்காவில் கடந்த சில மாதங்களாகவே பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது. அந்நாட்டின் கருவூலத்துறைச் செயலாளர் ஜேக் லீ, “அக்டோபர் 17ம் தேதி வரைதான் அரசின் செலவினங்களுக்கு பணம் கையில் இருக்கிறது.
தற்போது இருக்கும் அமெரிக்காவின் கடன் உச்சவரம்பான 16 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலர் என்ற அளவை, 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி டாலர் அளவிற்கு உயத்தினால்தான் தாக்குப் பிடிக்க முடியும்” என்று கூறியிருந்தார் அல்லது கடுமையான நெருக்கடிகளை அமெரிக்க சந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து அந்நாட்டின் பட்ஜெட் அலுவலகக் குழுவும் இது குறித்து ஆராய்ந்தது. கருவூலத்துறையின் கூற்று சரியானதுதான். உடனே கடன் உச்ச வரம்பை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் ஒபாமா குடியரசு கட்சியினருடன் கடன் உச்ச வரம்பை உயர்த்துவதற்கான பேச்சுவார்த்த்தையில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அதனை குடியரசு கட்சியினர் ஏற்றுக் கொள்ளவில்லை. பட்ஜெட் மசோதா தோல்விஇந்நிலையில் பிரதிநிதிகள் சபையில் செனட் குழுவால் தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் முன்மொழியப்பட்டது. எதிர்பார்த்தது போலவே குடியரசுக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக கடன் உச்சவரம்பை உயர்த்துவது, ‘ஒபாமா கேர்’ என்றழைக்கப்படும் சுகாதர காப்பீட்டு திட்டத்திற்கு நிதி ஒதுக்குவது உள்ளிட் விவகாரங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒபாமா முன்வைத்த மசோதாவிற்கு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 9 பிரதிநிதிகள் உள்ளிட்டு 228 பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். 221 பிரதிநிதிகள் ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் ‘ஒபாமா கேர்’ திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்து, வரவு செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானம் நிறைவேறியது. ஆனால் இதனை ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் செனட்டின் ஒப்புதலுக்கு இந்த மசோதா கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரித்தனர்.
அங்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒபாமா முன்வைத்த வரவு செலவுத் திட்டத்திற்கு 54 வாக்குகளும், பிரதிநிதிகள் சபையில் திருத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 46 வாக்குகளும் கிடைத்தன. இந்நிலையில் செப்டம்பர் 30ம் தேதி நள்ளிரவு வரை ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. எப்படியாவது குடியரசு கட்சியினரை சமாதனப்படுத்தி வரவு செலவு திட்டத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும் என ஒபாமா தரப்பில் முயற்சி செய்யப்பட்டது.
ஆனால் பலனளிக்கவில்லை. அரசு நிறுவனங்களை மூட உத்தரவு இந்நிலையில் அக்டோபர் 1ம் தேதி பிறப்பதற்கு சில மணித்துளிகள் இருக்கையில் வெள்ளை மாளிகையின் பட்ஜெட் இயக்குநர் சில்வியா மேத்யூஸ் பர்வெல், அரசு நிர்வாகங்களுக்குஒரு உத்தரவைப் பிறப்பித்தார். அதில் அமெரிக் காவில் உள்ள அத்தியாவசியத் துறைகளை

தவிர இதர அரசுத்துறைகள் படிப்படியாக மூடுவதற்கான நடவடிக்கையை தொடங்குங்கள் என உத்தரவிட்டார். அதன்படி மொத்தமுள்ள 21 லட்சம் அரசு ஊழியர்களில் 8 லட்சம் பேர் வேலையை விட்டு அனுப்பப்படுகின்றனர்.
பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் 4 லட்சம் பேரும், வணிகத்துறையில் உள்ள 40 ஆயிரத்து 200 பேரும், எரிசக்தித் துறையில் பணியாற்றும் 12 ஆயிரத்து 700 பேரும், போக்குவரத்துத் துறையில் உள்ள 18 ஆயிரத்து 500 பேரும் வெளியேற்றப்படுவார்கள்.மேலும், வெள்ளை மாளிகையில் பணியாற்றி வந்த 1265 பேரும், சுகாதாரத்துறையில் பணியாற்றும் 40 ஆயிரம் பேரும், உணவு மற்றும் மருத்துவ நிர்வாகத்துறையில் பணியாற்றுபவர்களில் 55 சதவீதம் பேரும் கட்டாய விடுப்பில் சம்பளமின்றி வீட்டுக்கு அனுப்படுகின்றனர்.
கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் சம்பளமின்றி பணியாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் அரங்கேற்றப்படுகின்றன.இதற்கு முன்பு 1995 மற்றும் 1996ம் ஆண்டுகளில் பில்கிளிண்டன் ஆட்சியின் போது இதே நிலை ஏற்பட்டது. தொடர்ந்து 21 நாட்கள் நீடித்த இந்த நிலை, பின்னர் சரி செய்யப்பட்டது. அதே போன்று ஒபாமாவும் குடியரசுக் கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்தி, பல திட்டங்களை விட்டுக் கொடுத்து சமாதானத்தில் ஈடுபடுவார்.
அதன் பின்னர் புதிய வரவு செலவு திட்டத்துடன் நிலைமை சரி செய்யப்படும். ஆனாலும் அமெரிக்கா சிக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நிரந்தரமாக மீண்டு வரமுடியாது. கடுமையான நெருக்கடியை சந்தித்தே தீர வேண்டும் என உலக பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.