Sunday, September 7, 2014

சாக்லேட்டில் தண்ணீரில் செல்போனில் நுண் அரசியல் ...
சு.பொ. அகத்தியலிங்கம்

அரசியல் பேசும் அயல் சினிமாஆசிரியர்: இ.பா. சிந்தன்வெளியீடு: கோணம்,பாரதி புத்தகாலயம்7, இளங்கோ தெரு, தேனாம்பேட்டைசென்னை - 600 018பக்: 192, விலை ரூ.140 /-
உங்களுக்கு சினிமா பிடிக் கும் தானே! ஆனால் அரசி யல் பிடிக்குமா ?”“ சார் ! அரசியல் நமக்கெதுக்கு? சினிமாவைப் பார்த்தமா ரசித்தமா அதோட விட்ரணும்..”இப்படித்தான் நம் உரை யாடல் தொடரும். ஆனாலும் ஒவ்வொரு சினிமாவும் அரசியல் பேசிக் கொண்டுதான் இருக்கிறது... நம்முடைய சமூக உளவியலை அது செதுக்கிக்கொண்டும் சிதைத்துக் கொண்டும்தான் இருக்கிறது. தமிழ் சினிமாவும் இப்படித்தான். பராசக்தியும் வேலைக்காரியும் இரத்தக்கண்ணீரும் அதுபோன்றபடங்களும் பேசிய அரசியல் ஒருவிதம். ஜென்டில்மேனும், அந்நியனும் அதுபோன்றபடங்களும் பேசும் அரசியல் இன்னொரு ரகம் . ரோஜாவும், கள்ளழகரும், விஸ்வரூபமும் பேசும் அரசியல் வேறு ரகம். ஒவ்வொரு படமும் ஒரு அரசியலை பேசிக்கொண்டே தான் இருக்கிறது . ஆனால் அந்த அரசியல் யாருக்காக ? எதற்காக? இதுவே அடிப்படைக் கேள்வி.
இவரா அவரா என்ற சாக்கடை அரசியல் அல்ல; – சாதி மத தீய அரசியல் அல்ல;– வாழ்க்கையை மேம் படுத்தும் வர்க்க அரசியலை நம் படைப்புகள் பேசுகின்றனவா? இங்கே அப்படியொரு புதிய வெளிச்சக் கீற்று . இந்தப் புத்தகம் 16 அயல் மொழி சினிமாக்கள் பற்றி பேசு கிறது. சினிமா விமர்சனமல்ல; திரைக்கதை சுருக்கமுமல்ல ; அந்த சினிமாக்களை முன் வைத்து பின்புலத்தோடு ஒரு அறிமுகம் தருகிறது. இப்படங்களில் அப் படி என்ன சிறப்பு இருக்கிறது ? உங்களின் இன்னொரு உறுப்பாகவே மாறிப்போன செல் போன்கள் - உங்கள் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் சாக்லேட் - நீங்கள் அருந்தும் கோக், உங்கள் சமையலறையிலுள்ள தேங்காய் எண்ணெய், நீங்கள் தாகம் தணிக்கும் தண்ணீர்; இப்படி ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் நெஞ்சைப் பதறவைக்கும் கதை இருப்பதை நீங்கள் அறிவீர்களா? ஒரு சதி இருப்பதை தெரிந்து கொள்ள வேண்டாமா ? இப்புத்தகம் அதற்கு உதவும் .
காங்கோவில் கிவு பகுதியில் கிடைக்கும் கோல்டன் மற்றும் கசி ரைட் ஆகிய இரு கனிமங்கள்தான் நாம் பயன்படுத்தும் செல்போனின் அடிப்படை என்பதை அறிவீர்களா? இந்தக் கனிமங்களைக் கொள்ளைய டிக்க காங்கோவில் உள்நாட்டு யுத்தம் தூண்டி விடப்படுவதை ஊடகங்கள் அம்பலப்படுத்திய துண்டா? இதுவரை 50 லட்சம் மக்கள் கொல்லப்பட்ட துயரை யாரறிவார்? பன்னாட்டு நிறுவனங் களும் ஏகாதிபத்தியமும் கொடூ ரமாய் நடத்தும் கனிமவேட்டையை அம்பலப்படுத்தும் படமே டென் மார்க்கைச் சார்ந்த பிராங் தயாரித்த BLOOD IN MOBILE –(செல்போனில் காங்கோ மக்கள் ரத்தம்)சாக்லேட்டை விரும்பாத குழந் தைகளும் இல்லை . பெரியவர்களும் இல்லை. சாக்லேட் தயாரிக்க பெரிதும் பயன்படும் கோகோ 45 விழுக்காடு உற்பத்தி செய்யப்படுவது ஆப்பிரிக்க நாடான ஐவரி கோஸ்ட். அங்கு கோகோ தோட்டங்களில் 18 லட்சம் குழந்தைத் தொழிலாளிகள் வதைக்கப்படுகிறார்கள்.
அந்த ஏழைக் குழந்தைகளின் கண்ணீரும் வியர் வையும் ரத்தமும் நாம் சாப்பிடும் ஒவ்வொரு சாக்லேட்டிலும் உறைந்து போயிருக்கிறது; அத்துடன் பன் னாட்டு நிறுவனங்களின் கொடூர சுரண்டலும் மனித உரிமைகளை அதிலும் குழந்தை உரிமைகளை மிதிக்கும் அநியாயமும் கலந்து இருக் கிறது. இதனை வெளிச்சம் போட்டுக் காட்ட டென்மார்க்கைச் சார்ந்த மிக்கி மிஸ்திராதி தயாரித்த படமே THE DARK SIDE OF CHOCOLATE(சாக்லேட் தயாரிப்பின் கசப்பான மறுபக்கம்) பஸ்ஸில் ரயிலில் பயணிக்கும் பெண்கள் ஒவ்வொருவரும் எதிர் கொள்ளும் முக்கிய சவால் ஆண்க ளின் வக்கிர உரசல் .
பெண்களின் பாலியல் கொடுமைகளை மையமாக வைத்து தயாரிக்கப்பட்ட எகிப்து படம் “678” (ஆம் பேருந்து தடம் எண் 678) எல்லோருக்கும் எழுதப் படிக்கக் கற்றுக் கொடுக்க விழைவது நல்ல முயற்சி . ஆனால் குண்டு மழை பொழியும் யுத்தகளத்தில் இது சாத்தியமா? மனிதன் மீது நம்பிக் கையும் காதலும் ததும்பி வழியும் போது எதுவும் சாத்தியமே . சமிரா மக்மல்பப் என்கிற ஈரானிய பெண் இயக்குநர் இயக்கிய BLACK BOARDS (போர்ச்சூழலில் ஆசிரியப் பணி ) நம்மை உலுக்குகிறது . மழைத்தண்ணீரை பிடிக்கவும் காசு கொடுக்க வேண்டுமாம். தண்ணீரையும் விற்பனைச் சரக்காக் கும் முதலாளித்துவச் சுரண்டல் கொடூரத்தின் சாட்சியாய் பொலி வியா. இதற்கு எதிராக கிளர்ந்தெழுந் தனர் மக்கள். இதனைப் படமாக் கியிருக்கிறார் இயக்குநர் செபாஸ் டின் தயாரிப்பாளர் கோஸ்டா இருவரும் .
EVEN THE RAIN – 2010 (பொலிவிய தண்ணீபுரட்சி )கோக் நிறுவனம் ஒரு நாட்டின் நீராதாரத்தை ஒட்ட உறிஞ்சுவது டன்; உழைப்பாளிகளையும் ஒட் டச் சுரண்டுகிறது. உரிமை கேட்க தொழிற்சங்கம் அமைத்தால் கொலைவாளைச் சுழற்றுகிறது . கொலம் பியாவில் எட்டு தொழிற் சங்கத் தலைவர்களைக் கொன்றிருக் கிறது . இதனை அம்பலப்படுத்தும் THE COCA COLA CASE (கொலை கார கோக் )கியூபா எப்படி அமெரிக்கப் பொருளாதாரத் தடைகளைத் தாங்கி நிற்கிறது என்பதைச் சொல் லும் HOW CUBA SURVIVED PEAK OIL படம் மூன்றாம் உலக மக்களுக்கு நல்ல பாடம். சமத்துவத் திற்காகப் போராடிய இங்கிலாந்துப் பெண்களின் கதை , ஊடகங்கள் மறைத்துவிட்ட வெனிசுலாவின் மக்கள் புரட்சி, – முதலாளிகளான அர்ஜெண்டினா தொழிலாளிகள் – பூகென்வீலில் நடந்த தேங்காய் புரட்சி, – ஆப்பிரிக்காவின் சேகு வேரா என்றழைக்கப்படும் தாமஸ் சங்கராவின் வாழ்க்கைக் கதை – THIS IS NOT A FILIM படம் தயாரித்து அரசு அடக்குமுறைக்கு அடிபணிய மறுத்து சிறையேகிய ஜாபர் பனாகி- அமெரிக்காவின் அங்காடித்தெரு பாலஸ்தீன மக்களின் போராட் டத்தை நம்பிக்கையை வெளிப்படுத் தும் முயற்சியில் ஐந்து கேமிராக்களை இழந்த கதை; என ஒவ்வொன்றும் ஏகாதிபத்தியம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் சுரண் டலை அதன் அரசியலை வலுவாகப் பேசுகின்றன.
திரைப்படத்தின் தொழில் நுட்பம் அழகியல் இவற்றை இந் நூல் பேசவில்லை. தேவையும் இல் லை. ஒடுக்குமுறையினூடே எந்தவாய்ப்பும் வசதிகளுமற்ற சூழ லில் உலகம் அறிய வேண்டிய உண்மைகளை – சுரண்டல் ஆதிக்கஅரசியலை உரக்கப்பேசுகிறது இந்நூல். தீக்கதிர் வண்ணக்கதிரிலும் மாற்று இணைய இதழிலும்தொடர்ந்து இ.பா.சிந்தன் எழுதிய வற்றின் தொகுப்பே இந்நூல். கம்ப் யூட்டர் துறையில் நன்குபடித்துமென்பொருள் வல்லுநராய் திகழும் இ.பா. சிந்தனின் சமூக அக்கறையும் தெளிவான சிந்த னையும் உயிரோட்டமான எழுத்தாற்றலும் வியக்கவைக்கின்றன. பாராட்டுக்கள். தன் தந்தை பாக்கியம் பிள்ளை ஊட்டிய சமூக விஞ்ஞானமே தன் விழிகளைத் திறந்ததாக சிந்தன் வாக்கு மூலம் தருகிறார். சிந்தனோடு பாக்கியம் பிள்ளைக்கும் எமது பாராட்டுகள். வாழ்த்துகள். இன்றைய ஊடக உலகம் பொதுவாக உலகமயத்தையும் அதன் தீய விழைவுகளையும் பேசுவதில்லை; மாறாக சமூக உளவியலை அவர்களுக்குச் சாதக மாக தகவமைப்பதில் ஆர்வம் காட்டுகின்றன. அதில் குறிப் பிடத்தக்க வெற்றியும் பெற்றுள் ளன.
இந்தச் சூழலில் மக்கள் பிரச்சனைகளை – அதன் அரசி யலை கவிதையாய், சிறுகதை யாய், நாவலாய், குறும்படமாய், ஆவணப்படமாய், ஓவியமாய், நாடகமாய் படைப்போனே இன்றையத் தேவை . அத்தகைய படைப்புகள் விமர்சன ஜாம் பவான்களுக்கு குமட்டலைத் தரலாம்; ஆனால் சமூகத்தை நேசிக்கும் படைப்பாளியும் போராளியும் அதனை உயர்த்திப் பிடித்தாக வேண்டும். இந்நூல் அதன் சாட்சி. இந் நூலைப் படியுங்கள்! இது பேசும் அரசியலை விவாதியுங்கள்! பரப்புங்கள்! அதுவே பல புதிய வாசல்களைத் திறக்கும்.

Friday, September 5, 2014

‘பேனாவின் முனை கூர்மையானது’



புதுதில்லிக்கு அருகில் உள்ள குர் கானில் வீட்டு வேலைகள் செய்து வரும் பேபி ஹைதர், உண்மையிலேயே `வாளின் முனையைவிட பேனாவின் முனை கூர்மையானது’ என்கிற முதுமொழியை அறியாமல் இருக்கக்கூடும். ஆயினும் அவர் எழுதிய சுயசரிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழு தும் சென்றபின் அந்த முதுமொழி முற்றிலும் உண்மை என்பதை அவர் மெய்ப்பித்து விட்டார். பேபி ஹைதர் வங்கத்தில் மிகவும் வறிய குடும்பத்தில் பிறந்தவர், வாழ்க்கையின் அனைத்துவிதமான கொடுமைகளுக்கும், ஒடுக்குமுறைக்கும், அவமதிப்புகளுக்கும் உள்ளானவர்.
கல்வி மறுக்கப்பட்டதுடன், சிறுமியாக இருக்கும்போதே கர்ப்பிணி யாக்கப்பட்டார். இத்தகைய கொடூரமான அனுபவங்கள் ஒருவரை சின்னா பின்னமாக சிதைத்துவிடக்கூடும். ஆயி னும், பேபி ஹைதர் வித்தியாசமானவராக இருந்ததால், அவற்றையே அவர் தன் சுயசரிதையாக எழுதியதன் மூலம் இன்று உலகின் கவனத்தையே ஈர்த்துள்ளார்.39 வயதாகும் பேபி ஹைதர் புது தில்லி அருகேயுள்ள குர்கானில் வீட்டு வேலையாளாகப் பணிசெய்து வருகிறார். இவ்வாறு கூறுவது என்பது, பேபி ஹைதரின் ஒட்டமொத்த அடையாளத்தின் ஒருசிறு துளியேயாகும். உலகத்தின் கண் களுக்கு, அதிலும் குறிப்பாக, அவரதுவாசகர்களுக்கு, அவர் ஒரு சிறந்தஎழுத்தாளர்.
விரைவில் வெளிவரவிருக் கும் அவரது மூன்றாவது நூலை வாங்குவதற் காக அவரது வாசகர்கள் அனைவரும்ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள். பேபி ஹைதரின் முதல் புத்தகம், வங்கமொழியில் வெளியான `ஆலோ ஆந்தாரி’ என்பதாகும். பின்னர் இது ஆங்கிலத்தில் `மிகவும் சாதாரணமானவள் வாழ்க்கை` (ஹ டுகைந டுநளள டீசனiயேசல) என்னும் பெயரில் வெளியானது. 2002இல் ஊர்வசி புட்டாலியா என்பவர் மொழியாக்கம் செய்து சுபான் புக்ஸ் என்னும் பதிப்பகத்தாரால் வெளி யிடப்பட்டது. இதில் அவர் தன் கதையை அனைவரது நெஞ்சத்தையும் தொடும் வண்ணம் சித்தரித்துள்ளார். இந்நூலில் தனக்கு தன் வாழ்வில் ஏற்பட்ட கொடூரமான அனுபவங்களைத் தன் வாசகர்களுடன் பேபி பங்கிட்டுக் கொள்கிறார். எப்போதும் தன்னைத் திட்டிக் கொண்டிருக்கும் தந்தைமற்றும் தன்னை நிராதரவாக விட்டுவிட்டு ஓடிச் சென்ற தாய். அவரது அக்கா, அவரு டைய கணவரால் கழுத்து நெறிக்கப்பட்டு கொல்லப்படுகிறாள்.
பேபிக்கும் கூட 12 வயதிலேயே திருமணம் ஆகிவிடுகிறது. குடிகாரக் கணவன்மார்களின் கொடுமை களிலிருந்து தப்பிப்பதற்காக எல்லாப் பெண்களும் செய்வதுபோலவே பேபி ஹைதரும் ரயிலேறி குர்கானில் உள்ள தன் சகோதரரின் வீட்டிற்கு வந்தார். ஆயினும் வாழ்க்கை மேலும் கொடூரமாக மாறியது. அவர் வீட்டு வேலையாளாகச் சேர்ந்த வீட்டின் உரிமையாளர்கள் அற்ப ஊதியம் கொடுத்து அதிக வேலை வாங் கினார்கள். இரவு வெகுநேரம் கழித்துதான் வேலையை முடித்துவிட்டு அனுப்பி வைத்தார்கள். அதன்காரணமாக தன் குழந்தை களையே அவரால் பார்க்க முடியவில்லை. தன் தாய் வரும் வரைக்கும் சிறிய பொந்து மாதிரி இருந்த அறைக்குள்தான் அவர்கள் அடைபட்டுக் காத்துக் கொண்டிருந்தார்கள். எனவே அந்த வீட்டில் வேலை செய்வதை விட்டுவிட பேபி தீர்மானித்தார்.
பின்னர் ஓய்வுபெற்ற ஒருவரின் வீட்டில் வேலையாளாகச் சேர்ந்தார். அவர் பெயர்பிரபோத் குமார். கல்வியாளரான அவர்நாளடைவில் பேபி ஹைதரின் நண்பராக வும், வழிகாட்டியாகவும், குருவாகவும் மாறி, பேபி ஹைதரை ஒரு சிறந்த பெண் மணியாக உருவாக்கினார்.வீட்டில் நூலகத்திலிருந்த வங்க புத்தகங்கள் சிலவற்றை பேபி ஹைதர் பார்த்துப் படித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த பிரபோத் குமார், பேபி மீது கோபம்அடைந்து அவரைத் திட்டவில்லை. மாறாக, அவரிடம் இருந்த அறிவு தாகத்தைத் தூண்டும் விதத்தில், அவர் படிக்கும் வண் ணம் எண்ணற்ற புத்தகங்களை அவருக்குப் பரிந்துரைத்தார். அதில் தஸ்லீமா நஸ்ரீன் எழுதிய அமர் மெய்பெலா என்னும் நூல் பேபி ஹைதரின் சிந்தனையிலும் ஒரு தெளிவைக் கொண்டு வந்தது.
தஸ்லீமா நஸ்ரீனின் அந்த நூல் கிட்டத்தட்ட தன் வாழ்க்கையையே பிரதிபலிப்பதாக அவர் கருதினார். எனவே ஏன் நாமும் அதுபோல் நம் வாழ்க்கையை எழுதக்கூடாது என்று சிந்தித்தார். சிந்தித்ததை பிரபோத் குமாரிடம் பகிர்ந்துகொண்டபோது அவர் எழுதச் சொல்லி ஊக்கமளித்தார்.தான் ஒரு சிறந்த எழுத்தாளராக மிளிர்வோம் என்று பேபி ஹைதர் கனவிலும் எண்ணிப்பார்த்ததில்லை. “என் துன்ப துயரங்களை என்னுடைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளும் விதத்தில்தான் நான் எழுதத் தொடங்கினேன். இவ் வாறு எழுதுவது என்னைச் சற்றே சாந்தப்படுத்தியது. எனவே எழுது வதைத் தொடர்ந்தேன்,’’ என்று பேபி ஒப்புக்கொள்கிறார். ஆயினும் அவரது முதல் புத்தகத்தை ஒரு பதிப்பகம் வெளி யிட்டு, அது பின்னர் ஆங்கிலத்தில் மொழி யாக்கம் செய்யப்பட்டு, உலக அளவில் நடைபெறும் இலக்கிய விழாக்களில் விவாதம் செய்யக்கூடிய அளவிற்கு உயர்ந்தது. பிரான்ஸ், ஜெர்மனி, ஹாங்காங் ஆகிய நாடுகளில் நடைபெற்ற இலக்கிய விழாக்களுக்கு அவர் வரவழைக்கப்பட்டு உலகின் சிறந்த எழுத்தாளர்களுக்கு இணையாக அவரும் சிறப்பிக்கப்பட்டார்.
எழுத்தின் மூலம், பேபி ஹைதர் தனக்கும் தன் குழந்தைகளுக்கும் ஒரு பாதுகாப்பான எதிர்காலத்தையும் உறுதிப்படுத்திக் கொண்டுவிட்டார். அவர்கள் நன்கு படித்து முன்னேறியுள்ளனர். மூத்த பெண் தற்போது ஒரு நல்ல வேலையில் இருக்கிறார். இவ் வாறு பேபி ஹைதர் உலகப் புகழ் பெற்ற போதிலும் பிரபோத் குமார் வீட்டில் தான் பார்த்து வந்த வேலையைமட்டும் அவர் இன்னமும் விடவில்லை. அவருடைய வீட்டு வேலையாளாகத் தொடர்கிறார். தன்னுடைய இவ்வளவு புகழுக்கும் அவர் தான் காரணம் என்றும் என்றென்றும் நான்அவருக்குக் கடன்பட்டிருக்கிறேன் என் றும் ஹைதர் கூறுகிறார்.கடந்த கால கசப்பான அனுபவங்கள் குறித்து அவரிடம் வினவுகிறபோது பேபி ஹைதர், “என்னைத் துன்பத்திற்குள்ளாக் கிய எவரையும் இப்போது நான் குறைகூற மாட்டேன். என்னைப் போன்றவர்களின் துன்ப துயரங்களுக்கு இந்தச் சமூகம் தான்பொறுப்பேற்க வேண்டும்.
பெண்கள் குறித்தபொதுவான அணுகுமுறை மாற வேண்டிய தேவையிருக்கிறது’’ என்கிறார். பேபி ஹைதர் மேலும் கூறுகையில், “என்னுடைய புத்தகங்கள் என்னைப் போன்ற துர்ப்பாக்கியசாலிகள் தைரியம் பெறவும், தங்களைச் சுற்றியுள்ள இருட்டிலிருந்து வெளியே வரவும் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடவும் ஊக்கத்தைக் கொடுக்கும்,’’ என்று தான் நம்புவ தாகக் கூறினார். மேலும் அவர்களும் இதுபோன்று தங்கள் கதைகளை எழுத வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.-ச.வீ.

Friday, July 25, 2014

கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்யும் பட்ஜெட்
பி.ராஜீவ் எம்.பி.


பட்ஜெட் உரையில் முதல் வரியிலேயே நிதி அமைச்சர் அவர்கள் `மாற்றம்’ என்ற வார்த்தையை உபயோகப்படுத்தி இருந்தார். ஆனால் அந்த வார்த்தைக்கு எந்த உட்பொருளும் இருப்பதாகத் தெரியவில்லை. ஐமுகூ அரசாங்கத்தின் பட்ஜெட்டுக்கும் தேஜகூ அரசாங்கத்தின் பட்ஜெட்டுக்கும் எந்த மாற்றத்தையும் பார்க்க முடியவில்லை. அதனால்தான் ஆனந்த சர்மாவும் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கும் எங்கள் பட்ஜெட் பாணியில்தான் இதுவும் இருக்கிறது என்கின்றனர்.
முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரமும் இதே தொனியில் இவர்களைப் பாராட்டியிருக்கிறார். காங்கிரஸ் சார்பான ஐஎன்டியுசி சங்கம் ஐமுகூ சமர்ப்பித்த பட்ஜெட்டையும் விமர்சித்தது. பாஜகவுடன் நெருங்கிய உறவுகொண்டுள்ள பிஎம்எஸ் சங்கம், இப்போது ஜெட்லி தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டையும் விமர்சித்துள்ளது. குடியரசுத் தலைவர் உரையின்மீதான விவாதத்தின்போது சீத்தாராம் யெச்சூரி சரியாகச் சுட்டிக்காட்டியதைப்போல இடைமாற்று ஓட்டப் பந்தயத்தில் குறுந்தடியை வாங்கிக்கொள்வதைப் போல பாஜக, காங்கிரசிடமிருந்து குறுந்தடியை வாங்கிக் கொண்டுள்ளது. இப்போது காங்கிரசார் ஓடியதைவிட வேகமாக இவர்கள் ஓடிக்கொண் டிருக்கிறார்கள். கார்ப்பரேட்டுகளுக்கு அவர்களைவிட மிக வேகமாக சலுகைகளை வாரி வழங்கிட முன்வந்திருக் கிறார்கள்.
அதேபோன்று அவர்களைவிட மிகவும் அதிகமான அளவில் மக்களைக் கசக்கிப் பிழிந்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைய எதார்த்தநிலை. நம் ஜனநாயகத்தின் உண்மையான தோற்றம் மிகவும் சுருங்கிவிட்டது. ஜனநாயகத்தில், தேர்தல்களில் மக்கள்ஓர் அரசியல் கட்சியைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறவருக்கு வாக்களிப்பார்கள். அந்த அரசியல் கட்சி ஒரு சித்தாந் தத்தை மற்றும் கொள்கைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும். ஆனால் இப்போ துள்ள நிலை என்ன? இருவருமே ஒரேவிதமான கொள்கைகளையே பிரதிபலிக் கிறார்கள். இதுதான் இன்று நம் நாட்டில் ஜனநாயகத்தின் நிலை.இருந்தாலும் ஐமுகூ பட்ஜெட்டின் மீது சில காவி ஒப்பனைப் பொருள்களை சேர்க்க ஜெட்லி முயற்சித்திருக்கிறார். தி எகனாமிக் டைம்ஸ் நாளேடு “காவி உதட்டுச்சாயத்துடனான ஒரு சிதம்பரம் பட்ஜெட்’’ என்று மிகச்சரியாகவே ஒரு நல்ல தலைப்பை பட்ஜெட்டுக்குக் கொடுத்திருக்கிறது. அதனை பட்ஜெட் முழுவதும் பார்க்க முடிகிறது.
பிரதமர் அவர்களும், இதர அமைச்சர் களும் சீன மாடல் குறித்து எப்போதும் பேசுகிறார்கள். சீன மாடலின் அனுபவம் என்ன? பொது முதலீடுகளின் மூலம்உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்திருக்கிறார்கள். ஆனால் நாம் நிதி நெருக்கடிக் கொள்கையைத் தொடர்ந்து கொண்டிருக்கிறோம். நான் இந்த நிதி நெருக்கடி மந்திரத்திற்கு முற்றிலும் எதிரானவன். வருவாய் பற்றாக்குறையைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பது உண்மை. ஆனால் நிதிப் பற்றாக்குறை குறித்து என்ன? நாம் நம் பணத்தை உள்கட்டமைப்புத் திட்டங்களுக்குப் பயன்படுத் தினால், அது வேலைவாய்ப்பை அதி கரித்திடும். மக்களுக்கு அதிகப் பணம் கிடைக்கும். அவற்றின்மூலம் அவர்கள் தங்களுக்குத் தேவையான பொருள்களை வாங்குவார்கள். அதனால் உள்நாட்டில் சந்தையில் தேவைகள் அதிகமாகும். தேவைகள் அதிகமாவதால் உற்பத்தி பெருகும். இதன் காரணமாக வேலை வாய்ப்புகள் மேலும் பெருகும். மக்களிடம் பணம் தாராளமாகப் புழங்கும். இது பொருளாதாரத்திற்கு ஓர் உந்துசக்தியைத் தந்திடும்.
ஆனால், இவ்வாறு செய்வதற்குப் பதிலாக, நீங்கள் நிதிநெருக்கடி மந்திரத்தை ஜபித்துக்கொண்டிருந்தீர்களேயானால், அதன் மூலம் கார்ப்பரேட்டுகளுக்கு அதிக சலுகைகளை அளிப்பீர்களேயானால், அது நாட்டிற்குப் பயன்படாது. வருவாயைப் பெருக்கிட எவ்வித நடவடிக்கையும் இல்லை. முந்தைய நிதியமைச்சர் இந்த அவையில் கூறியபதில் ஒன்றில் 5.10 லட்சம் கோடிரூபாய்க்கும் மேலான வரி வசூலிக்கப்பட வில்லை என்றார். நிதி நெருக்கடி எந்த அளவிற்கு இருக்கிறதோ அதே அளவிற்கு இதுவும் இருக்கிறது. இந்த வரி பாக்கியை வசூலித் திருந்தார்களானால், நிதி நெருக்கடி வந்திருக்காது. ஆனால் அதனைச் செய்யாது நிதி நெருக்கடியைக் காரணம் சொல்லி மானியங்களை வெட்டுகிறார்கள், அனைத்துச் செலவினங் களையும் வெட்டுகிறார்கள். இவ்வாறு வசூலிக்காத வரி பாக்கியில் 75 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை குறித்து எவ்வித பிரச்சனையும் கிடையாது. ஆயினும் அரசின் சார்பில் வசூலிக்கத் தயங்குகிறார்கள். வரி பயங்கரவாதம்பிரதமரும் நிதி அமைச்சரும் வரி பயங்கரவாதம் என்ற சொற்றொடரைப் பயன்படுத்துகிறார்கள். ஆனந்த் சர்மா கூட வரி பயங்கரவாதம் குறித்து குறிப்பிடு கிறார்.
வரி பயங்கரவாதம் என்பதற்கான வரையறை என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். இதன் பொருள் என்ன? இவர்களின் கருத்தை முற்றிலுமாக நான் எதிர்க்கிறேன். நம் நாட்டில் மொத்த வரி-மொத்த உள்நாட்டு உற்பத்தி (கூயஒ-ழுனுஞ சயவiடி) விகிதாச்சாரம் கிட்டத்தட்ட 10 சதவீதம் மட்டுமே.இங்கிலாந்தில் இது 26.9 சதவீதம். நார் வேயில் இது 27.3 சதவீதம். டென்மார்க்கில் 34.1 சதவீதம். பெல்ஜியத்தில் 25.7 சதவீதம். ஒரு சதவீதத்தை நாம் உயர்த்தினோம் என்றாலும் நமக்கு கஜானாவிற்கு 1.25 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வருமானம் வரும். நாம் நம்முடைய வரி-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதாச்சாரத்தை இங்கிலாந்துக்கு இணையாக மாற்றியமைத்தோமானால் நம் கஜானா விற்கு சுமார் 20 லட்சம் கோடி ரூபாய்கூடுதலாக வரி வருவாய் கிட்டும். நார்வேக்கு இணையாக மாற்றியமைத் தோமானால் கூடுதலாக 30 லட்சம் கோடிரூபாய் கிடைக்கும். இது வரி பயங்கர வாதமா?
பட்ஜெட் ஆவணங்களில் காணப் படும் மற்றோர் உண்மை. வரி தொடர்பாக ரிடர்ன்ஸ்( tax returns)தாக்கல் செய்துள்ள 6 லட்சத்து 18 ஆயிரத்து 806 கம்பெனிகளில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 069 கம்பெனிகள் ஒரு காசு கூட வரியாக செலுத்தவில்லை. இணையதளம் மூலம் அமேசான் அல்லது ஃபிலிப்கார்ட் நிறுவனங்கள் உங்களுக்கு ஏதேனும் வரி செலுத்துகின்றனவா? சொத்துவரியை எடுத்துக் கொள்ளுங்கள். நம் நாட்டில் இது மொத்த வரி வருவாயில் 0.40 சதவீதம் மட்டுமே. பிரிக்ஸ் நாடுகளின் சராசரி 4.85 சதவீதம். ஜி-20 நாடுகளின் சராசரி 7.6 சதவீதம். இது வரி பயங்கரவாதமா? உண்மையில் வரி பயங்கரவாதம் என்ற பெயரில் இவர்கள் கார்ப்பரேட்டுகளுக்கு உதவத்தான் இச் சொற்றொடரைப் பயன்படுத்துகிறார்கள்.குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நிதி அமைச்சராக இருந்தபோது கடந்தகாலத்திலிருந்து வரி வசூலிக்கும் முறையைக் கொண்டு வந்தார்.
அதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நிறைவேற்றின. ஆனால் பின்னர் ப.சிதம்பரம் மீண்டும் நிதி அமைச்சராக வந்தபோது பார்த்தசாரதி ஷோம் என்பவர் தலை மையில் ஒரு நபர் குழு ஒன்றை அமைத்துநாடாளுமன்றத்தின் இரு அவை களும் இயற்றிய சட்டத்தை ரத்து செய்துவிட்டார். கடந்தகாலத்திலிருந்து வரி வசூலிக்கும் சட்டத்தை இங்கிலாந்து பின்பற்றுகிறது. 2008ம் ஆண்டு கொண்டு வந்த இச்சட்டத்தை 1987ம் ஆண்டிலிருந்தே நடைமுறைப் படுத்துகிறது. அவர்கள் செய்யும்போது, நாம் ஏன் செய்யக்கூடாது? இப்போது இதை அருண்ஜெட்லியும் செய்யத் தயாரா யில்லை. பின்னர் எப்படி வரி பயங்கரவாதம் என்று கூறுகிறீர்கள். உண்மையில் இவ்வாறு நீங்கள் கூறுவதன்மூலம் கார்ப்பரேட்டுகளுக்கு மேலும் சலுகை களை வாரி வழங்க வேண்டும் என்பதே உங்கள் நோக்கமாகும். பட்ஜெட் ஆவணங்களின்படி கார்ப் பரேட்டுகளுக்கு 5 லட்சத்து 72 ஆயிரத்து 922 கோடி ரூபாய் ரத்து செய்திருக்கிறீர்கள். இது அரசின் நிதிப்பற்றாக்குறை தொகை யைவிட அதிகமாகும்.
இவ்வாறு இவர் களுக்கு கடந்த 9 ஆண்டுகளில் அளித்த வரிச்சலுகை என்பது 36.5 லட்சம் கோடி ரூபாய்களாகும். இவ்வாறு கார்ப்பரேட்டுகளுக்கு சலுகைகளை வாரி வழங்கியுள்ள போதிலும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு அவர்களது பங்களிப்பு என்பது கடந்த 20 ஆண்டுகளில் 5 சதவீதம்தான் கூடியிருக்கிறது அல்லது 15 சதவீதம்தான். 1991க்குப் பின் ஆட்சியில் அமர்ந்த அனைத்து அரசாங்கங்களும் அந்நிய நேரடி முதலீட்டுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் ஆதரவான ஒன்று.
பட்ஜெட் மீதான விவாதத்தில்பங்கேற்று ஆற்றிய உரையிலிருந்து.

Sunday, July 20, 2014

ரஸ்தோகி... அமித்ஷா... சுப்பிரமணியன்சாமி...
சு.பொ.அகத்தியலிங்கம்
சென்ற பாஜக ஆட்சியில் முரளி மனோகர் ஜோஷி என்சிஇஆர்டி ஸசூஊநுசுகூ] அமைப்பின் கல்வித் துறைப் பணி நியமனங்கள் செய்வதற்கான் குழுவில் கே.ஜி.ரஸ்தோகி என்பவரை நியமித்தார். இவரது சுய சரிதை 1998ல் வெளிவந்திருந்தது. இதை அவர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்குச் சமர்ப்பணம் செய்திருந்தார். இந்நூலுக்கு முன்னுரை எழுதியிருந்தது அன்றைய ஆர்.எஸ்.எஸ் தலைவர் கே. சி.சுதர்சன். ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்த காலத்தில் தான் வெடிகுண்டு முதலான ஆயுதங்களைப் பயன்படுத்தப் பயிற்சி எடுத்துக் கொண்டது பற்றியெல்லாம் அதில் விலாவாரியாக எழுதியிருப்பார்.
அந்தச் சுய சரிதையில் ஒரு சம்பவம்: புரண்கல்யாண் என்னும் இடத்தில் ரஸ்தோகி இருந்தபோது ஒரு வகுப்புக் கலவரம். ஒரு அழகிய முஸ்லிம் பெண்ணை நோக்கி ஒரு இந்துத்துவ வெறிக் கும்பல் ஓடி வருகிறது. அவர்களின் நோக்கம் பாலியல் வன்முறை. இதைக் கவனித்தார் ரஸ்தோகி.“எனக்கு ஒரு ‘ஐடியா’ வந்தது. தாக்கவந்தவர்களை மிரட்டினேன், திட்டினேன். பிறகு இந்தப் பிரச்சனைக்கெல்லாம் காரணமான அந்தப் பெண்ணைச் சுட்டுக் கொன்றேன். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். முதலில் எல்லோரும் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அவரவர்கள் வேலையைப் பார்க்கப் போனார்கள்.” (ரஸ்தோகியின் சுய சரிதை, பக். 46)அ.மார்க்ஸ், எழுதிய ‘ஆட்சியில் இந்துத்துவம்‘, நூலில் இடம் பெற்றிருக்கும் செய்திகள் இவை .
தகுதியற்ற நியமனம்
இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் கழகத்தின் (ICHR) தலைவராக பா.ஜ.க அரசின் கல்வி அமைச்சர் (அவரேதான், தன் கல்வித் தகுதி குறித்துத் தேர்தல் ஆணையத்துக்குக் கொடுத்த தகவலில் பொய் கூறினாரே அவர்தான்) ஸ்மிருதி ராணி ஒருவரை நியமித்துள்ளார். அவர் பெயர் எல்லப் பிரகத சுதர்ஷன் ராவ் (இப்படி ஒரு பெயரை நீங்கள் எங்காவது வரலாறு தொடர்பாகக் கேள்விப்பட்டது உண்டா?). தகுதியற்ற நபர் என வரலாற்றறிஞர் ரொமிலா தாப்பர் இன்று இந்த நியமனத்தைக் கண்டித்துள்ளார். பா.ஜ.க ஆட்சியில் இதெல்லாம் வியப்புக்குரிய ஒன்றல்ல. சென்ற முறை பி.ஆர்.குரோவர் என்று ஒரு ஆளை முரளி மனோகர் ஜோஷி இந்தப் பதவியில் நியமிக்கவில்லையா? பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் இருந்தது எனவும், 1992ல். பாபர்மசூதி (தானாக) விழுந்தது எனவும் புத்தகம் எழுதியதற்காக அவருக்கு இந்தப் பரிசு வழங்கப்பட்டது.
ICSSRஅமைப்பின் தலைவராக பி.எல்.சோந்தி என்கிற நபர் அப்போது நியமிக்கப்பட்டார். அவருடைய தகுதி பாரதிய ஜனசங் கட்சி சார்பில் ஒருமுறை எம்.பியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமே. இந்த நியமனங்கள் மட்டுமல்ல; ஏற்கனவே ICHRல் பணியில் இருந்த தகுதி பெற்ற வரலாற்றறிஞர்கள் 18 பேர்களைப் பணி நீக்கமும் செய்தார் ஜோஷி. சரி அந்தக் கதை கிடக்கட்டும். இப்ப இன்றைய கதைக்கு வருவோம். நம்ம இன்றைய தலைவர் எல்லப் பிரகத சுதர்ஷன் ராவ் “இந்திய சாதி அமைப்பு - ஒரு மறுபார்வை” என்றறொரு கட்டுரை எழுதியுள்ளார்.அதன் முத்தாய்ப்பான வரிகள்:
“The (caste) system was working well in ancient times and we do not find any complaint from any quarters against it. It is often misinterpreted as an exploitative social system for retaining economic and social status of certain vested interests of the ruling class”
இந்தியச் சாதி அமைப்பு மிகச் சிறப்பாகச் செயல்பட்டதாம். எந்தக் ‘கம்ப்ளெய்ன்ட்’டும் இல்லையாம். இது எப்டி இருக்கு? வரலாற்றறிஞர் டி.என்.ஜா இது குறித்து அடித்துள்ள கமென்ட்:”அவருக்குத் தெரியாது போல இருக்கு .அந்த ‘சிஸ்டம்’ இப்ப இருந்தா மோடி (போன்ற ஒரு பிற்படுத்தப்பட்ட சாதிக்காரர்) பிரதமர் ஆகியிருக்க முடியாதென” இந்த விவரங்களை முகநூலில் அ.மார்க்ஸ் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
அவுட்லுக்கில் வித்தியாசமான கட்டுரை ஒன்று படித்தேன். நான் புரிந்து கொண்டது இது. என்கிற குறிப்புடன் விபாவி என்பவர் ஹைதராபாத்திலிருந்து எமக்கு அனுப்பியுள்ள மின்னஞ்சல் வருமாறு”நாங்கள் 68 கறிக்கடைக்காரர்களை அடையாளம் கண்டு கொண்டோம்.அவர்கள் அனைவருக்கும் 5 லட்சத்திலிருந்து பத்து லட்சம் வரை பணம் கொடுக்க முயன்று வருகிறோம். அவர்கள் செய்ய வேண்டியதெல்லாம் பலித்னாவில் (Palitana) இனிமேல் கறிவெட்ட மாட்டோம் என்ற உறுதிப்பத்திரத்தில் கையெழுத்து போட வேண்டியதுதான்” என்று சொல்கிறது அங்குள்ள ஜைன அடிப்படைவாத அமைப்பு.ஏனென்றால் பலித்னா ஜைனர்களின் புனிதஸ்தலம். 24 தீத்தங்கரர்கள் தரிசித்த மலை. சத்ருன்ஜேயா மலையில் மட்டும் 3000 ஜைன கோவில்களும், 27000 சிலைகளும் இருக்கின்றன. எங்கள் புனித நகரத்தில் ஏன் இப்படி உயிர்வதை செய்கிறீர்கள் என்பது அவர் வாதம்.
வெங்காயம், பூண்டையும் எதிர்த்தால்...
“அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். பலித்னா நகரம் எங்களுக்கும் சொந்தம். நாங்கள் 25 சதவிகிதம் இருக்கிறோம். எங்கள் உணவு பழக்கம் மாமிச உணவு உண்பது. நீங்கள் யார் எங்கள் உரிமையில் தலையிட”. இது பலித்னா நகரத்தில் வாழும் முஸ்லிம்களின் பதில்.கோவிலைச் சுற்றி 250 மீட்டரில் கறிவெட்டக்கூடாது, உண்ணக்கூடாது என்ற சட்டம் ஏற்கனவே இருக்கிறது. இந்த ஜைனர்கள் நகரத்தை தங்கள் வீடாக்கப் பார்க்கிறார்கள்.இது தவறான உதாரணம் ஆகிவிடும். இன்று பலித்னாவில் கறி சாப்பிடுவதை எதிர்க்கும் ஜைனர்கள் நாளை வெங்காயம், வெள்ளைப் பூண்டையும் எதிர்த்தார்கள் என்றால் அதையும் சாப்பிடக்கூடாதா? இது என்ன அநியாயம். இது சமூக ஆர்வலர்களின் குரல்.பலித்னா இருப்பது குஜாரத்தில். பாஜகவின் அமித் ஷா ஒரு ஜைனர்.
அதனால் பலித்னா ஜைனர்கள் அவர்கள் நினைத்ததை சாதித்துவிடுவார்கள் என்று வருத்தத்துடன் சொல்கிறார்கள் அங்குள்ள முஸ்லிம்கள்.குஜராத் சைவ மாநிலம் என்பது மாதிரியான தகவல்கள் திட்டமிட்டு கட்டமைக்கப்படுகின்றன. உண்மை அதுவல்ல. 68 சதவிகித, அதாவது எழுபது சதவிகித குஜராத் மக்கள் மாமிசம் உண்பவர்கள் தான் என்ற உண்மை எத்தனை பேருக்கு தெரியும் என்கிறார் இன்னொரு சமூக ஆர்வலர்.இதற்கு அவரால் முடிந்த ஒரு வழியைச் சொல்கிறார் எழுத்தாளர் ரேணுகா நாராயணன். இசைக்கலைஞர் ”உஸ்தாத் பதே குலாம் அலிகான்” சென்னை வந்தாராம். வந்தவர் எம்.எல் வசந்தகுமாரியின் வீட்டில்தான் தங்குவேன் என்று ஹோட்டலை மறுத்து எம்.எல்.வியின் வீட்டுக்கு வந்தாராம். எம்.எல் வசந்தகுமாரி சைவம்.
ஆனால் அலிகானோ மாமிச உணவில் ஈடுபாடு உடையவர். எம்.எல். வசந்தகுமாரியின் கணவர், சொன்ன யோசனைப்படி உஸ்தாத் பதே குலாம் அலிகான் மாடி போர்ஷனில் சாப்பிட்டுக் கொண்டாராம். சென்னையிலுள்ள பிரபல மிலிட்டிரி ஹோட்டலில் இருந்து அசைவ உணவு போகுமாம்.இதுமாதிரி பலித்னாவிலும் மக்கள் அட்ஜஸ்ட் செய்து போனால் நல்லது என்று சொல்கிறார் எழுத்தாளர்.
வயிற்றிலடிப்பது
இங்கே சில இந்து அமைப்புகளும் மதவெறியர்களும் கோவிலிருக்கும் ஊரில் கறிக்கடை வேண்டாம் ; கோவிலுக்கு போகும் முன்பும் பின்பும் அசைவ உணவு கூடாது என்கிறார்கள். கூடவே ஒரு நாளும் கோவிலுக்குப் போகாமல் இருக்கக் கூடாது என்றும் கூறுகிறார்கள். இதன் பொருள் என்ன? ஒரு நாளும் கறி, மீன் சாப்பிடக்கூடாது என்பதுதானே! இது உழைப்பாளிகள் வயிற்றிலடிக்கும் செயல் அல்லவா ? இதனைத் தொடர்ந்து நான் முகநூலிலிட்ட பின்னோட்டம்
“கோவிலருகே இறைச்சிக்கடை கூடாதுகோவிலுக்கு போகும்போது இறைச்சி வேண்டாம்மனம் உருக வேண்டினார் உபதேசிகண்ணப்பரின் சிவனைஎப்போது நாடுகடத்தினீர் ?ஏழை பக்தனின் எளிய கேள்வி...”
அது இருக்கட்டும் இந்த அமித் ஷா மீது இப்படி நம்பிக்கை வைப்பது இவர் மட்டுமா ? இல்லை. பஞ்சாபில் சீக்கியர்கள் மனமுவந்து முஸ்லிம்களுக்கு இப்தார் விருந்து கொடுக்கிற படத்தை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிந்துள்ள சுப்பிரமணியன் சாமி அதில் குறிப்பிட்டிருக்கிறார் அமித் ஷாவை பஞ்சாபுக்கு அனுப்பி இவனுகளை திருத்த வேண்டும். என்கவுண்ட்டர் புகழ் - கலவர புகழ் அமித் ஷா என்ன பணி செய்யப் போகிறார் என்பதற்கு இது அறிகுறி. அமித் ஷா சைவ உணவு பழக்கம் உள்ளவர் .
சைவ உணவு பழக்கம் உள்ளவர்கள் மென்மையானவர்கள், அகிம்சாவாதிகள் என கூறுவோர் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? கொலைவெறிக்கு காரணம் உணவு அல்ல; வெறிவுணர்வு என்பதறிக! சமஸ்கிருதத்தை எல்லாமொழிக்கும் தாயென்பதும்இந்தியை திணிப்பதும் இன்னொரு தாக்குதல் . உணவு , மொழி , வரலாறு அனைத்திலும் ஒற் றைப் பண்பாட்டு ஆதிக்க திணிப்பு-பிராமணிய ஆதிக்கப் பண்பாட்டுத் திணிப்பு நடந்தேறிக் கொண்டிருக்கிறது நாம் எதிர்கொள்ளும் சவால் கொஞ்சமல்ல என்பதுணர்க !

Sunday, July 13, 2014

சூதாட்டக் களமாகும் தேசம்



ஊடகங்களின் அர்த்தமற்ற ஆரவாரங்களுடன் மோடி அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து விவாதம் என்ற பெயரில் கேலிக்கூத்துகள் அநேக தொலைக்காட்சி சேனல்களில் அரங்கேறியுள்ளன. உண்மையில் மோடியின் பட்ஜெட்டின் தன்மை என்ன, உழைப்பாளி மக்களையும் நாட்டையும் அது எவ்வாறு பாதிக்கும் என்பதை விவரிக்கிறார் இந்தியாவின் தலைசிறந்த பொருளாதார நிபுணர்களில் ஒருவரும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக பொருளாதாரத் துறை முன்னாள் தலைவருமான பேராசிரியர் வெங்கடேஷ் ஆத்ரேயா...
மோடிஅரசின் பட்ஜெட் இந்திய பொருளாதாரத்தை இன்னும் வலுவாக பன்னாட்டுநிதி மூலதனத்தின் வலைக்குள் சிக்க வைக்கும் முயற்சியாகும். பாதுகாப்புத்துறையில் அந்நிய நேரடி மூலதனத்தின் பங்கின் வரம்பை 26 சதவீதத்திலிருந்து 49 சதவீதமாகஉயர்த்தும். காப்பீட்டு துறையிலும் இந்த காரியத்தை செய்யும். இவ்விரு துறைகளும் நாட்டின் தற்சார்பிற்கு மிக கேந்திரமான துறைகள். இதில் பாதிப்பங்கு அன்னியமூலதனத்தின் கையில் தரப்படுவது என்பது நாட்டின் இறையாண்மையைக் காவு கொடுப்பதாகும். அது மட்டுமின்றி, இப்படிசெய்வதற்கு எந்தப் பொருளாதார காரணமும் கிடையாது.
பாதுகாப்பு துறையில் அந்நிய முதலீட்டின் வரம்பை உயர்த்தினால், பல ராணுவ தளவாடங்களை இந்தியாவிற்குள்ளேயே உற்பத்தி செய்ய பன்னாட்டு மூலதனம் வரும் என்ற பொய்யான வாதம் முன்வைக்கப்படுகிறது. அப்படி வரும் என்ற எந்த உத்தரவாதமும் கிடையாது. மேலும் அப்படியே வந்தாலும், தொழில்நுட்பங்களை இந்தியாவிற்கு அவை கொடுக்கும் என்றஉத்தரவாதமும் கிடையாது. இவ்விரண்டு நடவடிக்கைகளையும் தேசப்பற்று உள்ளஅனைவரும் எதிர்க்க முன்வரவேண்டும்.
வங்கிகள் நாசமாகும்
மற்றொரு அபாயகரமான முன்மொழிவு ஒன்று பட்ஜெட்டில் உள்ளது. பொதுத்துறை வங்கிகளின் மொத்த மூலதன அஸ்திவாரத்தை உயர்த்திட, அரசு இந்த வங்கிகளுக்குள் கூடுதல் மூலதனம் செலுத்தி இப்பணியை செய்ய தயாராக இல்லை. மாறாக, புதிய பங்குகள் சிறு முதலீட்டாளர்களுக்கு விற்கப்படும் என்றும் அதன் மூலம் பொதுத்துறை வங்கிகளின் மூலதன அஸ்திவாரம் பலப்படுத்தப்படும் என்றும் பட்ஜெட் கூறுகிறது. முதலில், பன்னாட்டு நிதியம் முன்மொழியும் பாசில் நெறிமுறைகள் (க்ஷயளடந சூடிசஅள) அடிப்படையில் பொதுத்துறை வங்கிகளின் மூலதன அடித்தளம் அமைய வேண்டுமா என்பதே சர்ச்சைக்கு உரிய பிரச்சனை. ஏனெனில், பொதுத்துறை வங்கிகளாக இருப்பதால் இவை வாடிக்கைதாரர்களின் முழு நம்பிக்கையை பெற்றுள்ளன.
கடந்த காலங்களில், இந்தியன் வங்கி போன்ற வங்கி களைப்பற்றி தனியார் வங்கி ஆதரவாளர்களும் ஊடகங்களும் பெரும் பீதியைக் கிளப்பிவிட்ட போதும்மக்கள் தொடர்ந்து தங்கள் சேமிப்புகளை பொதுத்துறை வங்கிகளில் தான் கொண்டுசேர்த்தனர். கடனை திருப்பித்தராமல் மோசடி செய்யும் சில பெருமுதலாளிகளுக்கு பொதுத்துறை வங்கிகள் அரசு நிர்ப்பந்தத்தில் கடன் தரும் நடவடிக்கையால் சில வங்கிகளுக்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது உண்மை என்றாலும் கூட, பொதுத்துறை வங்கிகள் இன்றும் பொதுமக்கள் நம்பிக்கைக்கு பாத்திரமாகவே உள்ளன. அப்படியே இந்த வங்கிகளின் மூலதன அடித்தளத்தை உயர்த்த வேண்டும் என்று கருதினால் அதை அரசே மூலதனம் அளித்து செய்ய வேண்டும். சாதாரண மக்கள் பொதுத்துறை வங்கிகளின் பெயரில் விற்கப்பட உள்ள பங்குகளை வாங்கியதன் மூலம் அவர்கள் நேரடி பொதுத்துறை வங்கி உரிமையாளர்களாக ஆகிவிடுகிறார்கள் என்ற கவர்ச்சிகரமான ஆனால் தவறானவாதத்தை நிதி அமைச்சர் முன்வைத்துள்ளார்.
உண்மையில் இவ்வாறு பொது மக்கள் வாங்கும் பங்குகள் அவர்கள் கையில்நிலைத்து நிற்காது. அவர்கள் விற்கும் பங்குகளை பெருமுதலாளிகள் வாங்கி காலப்போக்கில் பொதுத்துறை வங்கிகளில் அவர்களின் செல்வாக்கு ஓங்கும். பொதுத்துறை வங்கிகள் படிப்படியாக தனியார்மயமாக்கப்படும். இதுதான் அரசின் உண்மையான நோக்கமும் கூட. எனவே இதுவும் கடுமையாக எதிர்க்கப்படவேண்டிய அம்சம் ஆகும்.
வெற்று அறிவிப்புகள்
நிதி அமைச்சரின் பட்ஜெட் உரையில் ஏராளமான அறிவிப்புகள் உள்ளன. இவைபட்ஜெட்டில் இடம் பெறாது. எடுத்துக்காட்டாக, வேளாண் துறைக்கு வங்கிகள் மூலம் எட்டு லட்சம் கோடி ரூபாய் கடன்அளிக்கப்படும் என்பது வெறும் அறிவிப்பு தான். இது அரசின் வரவு-செலவு-தொடர்பான விஷயம் அல்ல. மேலும் இப்படி கடன்கொடுத்தே ஆக வேண்டும் என்று நிர்ப்பந்திக்கும் அதிகாரம் அரசுக்கு கிடையாது. செலவு மேலாண்மை ஆணையம் ஒன்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. இதன் செயல்பாடு பற்றி தெளிவு எதுவும் இல்லை. இப்படி ஏராளமான ஆனால் பட்ஜெட்டில் இடம்பெறாத பெரிதும் சிறிதுமான அறிவிப்புகளை பட்ஜெட் உரையில் அமைச்சர் அள்ளி வீசிஉள்ளார்.
அவைஅனைத்தையும் பற்றி இப்பொழுது சொல்வதற்கு ஒன்றும் இல்லை. இந்த அறிவிப்புகளை அமலாக்கும் பொழுதுதான் அவற்றின் விளைவுகள் புலப்படும். எனினும் அவற்றில் பல அபாயகரமானவை என்பதும் உண்மை. எடுத்துக்காட்டாக நம் நாட்டு பங்குச் சந்தைகளில் சூதாட பெரும் பன்னாட்டு நிறுவன முதலீட்டாளர்களுக்கு சில வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. வரிவிகிதங்கள் நிலையாக இருக்கும், மாற்றப்படமாட்டாது என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. வரிவிதிப்புகள் முன்தேதியிட்டு மாற்றப்படாது என்ற வாக்குறுதி வோடபோன் போன்ற கம்பெனிகளை குஷிப்படுத்தும் விளைவை கொண்டது. (ஆனால் நாம் உள்நாட்டில் ரயில்பயணம் மேற்கொள்ளும்பொழுது மட்டும் டிக்கட் வாங்கிய தேதியில் ஒரு விலை, அது பின்னர் மாற்றப்பட்டு ரயிலில் நாம் ஏறியவுடன் கூடுதல் கட்டணம் தரும் நிலை என்பது தொடர்கிறது!)தேக்கம் தொடரும்
பட்ஜெட் முன்வைத்துள்ள வரவு- செலவு கணக்குகள் மற்றும் முன்மொழிவுகளுக்குள் செல்வோம். அவற்றை எடைபோட, முதலில் எத்தகைய பொருளாதாரச்சூழலை நாடு சந்திக்கிறது என்பதைக் காண வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பொருளாதார வளர்ச்சி விகிதம் ஐந்து சதவிகிதத்திற்கும் கீழே உள்ளது. அதிலும், தொழில்துறை தேக்க நிலையில் உள்ளது. வேளாண் துறை ஏறுவதும் இறங்குவதுமாக உள்ளது, ஆனால் மொத்தத்தில் அதன் வளர்ச்சி விகிதம் குறைவாகவே உள்ளது. விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன. பன்னாட்டுப் பொருளாதாரம் நெருக்கடியில் தொடர்கிறது.
இந்த சூழலில், பொருளாதார வளர்ச்சியை உயர்த்த கிராக்கியை அதிகப்படுத்தும் வகையில் அரசு கூடுதல் திட்ட ஒதுக்கீடு செய்வதும் உள்நாட்டு சந்தையை வேகமாக வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுவதும் தேவை. ஆனால் பட்ஜெட் அப்படி எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. கடந்த 2013-14ஆம் ஆண்டில் மொத்த திட்ட ஒதுக்கீடு பட்ஜெட் கணக்குப்படி 5,55,322 கோடிரூபாயாக இருந்தது. 2014-15க்கு 575 ஆயிரம் கோடி என்ற அளவிற்குத்தான் உயர்ந்துள்ளது. இந்த பட்ஜெட்டில் பெருமளவு உயர்வு இல்லை. ஆனால் விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டால் இது உண்மை அளவில் சென்ற ஆண்டை விட குறைவு ஆகும். அரசின் மொத்த செலவும் பட்ஜெட் கணக்கில் ஒப்பிடுகையில் பதினாறு லட்சத்து 65 ஆயிரம் கோடியில் இருந்து பதினேழு ஆயிரத்து 95 கோடியாகத்தான் உயர்ந்துள்ளது. இதுவும் தேக்க நிலை தான்.
எனவே வளர்ச்சியை அரசு மூலம் ஊக்குவிக்கும் முயற்சி பட்ஜெட்டில் இல்லை. துறைவாரியான திட்ட ஒதுக்கீடுகளும் இதையே காட்டுகின்றன. எடுத்துக்காட்டாக, ஊரக வளர்ச்சி துறையில் திட்டஒதுக்கீடு கடந்த ஆண்டு பட்ஜெட் கணக்கின்படி 80,194கோடி ரூபாய்.இந்த ஆண்டு 83,793 கோடி. உண்மை அளவில் குறைந்துள்ளது. மனித வள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு கடந்த ஆண்டு 65,869கோடி. இந்த ஆண்டு 68,728கோடி. உண்மை அளவில் சரிவு. ஆரோக்கியம் மற்றும் குடும்பநலம் அமைச்சகம் சென்ற ஆண்டு 32745கோடி இந்த ஆண்டு 34225கோடி. எந்த முன்னேற்றமும் இல்லை, சரிவு தான். இந்த உதாரணங்கள் போதுமானவை. ஆக, முக்கிய துறைகளான, ஊரக வளர்ச்சி, மனித வள மேம்பாடு, ஆரோக்கியம் போன்றஅமைச்சக திட்ட ஒதுக்கீடுகள் உண்மை அளவில் குறைந்துள்ளன.
செல்வந்தவர்களுக்கு மகிழ்ச்சி
அதே சமயம், இந்த பட்ஜெட்டில் வரி விதிப்பு நடவடிக்கைகள் குறைவு. செல்வந்தர்கள் மீது எந்த வரி விதிப்பும் புதிதாகஇல்லை என்பது மட்டுமல்ல. அவர்களிடம் வருமான வரித் துறை நெளிவுசுளிவாக நடந்துகொள்ளும் என்றும் ஆங்காங்கு பட்ஜெட் உரையில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. சம்பளம் பெரும் மத்தியதர பகுதியினருக்கு தரப்பட்டுள்ள வருமான வரி சலுகை என்பது இந்தப்பகுதியினர் மத்தியில் ஆளும் கட்சியின் செல்வாக்கை வலுப்படுத்தும் நடவடிக்கையே தவிர, இதனால் ஏற்படும் பணப்பயன் விலைவாசி உயர்வில் காணாமல் போய்விடும் என்பது தான் உண்மை. மேலும், இந்த பட்ஜெட் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க ஏதும் செய்யாத நிலையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவும் வாய்ப்பில்லை.
மொத்தமாக 22 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி சலுகைகளால் அரசுக்கு இழப்பாக இருக்கும் இந்த நிதி ஆண்டில் என்று பட்ஜெட் உரையில் சொல்லப்பட்டுள்ளது. மறுபுறம் மறைமுக வரிகள் மூலம் 7 ஆயிரம் கோடி கூடுதல் வரி வருமானம் கிட்டும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. ஏறத்தாழ 19 லட்சம் வரவு செலவு செய்யும் பட்ஜெட்டில் இந்த வரி முன்மொழிவுகளின் தாக்கம் குறைவு என்று தான் சொல்ல வேண்டும். எனினும், ரயில் கட்டண உயர்வு, தொடர்ந்து எரிபொருள் விலைகள் உயர்த்தப்படுவது போன்றவை விலைவாசி உயர்வை ஊக்குவிக்கும் என்பதும் பட்ஜெட்டும் அதே பாதையில் பயணிக்கிறது என்பதும் உண்மையே.
சென்ற ஆண்டு பட்ஜெட்டில் உரம், உணவு மற்றும் எரிபொருள் உள்ளிட்ட மானியங்களுக்கு செலவிடப்பட்ட தொகை 2,55,516 கோடி. இந்த ஆண்டில் மானியங்களுக்கான ஒதுக்கீடு மிகவும் சொற்பமான அளவில் 5142 கோடி மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் நாம் கடுமையான விலை உயர்வை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது தான். அதுவும் இராக் நிலைமைகளை கணக்கில் கொண்டால் எரிபொருள் விலைகள் பன்னாட்டு சந்தையில் உயரும் என்பது திண்ணம். மானிய ஒதுக்கீடு உண்மை அளவில் குறைக்கப்பட்டுள்ள நிலையில், தனிநபர் வருமான வரி விகித குறைப்பால் களித்திருப்போருக்கு கடும் அதிர்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது என்பது தான்.
‘சுதேசி’ முழக்கம்வெறும் வேஷம்
செல்வந்தர்கள் மீதும் இந்நாட்டு, பன்னாட்டு பெரும் கம்பனிகள் மீதும் வரி விதித்து வளம் திரட்ட மறுக்கும் மத்திய பா ஜ க அரசு, பற்றாக்குறை கட்டுக்குள் இருக்கும் என்று கூறுவது எந்த அடிப்படையில் என்று தெரியவில்லை. அதீதமான பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று அரசு அனுமானிக்கிறது. இது யதார்த்தத்திற்குப் புறம்பானது. உண்மையில் நடக்கப்போவது என்னவென்றால் ஒதுக்கீடுகளை குறைப்பதன் மூலமும் மானியங்களை மேலும் வெட்டுவதன் மூலமும். செலவுகள் மேலும்வெட்டப்படும். மறுபுறம் பொதுத்துறை சொத்துக்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படும்.
தேசிய ஜனநாயக கூட்டணிதான் முதலில் பொதுத்துறை சொத்துக்களை விற்பதற்கு ஒரு அமைச்சகத்தையே உருவாக்கி அதன் அமைச்சராக அருண் ஷோரியை நியமித்து அழகு பார்த்தது. மீண்டும், காங்கிரசை விஞ்சும் வகையில் பொதுத்துறை சொத்துக்களை பன்னாட்டு பெரும் கம்பனிகளுக்கு விற்று தனது ‘சுதேசி’ முழக்கம் வெறும் வேஷம் என்பதை பாஜக நிரூபிக்க முனைகிறது என்பது இந்த பட்ஜெட் சொல்லும் முக்கிய செய்தி. இந்த பட்ஜெட்டில் மட்டும் நாற்பத்தி மூவாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக பொதுத்துறை பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் என்பதுதான்.
இது ஒரு துவக்கமே.நல்ல நாட்கள் வந்து விட்டன. யாருக்கு என்பதுதான் கேள்வி. ஏற்கெனவே காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் நல்ல நாட்களை அனுபவித்த இந்நாட்டு, பன்னாட்டு பெரு முதலாளிகளுக்கு இன்னும் கூட நல்ல நாட்கள் வரவுள்ளன, மோடி அரசு தனது முதல் பட்ஜெட் மூலம் தனது எஜமான விசுவாசத்தை காட்டுகிறது பாஜக அரசும் கட்சியும். அதில் உலாவரும் போலி சுதேசிகளும் தற்சமயம் தற்காலிகமாக தலைமறைவாக உள்ளனர் போலும்

Wednesday, July 2, 2014

மாயா பிம்பமே முகமானால்...
நிஸ்ஸிம் மன்னத்துக்காரன்
“தலையைத் திருப்புவதற்கு ஒருபோதும் அனுமதிக்காத நிலையில், நிழல்களைத்தவிர வேறு எதையும் அவர்களால் எப்படிக் காண இயலும்?”- பிளேட்டோ, ‘குடியரசு’.
குடியரசு எனும் தனது நூலில், குகை குறித்த புகழ்மிகு உருவகத்தை நமக்குத் தருகிறார் பிளேட்டோ. வாழ்நாள் முழுதும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு குகையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் கைதிகள்; தமக்கு முன்னே உள்ள சுவரில் தோன்றும் நிழல் களைத் தவிர வேறு எதனையும் அவர்களால் காணஇயலாத நிலை. நிழலை மட்டுமே காணமுடியு மென்பதால், அதனையே நிஜம் என்று நம்பி விடுகிறார்கள். அவர்களில் ஒரு கைதி, தளை யை அறுத்துக் கொண்டு குகையிலிருந்து வெளியேறும்போதுதான் அவனால் நிஜத்தைக் கண்டுணரமுடிகிறது. இந்தியாவின் பிரதமர் என்ற நிலையை நரேந்திர மோடி எட்டியுள்ள அதே சமயம், இந்திய அரசியலும்கூட மாயா பிம்பம் எனும்சொல்லின் நேர் பொருளாகவும், உருவகமாகவும் மாயா பிம்ப யுகத்திற்குள் அடியெடுத்து வைத் திருக்கிறது.
இதனை நிழல்களின் யுகம் என்று கூட அழைக்கலாம். ஏனெனில், மோடிஒரு சாதனையாக, 437 பொதுக் கூட்டங் களில் பேசியது மட்டுமல்லாமல், பல சந்தர்ப்பங் களில் ஒரே நேரத்தில் 1350 முப்பரிமாணக் கூட்டங்களில் மாயா பிம்பமாகவும் தோன்றியிருக் கிறார். ரத்தமும் சதையையும் கொண்டு ஏறத் தாழ நிஜ உருவம் போன்றே தோன்றுகின்ற மோடியின் இந்தப் புதிய அவதாரம், மெய் எது - பொய்எது; நிஜம் எது - நிழல் எது எனப் பிரித்துணர் வதில் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய அரசியல் போக்கில் ஆபத்து என்னவென்றால், அதன் உள்ளடக்கம் பெருமளவு சூன்யமாக்கப்பட்டுவிடுகிறது; சமுதா யத்தை எதிர்நோக்கியுள்ள ஆழமான பிரச் சனைகள் குறித்து மக்களிடம் நேருக்கு நேர்மெய்யாகவே ஜனநாயகப்பூர்வமாக விவாதிப்பது என்னும் அரசியல் நடைமுறை புறந்தள் ளப்பட்டுவிடுகிறது;
அதற்கு மாறாக, அதிகார நரம்புமண்டல மையங்களில் இயங்குகிற படப்பிடிப்புக் கூடங்களால் ஒளிபரப்பப் படும் காட்சிகள் மூலம் முப்பரிமாண மாயாபிம்ப அரசியலும், தேவதூதர் பாணி அரசியலும் பஞ்சைகள், பராரிகள் வாழுகின்ற இந்த பரந்துவிரிந்த நாட்டின் பின்புலத்தி லுள்ள தெருமுனைகள் மற்றும் கிராமச்சாவடி களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.மோடியின் பெயரைப் பரப்புகின்ற தொலைக்காட்சி அதிரடி விளம்பரங்கள், ‘கூகுள் ப்ளஸ் ஹாங் அவுட்’ இணையதள நிகழ்ச்சிகள், கைபேசி மூலம் அனுப்பப்படும் குறுஞ்செய்திகள், குரல் செய்திகள், நாட்டின் தொலைதூரப் பகுதிகளுக்கெல்லாம் செல்லத் தக்க, இடம் சுட்டும் சாதனமான ‘ஜி.பி.எஸ்.’ மூலம் இயக்கப்படுகின்ற 650 பிரச்சார ரதங்கள் அல்லது கடந்த ஐந்து மாதங்களில் மட்டுமே அனுப்பப்பட்ட ஒரு கோடியே பத்து லட்சம் ‘ட்வீட்’ செய்திகள் ஆகியவை இல் லாமல் முப்பரிமாண பிம்ப அரசியலையும், தொலைபேசி வர்த்தக அரசியலையும் நடத்த முடி யாது. 116 நாடுகளைச் சேர்ந்த 82,000 பேர்ஒரு இணையதள ‘ஹாங் அவுட்’ நிகழ்ச் சியைக் காண நேர்ந்ததால், கூகுள் சேவை யகம் செயல் இழக்க நேரிட்டதாகத் தெரி கிறது.
பழையபாணி அரசியல் என்பதே நுனிப்புல்மேய்வதாக இருக்குமெனில், மாயாபிம்ப அரசியலானது, இந்த ஆழமற்ற தன்மையை விண்முட்டும் அளவுக்குக் கொண்டு செல்கிறது. இந்த வகையில்தான், தேநீர் பருகிக் கொண்டே நிகழ்த்தும் விவாதம் என்பது, எதிரணி அரசியல்வாதியொருவரின் தடம் புரண்ட சொல்லுக்குப் பதிலடியாக, தீர்க்க சிந்தனையின்றி உருவாக்கப்பட்டதுதானே தவிர, தேநீர் விருந்து விவாதத்தின் மூலமாக அரசியலை ஜனநாயகமயமாக்கல் என்கிற தூரதிருஷ்டியுடன் கூடிய உள்ளார்ந்த ஈடுபாட் டின் விளைவாக உருவானதல்ல. நொடிப் பொழுதில் சம்பவங்கள் நிகழ்ந்து விடுகிற உலகில் அல்லது சமூகவியலாளர் சிக்மண்ட் பாவ்மனின் வார்த்தைகளில் சொல் வதானால், ‘ஸ்திரமற்ற நவீனத்துவ’ (liquid modernity) உலகில், மனித உறவுகளின் கெட்டியான பிணைப்புகள், அவை குடும்பம், நட்பு,கூட்டு அரசியல் திட்டங்கள் என எதை எடுத்துக் கொண்டாலும், கலகலத்து விழுந்துவிடு கின்றன அல்லது நொடிப் பொழுதில் தோன்றிமறைகின்ற, ஸ்திரமற்ற நிலையை நோக்கி அவை கரையத் தொடங்குகின்றன; அங்கேஅனைத்தும் ஷணநேரத்தில் உருகிப் போய்விடு கின்றன, எல்லாம் நிலையற்று, உறுதியற்றதாக மாறிப்போகின்றன.
இதில் வேடிக்கை என்ன வென்றால், இடம்பெயரத்தக்க, உறுதியற்ற தன்மையைத் தாமே பெற்று விடுவதனாலும், (இவ்வாறாகத்தானே, உலகளாவிய நிதி மற்றும் ஊக மூலதனம் எல்லைக் கோடு களையெல்லாம் கடந்து, புவிக்கோளின் மூலைமுடுக்கெல்லாம் சென்றடைந்து, அதன் விளை வாகப் படு நாசத்தை உண்டாக்கி விடுகின்றது), தம்மை எதிர்க்கின்ற சக்திகள் சிதறி சின்னா பின்னமாய்க் கிடப்பதைப் பயன்படுத்திக் கொண்டும் ஒரு சில கரங்களில் குவியத் தொடங்குகிற அரசியலும் மூலதனமும் தம்மைக் கெட்டிப்படுத்திக் கொள்வதற்கு இதுவே மிகச் சரியான சூழலாகும். இங்கே அரசியல் மற்றும் இதர நெறிமுறைகளின் ஆயுள், ‘ட்வீட்’ செய்திகள், முகநூல் தகவல்கள் மற்றும் கைபேசிக் குறுஞ்செய்திகள் ஆகி யவை போன்று அற்பாயுசாகச் சுருங்கிப் போய் விடுகின்றது.இத்தகு சூழலில், அரசியல் நெறிமுறைகள் குறித்து விளக்கமளிக்கும்போது, அது அறிவுக்கு ஒவ்வாத வடிவங்களை எடுக்கக் கூடும்; பாசிச முறைகளைக் கைக்கொள்ள நேரும்ஜனநாயக யுகத்தில் பாசிசம் என்பது விஷ வாயுக் கூடங்களைக் கொண்டிருக்காது.
இப்படிப்பட்ட அமைப்பின்கீழ், விலக்கி வைப்பதும், வாயடைப்பு செய்வதும் வன்முறையின் மூலமாக அல்லாமல், மிகுந்த ‘ஜனநாயக வழியில்’ நிறைவேற்றப்படும்; (எடுத்துக் காட்டாக, சக்திமிக்க ஊடகங்களின் பெரும்பகுதியினர் சத்தியம், நீதி ஆகியவற்றின்பால் தமது உள் ளார்ந்த ஈடுபாட்டை உதறித் தள்ளிவிட்டு, இதற்கு மாறாக, தேர்தல் ‘அலைகளை’ உருவாக்கும் காரியத்தில் விரும்பி வேண்டி பங்கு கொள்வார்கள்).நிலையற்ற, சிதறிப் போய்க்கிடக்கிற இந்த நிலையில், தனியொருமனிதனாக நின்று ‘ஸ்திரத்தன்மையை’, ‘ஆட்சி நிர்வாகத்தை’, (நமது காலத்தின் தாரகமந்திரமாகிவிட்ட) ‘வளர்ச்சி’யைத் தருகின்ற, இவற்றுடன் போதை தலைக்கேறிய பெரும்பான்மை தேசியவாதத்தை இணைக்கவல்ல எதேச்சதி காரி ஒருவரை அன்றி வேறு யார் இந்த பரந்துவிரிந்த, வேறுபாடுகளைக் கொண்ட சமுதாயத் தை ஆளமுடியும்? தேர்தல் தீர்ப்பில் பத்தோடுஒன்று பதினொன்றாக இருக்கும் உள்ளூர் எம்.பி. யைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?பாசிஸ்ட் அணி திரட்டலுக்குத் துணை போவதாகவும், வெறும் ஆறுமாதகாலப் பிரச்சாரத்தின் போதே ஆறுலட்சம் கிராமங் களின் கதியை மாற்றத் தக்கதாகவும் இருப்பதோடல்லாமல், மாயாபிம்பங்கள் அந்தரத்தில் தொங்கும் ஆவிகளாக இன்றி, அவற்றை உருவாக்கு வதற்கான நிஜமான காரணிகளும் இருப்பதால், மாயாபிம்ப அரசியலானது அபாயகரமானதாகிறது. தேர்தலில் ‘மக்கள்’ தீர்ப்பளித்துள்ள (‘இந்தியா என்றால் மோடி; மோடி என்றால்இந்தியா என்கிறது ஒரு நாளேடு) இந்நிலையில், 5000 கோடி ரூபாய் (இது, அனைவருக்கும் கல்வித் திட்டத்திற்காக ஓராண் டுக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஐந்தில்ஒருபகுதி) பாரதிய ஜனதாக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்துக்குச் செலவழிக்கப் பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறதே, இந்தப் பணம் எங்கிருந்து வந்தது என்று கேட்பதே ஜனநாயக விரோதமான, முறை யற்ற காரியமாகத் தோன்றும் போலும்! தேர்ந் தெடுக்கப்பட்டுள்ள பாரதிய ஜனதாக் கட்சியின் எம்.பி.க்களில் முஸ்லிம்களே இல்லை என் கிற அதிர்ச்சிக்குரிய விஷயத்தைப் பற்றிப் பேசுவதும் கூட இதற்கு இணையான ஜனநாயகவிரோத காரியமாகக் கருதப்படக் கூடும்.
இங்கேதான், பாசிஸ்ட் அரசியல், மன ஒப்புத லுடன் அரங்கேறிவிடுகிறது. இவையெல்லாம் இருந்தபோதிலும், சில தீவிர கருத்தோட்டம் கொண்ட விமர்சகர்கள் செய்வதைப் போன்று, மோடியின் தேர்தல் வெற்றியை, ‘இந்தியக் குடியரசில் இதுவரை கிடைத்த தேர்தல் தீர்ப்புகளில் மக்களின் ஆதரவு இல்லாதது, வாக்காளர்களின் ஆதர வைப் பிரதிபலிக்காதது’ என்றோ அல்லது `ஜனநாயக வரலாற்றில் பெருமளவில் களவடாப்பட்ட தேர்தல்’ என்றோ அல்லது வரலாற்றில் கார்ப்பரேட்டுகள் அடித்த பெருங் கொள்ளை’ என்றோ தூற்றி, மாயாபிம்ப அர சியலை நாம் தடுத்து நிறுத்திவிடமுடியாது. பதிவான வாக்குகளில் 31 சதவீதம் மட்டுமே (மொத்த வாக்காளர்களில் 21 சதவீதத்தினர் மட்டுமே) பா.ஜ.க.வுக்கு வாக்களித்து, இந்தியாவில் தனிக்கட்சிகள் பெரும்பான்மை பெற்றதில் மிகக்குறைந்த வாக்குகளுடன் பெரும்பான்மை பெற்ற கட்சியாக அதனை ஆக்கி யிருக்கிறார்கள் என்பது உண்மைதான்.
மாநிலக்கட்சிகளின் வாக்கு விகிதமோ, இடங் களின் எண்ணிக்கையோ அப்படியே மாறாமல் இருக்க, சிதறுண்ட தீர்ப்பினை மக்கள் அளித்துள்ளதால், விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ தேர்தல் முறை கொண்டு வரப்படவேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்துள்ளதும் உண்மைதான். கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் சரித்திரம் காணாத, கூச்சநாச்சமற்ற ஆதரவு இல்லாமல் ‘மோடி அலை’ என்பது சாத்தியமாகியிருக்காது என்பதும் உண்மைதான். இருப்பினும், இத்தேர்தல் வெற்றியை இதுபோல் அணுகிக்காண்பது மேலோட்ட மான பார்வையாகிவிடும். அவ்வாறு செய்வதன்மூலம், பா.ஜ.க.வுக்கு வாக்களித்த 31 சதவீதம் மக்களையும், அசாம், மேற்கு வங்கம்,ஒடிசா, அருணாசலப் பிரதேசம், ஜம்மு -காஷ்மீர் மாநிலங்களில் பா.ஜ.க.வின் வாக்குவிகிதம் மிகக் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந் திருப்பதையும் முக்கியத்துவமற்றதென உதாசீனப்படுத்துவதாகிவிடும். மோடிக்கு வாக் களித்தவர்களின் எண்ணிக்கையை மட்டும் பார்ப்பதன்மூலம், மற்ற கட்சிகளுக்கு வாக் களித்தபோதிலும் அல்லது வாக்களிக்காமலே இருந்தபோதிலும் அவரது பாணி அரசியலுக்கு மௌனமாக அங்கீகாரம் அளித்தவர்களின் எண்ணிக்கையை அலட்சியம் செய்வ தாகிவிடும்; மாயாபிம்பங்களால் கவர்ந் திழுக்கப்படுவதற்குத் தயாராக மதில்மேல் பூனைகளாக அமர்ந்திருப்பவர்களின் எண் ணிக்கையை அலட்சியம் செய்வதாகிவிடும்; இதுவரை பா.ஜ.க. எம்.பி. அல்லது எம்.எல்.ஏ. எவரையும் ஒருபோதும் தேர்ந்தெடுக்காத, ஆனால் நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாம்களைக் கொண் டுள்ள கேரளா போன்ற மாநிலங்களை அலட்சி யம் செய்வதாகிவிடும்; உலகில் உள்ள அரசி யல் பிரமுகர்களில் மோடியின் முகநூல் பக்கம்தான் படுவேகமாகப் பிரபலமாகிக் கொண் டிருக்கிறது என்கிற விஷயத்தையும் அலட்சியப்படுத்திவிடுவதாகும்.
பாஜகவுக்கு 69 சதவீத வாக்காளர்கள் வாக்களிக்கவில்லை என்பதில் மன ஆறுதல் தேடுவதன்மூலம் மாயாபிம்ப அரசியலுக்கு இரையாகிவிடுகின்றனர் தீவிரகருத்துள்ள பிரிவினர். அரசியலில் மாறியுள்ள சூழலை அவர்கள் பார்க்க மறுக்கின்றனர்: எதிர்த்துப் போட்டியிட்ட கட்சிகளும்கூட இந்த நிலையை எட்டிப்பிடிக்கவும், தமக்குச் சொந்தமான மாயாபிம்பங்களை உருவாக்கிடவும் தற்போது நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கின்றன. இதனால் தான், ஓர் அரசியல் இயக்கத்தைக் கட்டி வளர்ப்பதற்குத் தேவையான குருதியும், வியர்வையும், கண்ணீரும் சிந்துவதற்குத் தயாராக இல்லாத ஆம் ஆத்மி கட்சி, 432 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு, அதன்மூலம் ‘உடனடி அரசியலில்’ இறங்கிப் பணியாற்றவே விரும்புகிறது. பிரச்சாரத்துக்காகச் செலவழிக்கப்பட்ட 5000 கோடி ரூபாய் விஷயத்தை அம்பலப் படுத்துவதோடு நின்றுவிட்டால் போதாது; மக்களைப் பகடைக் காய்களாக எண்ணி உதாசீனப்படுத்திவிடாமல், மோடிக்கு மக்கள் ஏன்வாக்களித்தனர்; அவர்களின் கற்பனைகள் என்ன; கனவுகள் என்ன; அவரிடம் அவர்கள்புகலிடம் தேடக் காரணம் என்ன என்பதைப் பற்றியெல்லாம் ஆழ்ந்தறிவது அவசியம்.
பெருமளவில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் ஆதிவாசிகள், தலித்துகளில் சில பகுதியினர் மோடியின்பால் கவர்ந்திழுக் கப்பட்டதன் ரகசியத்தையும் கண்டறிவது அவசியமாகும். அவ்வாறு செய்யாதபட்சத்தில், மக்களை அன்பளிப்புக் காகிதத்தில் வைத்துச்சுற்றி மாயாபிம்ப அரசியலுக்குத் தாரைவார்த்துத் தருவதாகிவிடும்.பொருளாதாரம், கலாச்சாரம் மற்றும் ஜனசமூகம் என சமுதாய தளங்கள் எங்கி லும் ஜனநாயகமயமாக்கலுக்கான உயிர்த்துடிப் புள்ள போராட்டங்களை உருவாக்கி வளர்ப் பதற்கு மாறாக, இந்திய ஜனநாயகமானது, பெருமளவுக்குத் தேர்தல் நடவடிக்கைகள் என்பதாக மட்டும் சுருங்கிப்போனது மாபெரும் துயர மாகும். இதன் விளைவாக, உதாரணத்துக்குச் சொல்வதானால், சுதந்திரம்பெற்று அறுபது ஆண்டுகள் உருண்டோடிய பின்னரும், பரந்து பட்ட மக்கள் பகுதியினர் தேவையைப் பூர்த்தி செய்ய இயலாமல் மிக மோசமான வறுமையில் வாடும் நிலையில், வளர்ச்சி என்கிற உயர்த் திச்சொல்லப்படும் பதமே, வாழ்வா-சாவாஎன்பதற்கான போராட்டத்தைக் குறிப்பதாகி விடுகிறது.இவ்வாறு, ‘மதச்சார்பற்ற’ கட்சிகள் தமதுகடமைகளைச் செய்யத் தவறியதன் விளைவாக, பாசிஸ்ட் பாணி அரசியலுக்கு அடித்தளம் அமைத்துவிட்டார்கள். தேர்தல்கள் மூல மாக மட்டும் பாசிசத்தை எதிர்க்கும்போது, அது வெட்ட வெட்ட வளர்கின்ற தலையைக் கொண்ட அரக்கன்போலாகிறது.
புத்ரில்லார் கூறுவதைப்போன்று, செயற்கையான முறை யில் மெய்போன்ற சூழலை உருவாக்குகின்ற வெகுஜன ஊடகங்களின் யுகத்தில், ‘அதிக,மேலதிகமான செய்திகள்-குறைந்த, ஆகக்குறைந்த உண்மை’ எனும் நிலைதான்இருக்கும். ஆனால், அதை மாற்றிப் போடுவதற்கான தருணம் வந்துவிட்டது. மாயாபிம்பங்களின் உண்மைப் பொருளைக் கண்டறியும் கடமைப் பொறுப்பு நம் தோள்களில்! அரசியலை மீண்டும் எதார்த்தநிலைக்குக் கொண்டுவரும் கடமையும்நமக்குண்டு. நம்மை நாமே விடுவித்துக் கொண்டு, குகையிலிருந்து வெளியேறி, நிழல் களுக்கு அப்பால் இருக்கும் நிஜத்தைக் காண வேண்டிய பொறுப்பு நம் கரங்களில்தானே தவிர, எந்த தேவதூதன் கையிலும் இல்லை!
நன்றி : தி இந்து ஆன்லைன் இதழில் வெளியான கட்டுரை (ஜூன் 6)தமிழில்: எஸ்.துரைராஜ்

Thursday, June 12, 2014

வரலாற்றுச் சான்றாகத் திகழும் வாழ்க்கை
வரலாற்றுச் சான்றாகத் திகழும் வாழ்க்கை

தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம், செங்கொடித் தொழிற்சங்க இயக்கம் இவற்றின் வளர்ச்சியில் ஒருஅடையாள முகமாகிவிட்டவர் அருமைத் தோழர் ஆர்.உமாநாத்.நாட்டின் வரலாற்றில் சுதந்திரப்போராட் டத்தோடும் சுதந்திர இந்தியாவில் உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான போராட்டத்தோடும் கடல் நீரில் உப்பு போலக் கலந்திருக்கிறது அனைவராலும் “ஆர்.யு.” என்று வாஞ்சையோடு அழைக்கப்பட்ட அவருடைய வாழ்க்கை. சிறுவனாக வறுமையோடு போராடிய அவர், உயர் கல்விக்கானவாய்ப்பு கிடைத்தபோது, அதனைத் தனது சொந்த வறுமை யைப் போக்கிக்கொள்வதற்கான வழியாக அமைத்துக்கொள்ளாமல், தேசத்து மக்களின் வறுமைக்குக் காரணமான முதலாளித்துவ -நிலப்பிரபுத்துவச் சுரண்டல் முறையை ஒழிப்பதற்காகவும், அதற்கெதிராக ஒன்றுபட விடாமல்மக்களைக்கூறுபோடும் மதவாத-சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராகவும் தம்மை ஒப்படைத்துக்கொண்டவர்.
உழைப்பாளிகள் இன்று அனுபவிக்கிற உரிமைகளில் அவருடைய குருதியும் வியர்வையும் கலந்திருக்கின்றன என்றால் மிகையல்ல.1939ல் இயக்கப் பணிகளில் கூடுதல் முனைப்புடன் ஈடுபட அண்ணாமலை பல்கலைக் கழகத்திலிருந்துவெளியேறினார் உமாநாத். தொடர்ந்து கட்சியின் பல்வேறு பணிகளில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார்.அவரை,போலீசார் கண்டுபிடித்து கைது செய்தார்கள். அலிப்பூர் சிறையில் அவர் மற்ற தோழர்களோடுஅடைக்கப்பட்டார். இன்றைய நிலைமைகளோடு ஒப்பிடும் போது அந்நாட்களில் சிறை வாழ்க்கை என்பதுமிக கொடூரமானதாக, சொல்லொணா துயரங்கள் மிகுந்ததாக இருந்தது. அரசியல் கைதிகள் மற்ற கிரிமினல் குற்றவாளிகளைப் போலவே நடத்தப்பட்டனர். விடுதலை போராட்டத்தில் ஈடுபடுவதிலிருந்து ஊக்கமிழக்க செய்வது, அரசியல் கைதிகள் கொடுமைப்படுத்தப்பட்டதன் நோக்கம்.
ஆனால், நாடும் மக்களும் பிரிட்டிஸ் ஆட்சியாளர்களால் ஒடுக்கப்பட்டதை எதிர்த்துபோராட புறப்பட்ட கம்யூனிஸ்ட்டுகள், சிறைச்சாலைக்கு உள்ளேயும் அடக்குமுறைகளை எதிர்த்து போராடினார்கள். கம்யூனிஸ்ட் டுகளின்அத்தகைய போராட்டங்களால்தான் அரசியல் கைதிகளுக்கு மட்டுமல்லாமல் சிறையின் மற்றகைதிகளுக்கும் பல்வேறுஅடிப்படை உரிமைகளையும் சலுகைகளை யும் வழங்க வேண்டிய கட்டாயம் பிரிட்டிஸ் அரசுக்கு ஏற்பட்டது.சிறையில் இருந்து விடுதலையான பின் பம்பாய் நகருக்கு சென்ற உமாநாத் அங்கே கட்சி அலுவலகத்தில் தங்கி பணியாற்றினார். பின்னர் அங்கிருந்து கோயம்புத்தூருக்கு, தொழிற்சங்க இயக்கத்தை கட்டி வளர்ப்பதற்காக அனுப்பி வைக்கப்பட்டார். தொழிலாளர்களிடையே செயல்பட்ட கம்யூனிஸ்ட்டுகளின் பன்முகப் பணிகள் மகத்தானவை.
அன்றைய சூழலில் கோவையின் ஆலைகளில்வேலை செய்த தொழிலாளர்கள் பெரும்பாலும் எழுத படிக்கவும் தெரியாதவர்களாக இருந்தனர். அவருடைய உரிமைகளை பற்றி, சட்டங்கள் பற்றி, அவர்களுக்கு புரியவைப்பது முக்கியமான பணி.நீதிமன்றத்தில் அவர்களுக்காக வாதாடுவது டன், பல்வேறு பிரச்சனைகளில் தொழிலாளர் களுடன்கலந்தாலோசிப்பது, எடுக்கப்படும் முடிவுகளில் தங்களுக்கும் பங்கு இருக்கிறது என்ற உணர்வை ஏற்படுத்துவது, படிப்படியாக அவர்களை கட்சிக்குள் கொண்டுவருவது என்று ஒவ்வொரு பணியையும் தனக்கே உரிய தனித்தன்மையோடு திறம்பட மேற்கொண்டார் அவர்.இன்று இருப்பது போன்ற நவீன ஒலிபெருக்கி ஏதுமற்ற அந்த நாட்களில், ஆலை வாயில் கூட்டங்களில் உரத்தக்குரலில் பேசியாக வேண்டும். ‘மெகாபோன்’ என்ற எளிய உலோக கூம்பு வடிவ கருவிதான்அன்றைய ஒலிபெருக்கி. அதனைப் பயன்படுத்தி தொழிலாளர்களை உமாநாத், கே. ரமணி ஆகியதலைவர்கள் அணிதிரட்டினார்கள்.இதில் உமாநாத்தின் இன்னொரு சிறப்பையும் குறிப்பிட்டாக வேண்டும் தமிழை தாய் மொழியாக கொண்டிராத அவர் தொடக்க நாட்களில் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டி இருந்தது. அவரது பேச்சை கே. ரமணி தமிழாக்கம் செய்வார்.
தொழிலாளரோடு நெருங்குவ தற்கு மொழி ஒரு முக்கியத் தேவை என்ற புரிதலோடு உமாநாத் தமிழ் கற்றார். பிற்காலத்தில் பொதுமக்களிடத்திலே மிகச் சிறப்பாகதமிழிலியேஉரையாற்றக்கூடிய, சக்தி வாய்ந்த தொரு பேச்சாளராக அவர் உருவெடுத்தார்.இந்தியா விடுதலை பெற்ற பிறகும் கூட உழைப்பாளிகள் அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட சக்திகளால் தொழிலாளர்கள் விழிப்படைவதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.கோவை முதலாளிகள் அரசாங்கத்தையும், காவல்துறையையும் நாடினர். 1948ல் ஒரு கொலை வழக்கில் உமாநாத்தின் பெயர் மோசடியான முறையில் சேர்க்கப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அன்றையசூழலில் அவர் சிறையிலிருந்து வெளியே வருமாறு கட்சி கூறியது! அதை ஏற்று, கோவை மத்திய சிறையிலிருந்து, கடுமையான கண்காணிப்புகள் இருந்தும் காவலர்களின் கண்ணில் மண்ணைத்தூவிவிட்டுத் தப்பிய உமாநாத், திருச்சி நகரத்தை வந்தடைந்தார்.அவரது தொழிற்சங்க அனுபவம் ரயில்வே தொழிலாளர்களை அணிதிரட்டப் பயன்பட வேண்டும் என்று கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்தது. அதனை ஏற்று ரயில்வே தொழிலாளர்களிடையே செயல்பட்டு, அவர்களது போராட்டங்களுக்கு அவர் வழிகாட்டினார்.
1949 மார்ச் மாதம் நடைபெற்ற ரயில்வே தொழிலாளர்களின் வீரம் செரிந்த வேலைநிறுத்தப் போராட்டம் வரலாற்றில் இடம்பெற்றது. திருச்சி பொன்மலை பகுதியில் தீரமிக்க தியாகிகளை உருவாக்கிய அந்தப் போராட்டத்தில் உமாநாத்தின் பங்களிப்பு தலையாயது.தொடர்ந்து தலைமறைவாகவே செயல்பட வேண்டியிருந்த நிலையில், பின்னர் சென்னைக்கு வந்து, பல்லாவரம் காவல்நிலையத்திற்கு அருகிலேயே தங்கினார்.அவருடன் தோழர்கள் எம். கல்யாணசுந்தரம், லட்சுமியம்மாள், அவரது மகள் பாப்பா ஆகியோரும் தங்கியிருந்து ரகசியமான முறையில் இயக்கப்பணிகளை மேற்கொண்டனர். ஆயினும் அவர்கள் அங்கே இருப்பதை எப்படியோ மோப்பம் பிடித்தபோலீஸ்காரர்கள், அவர்கள் இருந்த வீட்டைச் சுற்றி வளைத்துக்கொண்டனர். போலீசார் சூழ்ந்துகொண்டதை அறிந்ததும், மற்ற இடங்களில் இருக்கக்கூடிய தோழர்களைப் பாதுகாப்பதற்காக வீட்டில் இருந்த பல ரகசிய ஆவணங்களை எரித்துவிட்டார் லட்சுமியம்மாள். மாடியில் ஏறித் தப்பிக்க முயன்ற உமாநாத், தவறி கீழே விழுந்ததில் அவரது கால் முறிந்தது. கால் முறிந்தும் மன உறுதிமுறியாத அவர் மீதும் மற்றவர்கள் மீதும்போலீசார் திருச்சி சதி வழக்குப் பதிவு செய்தனர்.இத்தகைய வழக்குகள் நீதிமன்றம்வந்தபோது, தோழர்கள் தரப்பில் தானே நீதிபதிமுன் வாதாடுகிற அளவுக்கு சட்ட ஞானத்தையும் வளர்த்துக்கொண்டிருந்தார் அவர். இப்படிப்பட்ட திறமைகளை இயக்கத்தின் வளர்ச்சிக்காகவே பயன்படுத்திய அவர், 1970 முதல் 1990ம் ஆண்டுகள் வரையில் பொதுவாகத் தமிழகம் முழுவதும், குறிப்பாகத் திருச்சியில் செங்கொடியின் கீழ் தொழிற்சங்கங்களைக்கட்டி வளர்ப்பதற்கு வழிகாட்டினார்.தொழிற்சங்கத் தலைவராக மட்டுமல்ல,அனைத்துப் பகுதி மக்களின் பிரதிநிதியாக வும் நாடாளுமன்றமக்களவை, மாநில சட்டப்பேரவை இரண்டிலும் குறிப்பிடத்தக்க பணியாற்றினார்.
நாடாளுமன்ற மக்களவைக்குப் புதுக்கோட்டைத் தொகுதியிலிருந்து இரண்டுமுறை, தமிழக சட்டமன்றத்திற்கு நாகப்பட்டினம் தொகுதியிலிருந்து இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர். இரண்டு அவைகளிலும்அவர் நிகழ்த்திய உரைகள் மற்றவர்களுக்கு வழிகாட்டும் ஆவணங்களாகத் திகழக்கூடியவை. அதற்குக்காரணம், விவாதிக்க இருக்கும் எந்தப் பொருள் குறித்தும் முழுமையாகப் புரியதுகொள்வதிலும், அதுதொடர்பான உண்மைகளை உள்வாங்கிக்கொள்வதிலும் ஒரு முன்னுதாரமாகத் திகழ்ந்தார்.இவ்வாறு திரட்டிய உண்மைகளின் பலத்தோடு அவர் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் மட்டுமல்லாமல், தொழில் நிறுவனங்களின் நிர்வாகங்களுடனான பேச்சுவார்த்தைகளிலும் அவர் வாதாடுகிறபோது, அதை எதிர்கொள்ள முடியாமல் மற்றவர்கள் திணறிப்போவார்கள்.மக்களின் பிரதிநிதியாக வெற்றிகரமாகச் செயல்பட்டதற்கு ஆதாரமாகப் பல்வேறு நிகழ்வுகள் உள்ளன.
ஒரு சோற்றுப் பதமாக இங்கே ஒரு நிகழ்வைக் காணலாம்: தமிழகத்தில் நாராயணசாமி நாயுடு தலைமையிலான விவசாயிகள் சங்கம் வலுவானதொரு அமைப்பாக வளர்ந்துகொண்டிருந்தது. விவசாய இடுபொருள்களின் விலை உயர்வைக் கண்டித்தும், விளைபொருள்களுக்கு நியாயமான விலை கோரியும், விவசாயிகளின் இதர நியாயமான கோரிக்கைகளை முன்வைத்தும் போராட்டங்களைத் தொடங்கிய அந்தச் சங்கம் விரைவிலேயே முக்கியமானதொரு அமைப்பாக அடையாளம் பெற்றது. திருச்சியின் திருவெறும்பூர் அருகில் உள்ளகூத்தப்பா கிராமத்தில், தலித் மக்களுக்குச் சொந்தமான விவசாய நிலங்களை ஆக்கிரமித்த அந்தச்சங்கத்தினர், தலித் மக்களை விரட்டவும் முயன்றனர். சட்டமன்ற உறுப்பினராக இருந்த உமாநாத்உடனடியாக அந்தப் பிரச்சனையை அவையில்எழுப்பினார். தலித் மக்களுக்காக சட்டமன்றத் திற்கு வெளியே நடந்த போராட்டங்களுக்கும் அவர் தலைமை தாங்கினார்.
அந்தப் பாட்டாளிகளின் நிலம் மீட்கப்பட்டது; அவர்களுக்கு அநீதியிழைக்க முயன்ற நாராயணசாமி நாயுடு சங்கம் தனதுமுக்கியத்துவத்தை இழந்தது.‘சிம்கோ’ நிறுவன தொழிலாளர்கள் தங்களுக்கு மறுக்கப்பட்ட சட்டப்பூர்வ உரிமைகளுக்காகப் போராட்டக் களம் இறங்கினர். 125 நாட்கள் நடந்த அந்தப் போராட்டத்தையொட்டி தினமும் சட்டமன்றத்தில், அந்தத் தொழிலாளர்களின் நியாயத்தை எதிரொலித்தார் உமாநாத். அனைத்துக் கட்சிகளின் ஆதரவையும் தொழிலாளர்களுக்குத் துணையாகத் திரட்டினார். இறுதியில்அன்றைய எம்.ஜி.ஆர். அரசு, தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்தது.இப்படிப்பட்ட எடுத்துக்காட்டுகள் ஏராளமாக இருக்கின்றன. கட்சியின் முழுநேர ஊழியராக மிக எளிய வாழ்க்கை வாழ்ந்தார். ஒரு முறை, அவருடனும் தோழர்கள் கே. ரமணி,வெங்கிடு ஆகியோருடனும் உரையாடிக் கொண்டிருந்தபோது, தொடக்கத்தில் ஊதியம்என எதுவும் இல்லாமல் பல நாட்கள், தொழிலாளர்கள் கொண்டுவந்து தரும் உணவைப் பகிர்ந்துகொண்டதை நினைவுகூர்ந்தனர்.
விடுமுறைநாட்களில் வெறும் பட்டாணியும் வேர்க்கடலையுமே உணவு!இந்த எளிமையும், தியாகமும், கூரிய அரசியல் தெளிவும், அயராத ஈடுபாடும்தான் அவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களில் ஒருவராக உயர்த்தியது. நாடு தழுவிய பிரச்சனைகளில் கட்சி சரியான நிலைபாடுகளை மேற்கொண்டதில் பங்களித்தார்.பொதுவாழ்க்கைக்கு வருகிற எல்லோராலும் தங்களது சொந்தக் குடும்ப வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்துக்கொள்ள முடிவதில்லை. தோழர் உமாநாத் - தோழர் பாப்பா இவர்களின் குடும்பம் இதிலேயும் மிகச்சிறந்த முன்னுதாரணம். தலைமறைவாகக் கட்சிப் பணிகளைச் செய்துகொண்டிருந்த நாட்களில்தான் இருவரது நட்பு காதலாக மலர்ந்தது. அவர்களது இணக்கமும் இயக்கப் புரிதலும் எல்லாத்தலைமுறைகளுக்கும் ஒரு வாழ்க்கைப் பாடம் என்றே சொல்லலாம். அது அவர்கள் இருவரோடு நின்றிடவில்லை.
அவர்களது மூன்று மகள்களுமே இயக்க வாழ்க்கையோடு தங்களை இணைத்துக்கொண்டவர்கள்தான். திண்டுக்கல்லில் மருத்துவராகப் பணியாற்றி காலமாகிவிட்ட லட்சுமி, திருச்சியில் வழக்கறிஞராக உழைப்பாளிகள் தரப்பில் வாதாடும் நிர்மலா ராணி, இன்று கட்சியின் மத்தியகுழு உறுப்பினராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர்களில் ஒருவராகச்செயல்பட்டுக்கொண்டிருக்கும் வாசுகி, இவர்களது குடும்பத்தினர் என எல்லோருமே இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டவர்கள்.இயக்கப்பணியாற்றுகிற பலரது வாரிசுகள் அரசியலுக்கு வருவதில்லை என்பதைப் பார்க்கிறோம். வேறுசில கட்சிகளிலோ, குடும்ப வாரிசுகள் அரசியலுக்கு வருவதாகக் கூறிக்கொண்டு அதிகார பீடத்தில் ஏறிக்கொள்வதையும் பார்க்கிறோம். இவர்களோ, மக்கள் பணிக்காகவே அரசியல் என்று உணர்வுப்பூர்வமாகத் தங்களை ஒப்புவித்துக் கொண்டவர்கள். இத்தகைய வளர்ச்சிக்கு அடிப்படை, குடும்பஜனநாயகம் என்ற கோட்பாட்டை நிஜவாழ்வில் நடைமுறைப் படுத்திக் காட்டினார்கள் உமாநாத் - பாப்பாஇணை என்பதேயாகும். இப்படி வாழ்ந்து காட்டியது என்பதும், பொதுவாழ்க்கைக்கு வருவோருக்கான ஒருபடிப்பினைதான்.
கட்சியின் மாநாடுகளில் அதிகக் காலம் சிறைவாழ்க்கையையும் தலைமறைவு வாழ்க்கையையும் சந்தித்தவர்களில் ஒருவராக உமாநாத் பெயரும் பெருமிதத்தோடு அறிவிக்கப்படும். தேசத்தின் விடுதலைக்கு முன்னும் பின்னுமாக எட்டரை ஆண்டுகள் சிறைவாசம்! ஐந்து ஆண்டுகள் வனவாசம்போன்ற தலைமறைவு வாழ்க்கை! அருமையான இளமைக்காலத்தை வெறும் பொழுதுபோக்கு அல்லதுசுயநல வேட்கைஎன்று கடத்துகிறவர்களாக இளம் தலைமுறைகளை வார்த்துக்கொண்டிருக்கிறது இன்றைய முதலாளித்துவ உலகமயமாக்கல். அவர்களுக்கு நம்பிக்கையும் ஊக்கமும் அளிக்கிற, சமுதாய நலனுக்காக வாழ்வதே மானுட அழகு என்று உணர்த்துகிற வரலாற்றுச் சான்றாகியிருக்கிறார்தோழர் உமாநாத்.இப்படியொருவரை எப்போது இனி காண்போம் என்று ஏங்குவதற்கு மாறாக, முன்னெப்போதையும் விடஇடதுசாரிகளின், கம்யூனிஸ்ட்டுகளின் உறுதியான தலையீடும் பரந்த இயக்கமும் வலுவான செயல்பாடும்கட்டாயத் தேவையாகியுள்ள இன்றையகாலகட்டத்தில் அவரைப் போல் நம்மையும் தகவமைத்துக்கொள்வதே அவருக்குச் செலுத்திடும் செவ்வணக்கத்தை அர்த்த முள்ளதாக்கும்.
கட்டுரையாளர் - மத்தியக் குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
நன்றி: புத்தகம் பேசுது (ஜூன், 2014)

Tuesday, June 10, 2014

மறுபடியும் போராடுவேன்.. மறுபடியும் சிறை செல்வேன்



தில்லையாடி வள்ளியம்மை/தென் ஆப்பிரிக்காவில் உள்ள தில்லையாடி வள்ளியம்மையின் கல்லறை
நான் அவளைப் போய்ப் பார்த்தபோது அவள் மிகவும் பலவீனமாக படுத்த படுக்கையாய்க் கிடந்தாள். எழுந்து உட்காரவே சிரமப்பட்டாள்.“வள்ளியம்மா. ஜெயிலுக்குப் போனது பற்றி நீ வருத்தப்படவில்லையா?” நான் அவளிடம் கேட்டேன்.“வருத்தமா?, எனக்கா? நிச்சயம் இல்லை. இப்போது உடல் நிலை தேறியதும் மீண்டும் போராட்டத்துக்கு வருவேன். போலீஸ் கைது செய்தால் மறுபடியும் சிறைக்குச் செல்வேன்.”“ஆனால் சிறையில் இப்போதைக் காட்டிலும் அதிகமாகத் துன்புறுத்துவார்களே” “அதனாலென்ன? எந்தக் கஷ்டத்தையும் நான் ஏற்கத் தயார். எப்படியாவது நமது தாய் நாடு விடுதலை அடைய வேண்டும். இந்திய சுதந்திரத்திற்காக நான் எனது உயிரைவிடவும் தயாராக இருக்கிறேன்.
”இன்றைக்குச் சரியாக 100 வருடங்களுக்கு முன்பு நடந்த இந்த உரையாடலைத் தனது சுயசரிதையில் நெகிழ்ச்சியோடு பதிவு செய்திருக்கிறார் தேசத் தந்தை மகாத்மா காந்தி.காந்தியுடனான இந்தச் சந்திப்பு நிகழ்ந்த சில நாட்களில் 22.10.1914 அன்று, அப்போது16 வயதே ஆன வள்ளியம்மை மரணமடைகிறாள்.
1914 ஜூலை 15 அன்று, தான் தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்குப் புறப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்பு, ஜோகன்ஸ்பர்க் நகரத்தின் பிராம்ஃபோன்டைன் தோட்டத்தில் நடைபெற்ற கல்லறை திறப்பு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காந்திஜி, “தில்லையாடி வள்ளியம்மையின் பெயர் தென் ஆப்பிரிக்க சத்யாக்ரகிகளின் சரித்திரத்தில் மட்டுமல்ல, இந்திய நாட்டின் விடுதலைப் போராட்ட வரலாற்றிலும் என்றென்றும் நிலைத்திருக்கும்“ என்று கூறினார்.
இன்றைய நாகப்பட்டினம் மாவட்டத்தின் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள சிற்றூரான தில்லையாடியைச் சொந்த ஊராகக் கொண்டு, தங்கள் பிழைப்பிற்காகக் கடல் கடந்து தென் ஆப்பிரிக்கா சென்று அங்கே பேக்கரி மற்றும் பழக்கடை நடத்தி வந்த முத்துசாமி-மங்களம் தம்பதியரின் புதல்வியாக 1898 பிப்ரவரி 22-ல் ஜோகன்ஸ்பர்க்கில் பிறந்தவர் வள்ளியம்மை.காந்திஜியின் அறைகூவலை ஏற்று, தென் ஆப்பிரிக்க வெள்ளை அரசின் நிறவெறிக் கொடுமை மற்றும் பல்வேறு அடக்குமுறைகளுக்கு எதிராக நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் தன் தாயாருடன் சேர்ந்து ஆர்வமுடன் பங்கேற்றார் வள்ளியம்மை.1913 அக்டோபரில் டிரான்ஸ்வால் நகர் முதல் நேடால் வரை நடைபெற்ற நடைபயணத்தில் கலந்துகொண்ட அனைவரையும் கைது செய்து சிறையிலடைத்தது தென் ஆப்பிரிக்க அரசு. மூன்று மாதக் கடுங்காவல் தண்டனைக்குப் பின் சிறையைவிட்டு வெளியே வந்த சில நாட்களுக்குள், தாய்நாட்டு மண்ணைப் பார்க்காமலேயே வீரமரணம் எய்தினார் தில்லையாடி வள்ளியம்மாள்.
இந்திய விடுதலைப் போராட்டத்தின் வழிநெடுகிலும் மகத்தான பங்களிப்பை புரிந்துள்ள பெண் போராளிகளின் வரிசையில் தனி இடத்தைப் பெற்றுள்ள,நம் தமிழகத்தைச் சேர்ந்த தில்லையாடி வள்ளியம்மையின் வாழ்வும், உயிர்த்தியாகமும் எண்ணற்ற விடுதலைப் போராட்ட வீராங்கனைகளுக்கு உந்துசக்தியாகத் திகழ்ந்தது என்று கூறினால் அது மிகையன்று.இந்திய சுதந்திரத்தின் மாண்புகளை நினைவுகூர்வோம். தேசம் மீண்டும் அடிமைப்படுத்தப்படும் அவலத்தைத் தடுத்து நிறுத்த உறுதிகொள்வோம்.
க.மன்னன்நன்றி: காப்பீட்டு ஊழியர்
மதநம்பிக்கைக்கு எதிரானதா மதச்சார்பின்மை?
க. கனகராஜ்


மதச்சார்பின்மை கூடுதல் முக்கியத்துவம் பெறுவது சமீபத்திய நிகழ்வாக இருக்கலாம். ஆனால் மதச்சார்பின்மையின் வேர்கள்மதம் தோன்றிய காலம் தொட்டே உள்ளன. மதச்சார்பின்மை மத விரோதமான கொள்கையல்ல. தன் மதத்தை, தன் கடவுளை நேசிப்பதற்கு எதிரானதுமல்ல. மாறாக, பிற மதங்களை இழிவுபடுத்துவதற்கும், அவதூறு செய்வதற்கும் எதிரானது. பிற மதத்தினரை துன்புறுத்துவதை தடுப்பது. இது மதச்சார்பின்மையின் சமூகக் கொள்கை. அரசு எந்தவொரு குறிப்பிட்ட மதத்தின் அடிப்படையிலும் செயல்படாதிருப்பதே மதச்சார்பின்மையின் அரசியல் கொள்கை. ஷிவ் விஸ்வநாதன் (மோடியும் லிபரல்களின் தோல்வியும் - இந்து 23.5.2014) அவர்களும் மற்றும் சிலரும் திரிக்க முயல்வதுபோல எல்லாமதங்களின் அடிப்படையிலும் செயல்படுவதல்ல. அரசும், அரசியலும் பொதுவானது. மதநம்பிக்கையும், கடவுள் வழிபாடும் தனிநபர் சார்ந்தது.
இந்திய அரசியல் சட்டப்படி தான் இந்தியர் வாழ வேண்டுமென்று சட்டம் நிர்ப்பந்திக்கும். ஆனால் ஒரு மதத்தின் அடிப்படையில் வாழ வேண்டுமென யாரும், யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. மதச்சார்பின்மை எந்தவொரு மத நம்பிக்கையையும் கேள்விக்குள்ளாக்குவதில்லை. கேலியும் செய்வதில்லை. எந்தவொருமதமும் அரசுக்கு வழிகாட்டியாக இருக்க முடியும் என்பதைத் தான் கேள்விக்குள்ளாக்குகிறது. அரசு நடவடிக்கையிலிருந்து ‘சற்றே விலகி இரும் பிள்ளாய்’ என்று கோரி நிற்கிறது.எந்த மதமும் ஒற்றைக் கடவுளையும், ஒரே மாதிரி சடங்கு சம்பிரதாயங்களையும் கொண்டதாக இல்லை. இந்து மதத்தில் சைவம், வைணவம் (அதிலும் கூட வடகலை, தென்கலை) நாட்டார் தெய்வங்கள் போல, இஸ்லாத்தில் சன்னி, ஷியா, அலவி, வஹாபி, சுஃபி போல,கிறிஸ்துவத்தில் கத்தோலிக்கர், புரோட்டஸ்டன்ட், பாப்திஸ்து, லுத்ரன், பெந்தகோஸ்தே போல ஏராளமான பிரிவுகள் உள்ளன. இதரமதங்களிலும் கூட இப்படித்தான் இருக்கிறது. தெய்வங்களும், வழிபடு முறைகளும் ஒரே மதத்தின் உட்பிரிவுகளுக்குள்ளேயே வேறுபாட்டுடன் இருப்பதை காண முடியும். ‘அரியும் சிவனும் ஒன்னு, அறியாதவன் வாயில் மண்ணு’ என்று வலியுறுத்தினாலும் அரியை வணங்கி, சிவனை வெறுப்போர் இருக்கத்தான் செய்கிறார்கள். ‘அப்பனைப் பாடும் வாயால் சுப்பனைப் பாடமாட்டேன்’ என்பது கூட தமிழில் உள்ள வழக்குதான்.
சிலுவையை வணங்குவோர் - மறுப்போர், மேரி மாதாவை வணங்குவோர் - மறுப்போர், ஷியா, சன்னி முஸ்லீம்களுக்கிடையிலான வேறுபாடு இவையெல்லாம் நாம் அறியாததல்ல. பூணூல் போடுவோரும் இல்லாதோரும் இந்துக்கள்தான். தாலிகளிலும், சடங்குகளிலும் எத்தனை பன்மைத்தன்மை. ஒரே மதத்திற்குள்ளும் ஒரே சாதிக்குள்ளும் கூட ஏராளமான வேறுபாடுகள் இணங்கியும், முரண்பட்டும் நீடித்துக் கொண்டே தான் இருக்கின்றன. எல்லா பன்மைகளும் ஒற்றைகளின் சேர்க்கையே. எல்லா ஒற்றைகளும் பன்மைகளின் பகுதியே. இதை உணராதோர் மட்டுமே சகிப்புத் தன்மையற்றவராக இருக்கிறார்கள். மதநம்பிக்கையுடையவர் மதச்சார்பற்றவராக இருக்க முடியும். ஏனெனில் மதச்சார்பின்மை அரசு மற்றும் பொதுவெளி சார்ந்ததே அன்றி தனி மனித நம்பிக்கை பற்றியதல்ல.
பாரதியைவிட காளி பக்தன், பராசக்தி பக்தன் உண்டா?, காந்தியை விட இந்து மதத்தின் மீதான பிடிப்பும், காதலும் கொண்டவர் உண்டா?, ஏன் விவேகானந்தர் இந்து துறவி தான். இவர்களை எவரேனும் மதவெறியர் என்று சொல்லத் துணிந்தது உண்டா? ஆனால் முகமது அலி ஜின்னா முஸ்லீம் மத பழக்கவழக்கங்களை கடைபிடித்தவரல்ல. சொல்லப்போனால் மேற்கத்திய கலாச்சாரத்தில் மூழ்கி திளைத்தவர். அவரது அரசியல்கொள்கை மதச்சார்பற்றது என்று சொல்ல முடியுமா?. எனவே அரசியல் நோக்கத்திற்காக மதத்தை பயன்படுத்துவதும், அரசியல் கொள்கைகளில் ஒரு மதத்திற்கு இடமளிப்பதுமே மதச்சார்பின்மைக்கு எதிரான கொள்கை. ஷிவ் விஸ்வநாதன் ராகு காலம் பார்த்து வேலைக்கு வரும் ஒரு விஞ்ஞானியை கேள்விகேட்கக் கூடாது என்கிறார்.
ஒருவர் விஞ்ஞானியோ, அரசு ஊழியரோ அவர் வீட்டு எந்தவிழாக்களையும் ‘நல்ல நேரத்தில்தான்’ கொண்டாடுவேன் என்று சொல்வதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்க முடியாது; இருக்கக் கூடாது. ஆனால், அலுவலகத்திற்கு ராகு காலம் கழித்து தான் வருவார் என்பதை எப்படி ஏற்க முடியும்?. ராகு காலத்தில் வேலைக்கான நேர்முகத் தேர்வு வந்தால் போகாமல் இருந்துவிடுவார்களா?, எனது கடவுளுக்கு இந்தக்கிழமைதான் உகந்த நாள். எனவே அந்த தினத்தில் நான் விடுமுறை எடுத்துக் கொள்கிறேன் என்று சொல்வதை அனுமதிக்க முடியுமா?.
இப்போதைய ஞாயிற்றுக் கிழமை விடுமுறை என்பது கிறிஸ்தவர்களாக இருந்த ஆங்கிலேயர்களின் நடைமுறை. அதைத்தான் பின்பற்றி வருகிறோம். ராகு காலம் பார்ப்பதை பணிநிமித்தம் அனுமதிக்க முடியாது என்றால் அதனால் அவர் நிர்ப்பந்திக்கப்படுவதாக கருதினால் அவரை மாற்ற வேண்டுமே தவிர நடைமுறைகளை மாற்றிக் கொள்ள முடியாது. மதமாற்றம் குறித்து பேசப்புகுந்த ஷிவ்விஸ்வநாதன் கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் மட்டும் மதமாற்றம் செய்வது போலவும், அதன் காரணமாக மதநம்பிக்கை உள்ள மத்திய தர வர்க்க இந்துக்கள் மோடிக்கு ஆதரவாக நின்றதாகப் பேசுகிறார். இஸ்லாமும், கிறிஸ்தவமும் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே மதமாற்றம் துவங்கிவிட்டது. நாடு முழுவதும் புத்த மதம் பரவியிருந்ததும் நான்கு திசைகளிலும் சென்று மனிதர்களையும், மன்னர்களையும் இந்து மதத்திற்கு ஆதிசங்கரர் மாற்றியதையும் மதமாற்றக் கணக்கில் இல்லாமல் எப்படி பார்ப்பது? கூன் பாண்டியன் சமண மதத்தை துறந்துவிட்டு சைவத்திற்கு மாறியதற்கு கிறிஸ்தவரும், இஸ்லாமியருமா காரணம்.
எண்ணாயிரம் சமணர்கள் கழுவில் ஏற்றப்பட்டது யாரால் என்பதை இலக்கியங்கள் பதிவு செய்துதானே வைத்திருக்கின்றன. ஒரு மதத்தை பின்பற்றுவதும், இன்னொரு மதத்திற்கு மாறுவதும் ஒருவரது தனிப்பட்ட உரிமை. அதை மறுப்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. மேலும் மதமாற்றத்தை தடுப்பது சட்டங்களால் ஆகாது.சனாதன இந்து மதத்தில் இருந்த கொடூரமான சாதிய பாகுபாடுகள்தான் அடித்தட்டு மக்கள் மதமாறுவதற்கு காரணமாக இருந்தது என்று சுவாமி விவேகானந்தர், மகாகவி பாரதியார் போன்றவர்களே குறிப்பிட்டுள்ளனர். சாதியின் பெயரால் பெரும்பகுதி மக்கள் கல்வி பெறுவது கூட தடுக்கப்பட்ட பின்னணியில்தான் மதமாற்றங்கள் நிகழ்ந்தன.
இன்றைக்கும் கூட நீடிக்கும் கோயிலுக்குள்ளும், பொதுப்பாதைகளிலும் நுழைவதை கூட தடுக்கும் நந்திகள் உடைத்து நொறுக்கப்பட வேண்டும். ஆனால் மதம் மாறுவதால் மட்டுமே இழிவுகள் ஒன்றும் மாறிவிடவில்லை என்பதையே மீனாட்சிபுரங்களும், தலித் கிறிஸ்தவர்களுக்கான இட ஒதுக்கீட்டு கோரிக்கையும் வலியுறுத்தி நிற்கின்றன. இந்து மதத்தின் மிகப்பெரிய அடையாளமாக விளங்கும் சுவாமி விவேகானந்தர் 1893 செப்டம்பர் 11 சிகாகோவில் உரையாற்றுகிற போது, “பிரிவினைவாதத்தாலும், மதவெறியாலும் இந்த அழகிய உலகு நீண்ட நாட்களாக திணறிக்கொண்டு இருக்கிறது. இந்த பூமி முழுவதும் மதவெறி நிரம்பிக் கிடக்கிறது. உலகை மீண்டும், மீண்டும் அது ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது. நாகரிகத்தை அழித்தது. எத்தனையோ நாடுகளை சின்னாபின்னமாக்கிவிட்டது. இந்த கொடியஅரக்கத்தனமான செயல்கள் இல்லாதிருந்தால் மனித சமுதாயம் இன்றிருப்பதை விடப் பலமடங்கு உயர்நிலை எய்திருக்கும்.”ஷிவ் விஸ்வநாதன் மதச்சார்பற்றவர்கள் குறித்து சொல்லியிருப்பவை பலவும் மதவெறியர்களால் கட்டவிழ்த்துவிடப்படும் புளுகுமூட்டைகளே.
அதை அவரும் வழிமொழிந்திருப்பது வருத்தத்திற்குரியது. மதச்சார்பின்மையின் தோல்வி நிரந்தரமானால் அது மனித குலத்தின் தோல்வியாகவே முடியும். மதச்சார்பின்மை திரிக்கப்பட்டிருந்தால் அதை சரிபடுத்துவதும் வெற்றி பெற வைப்பதுமே மனித குல முன்னேற்றத்திற்கான பிரதானமான முன்நிபந்தனையாக இருக்கும்.

Monday, June 9, 2014

மக்களவைத் தேர்தல் முடிவு குறித்து பரிசீலனை மக்களிடம் நெருக்கமான தொடர்பை ஏற்படுத்துவோம்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக்குழு அறிக்கை
புதுதில்லி, ஜூன் 9-மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மத்தியக்குழு கூட்டம் புதுதில்லி யில் ஜூன் 7,8 தேதிகளில் நடைபெற் றது. கூட்டத்தின் முடிவில் வெளியி டப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளதா வது:
மக்களவைத் தேர்தல் முடிவு
மக்களவைத் தேர்தல் முடிவு குறித்து மத் தியக்குழு விவாதித்து பரி சீலனை அறிக்கை ஒன்றை நிறை வேற்றியுள்ளது. இந்தத் தேர்தலில் கட்சிக்கு பலவீனமான நிலை ஏற்பட் டுள்ள நிலையில் மத்தியக்குழு மிக ஆழமான விவா தத்தை நடத்தியது. தோல்விக்கான பிரதான பொறுப்பை கட்சியின் அரசியல் தலைமைக் குழு வும் மத்தியத் தலைமையும் ஏற்றுக் கொள்கிறது. கட்சியின்சுயேட்சையான பலத்தை விஸ்தரிக்காததும், கட்சியின் வெகுஜன அடித்தளத்தில் ஏற்பட்டு ள்ள சரிவும் தேர்தல் முடிவில் பிரதி பலித்துள்ளது. மேற்குவங்கத்தில் கட்சியும், இடது முன்னணியும் கடுமையான பின்ன டைவைச் சந்தித்துள்ள நிலையில் மேற்குவங்க தேர்தல் முடிவு குறித்து மத்தியக்குழு ஆய்வு செய்தது.
மேற்கு வங்கத்தில் கட்சிக்குள் எடுக்கப்பட வேண்டிய அரசியல் மற்றும் ஸ்தாபன நடவடிக்கைகள் குறித்து விவாதித்த மத்தியக்குழு, பணிகளை மேம்படுத்தி மக்களுடன் நெருக்கமான தொடர்பி னை ஏற்படுத்தவேண்டும் என்று முடிவு செய்தது. உழைக்கும் மக்களின் பிரச்சனைகளை கையில் எடுத்து கட்சி போராட்டங்களையும் இயக்கங்க ளையும் தலைமை தாங்கி நடத்தும். தொடர்ச்சியான தாக்குதலை சந்தித்து வரும் கட்சி ஊழியர்கள் மற்றும் ஆதர வாளர்களை பாதுகாக்க உடனடி நட வடிக்கைகள் எடுக்கப்படும். முன்னெப்போதும் இல்லாத அள வுக்கு பெற்றுள்ள வெற்றிக்காக கட்சி யின் திரிபுரா மாநிலக்குழுவிற்கு மத்தி யக்குழு வாழ்த்து தெரிவிக்கிறது.
மிக அதிக வித்தியாசத்தில் இரண்டு தொ குதிகளையும் இடது முன்னணி கைப் பற்றியுள்ளதோடு, கட்சி மற்றும் இடது முன்னணி பதிவான வாக்குகளில் 64.4 சதவீதத்தை பெற்றுள்ளது குறிப்பிடத் தக்கது. கட்சியின் அரசியல் நிலைப்பாடு மற்றும் ஸ்தாபன பணிகளை ஆய்வு செய்து சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள மத்தியக்குழு முடிவு செய்துள்ளது.
மக்களிடம் செல்லவும், வெகுஜனங்களின் நெருக்கமான தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டு, மக்களின் வாழ்வாதார நலன்களையும், மதச்சார்பின்மை மற்றும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க அயர்வற்ற போராட்டங்களையும், இயக்கங்களை யும் நடத்துவது என்று மத்தியக்குழு முடிவு செய்துள்ளது. நாட்டில் ஏற்பட் டுள்ள புதிய அரசியல் சூழ்நிலையால் விடுக்கப்பட்டுள்ள சவால்களை ஒன்றுபட்டுச் சந்திப்பது என்று மத்தி யக் குழு முடிவு செய்துள்ளது.
திரிணாமுல் வன்முறைக்கு கண்டனம்
மேற்குவங்கத்தில் இடதுசாரி இயக் கங்களின் ஊழியர்கள் மற்றும் ஆதரவா ளர்கள் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியால் நிகழ்த்தப்படும் தொடர்ச்சி யான வன்முறை மற்றும் தாக்குதல்க ளை மத்தியக்குழு கண்டிக்கிறது. தேர் தலின் போதும் அதற்கு பின்பும் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கள் மற்றும் ஆதரவாளர்கள் படுகொ லை செய்யப்பட்டுள்ளனர். கட்சி மற் றும் இடதுசாரி சக்திகள், ஜனநாயகத் தை பாதுகாக்கவும் மேற்குவங்கத்தில் தொ டுக்கப்பட்டுள்ள தாக்குதல்களை எதிர்த்தும் நாடு தழுவிய ஆதரவு இயக் கங்களை நடத்திடுமாறு மத்தியக்குழு அறைகூவல் விடுக்கிறது.
புதிய அரசு
நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலை யில் விலைவாசி உயர்வு, வேலையின் மை, விவசாயத் துறை நெருக்கடி, பெண்களுக்கு எதிராக அதிகாரித்து வரும் குற்றங்கள் ஆகிய தீவிரமான பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால், பாஜக தலைமையிலான அரசு பிரச்சனைகளை தீவிரப்படுத்து வதிலும், பிளவுவாதத்தை தூண்டுவதி லும் தான் அதீத ஆர்வம் காட்டுகிறது. அரசியல் சாசனத்தில் 370வது பிரிவு ரத்து செய்யப்பட வேண்டும் என்று ஒரு அமைச்சர் பேசியிருப்பது பெரும் அச் சத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநில மக்களை மேலும் தனிமைப் படுத்தவே இது இட்டுச்செல்லும். இந்திய யூனியனுடன் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் இணைந்தபோது அந்த மாநி லத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப் படும் என அந்த மக்களுக்கு அளிக்கப் பட்ட வாக்குறுதிக்கு எந்த வகையிலும் ஊறு ஏற்படுத்தக்கூடாது.பாதுகாப்புத்துறை மற்றும் காப் பீட்டுத் துறை உள்ளிட்ட துறைகளில் நேரடி அந்நிய முதலீட்டை அதிகரிப்ப தற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. இத்தகைய நடவடிக்கை களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. சுரங்கம் மற்றும் மின் துறைகளில் ஏராளமான திட்டங்களு க்கு சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் அனுமதி வாங்குவதற்கான முயற்சிக ளும் மேற்கொள்ளப் படுகின்றன. இத னால் சுற்றுச்சூழலுக்கு பெரும் ஆபத்து ஏற்படுவதோடு பழங்குடி மக்களின் உரிமைகளும் பாதிக்கப்படும். சுற்றுச் சூழல் அம்சங் கள் மற்றும் பழங்குடி, உள்ளூர் மக்களின் உரிமைகள் ஆகிய வற்றை கணக்கில் கொள்ளாமல் மோடி அரசாங்கம் இத்தகைய நடவடிக்கைக ளில் ஈடுபடக்கூடாது.
அதிகரிக்கும் வகுப்புவாத மோதல்கள்
மக்களவைத் தேர்தல் வாக்குப் பதிவு முடிந்து புதிய அரசு பொறுப்பேற் றவுடனேயே நாட்டில் பல்வேறு பகுதி களில் ஏராளமான வகுப்புவாத வன் முறைகள் நிகழ்ந்துள்ளன. குஜராத், மகாராஷ்டிரம், உ.பி., கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் வகுப்புவாத மோதல் கள் நடந்துள்ளதாக தகவல்கள் கூறு கின்றன. புனேயில் இந்து ராஷ்டிர சேனை என்ற அமைப்பைச்சேர்ந்தவர் களால் இளம் இஸ்லாமிய மென் பொருள் பொறியாளர் படுகொலை செய் யப்பட்டுள்ளார். சிறுபான்மை மக்களை பழிவாங்கும் வெறியுடன் இத்தகைய வகுப்புவாதத் தாக்குதல்கள் நிகழ்த்தப் படுகின்றன. இத்தகைய தாக்குதல் களை மத்தியக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. அனைத்து வகையான வகுப்புவாதத்தையும் கண்டிக்கும் அதே நேரத்தில் சிறுபான்மை சமூக மக்களை பாதுகாப்பதற்கான போராட் டங்களையும் கட்சி நடத்தும்.
பெண்களுக்கு எதிராக அதிகரிக்கும் குற்றங்கள்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக் கெதிராக அதிகரித்து வரும் பாலியல் ரீதியான குற்றங்கள் பெரும் கவலையை ஏற்படுத்துவதோடு பெண்கள் பாது காப்பாக வாழ்வதற்கான நாடு தானா இந்தியா என்ற கேள்வியையும் எழுப்பு வதாக உள்ளது. பதானில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படு கொலை செய்யப்பட்ட கொடூர நிகழ்வுக ளில் கூட குற்றவாளிகள் மீது நடவடிக் கை எடுப்பதற்கான அரசியல் உறுதி அரசுகளுக்கு இல்லை. உ.பி மாநிலம் காவல்துறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சட்ட மீறல்கள் ஏற்பட் டுள்ளதை தடுக்க உ.பி. மாநில அரசு தவறிவிட்டது.
சிறுமிகள் பாலியல் ரீதியாக படுகொலை செய் யப்பட்ட கொ டூர சம்பவத்திலும் கூட சமாஜ்வாதி கட்சியின் உயர்மட்ட தலைவர்களின் முரண்பட்ட கருத் துக்கள், இத்தகைய வழக்குகளை விசாரிக்கும் காவல் துறையின் அலட்சி யத்தை அங்கீகரிப் பதாக அமைந்துள் ளது. ராஜஸ்தான் மாநிலத்திலும் பெண் களுக்கெதிரான பாலியல் ரீதியான தாக்குதல்கள்அதிகரித்துள்ளன.முதல் வரின் சொந்தத் தொகுதியில் கூட பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநில உள்துறை அமைச்சர்கள் பெண் களுக்கெதிரான பாலியல் தாக்குதல் கள் குறித்து வெளியிட்டுள்ள கருத்துக் கள் அதிர்ச்சியளிக்கின்றன.
இந்த மாநி லங்களில் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் பெண்களுக்கு நீதி கிடைப் பதற்கான வாய்ப்பு உண்டா? என்ற அச்சத்தை எழுப் புவதாகவும் இவர்கள் கருத்துக்கள் உள்ளன. மேற்குவங்கத் திலும் பெண்களுக்கெதிரான தாக்கு தல்கள்அதிகரித்தவண்ணமேஉள்ளன.சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் தவறிழைப்போர்கள் மீது உறுதியான, கடுமையான நடவடிக்கைகள் எடுப்ப தன் மூலம் பெண்களுக்கெதிரான கொ டுமைகளை சகித்துக் கொள்ள முடி யாது என்பதை நிலைநாட்ட வேண் டும்.
(ஐஎன்என்)
உடமைகளை விற்றால் தான் உயிர்பிழைக்க முடியும்
கே.சி.கோபிகுமார்
சமீபத்தில் பெங்களூருவில் மத்திய ரசாயனத்துறை அமைச்சர் அனந்தகுமார் இந்திய நாட்டின் மக்கள் நலன் பராமரிப்பில் தனியாரின் பங்கு அதிகரிக்கப்படும் என்று கூறியுள்ளார். ஏற்கெனவே இந்திய நாட்டு மக்களுக்கு மருத்துவ வசதி எட்டாக்கனியாக்கப்பட்டு கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களிடம் சிக்கி மக்கள் நலன் என்பது வியாபார பொருளாக மாற்றப்பட்டுள்ளது.இந்திய நாட்டின் ஓர் சாதாரண குடும்பம் தனது பொருளாதாரத்தில் பெரும் பகுதியை சுகாதார நலனுக்காக செலவிழக்கும் நிலை உள்ளது.
அதாவது மருத்துவம், மருந்துகள், சுகாதாரம் போன்றவற்றிக்கு செலவழித்து வருகின்றனர். மருத்துவமும், சுகாதாரமும் போன்ற அடிப்படை வசதிகளை ஆட்சியாளர்கள் தங்களது மக்களுக்கு செய்துதர வேண்டிய கடமையாகும். அதாவது சுகாதார நலன் பயப்பவை, பாதுகாக்கப்பட்ட குடிநீர், சத்தான, சீரான உணவு, தரமான மருத்துவ சேவை செய்வது அரசின் கடமையாகும். ஆனால், நமது நாட்டில் இவை அனைத்தும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டு மக்களின் பணத்தை கொள்ளையடிக்கப்பட்டு வருகிறது.அரசு தனது மக்களுக்கு நோய் வராமல் தடுத் திட நோய் குணப்படுத்தும் முறைகளை அமல்படுத்தி நடைமுறைப்படுத்த வேண்டும். நமது ஆட்சி யாளர்கள் இதை செய்யத் தவறியதால் 40 சதவீத குழந்தைகள் ஊட்டச்சத்து மற்றும் சத்தான உண வின்றி நோய்வாய்ப்பட்டு வருகின்றனர்.
69 சதவீத மக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலை உள்ளது. இதனால் பல வகையான நோய்கள் பரவி வருகிறது. கிராமப்புறங்களில் 30சத மானத்திற்கும் குறைவானவர்கள் பாதுகாக்கப்பட்ட குடிநீர் இன்றி அவதிப்பட்டு வருகின்றனர்.1990 முதல் ஆட்சியாளர்கள் அமல்படுத்திய தாராளமய, உலகமய கொள்கைகளின் விளைவு, புற்றீசல்கள் போன்று பல்லாயிரக்கணக்கான மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. பயிற்சி பெற்ற தரமான ஆசிரியர்கள் இல்லாமல், உரிய கட்டமைப்பு இல்லாமல் பல நூற்றுக்கணக்கான மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதனால் நமது நாட்டில் பல்லாயிரக்கணக்கான அப்பாவி நோயாளிகள் பணம் செலவழித்தும் தரமான சிகிச்சை இல்லாமல் இறந்து வருகின்றனர்.
மேலும் ஓர் அதிர்ச்சியான தகவல் என்னவெனில் `இங்கிலாந்து அரசு நமது நாட்டு மருத்துவர்கள் போதுமான பயிற்சி, தரம் இல்லாத காரணத்தினால் இந்தியாவிற்கு திரும்பி அனுப்பியுள்ளது’.ஆட்சியாளர்கள் கடைப்பிடிக்கும் மோசமான தாராளமய மற்றும் உலகமயக் கொள்கையின் காரணமாக மீண்டும் மலேரியா, டெங்கு பயிலேரியா போன்ற நோய்கள் பரவி வருகிறது. அதுமட்டுமல்ல இந்த கொள்கையின் பரிசாக பறவைக் காய்ச்சல், எச்ஐவி மற்றும் எயிட்ஸ் நோய்கள் வேகமாக பரவி வருகிறது.
உலகத்தில் காசநோயால் அவதிப்படும் நோயா ளிகளில் 21 சதவீதமும், தொழுநோய், மலேரியா 56 சதவீதமும், 40 சதவீதம் வாந்திபேதி போன்ற நோய்களால் அவதிப்படுவோர் இந்தியர்கள் ஆவர். இவைஅனைத்திற்கும் காரணம் இதுநாள் வரை ஆட்சியாளர்கள் கடைப்பிடித்த மோசமான கொள்கை களாகும். அதே கொள்கைகளைத்தான் தற்போது மோடி சர்க்கார் கட்டவிழ்த்துவிட முயற்சிக்கிறது.நமது நாட்டின் 69கோடி மக்களுக்கு அத்தியா வசிய மருந்துகள் மற்றும் மருத்துவசேவை கிடைக்கவில்லை. ஆனால் இந்தியா உலகத்தில் மருந்து உற்பத்தியில் 3வது இடத்தை பிடித்துள்ளது. 200 நாடுகளுக்கு மருந்து, மருத்துவ சாதனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்திய நாட்டின் தொழிலாளி வர்க்கத்தால் வளர்க்கப்பட்ட மருந்து துறையில் ஆட்சியாளர்கள் 100சதவீத அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டு மக்களின் நலனை ஆட்சியாளர்கள் அடகு வைத்துள்ளனர். நமது நாட்டு மருந்து நிறுவனங்களான சுஹசூக்ஷஹஓலு, னுஹக்ஷருசு, ஞஐசுஹஆஹடு, ஞஹசுஹளு, ஊகுடு, ருசூஐஏநுசுளுஹடு, ஆநுனுஐஊஹசு, ளுஹசூகூழஹ க்ஷஐடீ கூநுஊழ போன்ற நிறுவனங் களை பன்னாட்டு பகாசுர கம்பெனிகள் கபளிகரம் செய்துள்ளது. இதன் விளைவாக மருந்து துறையில் ஏகபோகம் ஏற்பட்டு மருந்து விலைகள் மற்றும் மருத்துவசேவை கட்ட ணங்கள் பல மடங்கு உயர்ந்துள்ளது.சாதாரண மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைகளுக்கு உள்ளே சென்றால் உயிர் பிழைத்து வருவதென்பது அரிது.
தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் தனது உடமை களை விற்றால்தான் உயிர் பிழைக்க முடியும் என்றசூழல் உள்ளது. தனது தினக்கூலி, மாத சம்பளம் நம்பிவாழும் முறைசாராத் தொழிலாளி, நடுத்தரக் குடும்பத் தினருக்கு புற்றுநோயோ அல்லது ஈரல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டால் அவர்களது நிலைமை நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. இந்த நோய்களுக்கான சிகிச்சையின் செலவு என்பது பல லட்சங்களாகும். புற்றுநோய் சிகிச்சைக்கு குறைந்தபட்சம் ரூ.2 லட்சத்திலிருந்து 3லட்சம் ஆகும். ஈரல் அழற்சி நோயிக்கான மருந்துகளின் செலவு மட்டுமே ரூ.3.60லட்சமாகும். இப்படி மருத்துவ செலவிற்கு மட்டுமே அதிக அளவில் செலவு செய்யவேண்டிய நிலையில் மக்களைஅரசு தள்ளிவிட் டுள்ளது.
மோடி தலைமையிலான புதிய அரசு அமெரிக்க கொள்கைகளை பின்பற்றாமல் சீனா, ஜெர்மனி, இலங்கை, மலேசியா, பிரேசில், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளின் சுகாதாரக் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.ஜெர்மனி அரசு தனது நாட்டு மக்கள் தொகை யில் 99 சதவீதமான மக்களுக்கு சமூக நலன் காப் பீடு திட்டத்தில் இணைத்து அனைவருக்கும் இலவசமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மக்கள் சீன அரசு மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளித்து அடிப்படை வசதிகளான பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிடம், சீரான சத்துணவு, பெண்களுக்கான ஊட்டச்சத்து உணவு, சுகாதார நன்முறைகளை எவ்வாறு கடைப்பிடிப்பது போன்றவற்றை தனது மக்களுக்கு இலவசமாக செய்து வருகிறது.
மக்கள் நலனில் அக்கறை கொண்டு ஏற்கனவேமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியது போன்று உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3சதவீதம் சுகா தார மேம்பாட்டிற்காக மத்திய அரசு ஒதுக்கிட வேண்டும். அதுமட்டுமல்ல ஏற்கெனவே திட்டக்குழு 12வது திட்ட காலத்திற்கு 10.8 லட்சம் கோடி ஒதுக்கிட வேண்டுமென்று பரிந்துரைத்தது. அதில் கடந்தஆட்சியாளர்கள் 40 சதவீதம் கூட ஒதுக்கவில்லை. மோடி அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டு, மக்கள் விரோதக் கொள்கைகளை தவிர்த்து,கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வெஞ்சாமரம் வீசாமல் மக்கள் நலன்களை பாதுகாக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்!

Tuesday, May 27, 2014

உலக பாரம்பரியச் சின்னம் பட்டியலில் சேர்க்க திட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் தொல்லியல் துறையினர் ஆய்வு



குழித்துறை, மே 27-உலக பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் சேர்ப்பதற்காக பத்மநாபபுரம் அரண்மனையில் தொல்லியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே 500 ஆண்டுகள் பழமையான பத்மநாபபுரம் அரண்மனை உள்ளது. முழுவதும் தேக்கு மரத்தால் கட்டப்பட்ட இந்த அரண்மனை கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது.பத்மநாபபுரம் அரண்மனை மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் உள்ள இடைகல் குகை ஆகியவை உலக பாரம்பரிய நினைவு சின்னங்களின் வரைவுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆவணங்களை தயார் செய்து ஒப்படைக்கும் பணிக்காக கேரள கலா மண்டலம் பல்கலைக்கழக துணை வேந்தர் சுரேஷ் தலைமையில் சிறப்பு அலுவலர் எலிசபெத் மற்றும் ஊழியர்கள் கொண்ட தனிக்குழு கேரள அரசால் அமைக்கப்பட்டுள்ளது. அரண்மனை குறித்த விவரங்கள், படங்கள், வரைபடம் அடங்கிய ஆவணங்களை தயார் செய்யும் பணிகளை இந்தக்குழு தொடங்கியுள்ளது.
இப்பணிகளை இந்த குழுவினர் அரண்மனையில் தங்கியிருந்து மேற்கொள்ள உள்ளனர்.இதுகுறித்து தொல்லியல் துறை இயக்குநர் பிரேம்குமார் கூறுகையில், “கேரள அரசின் முயற்சியால் இந்த பணிகள் நடந்து வருகிறது. 5 மாதங்களுக்குள் இந்த பணிகள் நிறைவு பெற்று ஆவணங்கள் தயார் செய்யப்படும். அதை தொடர்ந்து ஆவணங்கள் யுனெஸ்கோவிடம் தாக்கல் செய்யப்படும். மேலும் அரண்மனையின் முன் காலியாக உள்ள பகுதியில் டிக்கெட் கவுண்டர், வரவேற்பு அறை, காவலர் அறை, தகவல் மையம் மற்றும் சுற்றுலா பயணிகள் ஓய்வுக்கான இடம் ஆகியவற்றை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்

Wednesday, May 21, 2014

தோழர் ஆர். உமாநாத் தனிச்சிறப்புமிக்க கம்யூனிஸ்ட்
பிரகாஷ் காரத்

தோழர் ஆர்.உமாநாத் தனது 93வது வயதில் திருச்சியிலுள்ள மருத்துவமனை ஒன்றில் காலமானார். மார்க்சிய, லெனினிய கோட்பாட்டை முழு அர்ப்பணிப்புடன் ஆழ்ந்து பயின்று ஒரு கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர் எவ்வாறு தொழிலாளர் வர்க்க இயக்கத்தை கட்டி வளர்ப்பவராக பரிணமிக்க முடியும் என்பதற்கு தோழர் உமாநாத் ஒரு தனித்துவம் மிக்க உதாரணமாகும்.ஆலைத் தொழிலாளர்களை ஒன்றுபடுத்துபவராக தன்னுடைய அரசியல் வாழ்வைத் துவக்கிய ஆர்.உமாநாத். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த முன்னணித் தலைமுறையைச் சேர்ந்தவர். அவருடைய 70 ஆண்டு கால அரசியல் வாழ்க்கை என்பது உழைக்கும் வர்க்க இயக்கத்துடன் மிக நெருங்கிய தொடர்புடைய ஒன்றாக இருந்தது.
மார்க்சிய லெனினியத்தின் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையின்பாற்பட்டது அவருடைய இயக்க வாழ்க்கை. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் சென்னை ராஜதானியின் கீழிருந்த காசர்கோட்டில் கொங்கணி மொழி பேசும் குடும்பம் ஒன்றில் ஆர்.உமாநாத் பிறந்தார். கோழிக்கோட்டில் அவர் பள்ளிப்படிப்பு பயின்றுகொண்டிருந்த போது விடுதலைப்போராட்ட இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார். அதன்பின் இடதுசாரி இயக்கத்தால் நடத்தப்பட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம் அவரை ஈர்த்தது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு உயர்படிப்புக்காகச் சென்ற அவர் அந்த வளாகத்தில் இயங்கி வந்த கம்யூனிஸ்ட் குழுவில் இணைந்தார். 1939ம் ஆண்டு கம்யூனிஸ்ட் கட்சி ரகசியமாக இயங்கிவந்தபோது அவர் தனது கல்வியைத் துறந்து கட்சியின் உறுப்பினரானார். இந்த முடிவுதான் இளம் மாணவராக இருந்த அவரை போர்க்குணம் மிக்க புரட்சிகர போராளியாக மாற்றியது.
அன்றைய கம்யூனிஸ்டுகளைப் போன்று ஆர்.உமாநாத்தும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் சிறையில் அடைக்கப்பட்டார். அந்தக்காலத்தில் அவர் தலைமறைவாகவும் வெளிப்படையாகவும் கட்சிப்பணிகளில் ஈடுபட்டார். கோயம்புத்தூரில் ஆலைத் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றிய அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 1948ம் ஆண்டு அவர் கோவை சிறையிலிருந்து தப்பினார். திருச்சியில் செயல்பட்ட ரயில்வே தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்களில் அவர் இணைந்து பணியாற்றினார். 1950களில் தமிழகத்தில் வலிமைமிக்க தொழிற்சங்கத் தலைவராக ஆர்.உமாநாத் உருவானார்.
தோழர் ஆர்.உமாநாத் கிளர்ச்சியூட்டக்கூடிய வகையில் உரையாற்றும் வல்லமைமிக்க மிகச்சிறந்த பேச்சாளர். தனித்துவமிக்க மூத்த தலைவரான தோழர் பி.ராமமூர்த்தி போன்று தோழர் ஆர்.உமாநாத்தும் தமிழிலும், ஆங்கிலத்திலும் எழுச்சிமிக்க பேச்சாளராக உருவானார். நான் கட்சியில் சேர்ந்த காலத்தில் தோழர் உமாநாத் கட்சிப் பொதுக்கூட்டங்களிலும் தொழிற்சங்கக் கூட்டங்களிலும் ஆற்றிய உரைகள் என்னிடம் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. 1962 மற்றும் 1967ம் ஆண்டு புதுக்கோட்டை தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட அவர், நாடாளுமன்றத்தில் கம்யூனிஸ்ட் குழுவின் சார்பாக ஆற்றல்மிக்க தலையீடுகளை நிகழ்த்தினார்.
1977 மற்றும் 1980ல் தமிழக சட்டப்பேரவைக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தைப் போன்றே சட்டமன்றத்திலும் அவருடைய செயல்பாடு மிகச்சிறப்பாக அமைந்தது. ஒரு கம்யூனிஸ்ட் நாடாளுமன்றவாதி எவ்வாறு செயல்படவேண்டும் என்பதற்கு உதாரணமாக அவர் திகழ்ந்தார். கட்சி மையத்தில் இணைந்து பணியாற்றிய அவர், 1995ம் ஆண்டு சண்டிகரில் நடைபெற்ற 15வது அகில இந்திய மாநாட்டில் அரசியல் தலைமைக்குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டார். தொழிலாளர் வர்க்க போராட்டங்களில் ஈடுபட்டு செறிவான அனுபவத்தைப் பெற்றிருந்த அவர், மார்க்சிய அணுகுமுறையை பயன்படுத்தி கம்யூனிஸ்ட் கட்சியை கட்டி வளர்த்ததில் வல்லவராக திகழ்ந்தார். அவர், தொழிலாளர் வர்க்க இயக்கத்தை கட்டி வளர்க்கும் தலைவராகவும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத்தின் திறம்பட செயலாற்றும் தலைவராகவும் விளங்கினார்.
அவருடைய இந்த அனுபவம் கட்சியின் அகில இந்திய மையத்தில் ஸ்தாபன மற்றும் அரசியல் பணிகளை நிறைவேற்றுவதில் பெரும் உதவியாக அமைந்தது.கட்சித்திட்டத்தை மேம்படுத்தும் பணியின்போது கட்சியின் அரசியல் தலைமைக்குழு மற்றும் மத்தியக்குழுவில் நடைபெற்ற உள்கட்சி விவாதத்தில் அவருடைய பங்களிப்பு மகத்தானதாக அமைந்திருந்தது. 2000ம் ஆண்டில் கட்சித்திட்டம் மேம்படுத்தப்பட்டபோது அவருடைய மார்க்சிய ஞானம் பல்வேறு அணுகுமுறைகளை உருவாக்குவதற்கு பேருதவியாக அமைந்தது. உள்கட்சி விவாதங்களின்போது தன்னுடைய கருத்துக்களை வெளிப்படையாகவும் அனுபவ அறிவோடும் வெளிப்படுத்துபவராக அவர் அறியப்பட்டிருந்தார். தனக்கு தவறென்று படும் விஷயங்களில் அவர் தன்னுடைய விமர்சனத்தை பகிரங்கமாக முன்வைப்பார்.
இந்த விமர்சனத்தால் யார் பாதிக்கப்படுவார்கள் என்பது குறித்து அவர் கவலைப்படமாட்டார். அதேநேரத்தில் ஜனநாயக மத்தியத்துவம் என்ற கோட்பாட்டிற்கு உட்பட்டு செயல்பட்ட அவர் இத்தகைய விஷயங்களை கட்சி அமைப்புகளுக்கு வெளியில் ஒருபோதும் பேசமாட்டார். 10 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி மையத்தில் அவரோடு இணைந்து பணியாற்றும் நல்வாய்ப்பு எனக்குக்கிட்டியது. அனைத்து அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களும் மத்தியக்குழு உறுப்பினர்களும் பல்வேறு அரசியல் நிலைபாடுகளில் அவர் முன்வைக்கும் கருத்துக்களை கவனமாக எடுத்துக்கொள்வார்கள். பல்வேறு சர்வதேச தேசிய அரசியல் நிகழ்வுகளில் உறுதியான வர்க்க நிலைப்பாட்டின் அடிப்படையில் அவர் தனது கருத்துக்களை முன்வைத்தார்.
தோழர் உமாநாத் சொந்த அபிலாஷைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு தலைவர். தன்னுடைய கடைசிக் காலம் வரையிலும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருக்கான ஓய்வூதியத்தை கட்சியிடம் முழுமையாக கொடுத்துவிட்டு கட்சி கொடுத்த ஊதியத்திலேயே வாழ்க்கையை நடத்தியவர். அவரும் அவரது துணைவியார் பாப்பா உமாநாத்தும் கட்சிக்காகவே தங்களை அர்ப்பணித்துக் கொண்டு எண்ணற்ற தியாகங்களை செய்தவர்கள். கட்சியின் முழுநேர ஊழியர்களாக செயல்பட்ட இருவரும் தங்களது இல்வாழ்க்கையை அதற்கேற்பவே அமைத்துக்கொண்டனர். தங்களது மகள்களையும் அரசியல் அர்ப்பணிப்பு கொண்டவர்களாக வளர்த்துள்ளனர்.
அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது என்ற செய்தி கிடைத்தவுடன் மே 15ம் தேதி திருச்சிக்குச் சென்று அவரை நான் சந்தித்தேன். அப்போது சுய நினைவுடன் அவர் இருந்தார். “உங்களைச் சந்திப்பதற்காகவே நான் திருச்சிக்கு வந்துள்ளேன்“ என்று அவரிடம் கூறியபோது புன்னகைத்த அவர், “ஆபத்தில் உதவுபவன்தான் அருமை நண்பன்“ என்ற பழமொழியை கூற நினைத்து “ஆபத்தில் உதவும் நண்பன்“ என்பதை மட்டும் கூறினார். நமது நேசமிக்க தோழரை இழந்து ஆழ்ந்த துயர் கொள்கிறோம். அதே நேரத்தில் தன்னிகரற்ற கம்யூனிஸ்ட்டாக திகழ்ந்த அவர் கட்சிக்கும், தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கும் அளித்துள்ள மகத்தான பங்களிப்பை நினைவு கூர்கிறோம்.
தொழிலாளர்களுக்காக சிம்ம கர்ஜனை செய்தவர்
சிஐடியு தமிழ் மாநிலக்குழு புகழஞ்சலி!


தோழர் வி.பி.சிந்தனுடன் ஆர்.உமாநாத் (கோப்பு படம்)/ தோழர் ஆர்.உமாநாத் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில்சிஐடியுவுடன் இணைக்கப்பட்ட அனைத்து சங்கங்களும் செங்கொடி தாழ்த்திமூன்றுநாள் துக்கம் கடைப்பிடிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன், பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் ஆகியோர் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில் கூறப் பட்டுள்ளதாவது:சிஐடியுவின் முதுபெரும் தலைவர் ஆர். உமாநாத் அவர்களின் மறைவிற்கு சிஐடியு தமிழ் மாநிலக்குழு செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது.உமாநாத் என்ற உன்னதத் தலைவரின் பாதை, பயணம் ஒரு மகத்தான மனிதரின் ஜீவ சரித்திரம் ஆகும். நாட்டை ஆண்ட பண்டித நேரு, ராஜாஜி, காமராஜ், அண்ணா போன்ற தலைவர்களுக்கெல்லாம் தோழர் உமாநாத் நன்கு அறிமுகமானவர். கல்லூரி படிப்பின் போது சுப்ரமணிய சர்மா, பி.கிருஷ்ணப் பிள்ளை போன்ற தலைவர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. வர்க்கப் போராட்டத்தை ஆலை யில், தெருவில், நடத்துவது எப்படி? சட்ட மன்றத்தில், நாடாளுமன்றத்தில், நீதிமன்றத் தில், சிறைச் சாலையில் நடத்துவது எப்படி? இவை அனைத்திலும் உமாநாத் சுடர்விட்டு பிரகாசித்தார்.தோழர் உமாநாத் இந்திய நாடாளுமன்றத் திலும், சட்டமன்றத்திலும் உழைப்பாளிகளின் உரிமைகளுக்காக சிம்ம கர்ஜனை செய்த வர். பல தொழிலாளர் நலச் சட்டங்கள் உருவாவதற்கு இவரது போராட்டம் உதவியது. ஆலை பிரச்சனை முதல் உலக பிரச்சனை வரை பொதுமக்களுக்கு புரியும் வகையில் பேசி புரிய வைப்பதில் இவர் நிகரற்றவர்.
சக போராளியாக
உமாநாத் வாழ்க்கையில் தோழர் பாப்பா உமாநாத்தின் பங்கு மகத்தானது. மனைவியாக, நல்ல தோழராக, சகபோராளியாக வாழ்ந் தவர். 1970ம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற ஸ்தாபன மாநாட்டில் அகில இந்திய நிர்வாகி யாகவும், முதல் மாநாட்டிலிருந்து மாநில பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு 1993ம் ஆண்டு வரை அப்பொறுப்பில் திறம்பட செயல்பட்டார்.உமாநாத் நடத்திய உண்ணாவிரதப் போராட்டங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. பெரும் வெற்றிகளை ஈட்டியவையாகும். இரண்டு வாரம், மூன்று வாரம், நான்கு வாரம் என்று அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். உயிர்போகும் நிலைவரினும் கோரிக்கைகள் நிறைவேறாமல் அவர் போராட்டத்தை வாபஸ் பெற்றதே இல்லை.புதுக்கோட்டை கணபதி மில், நமன சமுத் திரம், புகளுர், டால்மியா சிமெண்ட் ஆலையில் அவர் நடத்திய உண்ணாவிரதப் போராட்டங்கள் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியதுடன் பெரும் வெற்றியும் பெற்றன.புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை குத்தகை விவசாயிகளுக்கு பெற்று தந்ததில் தோழர் உமாநாத் பங்கு மகத்தானது.
சிரமங்களுக்கு மத்தியிலும்...
ஒன்றுபட்ட கோவை மாவட்டத்தில் பஞ்சாலைகளில் பணிபுரியும் பல்லாயிரக்கணக் கான தொழிலாளர்களின் சட்ட சலுகை களையும், உரிமைகளையும் பெறுவதற்கு தோழர் பி.ராமமூர்த்தி மற்றும் கே.ரமணி இவர்களோடு இணைந்து வழிகாட்டி, வெற்றி கரமான வேலை நிறுத்தங்களை நடத்தி காட்டியவர் தோழர் உமாநாத்.தொழிலாளர்களை திரட்டிட சென்ற உமாநாத்துக்கோ எல்லாமே சவால். பணம் கிடையாது. முழுநேர ஊழியர் சம்பளம் என்பது கிட்டதட்ட கிடையாது. படுக்கப் பாய் கூட பிரச்சனை தான். சாப்பாட்டு சிரமம் கேட்கவே வேண்டாம். கிட்டத்தட்ட அரைப்பட்டினி. இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியிலும் தொழிற்சங்கப் பணி வேகமாக நடந்தேறியது.
கடும் அடக்குமுறைகளை சந்தித்தவர்
சங்கம் உருவாவதை விரும்பாத முத லாளிகளும் - சுயநலமி சங்கங்களும் ரவுடிகளை ஏவி தாக்குதல் தொடுப்பது சர்வ சாதா ரண நிகழ்ச்சிகளாகிவிட்டன. போலீசாரும் முதலாளிகளுக்கும், ரவுடிகளுக்கும், துணை நின்றனர். தொழிலாளர்களின் பிரச்சனைகளை, உணர்வுகளை, புரிந்து கொள்வது என்பது மிக சிரமம். அதற்கு அவர்களோடு பேச வேண்டும், மனம் திறந்து பேச வேண்டும். உமாநாத்திற்கோ ஆங்கிலமும், மலையாளமும் தெரியும். தமிழில் சரளமாக பேச வராது. தமிழ் தெரியாமல் உழைப்பாளிகளிடம் பணியாற்ற இயலாது. எனவே சுயகல்வி மூலமும், தொழிலாளர்கள் துணையுடனும் தமிழ் கற்க துவங்கினார். தோழர் கே.ரமணி விடுதலை ஆன பின் அவருடன் பங்கேற்ற ஆலைவாயிற் கூட்டங்களும், ஊழியர் கூட்டங்களும் உமாநாத்திற்கு தமிழ் பயிற்சி அளித்தன.செங்கொடி இயக்கத்தின் கடுமையான முயற்சியின் பயனாக கோவை நகரம், பாப்ப நாயக்கன் பாளையம், லட்சுமி மில், திருப்பூர் நகர மில்களில் செங்கொடி இயக்கம் வலுவாக வேரூன்றியது. இத்தொழிலாளர்களை வென் றெடுக்கும் பணியில் உமாநாத் தனியாளாக அல்ல: ஒரு படையாக செயல்பட்டார். முன்அனுபவம் ஏதுமற்ற உமாநாத் சுயமாக தொழி லாளர் பிரச்சனை, உணர்வுகள் இவற்றைக் கற்று ஊழியர்களை திரட்டி தொழிற்சங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டது பெரும் சாதனை!
காவேரி மில் போராட்டம்
புதுக்கோட்டை காவேரி மில்லில் கடும் வேலைப்பளுவால் உழைப்பாளிகள் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தனர். முதுகெலும்பு முறியும் வேலைப்பளுவால் நொந்து போயிருந்த தொழிலாளர்கள் உள்ளிருப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். நிர்வாகம் கத வடைப்பு செய்தது. தொழிலாளர்கள் வெளியேற மறுத்தனர். அவர்களை வெளியேற்ற போலீஸ் ஆலைக்குள் நுழைந்தது. மோதல் உக்கிரமானது. தடியடி பலரின் மண்டையை பிளந்தது. கதவடைப்பை எதிர்த்து தொழிலாளி - விவசாயி சகோதர ஆதரவு திரட்ட உமாநாத் பம்பரமாக சுழன்றார். தினசரி ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. அதைத்தொடர்ந்து அணிதிரட்டப்படாத பீடித் தொழிலாளர் மத்தியில் பணியாற்ற அவர் களை போராட்டக் களத்திற்கு கொண்டு வந்தது உமாநாத்தின் செயல்திறனுக்கு மெருகூட்டியது.
பண முதலைகளை எதிர்த்து வெற்றி
1962ல் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியில் நடந்த தேர்தலில் உமாநாத்தை வேட்பாளராக கட்சி நிறுத்தியது. காங்கிரஸ் கட்சி சார்பில் பிரபல பஞ்சாலை முதலாளி நின்றார். 30,000 வாக்கு வித்தியாசத்தில் உமாநாத் வெற்றிபெற்றார். 1967ல் பிரபல தோல் ஆலை முதலாளி நாகப்ப செட்டியாரை காங்கிரஸ் நிறுத்தியது. இருப்பினும் மீண்டும் உமாநாத் வெற்றி பெற்றார். 1977-80 பின்னர் 80-84 என இருமுறை சட்டமன்ற உறுப்பினராகவும் உமாநாத் தேந்தெடுக்கப்பட்டார்.திருச்சியில் தோழர் உமாநாத் பங்கேற்று வழிநடத்திய போராட்டங்கள் எண்ணி லடங்கா! ஒவ்வொன்றும் ஒருபாடம் சொல்லும். ஒவ்வொன்றும் ஒரு காவியமாகும். 1990ம் ஆண்டு கருணாநிதி முதல்வர். ஊர் வலம் போகக்கூடாது, உண்ணாவிரதம் இருக்கக்கூடாது, ஆள் அரவமே இல்லாத சுடுகாடுகள் பக்கம் தான் போராட்ட ஆர்ப் பாட்டங்களெல்லாம் என்று வம்பு செய்தது போலீஸ். இதை மீறுவது என்பது சிஐடியு முடிவு. அண்ணாசாலையில் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க சிஐடியு முடிவு. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த அதிமுக ஆதரவு அளித்தது.
செங்கொடி தாழ்த்தி அஞ்சலி
இத்தகைய நெடும்வரலாற்றுக்கு சொந்தமான தோழர் ஆர். உமாநாத் அவர்களின் மறைவு தமிழக தொழிலாளி வர்க்கத்துக்கு மட்டுமல்ல இந்திய உழைப்பாளி வர்க்கத்துக்கு பேரழிப்பாகும்.அன்னாரை பிரிந்து வாடும் மகள்கள் உ.வாசுகி, உ.நிர்மலாராணி உள்ளிட்ட குடும்பத் தினர் அனைவருக்கும் சிஐடியு தமிழ் மாநிலக் குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.

Monday, May 5, 2014

சாண்டர்ஸ் வழக்கு முதல் தகவல் அறிக்கையில் பகத்சிங் பெயரே இல்லை

புதுதில்லி, மே 5-பகத்சிங் தூக்கிலிடப்பட்டு எண்பத்து மூன்று ஆண்டுகள் கழிந்தபின்னர், லாகூர் காவல்துறையினர் அனார்கலி காவல்நிலையத்தின் பதிவுருக்களை ஆராய்ந்து, பகத்சிங் வழக்குதொடர்பான ஒரிஜினல் முதல் தகவல் அறிக்கையைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.உண்மையில் அதில் பகத்சிங் பெயர் இல்லை.
1928இல் பிரிட்டிஷ் போலீஸ் ஆபிசரைக் கொன்றதாகப் பதிவு செய்யப்பட்டிருந்த முதல் தகவல் அறிக்கையில் பகத்சிங் பெயர் குறிப்பிடப்படவில்லை. பகத்சிங் தூக்கிலிடப்பட்டு 83 ஆண்டுகள் கழித்து, வீரப்புகழ் பெற்றவிடுதலைப் போராளியான பகத்சிங் இவ்வழக்கிற்கு சம்பந்தம் இல்லாதவர் என்பதும், குற்றமற்றவர் என்பதும் மெய்ப்பிக்கப்பட்டிருப்பது பகத்சிங்கின் புகழை மேலும் பன்மடங்குஉயர்த்தும் வண்ணம் அமைந்துள்ளது.பகத்சிங் நினைவு ஃபவுண்டேஷன் தலைவர் இம்தியாஸ் ரஷீத் குரேசி, பிரிட்டிஷ் காவல் கண்காணிப்பாளர் ஜான் பி சாண்டர்ஸ் கொல்லப்பட்ட வழக்கு சம்பந்தமாக, பகத்சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ஆகியோருக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் சான்றிட்ட நகலைக் கோரி மனுச் செய்திருந்தார். பகத்சிங் மேற்படி வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டு, 23 வயதாக இருக்கும்போதே, 1931இல் லாகூர்சாத்மான் சௌக் சிறையில் தூக்கிலிடப்பட்டார்.
அவர் தூக்கிலிடப்பட்டு 80 ஆண்டுகள் கழித்து, ஒரு நீதிமன்ற ஆணையின் கீழ் லாகூர் காவல்துறையினர் அனார்கலி காவல்நிலையத்தின் பதிவுருக்களை ஆராய்ந்து பார்த்து, சாண்டர்ஸ் கொல்லப்பட்டது சம்பந்தமாகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையைக் கண்டுபிடித்து விட்டார்கள். உருது மொழியில் எழுதப்பட்டிருந்த அந்த முதல் தகவல் அறிக்கைஅனார்கலி காவல் நிலையத்தில் 1928 டிசம்பர் 17 அன்று மாலை 4.30 மணிக்கு இரு `அடையாளம் தெரியாததுப்பாக்கி வைத்திருந்தவர்’ (‘unknown gunmen’)களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அனார்கலி காவல்நிலையத்தைச் சேர்ந்த ஒரு போலீஸ்காரர்தான் இதில்முறையிடுபவரும் கண்ணால் கண்டசாட்சியுமாவார். அவர், சாண்டர்ஸைத் துப்பாக்கியால் சுட்ட நபரை பின்தொடர்ந்ததாகவும், அவர்5 அடி 5 அங்குலம் உயரம் உடையவராகவும், இந்து முகத்தைக் கொண்டவராகவும், சிறிய மீசையுடன் காணப்பட்டதாகவும், ஒல்லியான மற்றும்வலுவான தேகத்தைப் பெற்றவராகவும், வெள்ளை பைஜாமாவும், சாம்பல் நிற குர்தா அணிந்திருந்ததாகவும், சிறிய கறுப்புநிறத் தொப்பி அணிந்திருந்ததாகவும் கூறியிருக்கிறார். நீதிமன்றம் மேற்படி முதல் தகவல் அறிக்கையின் நகலை குரேசிக்குக் கொடுத்திருக்கிறது.
குரேசி இது தொடர்பாக, பகத்சிங் மீதான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிபதிகள் அடங்கிய நடுவர்மன்றம் வழக்கில் 450 சாட்சிகள் பட்டியலிடப்பட்டிருந்தபோதிலும் அவர்களை விசாரிக்காமலேயே பகத்சிங்கிற்கும் மற்றவர்களுக்கும் மரண தண்டனை விதித்தது என்றும், பகத்சிங் சார்பில் வாதாடிய வழக்குரைஞர் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்ய வாய்ப்பே அளிக்கவில்லை என்றும் கூறினார். குரேசி, லாகூர் உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கை மீளவும் நடத்த வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருக்கிறார். “சாண்டர்ஸ் கொலை வழக்கில் பகத்சிங் அப்பழுக்கற்றவர் என்பதை நிறுவிட நான் விரும்புகிறேன்’’ என்று அவர் கூறினார்.லாகூர் உயர்நீதிமன்றம், இவ்வழக்கை விசாரிப்பதற்காக ஒரு விரிவான அமர்வாயத்தை அமர்த்தக்கோரி, தலைமை நீதியரசருக்கு அனுப்பி இருக்கிறது. (ந.நி)