Sunday, September 29, 2013

மதவெறி, பிரிவினை சக்திகளைத் தனிமைப்படுத்திடுவோம்!
தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன்சில் கூட்டத்தில் மாணிக் சர்க்கார் உரை

புதுதில்லி, செப். 29-நாட்டின் பல பகுதிகளி லும் இயங்கிடும் மதவெறி மற் றும் பிரிவினை சக்திகளைத் தனிமைப்படுத்திடுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலை மைக்குழு உறுப்பினரும் திரி புரா மாநில முதல்வருமான மாணிக் சர்க்கார் கூறினார்.
புதுதில்லியில் செப்டம்பர் 13 அன்று தேசிய ஒருமைப் பாட்டுக் கவுன்சிலின் 16 ஆவது கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று மாணிக் சர்க் கார் பேசியதாவது:‘‘நாட்டின் சில பகுதி களில் வகுப்புவாதக் கலவரங் கள் நடைபெற்றுக் கொண்டி ருக்கக் கூடிய தருணத்தில் தேசிய ஒருமைப்பாட்டுக் கவுன் சில் கூட்டம் கூட்டப்பட்டிக் கிறது. அங்கு ஏற்பட்டுள்ள நிலைமைகளை மதிப்பீடு செய்து, நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் மத நல்லிணக் கத்தை மீட்டெடுத்திட இக் கூட்டம் உரிய நடவடிக்கை களை மேற்கொள்ளும் என்று நம்புகிறேன்
.நம்முடைய நாடு, பல மொ ழிகள், பல கலாச்சாரங்கள், பல மதங்கள் எனப் பல்வேறு வேற் றுமைகளைக் கொண்ட ஒரு சமூகமாகும். நமக்கு நினைவு தெரிந்த காலம்தொட்டே, பல் வேறு சாதிகள், இனங்கள் மற் றும் மதங்களைச் சார்ந்த மக் கள், சமாதானமாகவும் நல் லிணக்கத்துடனும் ஒருங்கி ணைந்தும் வாழ்ந்து வந்திருக் கிறார்கள். சகிப்புத்தன்மை, சமாதான சகவாழ்வு மற்றும் உலகளாவிய சகோதரத்துவம் ஆகியவை நம் வளமான கலாச் சாரப் பாரம்பரியத்தின் கேந்திர மான அம்சங்களாகும்.
ஆயி னும், அவ்வப்போது இதற்கு ஊறுவிளைவிக்கக்கூடிய விதத்தில் நிகழ்ச்சிப்போக்கு களும் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கின்றன. அடிப் படைவாத மதவெறி சக்திகள் தங்கள் கோர முகங்களை நாட் டின் சில பகுதிகளில் தூக்கி யுள்ளன. பல மதங்களைக் கொண்ட நம்மைப்போன்ற ஒரு நாட்டில் சிறுபான்மை யினர் பாதுகாக்கப்பட வேண்டி யது அவசியம், எவ்விதமான மிரட்டலுக்கோ, அச்சுறுத்த லுக்கோ ஆளாகாமல் அவர்கள் தங்கள் மதநம்பிக்கைகளைப் பின்பற்றிட அவர்களுக்கு முழுப் பாதுகாப்பும் அளிக்கப் பட வேண்டியது அவசியம். தாங்கள் அவ்வாறு முழுப் பாது காப்புடன் இருக்கிறோம் என்று அவர்கள் முழுமனதுடன் உண ரக்கூடிய விதத்தில் அவர் களைப் பேணிப் பாதுகாக்க வேண்டியதும் அவசியம்.அனைத்து மதத்தினரும் அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் சம உரிமைகளைப் பெற் றிருக்கும் அதே சமயத்தில், மதப் பெரும்பான்மையினர், நாட்டின் மதச்சார்பின்மை என்னும் மாண்பைப் பேணிப் பாதுகாக்கக்கூடிய விதத்தில், மதச் சிறுபான்மையினர் பாது காப்புடன் வாழ்வதற்கான பொறுப்பினை, பெரும் அள வில் ஏற்றுக்கொள்ள வேண் டும்.
மதம் முழுமையாக ஒரு வரின் தனி விவகாரம். இதற்கு அரசின் ஆக்கமும் ஊக்கமும் தேவையே இல்லை. ஆனால். மதங்களுடன் தங்கள் சொந்த அரசியல் நலன்களை இணைப் பதுதான் மதவெறி வன் முறைக்குப் பிரதானமான மற் றும் முக்கியமான காரணங்க ளில் ஒன்றாகும். மத்திய அரசும், மாநில அர சுகளும் நாட்டில் மத வன் முறை வெறியாட்டங்கள் நடை பெற்றால் அவற்றிற்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுத் திட வேண்டும் என்று வலி யுறுத்துகிறேன். இதற்கு இப் போதுள்ள சட்டங்களே போது மானது. இச்சட்டங்களைப் பயன்படுத்தி ஆட்சியாளர்கள் தான் நடுநிலையோடு நின்று காலத்தே செயல்பட வேண் டும். மத வன்முறையில் ஈடு பட்ட கயவர்கள் தாங்கள் புரிந்த குற்றச் செயல்களிலிருந்து தப் பித்துச் செல்ல அனுமதித்தி டக் கூடாது.மத வன்முறை வெறியாட் டங்கள் நடைபெறும் சமயங் களில் இணையதளம் போன்ற புதிய தகவல் தொடர்பு சாத னங்கள் பிரச்சனைகளை சிக் கலாக்கிவிடுகின்றன. ஏனெ னில் பிரிவினை சக்திகள் இந்த சமயங்களில் சமூக வலைத் தளங்களின் மூலமாகத் பிற மதத்தினருக்கு எதிராகக் குரோ தத்தையும், வெறுப்பையும் பரப்புகின்றனர்.
இவ்வாறு புதிய சாதனங்கள் துஷ்பிர யோகம் செய்யப்படுவது வலு வாகக் கண்காணிக்கப்பட வேண்டும்.பிற மதத்தினருக்கு எதிராக வெறுப்பு மேலோங்கி இருத் தல், இன வன்முறைகள் மற் றும் இடதுசாரி அதிதீவிர வாதம் ஆகியவற்றை வெறும் சட்டம் - ஒழுங்கு பிரச்சனை யாக மட்டும் பார்க்கக் கூடாது. பணக்காரர்களுக்கும் ஏழை களுக்கும் இடையே ஏற்றத் தாழ்வுகள் மேலும் விரிவாகி ஆழமாகி அதிகமாகி இருப்ப தும் உணவு, உறைவிடம், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் போன்ற அடிப்படை வசதிகள் மக்களுக்கு மறுக்கப்படுவதும் சமூகத்தில் பதற்றத்தை உரு வாக்குவதற்கான முக்கியமான காரணிகளாகும். இவை மக்கள் மத்தியில் அந்நியமாதல் மற் றும் ஆற்றாமை உணர்வுகளை அதிகரிக்கின்றன.
இத்தகு சூழ்நிலையில்தான் பிராந்தி யங்களுக்கு இடையிலான மற்றும் மக்களின் அனைத்துப் பிரிவினருக்கு இடையிலான சமச் சீரின்மையை நீக்கிட வேண்டியது அவசியமாகும். சமூகத்தின் மிகவும் தாழ்த் தப்பட்ட நிலையில் வைக்கப் பட்டுள்ள தலித்துகள், பழங் குடியினர், நலிவடைந்த பிரி வினர் மற்றும் சிறுபான்மை யினர் நலன்களைப் பாதுகாத் திட, அவர்களை சமூகத்தில் உயர்த்திட உரிய ஆக்கப்பூர்வ மான நடவடிக்கைகளை எடுப் பதும் அவசியமாகும். நான் இப்போது வடகிழக்கு மாநிலங்களின் பிற்பட்ட நிலை மைகள் குறித்து கூற விரும்பு கிறேன். இப்போதும் கூட, வட கிழக்கு மாநிலங்கள் பொருளா தார வளர்ச்சிக்கு மிகவும் முக் கியமான அடிப்படைக் கட்ட மைப்பு வசதிகளில் மிகவும் பின்தங்கிய நிலையிலேதான் இருக்கின்றன.
இத்தகைய பின்தங்கிய நிலைமைகளை நீக்க வேண்டுமானால், சாலை, ரயில் மற்றும் விமானப் போக் குவரத்துகள், தொலைதகவல் தொடர்புகள், பாசன வசதிகள் மற்றும் மின்சாரம் ஆகிய வற்றை வட கிழக்கு மாநிலங் களுக்கு வழங்குவதற்கு அதிக முன்னுரிமை கொடுத்து திட் டங்களைத் தீட்டி அமல்படுத் திட வேண்டும். இவ்வாறு செய் வதன் மூலம் மட்டுமே இப்பகு திகளில் வாழும் மக்கள் மத்தி யில் தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிரிவினை சக்திகளைத் தனிமைப்படுத்த முடியும், மக்களிடம் உள்ள அந்நியமாதல் மற்றும் விரக்தி மனநிலையையும் போக்கிட முடியும். திரிபுரா கடந்த முப்பதாண் டுகளுக்கும் மேலாக ஆட் சிக்கு எதிராகக் கிளர்ச்சி செய் யும் பல்வேறு அமைப்புகளைக் கொண்டிருந்த வரலாற்றைப் பெற்ற மாநிலமாகும். ஆயினும் இவர்களைக் கட்டுப்படுத்து வதில் கணிசமான அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறோம். இதனை எவ்வாறு செய்ய முடிந்தது? இவர்களுக்கு எதி ராக உறுதியான நடவடிக்கை கள் எடுத்த அதே சமயத்தில், பழங்குடியினர் பகுதிகளில் மிகப்பெரிய அளவில் வளர்ச் சித் திட்டங்களையும் நிறை வேற்றினோம்.
இதன் காரண மாக பழங்குடியின இளைஞர் களைத் தீவிரவாத சக்திகளு க்கு இரையாவதிலிருந்து தடுக்க முடிந்தது. ஆயினும், இதில் நாங்கள் திருப்தி மனப் பான்மையுடன் இருந்துவிட முடியாது. ஏனெனில் இன்ன மும் அவர்கள் வங்கதேசத்தில் முகாம்கள் அமைத்துக் கொண்டு, ஐஎஸ்ஐ ஆதரவுடன் செயல் பட்டுக்கொண்டுதான் இருக் கிறார்கள். அனைத்து இனத்தைச் சேர்ந்த மக்களும் அமைதியை விரும்புபவர்கள்தான். ஆயி னும், சில சமயங்களில், சமூ கத்தின் சில பிரிவினர் அடிப் படைவாத மற்றும் பிரிவினை சக்திகளின் இழிவான நோக் கங்களுக்கு எளிதாக இரை யாகி விடுகிறார்கள்.
இத்த கைய அடிப்படைவாத சக்தி களிடம் தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகள் சற்றும் இரக்கம் காட்டக்கூடாது. இந்த சக்திகளுக்கு எதிராக தத்து வார்த்தரீதியிலும் அரசியல் ரீதி யிலும் மிகவும் ஆழமாகவும், திட்டமிட்ட முறையிலும் பிரச் சாரங்களை மேற்கொண்டு, நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் பாது காத்து, மேம்படுத்திட வேண் டும். அப்போதுதான் இத்த கைய பிரிவினை சக்திகள் மக் கள் மத்தியில் அம்பலப்பட்டு, தனிமைப் படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
(ந.நி.)
உலகைச் சுற்றி
கந்தக மலர்கள்...- எஸ்.பி.ராஜேந்திரன்

ஐ.நா. பொதுச் சபையில் உரையாற்றிய ஒபாமா.
தொடர்ந்து ஐந்தாவது முறையாக ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தில் பாரக் ஒபாமா கடந்த செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.‘அமெரிக்கா ஒரு தனித்துவமிக்க நாடு என்று நான் உறுதியாக நம்புகிறேன்; எங்களது நலனுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகின் நலனுக்காகவும், நாங்கள் ரத்தம் சிந்தி தியாகம் செய்வதற்கு தயாராக இருக்கிறோம்’ என்று மிகவும் உருக்கத்துடன் பேசினார்.
சிரியா விவகாரத்தில் ராஜிய ரீதியான பேச்சுவார்த்தைகளே தீர்வு என்றும், ஈரானுடன் கூட பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாண முடிவு செய்திருப்பதாகவும், தமது வெளியுறவு அமைச்சர் ஜான்கெர்ரி விரைவில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்றும் ஒபாமா, உலக நாடுகளின் தலைவர்களிடையே அறிவித்தார். மனித நேயம் பற்றியும், ஜனநாயகம் பற்றியும் உலகத் தலைவர்களுக்கு அவர் ஒரு வகுப்பே எடுத்துவிட்டார்.
‘நாங்கள் தனித்துவம் மிக்கவர்கள்’ என்று சில வாரங்களுக்கு முன்பு சிரியாவை தாக்கும் வெறியோடு இதே ஒபாமா வாஷிங்டனில் பேசினார். அப்போது அமெரிக்க மக்களுக்கு எழுதிய திறந்த மடல் வாயிலாக பதிலடி கொடுத்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமின் புடின், ‘இறைவனின் படைப்பில் உலக மக்கள் அனைவரும் சமமே; தனித்துவம் மிக்கவர்கள் என்று எவரும் இல்லை’ என்று கூறினார்.
சிரியா மீது அமெரிக்காவின் வெறித் தாக்குதலை தடுக்கும் பொருட்டு, ரசாயன ஆயுதங்களை கண்காணிக்க ஒப்புக் கொள்வது என சிரியாவிடம் பேசி, அமெரிக்காவையும் நிர்ப்பந்தித்தது ரஷ்யா. உள்நாட்டிலும், உலக நாடுகளிலும் மக்களிடையே அமெரிக்காவுக்கு எதிராக எழுந்த உணர்வலைகளையும், தனது சொந்த நாடாளுமன்றத்திலேயே எழுந்த கடும் எதிர்ப்பாலும் வேறுவழியின்றி சிரியா மீதான தாக்குதல் திட்டத்தை தற்காலிகமாக கைவிட்டது ஒபாமாவின் நிர்வாகம்.சிரியாவை தாக்குவதன் மூலம் ஈரானையும், அந்த போரில் இழுத்து அந்நாட்டையும் தாக்கி மிகப் பெரும் போராக மாற்றுவதே ஒபாமா நிர்வாகத்தின் திட்டமாக இருந்தது.
இதை உணர்ந்தே, ரஷ்யா உறுதியுடன் தலையிட்டது. நிர்ப்பந்தம் காரணமாக பின்வாங்கிக் கொண்ட அமெரிக்கா, சிரியாவுடன் மட்டுமல்ல, ஈரானுடனும் ராஜிய ரீதியாக பேச்சுவார்த்தை நடத்துவதே இப்போதைக்கு உகந்தது என்ற முடிவுக்கு வந்திருக்கிறது.ஓரிரு வாரங்களுக்கு முன்பு ஒட்டுமொத்த சிரியாவையும் கொடிய போர்மூலம் அழிக்கத் துடித்த ஒபாமா, ஐ.நா. சபையின் மைய மண்டபத்தில் நின்று கொண்டு திடீரென ஜனநாயகத்தையும், மனிதநேயத்தையும் பற்றி பேசியது மனமாற்றத்தின் காரணமாக அல்ல... உலகோரின் நிர்ப்பந்தம் காரணமாக!
ஆனால், மனிதநேயத்தையும், ஜனநாயகத்தையும் பற்றி பேசிய அதே ஒபாமா, ஒட்டுமொத்த உலகிற்கும் மிகப் பெரும் மிரட்டலையும் பகிரங்கமாக விடுத்தார்.“எங்களது அடிப்படையான நலன்களை மத்திய கிழக்கிலும், வடக்கு ஆப்பிரிக்காவிலும் பாதுகாக்கும் பொருட்டு, எங்களது அதிகாரத்தின் அனைத்து அம்சங்களையும் பிரயோகிப்பதற்கு தயாராக இருக்கிறோம்; தேவைப்பட்டால் ராணுவத்தையும் பயன்படுத்துவோம். அந்தப் பிரதேசத்திலிருந்து எரிசக்தி என்பது தங்குதடையின்றி கிடைக்க வேண்டும் என்பதே அடிப்படையானது” என்று ஒபாமா மிகத் தெளிவாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திட்டத்தை இதே ஐ.நா. சபைக் கூட்டத்தில் முன்வைத்தார்.
உண்மையில் இதுதான் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையின் அடிப்படை சாராம்சம். இதைத்தான் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க ஜனாதிபதிகள் உலக மேடையில் முன்வைத்து வருகிறார்கள். இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் 1992ல் சோவியத் ஒன்றியம் வீழ்ந்ததில் இருந்தே, தன்னை தட்டிக் கேட்க உலகில் எவரும் இல்லை என்ற அசாத்திய துணிச்சலோடு அமெரிக்க ஏகாதிபத்தியம் ஐ.நா. பொதுச்சபைக்கூட்டங்களில் தனது போர்த் திட்டங்களை முன்வைத்து வருகிறது.ஐசநோவரிலிருந்து, ஜிம்மி கார்ட்டரிலிருந்து, சீனியர் புஷ், ஜூனியர் புஷ் என வளர்ந்து இன்றைக்கு ஒபாமா வரையிலும் ஒவ்வொரு ஜனாதிபதியும், எங்களது சொற்படி கேட்காவிட்டால் அடிப்போம் என்று பகிரங்கமாகவே ஐ.நா. கூட்டங்களில் பேசுகிறார்கள்.
வெறும் பேச்சு மட்டுமல்ல... லெபனான் மீது தாக்குதல், 1991ல் வளைகுடா யுத்தம், 2001ல் ஆப்கானிஸ்தான் யுத்தம், 2003ல் இராக் யுத்தம், 2010 - 11ல் லிபியா யுத்தம்... இன்னும் எண்ணற்ற நாடுகளில் கணக்கிலடங்காத குண்டுவீச்சு தாக்குதல்கள் - என இந்த ஜனாதிபதிகளின் ‘தனித்துவம்’ லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்திருக்கிறது.ஒபாமாவின் இன்றைய இனிப்பான பேச்சிலும், அந்தப் பயங்கரம் ஒளிந்திருக்கிறது. சிரியாவையும், ஈரானையும் தாக்காமல், அந்தநாடுகளின் எண்ணெய் வளங்களோடு ஒட்டுமொத்த வளைகுடா பிரதேசத்தையும், எண்ணெய் வளத்தையும் கைப்பற்றாமல் ஏகாதிபத்தியத்தின் லாபவெறி அடங்கி விடாது. போர் என்பது அமெரிக்காவை பொறுத்தவரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.
அமெரிக்க பொருளாதார நெருக்கடி கீழே வேகமாக விழுந்து முட்டிமோதி, அதே வேகத்தில் லேசாக எழும்போது பெரும் முதலாளிகளின் லாபம் மீண்டும் எழுவதுபோல இன்றைக்கு காட்சியளிக்கிறது. மீண்டும் மிக விரைவாகவே அந்த லாபம் வீழ்ச்சியை நோக்கி பயணிக்கும். அப்போது மீண்டும் சிரியா மீதும், ஈரான் மீதும் போர்ப் பிரகடனத்தை செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தை அமெரிக்க ஆளும் வர்க்க ஆயுத வியாபாரிகள் ஏற்படுத்துவார்கள்.அதுவரையிலும் ஒபாமா ஜனநாயகம் பற்றியும், மனிதநேயம் பற்றியும் பேசுவதற்கு அவர்களால் பணிக்கப்பட்டிருக்கிறார்.
என்றாலும், இவருக்கு முந்தைய ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் ஐ.நா. சபையில் ஒரு கூட்டத்தில் பேசிவிட்டு சென்றபோது, அடுத்த நிமிடம் அதே இடத்தில் நின்று உரையாற்ற வருகை தந்த வெனிசுலாவின் மறைந்த மகத்தான தலைவர் சாவேஸ், ‘கந்தகத்தின்நெடி வீசுகிறது’ என்று ஜார்ஜ் புஷ்சின் போர்வெறியை நேருக்கு நேர் கடுமையாக விமர்சித்தார்.ஜனநாயகம் - மனிதநேயம் என்ற மலர்களோடு உரையாற்ற வந்திருந்தாலும், ஒபாமா அவர்களே, அந்த மலர்கள் கந்தகத்தில் தோய்த்து எடுக்கப்பட்ட கொடூரமான மலர்களாகவே காட்சியளிக்கின்றன!
தோழர் பி.சீனிவாசராவ் லட்சியத்தை முன்னெடுத்துச் செல்வோம்!
ஜி.ராமகிருஷ்ணன்

தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டை கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் போராட்ட அறிவிப்பு காரணமாக அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து தேநீர் கடைகளில் இரட்டை டம்ளர் முறை ஒழிந்தது. இதைத் தொடர்ந்து மகிழ்ச்சியுடன் தேநீர் அருந்திய தலித் மக்கள்
கடந்த ஜூலை 1 அன்று புதுதில்லி யில் நடைபெற்ற இடதுசாரிக் கட்சிகளின் சிறப்பு மாநாட்டில் காங்கிரஸ் மற்றும் பாஜக கடைபிடிக்கக் கூடிய அரசியல் பொருளாதாரக் கொள்கைகளை எதிர்த்து மாற்றுப் பொருளாதார - சமூகக்கொள்கை பிரகடனம் வெளியிடப்பட்டது.
10 அம்சங் களைக் கொண்ட மாற்றுக் கொள்கைத் திட்டத்தில், கடந்த 22 ஆண்டு காலமாக மத்திய அரசு அமலாக்கி வரும் நவீன தாராளமயப் பொருளாதாரக் கொள்கை யை எதிர்த்தும், நலிவடைந்த பிரிவினரான தலித், பழங்குடி, பெண்கள், சிறுபான்மை மக்கள் ஆகியோரது பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சனைகளை உள்ளடக்கிய தாகவும் பிரகடனம் அமைந்துள்ளது.
மேற்கண்ட மாற்றுக் கொள்கையில் ஒரு அம்சமான தலித் மக்களின் சமூகப் பொருளாதார பிரச்சனைகளுக்காக 30.9.2013 அன்று பி. சீனிவாசராவ் நினைவு தினத்தையொட்டி மாநில அளவில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாகவும், கட்சி சார்பாகவும் தீண் டாமை ஒழிப்பு இயக்கம் நடைபெற வுள்ளது. மாவட்டங்களில் தீண்டாமைக் கொடுமை நிலவும் சில மையங்களை தேர்வு செய்து இந்த இயக்கம் நடை பெறுகிறது.
ஏழு மையங்களில் அறிவிக்கப்பட்ட தீண்டாமை ஒழிப்பு நேரடி நடவடிக்கை களில் ஐந்து இடங்களில் அரசு நிர்வாகம் தலையிட்டு, பேச்சுவார்த்தைகள் நடை பெற்று தீண்டாமைக் கொடுமைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் இ.முத்துலிங்கபுரம் கிராமத்தில் பொதுத் தொட்டியில் அருந்ததிய மக்கள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை; மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் முடித் திருத்தகங்களில் தலித் மக்களுக்கு அனுமதி மறுப்பு; தஞ்சை மாவட்டம் ஈஞ்சம்பாடி கிராமத்தில் தேனீர் கடைகள் மற்றும் முடிதிருத்தகங்களில் தலித் மக்களுக்கு அனுமதி மறுப்பு; ஈரோடு மாவட்டம் எழுமாத்தூர் கிராமத்தில் சத்தீஸ்வரன் ஆலயத்திற்குள் தலித் மக்கள் நுழைய அனுமதி மறுப்பு மற்றும் நீலகிரி மாவட்டம் குன்னூரில் தலித் மக்கள் பொதுப் பாதையில் செல்வதை தடுக்கும்விதமாக பாதையை மறித்து இரும்புகேட் அமைப்பு ஆகியவற்றை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் அறிவித்திருந்த நேரடி நடவடிக்கை போராட்டங்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகாணப்பட்டு வெற்றிபெற்றுள்ளன.
இது பாராட்டத்தக்கது ஆகும். செப்டம்பர் 30 தோழர் பி. சீனிவாச ராவின் நினைவு தினம் திருவாரூர் மாவட் டம் திருத்துறைப்பூண்டியில் ஆண்டு தோறும் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலம் தென்கனராவில் பிரா மணக் குடும்பத்தில் பிறந்த தோழர் சீனி வாசராவ், பெங்களூரில் படிக்கின்ற போது மாணவர்கள் எல்லாம் சுதந்திரப்போராட் டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென்று அண்ணல் காந்திஜி விடுத்த அழைப்பை ஏற்று கல்லூரியை விட்டு வெளியேறி சுதந்திரப்போராட்டத்தில் கலந்து கொண் டார். அந்நியர் ஆட்சிக்கு எதிராக சென்னை யில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு காவல்துறையின் தாக்குத லுக்கு உள்ளாகி பலமுறை சிறையி லடைக்கப்பட்டார்.
தமிழகத்தில் உரு வான முதல் கம்யூனிஸ்ட் கட்சிக் கிளை யில் பி. ராமமூர்த்தி, ப. ஜீவானந்தம், சி. சுப்பிரமணியம் போன்ற தோழர்களோடு சீனிவாசராவும் உறுப்பினரானார். அடுத் தடுத்து கட்சி வளர்ச்சியடைந்து மாநிலக் குழு உருவாக்கப்பட்ட போது தோழர் சீனிவாராவ் விவசாயிகளைத் திரட்டு வதற்காக தஞ்சை மாவட்டத்திற்குச் சென்றார். 1940களின் துவக்கத்தில் களப் பால் குப்புவின் கிராமத்தில் இவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில், குறிப்பாக கீழத்தஞ்சையில் தீண்டாமைக் கொடு மைக்கு எதிராகவும், நிலப்பிரபுத்துவ சுரண்டலுக்கு எதிராகவும் விவசாயி களையும், விவசாயத் தொழிலாளர் களையும் திரட்டுவதில் முக்கியப் பங்காற் றினார்.
1940களில் துவங்கி கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் வலுவாக நடை பெற்ற போராட்டத்தின் விளைவாக, ஒப்பீட்டளவில் தீண்டாமைக் கொடுமை கீழத்தஞ்சையில் ஒழிக்கப்பட்டுள்ளது. இப்போராட்டத்தில் தோழர் சீனிவாச ராவின் பங்கு பிரதானமானது. கேரளத்தில் தோழர் இ.எம்.எஸ். தலைமையிலான மாநில அரசு கொண்டு வந்த நில உச்சவரம்பு சட்டத்தைப்போல் தமிழகத்திலும் கொண்டுவர வேண்டு மென்று வலியுறுத்தி 1961ம் ஆண்டு மாநில அளவிலான விவசாயிகள் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் சென்று விவசாயிகளைத் திரட்டுவதில் அயராது பணியாற்றிய தோழர் பி. சீனிவாசராவ் உடல்நலம் குன்றி செப்டம்பர் 30 அன்று காலமானார். பல்லா யிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட அவருடைய இறுதி நிகழ்ச்சி திருத்துறைப் பூண்டியில் நடைபெற்றது. தோழர் பி.எஸ்.ஆர். என்று அன்புடன் அழைக்கப்பட்ட சீனிவாராவ், தஞ்சை மாவட்டத்திற்கு செல்வதற்கு முன் அவருக்கு தமிழில் பேச முடியும்; ஆனால் தமிழில் சரிவர எழுதப்படிக்க தெரியாது.
இருப்பினும் விவசாயிகளையும், விவ சாயத் தொழிலாளர்களையும் திரட்டும் பணியில் ஈடுபட்ட தோழர் பி.எஸ்.ஆர். மக்கள் மொழியைக் கற்று மக்களைத் திரட்டினார். தீண்டாமைக் கொடுமைக்கு எதிரான, நிலப்பிரபுத்துவச் சுரண்டலுக்கு எதிரான போராளியாக மட்டுமல்ல; விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் வாழ் நிலை, நிலக்குவியல், தீண்டாமைக் கொடுமை போன்ற நிலைமைகளை துல் லியமாக ஆய்வு செய்து அதனடிப் படையில் கோரிக்கைகளை உருவாக்கி இயக்கத்திற்கு பி.எஸ்.ஆர். தலைமை தாங்கினார். தீண்டாமைக் கொடுமையும், நிலப் பிரபுத்துவ சுரண்டலும் (நில உறவும் - சாதிக் கொடுமையும்) பின்னிப் பிணைந் துள்ளது என்று சுதந்திரப்போராட்டக் காலத்திலேயே ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்து மாநில அளவில் இரண்டு கொடுமைகளையும் எதிர்த்து இயக்கம் நடத்தியது. குறிப்பாக கீழத் தஞ் சையில் உள்ள அரசியல் - பொருளாதார - சமூக நிலைமையைப் பற்றி ஆய்வு செய்து ‘தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன?’ என்ற சிறுபிரசுரத்தை தோழர் பி.எஸ்.ஆர். தயாரித்து கட்சியின் அன் றைய மாவட்டக்குழு 1947ம் ஆண்டே (விடுதலைக்கு முன்பு) வெளியிட்டுள்ளது.
“சமூகத்துறையிலும், பொருளாதாரத் துறையிலும் நசுக்கப்பட்டுக் கிடந்த இந்த மக்களுக்கு கிசான் சபை ‘உயிர் காக்கும் தோழனாக’ ஆகி விட்டது. பொதுக் கிணறு களில் தண்ணீர் எடுப்பதற்கு இந்த மக்களை ஜாதி இந்துக்கள் அனுமதிக்க மாட்டார்கள். அனுமதிக்காவிட்டாலும் போகிறது. சேரிகளிலாவது கிணறுகள் உண்டா? அதுவுமில்லை. தொல்லை இத்துடன் நிற்கவில்லை. ஜாதி இந்துக் களை தூரத்தில் பார்த்துவிட்டாலும் உடனே தரையில் விழுந்து கும்பிட வேண்டும். இதுதான் அவர்களுக்கு மரி யாதை செய்யும் விதம். தம் எஜமானர் களின் கட்டளைப்படி கீழ்த்தர வேலை கள் அத்தனையும் இந்த ஆதிதிரா விட மக்களே செய்ய வேண்டும். ஜாதி இந்துக் கள் ஹரிஜன மக்களை எவ்வாறு நடத்து கிறார்கள் என்பதைப் பற்றி தென்னிந்திய மக்கள் ஒவ்வொருவருக்கும் நன்கு தெரியு மாதலால், நான் அதைப்பற்றி விரிவுபடக் கூற வேண்டிய அவசியமில்லை.” (ஆதாரம்: தஞ்சை ஜில்லாவில் நடப்பது என்ன? பிஎஸ்ஆர் - பாரதி புத்தகாலயம்)இக்கட்டுரையாளரின் முன்னுரை யுடன் 2008ல் மறுபதிப்பான மேற்கண்ட பிரசுரத்தில், அக்காலத்தில் தஞ்சை மாவட்டத்தில் நிலவிய விவசாயிகள்- விவசாயத் தொழிலாளர்கள் நிலஉறவு, தீண்டாமைக் கொடுமை நிலச்சுவான் தார்களுக்கு அரசு நிர்வாகம் மற்றும் ஊடகங்கள் ஆதரவாக நின்ற விதம் போன்ற பல்வேறு அம்சங்கள் விளக்கப் பட்டுள்ளன. 1940களில் துவங்கி தஞ்சை மாவட் டத்தில் தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களுடைய கோரிக்கைகளுக் காகவும் நடைபெற்ற எண்ணற்ற போராட் டங்களில் தோழர் பி.எஸ்.ஆர். மகத்தான பங்காற்றியிருக்கிறார்.
அவருடைய மறைவிற்குப் பிறகும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி விவசாயிகளுக்காகவும், விவசாயத் தொழிலாளர்களுக்காகவும், தீண்டாமை ஒழிப்பிற்காகவும் வீரம் செறிந்த பல போராட்டங்களை நடத்தி யுள்ளது; நடத்தியும் வருகிறது. தமிழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர்களில் ஒருவராக விளங் கிய தோழர் பி.எஸ்.ஆர். நாட்ட்டின் சுதந் திரத்திற்காகவும், நாடு விடுதலைப் பெற்ற பிறகும் விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்களுக்காகவும், தீண்டாமை ஒழிப் பிற்காகவும் நடந்த வீரம் செறிந்த சிறப்பு மிக்க போராட்டங்களில் முக்கியப் பங்காற் றியவர்.
அவர் எந்த லட்சியத்திற்காக வாழ்ந்தாரோ, அந்த லட்சியத்தை முன் னெடுத்துச் செல்வதில் அவருடைய நினைவு தினத்தன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியேற்கிறது.மிக நீண்ட போராட்டத்தின் ஒரு பகுதி யாகவே இன்றைய தினம் தீண்டாமை ஒழிப்பு நேரடி நடவடிக்கைகளில் பெற் றுள்ள வெற்றி அமைந்துள்ளது.
கோயபல்ஸ் பிரச்சாரத்திலும் மோடிக்கு முதலிடம்
- எம்.கண்ணன்

திருச்சியில் நடைபெற்ற பாஜகவின் கூட்டத்தில் நரேந்திர மோடி, தனது “ மோசடி’’ வித்தையை காட்டினார். இதில் நிதானத்தை இழந்த பல தமிழக தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகள் மோடியை வானளாவ புகழ்ந்து புளகாங்காகிதம் அடைந்து வருகின்றன.
எல்லாவற்றையும் கேள்வி கேட்கும் பத்திரிககைகள் தனது அறிவுக்கண்ணை மூடிக்கொண்டு, மோடி வித்தையில் மூழ்கி விட்டனவோ என்னவோ? மோடி பேசும் போது அவர் காட்டிய ஆவேசத்தில், அவரது ஆடையின் ஒரு பகுதி அவிழ்ந்து தொங்குவதைக் கூட பாவம் மறந்தே போனார். தன்னை அமெரிக்கா கண்காணிக்கிறது என்று அறிந்த பிரேசில் நாடு, அமெரிக்க பிரதிநிதிகள் குழுவை தனது நாட்டிற்கு அனுமதிக்கமாட்டேன் என அறிவித்தது. இதுதான் நாட்டுப்பற்று என்கிறார் மோடி. மிகவும் சரிதான்.
ஆனால் அங்கே ஆள்வது இடதுசாரி அரசாங்கம் என்பதை சொல்ல மறந்துவிட்டார்.பிரேசிலை உளவு பார்க்கும் அதே வரிசையில், இந்தியாவையும் உளவு பார்த்து வந்ததே அமெரிக்கா! அதுவும் ஓரே மாதத்தில் 1350 கோடி தகவல்களை திருடியுள்ளதே! அரசியல் விவகாரம், அணு சக்தி திட்டங்கள், விண்வெளி ஆராய்ச்சி, வர்த்தகம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் திருடியுள்ளதே! அதற்கு பாஜக என்ன செய்தது.
மோடி கொடி பிடித்து அமெரிக்காவிற்கு எதிராக போராடி னாரா? அப்படிப்பட்ட அமெரிக்காவில் இருந்து வரும் வால் மார்ட்டை விடமாட்டோம் என எதிர்த்து சூலாயுதத்தோடு நடு ரோட்டில் நின்றாரா? இல்லையே. இந்தியாவை எடுபிடியாக்க நினைக்கும் அமெரிக்காவிற்கு நான் ஒரே ஒரு முறை மட்டும் வருகிறேன். என்னை அனுமதி யுங்கள் என மனு போட்டு, காவடி தூக்கியபடி காத்துக் கொண்டிருப்பது யார்? அது மோடிதானே !! சரி போகட்டும். சுதேசி பற்றி வாய்கிழியப் பேசும் மோடி, தன்னை நல்லவர், வல்லவர் என புகழ்பாட பிடித்திருக்கும் விளம்பர நிறுவனம் எது? அமெரிக்காவில் உள்ள “ஆப்போ வேர்ல்ட் வைட்’’ தானே! அதுவும் மாதம் 12 லட்சம் சம்பளம்.
பாவம் அந்த நிறுவனம் “வாங்குற காசுக்கு மேல கூவியதால்’’ அதுவும் வெளியே தெரிந்துவிட்டது. அழியும் சிறுதொழில்களை பற்றி முதலைக் கண்ணீர் விட்ட மோடி. இதற்கெல்லாம் காங்கிரஸ் மட்டுமே காரணம் என்பது போல் சொல்லி பாஜகவை காப்பாற்ற ஒப்பாரி வைத்திருக்கிறார். 500 கோடி கடன் வாங்கி கட்டாத முதலாளிகளின் விளம்பரத்தை வங்கிகள் வெளியிடுவதில்லை.
சிறுதொழில் நிறுவனங்கள் ஒரு லட்சம் கட்டவில்லை என்றால் விளம்பரம் வெளியிடுகின்றன. காங்கிரஸ் 50, 75 என இருக்கிற பெருமுதலாளிகளை மகிழ்விக்க, மேலும் உதவி செய்யும் வேலையை செய்து வருகிறது என மோடி குற்றம்சாட்டியுள்ளார். சரிதான். ஆனால் குஜராத்தில் தான் செய்து வருவதை மறந்துவிட்டார் போலும், குஜராத்தில் 2900 கோடி முதலீடு செய்த டாடா நிறுவனத் திற்கு, 100 ரூபாய்க்கு வருடத்திற்கு 10 பைசா என்ற வட்டி விகிதத் தில் 9,570 கோடியை தூக்கி கொடுத்தது எப்படி? அந்த நிறுவனத் திற்கு 20 ஆண்டுகளுக்கு வாட்வரி கட்டத் தேவையில்லை.
சுங்க வரி, கலால் வரி, சேவை வரி, விற்பனை வரி, மின்சார வரி ஆகிய வற்றில் சலுகைகளை வாரி வழங்கியது ஏன்? 10 ஆண்டுகளுக்கு கார்ப்பரேட் வரியே.... கட்ட வேணாம் என டாடா முன் முட்டிக்கால் போடுவது ஏன்? விவசாய பல்கலைக்கழகத்துக்கு சொந்தமான 1,100 ஏக்கரை, சதுர மீட்டர் 10 ஆயிரம் என சந்தை மதிப்பு இருக்கை யில், டாடாவிற்கு ஏன் வெறும் ரூ.900க்கு கொடுக்க வேண்டும்? டாடாவிற்காக 2 ஜி புகழ் நீராராடியாவுடன் நடந்த பேரம்தான் என்ன என்பதையும் சொல்லியிருக்கலாம்.
குஜராத் அரசு சட்ட விரோதமாக கார்ப்பரேட்களுக்கு வழங்கிய சலுகை ரூ.17 ஆயிரம் கோடி என தணிக்கை துறை சுட்டிக் காட்டியிருக்கிறது. கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு சேவகம் செய்வதில் யார் முத லிடத்தை பிடிப்பது என்னும் போட்டியில் காங்கிரசும், பாஜகவும் தானே முதலிடம்.
அதை மோடி சொல்ல மறந்தது ஏனோ? 67.7 சதவிகிதம் குழந்தைகள் ரத்தசோகையால் பாதிக்கப்பட் டிருப்பதில் குஜராத் முதலிடம்தான். ஏழ்மையை பயன்படுத்தி ஏழை பெண்களின் கருவறையை, வெளிநாட்டவர்களுக்கு வாடகைக்கு விட்டு’’ வாடகைத் தாய்மார்களின் எண்ணிக்கையில் குஜராத் முதலிடம்தான்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 5லட்சம் ஏக்கரை தாரை வார்த்ததில் குஜராத் முதலிடம்தான். சுகாதாரத்திற்கு 0.77 சதவிகிதம் என்ற அளவில் குறைந்த நிதி ஒதுக்கும் ஓரே மாநிலம் குஜராத்தான். சுற்றுசூழல் சீர்கேட்டில் குஜராத்தின் வாபிநகரம் முதலிடம்தான். 69 சதவிகித ரேசன் பொருட்களை கடத்தி விற்பதில் குஜராத் முதலிடம்தான்.
மோடியிடம் ஒன்று எதுவென்று கேட்டால் 12 என்பார் காரணம், ரகுராம் ராஜன் குழு அறிக்கையின் படி இந்தியாவின் மாநிலங்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி பட்டியலில் தற்போது குஜராத் 12வது இடத்தில் இருக்கிறது. ஆனாலும் வளர்ச்சியில் நாங்கள்தான் முதலிடம் என்கிறார் மோடி.
ஆமாம் வளர்ச்சி மட்டுமல்ல கோயபல்ஸ் பொய்ப் பிரச்சாரத்திலும் மோடிதான் முதலிடம் என்பதை மறந்துவிட்டார் போலும். ஒரே நாட்டில் எப்படி ஜம்மு-காஷ்மீருக்கு மட்டும் தனி அந்தஸ்து? ஒரு நாட்டில் இரண்டு சட்டமா? அதே போல் மொழி வாரி மாநிலமாக பிரித்து நாட்டை பிரிவினைக்கு காங்கிரஸ் உட்படுத்தியிருக்கிறது. எல்லாம் அகற்றப்பட்டு ஒரே இந்துதேசியம் மலர வேண்டும் என மனக்கோட்டை கனவை, மலை கோட்டை மாநகரில் அவிழ்த்துவிட்டிருக்கிறார் மோடி.
ஆமாம், மோடி கொள்கை படி, அவரவருக்குரிய தனித்த பண்பாடு கூடாது, மொழிவாரி மாநிலம் கூடாது. குஜராத்தின் அகமதாபாத் நகரத்தில் உள்ளது போன்று தலித் அதிகாரிகள், ஊழியர்களுக்கு என்று தனியாக அடுக்குமாடி குடியிருப்புக்களை கட்டி தனிமைப்படுத்திட வேண்டும். வர்ணாசிரம முறைப்படியான ஆட்சியே, இந்துராஷ்டிரத்தின் ஆட்சிமுறை என்பதை பெரியார் பிறந்த மண் என்பதால் தெரிந்தே சொல்லாமல் மறைத்திருக்கலாம்.
மோடி தனது பேச்சை துவங்கும் போது, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் “தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு ” சுட்டிக்காட்டினார். அதே ராமலிங்கம் பிள்ளை மோடியை நோக்கி கேட்டிருக்கும் கேள்விகளை மறந்திருக்கலாம். அதனை நாம் ஞாபகப்படுத்துவோம்.
நாய் குரங்கு பூனையை நத்தி முத்த மிடுகிறோம், நரகல் உண்ணும் பன்றியும் நம்மைத் தீண்ட ஒப்புவோம், ஆயும் ஆறு அறிவுடை ஆன்ம ஞான மனிதனை, அருகிலே வரப் பொறாமை அறிவிலே பொருந்துமோ? என கேட்டவர் ராமலிங்கம் பிள்ளை. புத்தரையும், கர்த்தரையும், நபிகள் என்னும் நாயகரையும், கற்றும், கேட்டும் அறிந்திட்டோம், அப்படி யொரு உத்தமரை மகாத்மாவின் வடிவிலே கண்டுவிட்டோம் என்று பெருமை கொண்டாடியவர் ராமலிங்கம்பிள்ளை.
அந்த காந்தியடி களையே சுட்டுக்கொன்ற கோட்சேயின் வாரிசான மோடியை தரம் பிரித்துப் பார்க்கும், தனித்த குணமுண்டு தமிழர்களுக்கு என்பதை வரலாறு சொல்லும்

Friday, September 27, 2013

தண்ணீர் மையமான சுற்றுலா தினம்



மூன்றாவது உலகப்போர் மூண்டால் அது தண்ணீருக்காகத் தான் தொடங்கும் என்று அறிவிய லாளர்கள் கடந்த சில ஆண்டு களாக எச்சரித்து வருகின்றனர். அந்த அளவுக்கு தண்ணீர் பற்றாக் குறை உருவாகி வருகிறது. தண் ணீர் பற்றாக்குறைக்கு இயற்கை யை மட்டும் காரணமாக கூறமுடி யாது. தண்ணீர் பற்றாக்குறைக்கு முழு முதற்காரணமாக மனிதனை கூற வேண்டும். தமிழகத்தில் அண்மையில் பெய்த மழையில் எட்டு டிஎம்சி தண்ணீர் கேட்பா ரற்று கடலில் கலந்து வீணானது. இதையெல்லாம் மனதில் கொண்டு தான் ‘சுற்றுலாவும், நீரும் - நமது பொதுவான எதிர்காலத்தை பாது காப்போம்’ என்ற முழக்கத்தை முன்வைத்து செப்டம்பர் 27 அன்று உலக சுற்றுலா தினம் கொண்டா டப்பட்டது. ஐ.நா. அமைப்புகளில் ஒன்றான உலக சுற்றுலா அமைப்பின் மூன் றாவது பொதுக்குழு கூட்டத்தில் ஆண்டு தோறும் செப்டம்பர் 27 ஐ உலக சுற்றுலா தினமாக கொண்டா டுவது என்று தீர்மானிக்கப்பட்டது. சுற்றுலாவின் முக்கியத்துவம் குறித்து உலகெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சுற்றுலா எவ்வாறு உலக நாடுகளின், உலக மக்களின் சமூக, கலாச்சார, அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை உலக மக்களுக்கு எடுத்துக்கூறவும் இந்த உலக சுற்றுலா நாள் கடைப் பிடிக்கப்படுகிறது.
1997ல் நடந்த உலக சுற்றுலா அமைப்பின் கூட் டத்தில் ஒவ்வோரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் இந்த விழா வை நடத்துவது என்று முடிவெடுக் கப்பட்டது. உலக சுற்றுலா அமைப்பு இவ்வாண்டில் சுற்றுலாவை தனது பொருளாதார அடித்தளமாக கொண்டு செயல்பட்டு வரும் மாலத் தீவுகளில் உலக சுற்றுலா தினத்தை கொண்டாடுகிறது. மனித நாகரீகங்கள் அனைத் தும் நதிக்கரைகளில் தான் உரு வாயின என்பதை மனிதகுல வர லாற்று ஆய்வாளர்கள் அறுதியிட்டு கூறுகிறார்கள். மனித குலத்தின் வளர்ச்சிக்கு தண்ணீர் ஆற்றியுள்ள பங்கினை யாரும் மதிப்பிட்டு கூறமுடியாது. அதே போல் மனித குலம் நடத்திய பல யுத்தங்களுக்கு நீர், நீர் வழிகள், நீர் நிலைகள் காரண மாகவும் இருந்துள்ளன. சூயஸ் கால்வாய்க்காக நடந்த யுத்தத்தை இதற்கு உதாரணமாக கூறலாம். உலகளவில் தண்ணீர் பராமரிப்பு , சேகரிப்பு, பாதுகாப்பு ஆகியவற்றின் மீது சுற்றுலா ஏற்படுத்தும் தாக்கத் தையும், அவற்றில் சுற்றுலாவுக்கு உள்ள பங்கினையும் அழுத்தமாக கூறுவதற்காக இந்த முழக்கத்தை இவ்வாண்டு சுற்றுலா தினத்தில் உலக சுற்றுலா அமைப்பு முன் வைத்துள்ளது. சுற்றுலாவில் தண்ணீர்க் கென்று ஒரு ஈர்ப்பு சக்தி உண்டு. குற்றாலம் நீர்வீழ்ச்சி போன்ற நீர்வீழ்ச்சிகளும், கேரளாவின் உப் பங்கழிகளும், காஷ்மீரின் தால் ஏரியும், இமாலயத்தின் கங்கோத்ரி யும், மானசரோவர் ஏரியும், வெனி சின் நீர் வீதிகளும், ஆம்ஸ்டர்டா மின் கால்வாய்களும் இன்றும் மக் களை சுற்றுலாவை நோக்கி ஈர்ப்ப தில் பெரும் பங்கு வகிக்கின்றன. ஜோர்டானில் உள்ள சாக்கடல் என்று கூறப்படும் உப்புக்கடலும் பெருமளவு சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. தண்ணீர் சேகரிப் பில் சுற்றுலா துறைக்கு ஆணி வேராக விளங்கும் ஓட்டல்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின் றன. அதே போல் கோல்ப் விளை யாட்டு மைதானங்களின் பராமரிப் பும் தண்ணீர் சேகரிப்புக்கு எதிர் விளைவை ஏற்படுத்துகின்றன. எனவே தண்ணீரை பராமரிப்பது, பாதுகாப்பது, பகிர்வது, மற்றும் நிர்வகிப்பது ஆகியவை சுற்றுலா துறைக்கு மிகவும் இன்றியமையா செயல்களாகும். வெனிசின், ஆம்ஸ்டர்டாமின் நீர்வழிகள் சுற்றுலா பயணிகளை கவர்வதின் மூலம் நாட்டின் செல் வாதாரத்தை உயர்த்துகின்றன.
மாலத்தீவு, இந்தோனேசியாவின் பாலி தீவுகள், பிஜி, ஹவாய், காம் பியா, கரிபியன் தீவுகள் ஆகியவை சுற்றுலா மூலம் பெரும் வருமா னத்தை அடைகின்றன. இவை யெல்லாம் முறையாக பராமரிக்கப் படுகின்றனவா என்ற கேள்வி மனதுக்குள் எழுவது இயல்பு. நீர் வழி களான கால்வாய்களை எவ் வாறு பராமரிப்பது என்பதை ஆம்ஸ் டர்டாம், வெனிஸ் நகர்களில் கற் றுக்கொள்ள வேண்டும்நமது நாட்டில் நீர்நிலைகள் எல்லாம் கான்கிரீட் காடுகளாக மாற்றப்பட்டு விட்டன. மதுரை நகரில் தல்லாகுளம் கண்மாயை அழித்து அண்ணா மாளிகையும், சட்டக் கல்லூரியும், மதிச்சியம் கண்மாயை அழித்து பேருந்து நிலையமும், உலகநேரி கண்மாயை அழித்து உயர்நீதிமன்றமும் கட்டப் பட்டன. மதுரையை சுற்றி கிடக்கும் தரிசு நிலங்கள் இன்றும் தரிசா கவே உள்ளன. இருக்கும் நீர்நிலை களுக்கு தண்ணீர் கொண்டு வரும் கால்வாய்கள் ஆக்கிரமிப்புக்கு ஆளாகிக் கிடக்கின்றன. பல பரா மரிப்பு இன்றி சிதைக்கப்பட்டுள் ளன. பல மூடப்பட்டுவிட்டன. சென்னையில் பள்ளிக்கரணை என்ற சதுப்பு நிலம் குப்பைகளால் மூடப்பட்டு வருகிறது.நீர்நிலைகளை பராமரிப்பதில் அரசின் பங்கு மிக அவசியமான தாகும். அரசு அவற்றை அன்று மூடியதால் இன்று மக்கள் நிலத்தடி நீருக்கு திண்டாடுகிறார்கள். இருக் கும் நீர்நிலைகளை அரசு தன் பரா மரிப்பில் எடுத்துக் கொண்டு அவற்றை பராமரிக்க வேண்டும். நீர் நிலைகளை பாதிக்கும் தொழிற் சாலைகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது. நீர்நிலைகளில் கழிவு நீரைக் கொட்டும் நிறுவனங்களை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். திருப்பூர் சாய ஆலை கள் நொய்யல் ஆற்றை சீரழித்து விட்டன.
அரசுடன் மக்களும் நீர்நிலை களை பாதுகாப்பதில் ஆர்வத்து டன், கவனத்துடன் செயல்பட வேண்டும்.கழிவுகளையும், பிளாஸ்டிக் பொருட்களையும் அங்கு கொட்டக்கூடாது.சுற்றுலா பயணிகள் படகுகளில் செல்லும் போது கழிவுகளை நீரில் எறிவதை தடுக்க வேண்டும். சுத்தமான தண்ணீர் மனித ஆரோக்கியத்துக்கு அவசியமானதாகும். எனவே நீரை அசுத்தம் செய்வதை தடுக்க வேண் டும். சுற்றுலா பயணிகள் நீர்நிலை களில் அல்லது நீர்வழிகளில் செய் யக்கூடாதவை என்ன, செய்ய வேண்டியவை என்ன என்று எடுத் துரைக்கும் அறிவிப்புகள் வைக்கப் பட வேண்டும், சிறு பிரசுரங்கள் கொடுக்கப்பட வேண்டும். சுற்றுலா தொடர்புடைய தொழில்களில் த்ண் ணீர் சுத்திகரிப்பு ஆலைகள் அமைக்கப்படுவதை கட்டாயமாக்க வேண்டும் தண்ணீரை பாதுகாப்போம், எதிர்கால சந்ததியினர் மகிழ்ச்சி யாக வாழ நாம் பாடுபடுவோம் என்ற பொருள் கொண்ட முழக்கம் இந்த சுற்றுலா தினத்தின் மையக்கருத் தாக அமைந்தது சாலப்பொருத் தமே

Thursday, September 26, 2013

கொலை சதி எதிரொலி : வெனிசுலா ஜனாதிபதியின் அமெரிக்க பயணம் ரத்து


கராகஸ், செப். 26-
கொலை சதி தெரியவந்ததால் வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ ஐ.நா கூட்டத்திற்காக அமெரிக்க செல்லவிருந்த தனது பயணத்தை ரத்து செய்தார்.அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில் ஐக்கிய நாடுகள் சபை இயங்கி வருகிறது. இங்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் வெனிசுலா ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ கலந்து கொள்வதாக இருந்தது. சீன பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பும் வழியில் அவர் அமெரிக்கா செல்வதாக இருந்தது. இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. இந்நிலையில் அமெரிக்க பயணத்தின் போது மதுரோவை கொல்ல செய்யப்பட்ட சதிதிட்டம் வெளியாது. இது உறுதிபடுத்தப்பட்டதையடுத்து அமெரிக்க பயணத்தை மதுரோ ரத்து செய்தார்.
பின்னர் சீன பயணத்தை முடித்துக் கொண்டு புதனன்று நேராக வெனிசுலா திரும்பினார்.இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:-அமெரிக்காவில் நடைபெறும் ஐ.நா. பொது சபை கூட்டத்தில் கலந்து கொள்ள இருந்தேன். ஆனால் கனடாவில் உள்ள வான்கோர் நகரில் இருந்து ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. அதில் அமெரிக்கா செல்லும் என்னை கொலை செய்ய சதி நடப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பல வழிகளில் அதை ஆய்வு செய்தபோது, அந்த சதி உண்மை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து எனது பாதுகாப்பை கருதி அமெரிக்க பயணம் ரத்து செய்யப்பட்டது என்று தெரிவித்தார்.
இந்த மாதம் தொடக்கத்தில் மதுரோ செய்தியாளர்களிடம் கூறும்போது, வென்சுலாவின் எண்ணெய் உற்பத்தி, உணவு உற்பத்தி மின்சாரம் ஆகியவற்றை வீழ்த்தி வெனிசுலாவை அழிக்க அமெரிக்கா சதி செய்வதாக குறிப்பிட்டது இங்கே நினைவு கூறதக்கது.கடந்த ஆகஸ்ட் மாதம் வெனிசுலா உள்த்துறை அமைச்சர் மிகுல் ரோட்ரிக்ஸ் கூறும்போது, ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவை கொல்ல விக்டர் ஜோன், எரிக் லினர்டோ உள்பட 10 பேர் கொண்ட கொலைக் கும்பலை கொலம்பியா முன்னாள் ஜனாதிபதி ஆல்வரோ உர்பி அனுப்பி இருக்கிறார் என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். ராணுவத்தை அனுப்பி என்னை கொல்ல கொலம்பியா முன்னாள் ஜனாதிபதி ஆல்வரோ திட்டமிட்டுள்ளார் என்று மதுரோ கடந்த மார்ச் மாதம் குற்றஞ்சாட்டி இருந்தார்

Tuesday, September 24, 2013

ஆட்டோகிராப்



‘மறந்து கொண்டேயிருப்பது மக்களின் இயல்பு..வரலாற்றை நினைவு கொள்ள தூண்டிக் கொண்டேயிருப்பதுபுரட்சியாளர்களின் கடமை...’ -எரிக்ஹாப்ஸ்வாம் —
கட்டுரையை வாசிப்பதற்கு முன் இந்த புகைப்படத்தை சற்றே உற்று கவனியுங்கள்.. இந்த தேசம் இவரை மறந்திருக்காது.. இவரது பெயர் குத்புதீன் அன்சாரி.. 2002 ஆண்டு மார்ச் 1 ம் தேதியன்று குஜராத் தலைநகர் அகமதாபாத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.. அன்றைக்கு அன்சாரிக்கு வயது 28.. சம்பவங்கள் நடந்து பத்தாண்டுகளுக்கும் மேலாகிறது.. ஆனால் அவற்றை நினைத்துப் பார்த்தால் இன்றும் மெலிதாக உடல் நடுங்குகிறது அன்சாரிக்கு... அனைத்தையும் மறக்கவே நினைக்கிறேன்.. ஆனால் வரலாறு திரும்பி விடுமோ என்ற அச்சம் மட்டும் விலக மறுக்கிறது என பழைய நினைவுகளை அசைபோடும் அன்சாரியின் ஆட்டோகிராப் அவரது வார்த்தைகளிலேயே..
கோடைக்காலமாக இருப்பினும் கூட அன்றைக்கு பகல் பொழுதில் வானம் கருத்திருந்தது.. எங்கும் புகை மூட்டம்.. அச்சத்தோடும், அபயக் குரல்களை எழுப்பியவாறும் மக்கள் அங்குமிங்குமாக ஓடிக்கொண்டேயிருந்தனர்.. நகரமே பைத்தியம் பிடித்ததை போலிருந்தது.. நான் முதல் மாடியில் இன்னும் சிலரோடு நின்று கொண்டிருந்தேன். நாங்கள் நின்று கொண்டிருந்த கட்டிடத்தின் தரைத் தளத்திற்கு ஒரு கும்பல் ஆவேசமாக வந்து தீ வைக்க, பற்றியெறியும் நெருப்பிற்கு மத்தியில் செய்வதறியாது திகைத்து நின்று கொண்டிருந்தோம்.. மறுபுறம் ஒரு கூட்டம் கைகளில் வாள்களோடும், கற்களோடும் ஓ என குறியிடப்பட்ட கட்டிடங்களை நோக்கி ஓடிக்கொண்டிருந்தனர்..
உயிர் போனாலும் கூட யாரும் யாரையும் நேராக சந்திக்கக் கூட வாய்ப்பற்ற அந்த சூழலில் தான், அந்த தெருவிற்குள் ஒரு காவல் படையின் மீட்பு வாகனம் நுழைந்தது.. துணிச்சலை வரவழைத்துக் கொண்டு ஓடிச் சென்று எங்கள் உயிரை காப்பாற்றுங்கள் என நான் கதறிய காட்சியை தான் அந்த புகைப்படத்தில் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.. என நினைவு கூரும் அன்சாரி மேலும் தொடர்கிறார்.. சம்பவம் நடந்ததற்கு அடுத்த நாள் பல்வேறு ஊடகங்களில் வெளியான அந்த புகைப்படம் என் வாழ்க்கையையே புரட்டி போட்டு விட்டது..
நான் எங்கு சென்றாலும் அது என்னை விடாமல் துரத்திக் கொண்டேயிருந்தது.. முதலில் என்னை எனது வேலையிலிருந்தும், பிறகு எனது மாநிலத்திலிருந்தும் கூட நான் வெளியேறுவதற்கு அந்த புகைப்படமே ஒரு காரணமாகவும் அமைந்தது.. குஜராத்திலிருந்து வெளியேறிய நான் மகாராஷ்ட்ராவில் உள்ள மாலேகான் நகரத்தில் எனது சகோதரிகளுடன் தஞ்சம் அடைந்தேன்.. அங்கு ஒரு இடத்தில் பணியில் சேர்ந்து பணியாற்ற துவங்கிய ஒரு சில நாட்களிலேயே எனது அந்த பத்திரிக்கை புகைப்படத்தை பார்த்த நிறுவனத்தின் முதலாளி உடனடியாக என்னை பணியிலிருந்து நீக்கி என்னை வெளியேறச் சொல்லி விட்டார்..
அதன் பிறகு சில காலம் மகாராஷ்டிராவில் அங்குமிங்குமாக அலைந்து விட்டு, மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிற்கு சென்று ஒரு பணியில் சேர்ந்து சில ஆண்டுகள் பணியாற்றினேன்.. அப்போது குஜராத்தில் வசித்த எனது தாயாருக்கு இதய நோய் இருப்பதாகவும், சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டுமெனவும் வந்த செய்தி என்னை மீண்டும் குஜராத்திற்கு வரவழைத்தது.. என தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் குத்புதீன் அன்சாரி தற்போது தனது வாழ்நாள் சேமிப்பிலிருந்து ரூ.3,15,000/- லட்சத்திற்கு ஒரு சிறு வீட்டை விலைக்கு வாங்கி, அதில் ஒரு பகுதியையே தனது தையலகமாக அமைத்து தையல் தொழிலை செய்து வருகிறார்.. நான், எனது குடும்பம், மாதம் சுமார் ரூ.7000/- வருமானம் வரும் எனது தொழில் என வாழ்க்கை அப்படியே ஓடிக்கொண்டிருக் கிறது என பழைய நினைவுகளை சுமந்தபடி வாழும் குத்புதீன் அன்சாரிக்கு தற்போது ஜிஷான் என்ற எட்டு வயதான மகனும், ஜாகியா எனும் நான்கு வயது மகளும் உள்ளனர்..
கலவரங்கள் நடந்த கால கட்டத்திற்கு பிறகு பிறந்த குழந்தைகள் இன்றைக்கு அந்த புகைப்படத்தை காட்டி, அதற்கான காரணத்தை கேட்கிற போது அப்பாவான அன்சாரி என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாக புன்னகைக்கிறார்.. ஜிஷான், ஜாகியா மட்டுமல்ல.. அவர்களைப் போலவே 2002 ற்கு பின்னர் பிறந்த கோடிக்கணக்கான குழந்தைகள் நம்மை நோக்கி கேட்கிற போது நம்மிடம் என்ன பதில் இருக்கிறது.. கட்டுரையை முடிக்கும் முன்பு மீண்டும் ஒரு முறை அந்த புகைப்படத்தை பாருங்கள்.. உயிரை காப்பாற்றுங்கள் என அன்றைக்கு கதறிய அந்த கூப்பிய கைகளும், பெருகும் கண்ணீரும் இன்றைக்கும் ஏதோவொன்றை இந்த தேசத்திடம் வேண்டுகிறதே.. அது என்ன.. அதை புரிந்து கொள்ள முற்படுவதோடு, நிச்சயம் நிறைவேற்றுவோம் என சபதம் ஏற்பதுமே மதச்சார்பின்மை தேசத்தின் மாண்பு

Saturday, September 21, 2013

சென்னையை எம்டன் தாக்கிய நூறாம் ஆண்டு


எம்டன் கப்பலில் பணியாற்றிய இந்தியர் தியாகி செண்பகராமன் /1914 செப்டம்பர் 22 அன்று எம்டன் கப்பலால் தாக்கப்பட்ட எண்ணெய்க் கப்பல்கள்சென்னை துறைமுகத்தில் எரிந்த காட்சி / சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் வாசலில் வைக்கப்பட்டுள்ள எம்டன் கப்பல் தாக்கிய நினைவு கல்வெட்டு
1914ம் ஆண்டின் செப்டம்பர் 22 நவராத்திரியின் மூன்றாம் நாள். காலைப்பொழுதில் சென்னை நகரின் வர்த்தக நிறுவனங்கள் திறந்து வைக்கப்படும் நேரம் அது.
நடந்து வரும் முதலாவது உலக யுத்தம் பற்றிய செய்திகள் மக்களின் உதடுகளில் அரைபட்டுக் கொண்டிருந்தன. மாலையில் கொலு பார்க்கச் செல்லும் பெண்களும் சிறுமிகளும் பட்டுப்புடவை சரசரக்க அங்குமிங்கும் சென்று கொண்டிருந்தனர். மவுண்ட் ரோட்டில் இருந்த பிரபலமான மோசஸ் அண்ட் கம்பெனி ஐரோப்பா செல்லும் மாணவர்களுக்கு தேவையான உல்லன் கோட்டுகள் மற்றும் உள்ளாடைகள் பற்றிய விளம்பரத்தை பறை சாற்றிக் கொண்டிருந்தது. இரவு ஒன்பது மணி இருபதாம் நிமிடத்தில் சென்னை நகரம் பெரும் நடுக்கத்துக்குள்ளாகியது.முதலாம் உலகப்போரின் போது 22 - 9 - 1914ம் ஆண்டில் ஜெர்மன் யுத்தக்கப்பல் எம்டன் சென்னை துறைமுகத்தை தாக்கியது. அமைதிப்பூங்காவாக இருந்த சென்னையில் வாழ்ந்த மக்கள் பீதியடைந்தனர். நாளொன்றுக்கு இருபதாயிரம் பேர் நகரை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தனர் என்று செய்திகள் கூறின.
இவன் பெரிய எம்டண்டா என்று சர்வசாதாரணமாக ஊரை ஏமாற்றி திரியும் பேர்வழிகளை அழைக்கும் வழக்கம் தமிழகத்தில் அன்று முதல் புழக்கத்துக்கு வந்தது. சென்னை நகரைத் தாக்கிய கப்பலில் தியாகி செண்பகராமன் பணியாற்றி வந்தார் என்று வரலாறு கூறுகிறது. காந்தி மண்டபம் அருகில் செண்பகராமனின் நூறாவது பிறந்த நாளையொட்டி, அவருடைய நினைவாக நிறுவப்பட்ட சிலையை 1991ம் ஆண்டில் அன்றைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.ஜெர்மனியில் உள்ள எம்டன் நகர மக்கள் நன்கொடையாக அளித்த போர்க்கப்பலுக்கு எம்டன் அந்த நகரத்தின் பெயரே சூட்டப்பட்டது. 3600 டன் எடையுடைய இக்கப்பலில் 22 பீரங்கிகள் பொருத்தப்பட்டிருந்தன. நாகம் அழகாக இருக்கிறது என்று கூறுவது போல் இதுவும் அழகாக இருந்தது.
ஜெர்மனியின் எதிரிகளான பிரிட்டிஷார் கூட இக்கப்பலை ‘கிழக்கத்திய அன்னம்’ என்று வர்ணித்தார்கள் எம்டன் கப்பலின் தலைவன் வோன் முல்லர் சென்னை தாக்கப்பட்டது குறித்து தனது நாட்குறிப்பில் எழுதி வைத்துள்ளார். வர்த்தகக் கப்பல்களை அழிப்பதற்காக இக்கப்பல் கிழக்கத்திய கடலில் வலம் வந்தது. எந்தவொரு எதிர்ப்பும் சிரமமும் இன்றி பிலிப்பைன்ஸ் கடல் வழியாக வங்காள விரிகுடாவில் நுழைந்த எம்டன் சென்னை கடற்கரையை நெருங்கியது. பிரிட்டிஷ் கப்பல்கள் போன்று நான்கு புகைபோக்கிகளுடன் அது இருந்ததால் யாருக்கும் சந்தேகம் எழவில்லை.
நான்காவது புகைபோக்கி வோன் முல்லரின் வியூகத்தால் உருவாக்கப்பட்ட போலி புகைபோக்கியாகும். இரண்டு எண்ணெய்க் கப்பல்களை தகர்த்த பின்னர் அது வேடிக்கையாக நகரை நோக்கி சுட ஆரம்பித்தது. பழைய கலங்கரை விளக்கத்தின் மின்கலம் அருகே நின்று எம்டன் கப்பல் குண்டு வீசுவதை பார்த்த தி இந்தியன் ரிவியூ பத்திரிகையின் செய்தியாளர் டி.ஸ்காட் பீரங்கி குண்டுகளின் துகள்களும், உலோகக்குண்டுகளும், பூந்தமல்லி ஹைரோடு, சூளைமேடு, காசா மேஜர் சாலை, நுங்கம்பாக்கம் வரை சிதறிக் கிடந்ததாக அவர் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
போர்ட் டிரஸ்ட் கட்டிடம், மெட்ராஸ் செயிலிங் கிளப்பின் போட் ஹவுஸ், புதிய நேஷனல் பேங்க் ஆப் இந்தியா கட்டிடத்தின் முகப்பு ஆகிய இடங்களில் குண்டுகளின் சிதறல்கள் கிடந்தன. வெடிக்காத சில குண்டுகளும் சிதறிக் கிடந்தன. மொத்தத்தில் மூன்று பேர் மடிந்தனர். பதின்மூன்று பேர் காயம் அடைந்தனர். மறுநாள் வெளியான செய்தித்தாள்களில் குண்டுவீச்சு பற்றிய செய்திகள் காணப்படவில்லை. ஒருவேளை பிரிட்டிஷ் அரசு செய்திகளை வெளியிடக்கூடாது என்று தடை விதித்திருக்க வேண்டும். இது நிலைமையை மேலும் மோசமாக்கியது. வதந்திகள் காட்டுத்தீயாகப் பரவத்தொடங்கின. எம்டன் கப்பல் மீண்டும் நகரைத் தாக்கக்கூடும் என்று நகரெங்கும் பேசப்பட்டது. மக்கள் உறக்கமின்றித் தவித்தனர். ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. ரயிலில் ஏற முடியாதவர்கள் பேருந்துகளிலும், மாட்டுவண்டிகளிலும் நகரை விட்டு வெளியேறிய வண்ணம் இருந்தனர். மாநில ஆளுநர் பெண்ட்லாண்ட் இதற்கெல்லாம் கவலைப்படவில்லை. அவர் குளுகுளு ஊட்டியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். எம்டன் குண்டு வீசிய மூன்றாம் நாள் அதாவது செப்டம்பர் 25 அன்று சென்னை வந்திறங்கினார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவர் அதிகாரிகளை சந்தித்தார். பின்னர் அவர் துறைமுகத்தை சுற்றிப் பார்த்தார். மத்திய மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்தார். காலை பத்தேகால் மணிக்கு அவர் தனது மாளிகைக்கு திரும்பி விட்டார். ஓரிரு நாட்கள் கழித்து அவர் ஊட்டி திரும்பிவிட்டார்ஆனால் எம்டன் பற்றிய உண்மைச்செய்திகளுக்கு கூட காதும் மூக்கும் வைத்து அதை ஒரு அசுரனாக சித்தரிக்கும் செய்திகள் நாடெங்கும் பரவின.
கோகோஸ் தீவுகள் அருகே கடல் கேபிள்களை சீரழிக்க முயன்ற எம்டன் கப்பலை ஆஸ்திரேலிய போர்க்கப்பல் சிட்னி நேருக்கு நேர் எதிர்த்தது. கடுமையான சண்டைக்கு பின் எம்டன் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இச்சம்பவம் நவம்பர் ஒன்பது அன்று நடந்தது. சென்னை நகருக்கு இத்தகவல் நவம்பர் 11 அன்று கிட்டியது. நகரம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது.

Friday, September 20, 2013

ரூபாய் மதிப்பு மட்டுமல்ல காங்கிரசும் - பாஜகவும் வீழ்ச்சியடைந்துள்ளன
திருப்பூர் கூட்டத்தில் பிருந்தா காரத் சாடல்

திருப்பூரில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மறைந்த முதுபெரும் தலைவர் ஜோதிபாசு நூற்றாண்டு விழா மற்றும் தீக்கதிர் சந்தா வழங்கும் விழாவில் வெள்ளமென திரண்டிருந்த கூட்டத்தில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் உரையாற்றினார்.
திருப்பூர், செப். 20-
இந்திய ரூபாயின் மதிப்பு மட்டுமல்ல, அரசியலில் காங்கிரஸ், பாஜக கட்சிக ளின் மதிப்பும் வீழ்ச்சிய டைந்துள்ளது என்று மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத் குறிப்பிட் டார்.
திருப்பூர் அரிசிக் கடை வீதியில் நடைபெற்ற தோழர் ஜோதிபாசு நூற்றாண்டு விழா, தீக்கதிர் சந்தா வழங் கும் விழாவில் பங்கேற்று உரையாற்றிய அவர் பேசிய தாவது:-
இன்றைய அரசியல் சூழ லில் ஜோதிபாசுவின் வாழ்க் கையில் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். நம் நாட்டில் அமைச்சர்களாக இருக்கும் சிலர், பின்னர் சிறைக்குச் செல்கின்றனர். சிறையில் இருக்க வேண்டிய சிலர் அமைச்சரவையில் இருக்கின்றனர். அந்த அள வுக்கு நாட்டின் செல்வத்தை கொள்ளையடிக்கும் ஊழல் பேர்வழிகள் அதிகரித்துள் ளனர்.
இந்திய அரசியலின் துய ரம் என்னவென்றால் காங் கிரஸ் அமல்படுத்தும் அனைத்து தவறான கொள் கைகளையும் எதிர்க்கட்சி யான பாரதியஜனதா கட்சி ஆதரிக்கிறது. அரசியல் தலைவர்கள், அதிகார வர்க் கத்தினர், கார்ப்பரேட் பெரு நிறுவனங்கள் என்ற மும் மூர்த்திகளின் புனிதமற்ற கூட்டணியினர் சேர்ந்து கொண்டு நாட்டின் வளத் தைக் கொள்ளையடிகின் றனர்.இத்தகைய அரசிய லுக்கு எதிராக வலுவான போராட்டத்தை ஜோதி பாசு நடத்தினார்.
உலக அளவில் எந்த ஜனநாயக நாட்டிலும் இல்லாத அள வுக்கு 23 ஆண்டு காலம் தொடர்ச்சியாக இடதுமுன் னணி அரசின் முதல்வராக இருந்து வரலாற்று சாதனை படைத்தவர் ஜோதிபாசு. ஆனால் அப்படிப்பட்டவர் தனது முதல்வர் அதிகாரத் தை இந்த நாட்டில் அதிகார மற்ற ஏழை, எளிய மக்க ளுக்கு பயன்படுத்தினார். அவரது கடுமையான அரசி யல் எதிரிகள் கூட ஜோதி பாசு மீது கை நீட்டி ஊழல் குற்றம் சாட்ட முடியாது.
ஊழல் எதிர்ப்பு என்பது வெறும் வார்த்தையில் மட்டுமல்ல, கம்யூனிஸ்ட் தலைவர்கள் யாருமே ஊழல் செய்தார்கள் என்று குற்றஞ்சாட்ட முடியாத அளவுக்கு அப்பழுக்கற்ற முறையில் வாழ்ந்து காட்டி யுள்ளனர்.நாம் நியாயமான நேர் மையான தேர்தல் அடிப்ப டையிலான ஜனநாயகத்தை நம்புகிறோம். ஆனால் இன்று அரசியலில் லட்சம் கோடிக்கணக்கான பணத் தை செலவிட்டு தேர்தலில் வெற்றி பெற்று அரசிய லையே மாசுபடுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இத்தகைய சூழ்நிலை யில் தோழர் ஜோதிபாசு 1946ம் ஆண்டு தொழிலாளர் தொகுதியில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதியாக வெற்றி பெற்ற நாள் முதல், மாசற்ற முறையில் மக்களின் அன்பு, ஆதரவின் காரணமாக தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்தார். ஆனால் நம் நாட்டின் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தேர்தலில் தோல்விமுகத்தில் இருந் தவர் ஏதோ “மந்திரக்கோல்” மூலம் வெற்றி பெற்று நிதி யமைச்சராக ஆகிவிட்டார்.
அவர் மீதான வழக்கு என்ன நிலையில் இருக்கிறது என்று கூடத் தெரியவில் லை. ஆனால் அடுத்த ஆறு மாத காலத்தில் எந்த மந் திரக்கோலும் அவருக்குப் பயன்படப் போவதில்லை.இன்று இந்தியாவில் ஏழைகள், தொழிலாளர் கள், விவசாயிகள் தேர்தலில் நிற்க முடியாது. அவர்களுக்கு தகுதியில்லை என்றோ, விருப்பமில்லை என்றோ இதற்கு அர்த்தமில்லை.
அவர் களிடம் பணம் இல்லை என்பதால் நிற்க முடி யாது!எனவே தேர்தல் சீர்திருத் தம் தேவை என்று நாங்கள் கேட்கிறோம்.இந்திய நாடாளுமன்றத் திற்குள் கோடீஸ்வரர்கள், பெரிய வர்த்தகர்கள், பெருந் தொழில் நிறுவன இயக்குநர்கள்
தொடர்ச்சி 3ம் பக்கம்
தமிழ் ஒளி பரவுக!
இரா.தெ.முத்து

இன்று (செப்டம்பர் 21) தமிழ் ஒளியின் 90 ஆவது பிறந்த நாளில்சென்னையில் முழுநாள் விழா நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
‘கவித்துவம் கம்பீரம்
பொதுமை நோக்கோடு
இயங்கியதனித்த அடையாள
ம்எளிய மக்கள் ஏற்றம் பெற
எழுதுகோல் தரித்த சூறாவளி’
என்ற பிம்பத்தை விட்டுச் சென்றிருக் கும் சி.விஜயரங்கம் என்ற தமிழ்ஒளி (1924-1965) பாரதி, பாரதிதாசன் என்ற ஆளுமைகளின் வழித்தடத்தில் பயணப் பட்டவர். பாரதிதாசன் மீது மிகுந்த நேசம் கொண்டு அவரின் அன்பைப் பெற்றவர். 1940 ஆம் ஆண்டு முதல் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீதான ஈடுபாட்டால் தன்னை பாட்டாளிகளின் பாவலனாக மாற்றிக் கொண்டவர்.ஜீவாவிற்கு அடுத்து ‘ஊரை எழுப்பிடவே-
துயர்ஒன்றை நொறுக்கிடவே தாரை முழக் கிடுவேன்’என்று பாடவந்தவர். யாப்பு முறையில் அற்புதமான சந்தத்தோடும் எதுகை, மோனையோடும் பாவேந்தரிடம் கவிதை எழுதக் கற்றுக் கொண்டவர், வாழும் சூழலையும் மக்களின் வாழ்க்கைப் பாடுகளையும் அடிமைப்பட்டுக் கிடந்த தேசச் சூழலையும் கவனித்து வந்த தமிழ் ஒளி பாவேந்தரின் அரசியற் கொள்கையி லிருந்து விலகி ‘இந்தத் தத்துவம் (மார்க்சியம்), உலகில் எவராலும் வெல்ல முடியாத தத்துவமும் உண்மையென்று நிரூபிக்கப் பெற்ற தத்துவமும் ஆகும். பழைய வேதாந்த சித்தாந்தங்கள் எல்லாம் இதன் முன்னே தலைகுப்புற விழுந்து தவிடு பொடி ஆகிவிட்டன. இதை உணர்ந் தே நான் என்னுடைய கொள்கையை வகுத்துக் கொண்டேன்” என்று உணர்ந்து இடதுசாரி அரசியல் சார்ந்த கலை இலக் கியத்தை தன் வாழ்வாகவும் பாதையாக வும் வகுத்துக் கொண்டவர்.கவிதைகள், காவியங்கள், கதைகள், கட்டுரைகள், நாடகங்கள் என தொடர்ந்த இருபதாண்டு காலத்தின் பெரும் பகுதி இந்தப் பாதையில் பயணித்தார்.
அரசியல் கொந்தளிப்புகளும் போராட்டங்களும் எழுச்சிகளும் நிறைந்த காலத்தில் வாழ்ந்த தமிழ்ஒளி இவற்றை தம் படைப் பில் பதிந்தார்; ஆளும் வர்க்கங்களை ஆவேசங்கொண்டு தாக்கினார்; தொழி லாளர்களின் போராட்டங்களை வாழ்த்தி எழுச்சி ஊட்டினார்;போர் வெறி பிடித்து அலைந்த அரசுகளைச் சாடினார்.சீனப்புரட்சியின் முன்னேற்றத்தை வெற்றியை -
ஓ ஓ என்றார்ப் பரித்தே எழுந்தது பார் ஊழிப்போர்உலகமெங்கும் ஆஆ என்றதிசயிக்க ஆசியத்தாய் மனங்குளிர”
என முர சறைந்து மகிழ்ந்தார். பாரதி ரஷ்யப் புரட்சி யை முதலில் தமிழில் பாடிய கவிஞன் என் றால் தமிழ்ஒளி முதல் சீனப்புரட்சியை தமிழில் பாடிய முதல் கவிஞன் எனலாம்.
இந்தியா பெற்ற சுதந்திரம் யாருக் கானது? எப்படிப்பட்டது? என்பதை
‘வந்த விடுதலை யாருக்கென்றே அதை வாங்கிய வீரரைக் கேட்டிடுவோம் நொந்து கிடப்பவர் வாழவில்லை எனில் நொள்ளை விடுதலை யாருக்கடா?’
என கேட்டு 1947லேயே கேள்வி தொடுத்தார்.
‘கண்ணின் கருமணியே காசினிக்கு மாமணியேகண்ணீர் துடைக்க வந்த காலமே நீ வருக’ என்று மேதினத்தை முதலில் தமிழில் நெடுங்கவிதையாகப் பாடியவரும் தமிழ்ஒளிதான்.‘காதெலாம் கிழியும் வணம் பறையடித்து விட்டான்கவுண்டருக்கும் பறைச்சிக்கும் கலியாணம் என்று’ 1947ல் எழுதிய வீராயி காவியத்தில் இப்படி ஓர் இடம் வருகிறது. இந்த காவியம் தலித் மக்களைப் பற்றி தமிழில் பதிந்த முதல் காவியம்.பஞ்சம் பிழைக்க கிழக்காசிய நாடுகள்,ஆப்பிரிக்க நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட தலித் மக்கள் படும் வாதைகளை பாடும் காவியம் ஆகும்.ஒன்றாய் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி யின் ஏடான ஜனசக்தி தடை செய்யப் பட்ட காலத்தில் கட்சியின் கருத்தை போராட்டச் செய்திகளை கொண்டு செல்ல தொடங்கப்பட்ட ‘முன்னணி’ வார இதழின் துணை ஆசிரியராக இருந்து, இதுவும் தடை செய்யப்படும் வரை சிறப் பாக செயல்பட்டிருக்கிறார். முன்னணி யில் அரசியல் கட்டுரைகள், கவிதைகள், இலக்கிய விமர்சனம், நாடகம் என வாரந்தோறும் இவர் எழுதி இருப் பதையும் காண முடிகிறது.
1949ல் வெளிவந்த தொ.மு.சி.ரகுநாத னின் இலக்கிய விமர்சனம் என்கிற நூலுக்கு முன்னணியில் விமர்சனம் ஒன் றை தமிழ்ஒளி எழுதி இருந்தார்.அதில் தொ.மு.சி கவின்கலை, பயன்படுகலை பற்றி எழுதி இருந்தார். கவின்கலை மனம் சார்ந்த ரசனை உணர்ச்சி என்றும் பொது மக்களுக்கு பயன்படும் முறையில் உள்ள வைகள் பயன்படுகலை என்றும் சொல்லி, இரு உணர்ச்சி சார்ந்த கலைகளும் எக் காலமும் இருந்தே தீரும், இருக்க வேண் டும் என்று எழுதி இருப்பார்.இதற்கு தீவிர மான எதிர் விவாதம் ஒன்றை சிலவாரம் எழுதினார் தமிழ்ஒளி. இந்தப் போக்கு வர்க்க சமரசம் என்றும் மார்க்சிய அழகி யல் இதுவல்ல என்றும் எழுதி இலக்கியத் தில் முற்போக்கு கண்ணோட்டத்துடன் ரகுநாதன் செயல்பட முயற்சிக்க வேண் டும் என்று முடித்து இருப்பார்.
அகில இந்திய முற்போக்கு எழுத்தா ளர் சங்கத்தின் கிளையாக தமிழ்நாட்டில் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் 1949 களில் அமைப்புக் குழுவாக இருந்த பொழுதும்,1952 களில் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்ட பொழுதும் அந்த அமைப் பின் துணைச் செயலாளராக இருந்து செயல்பட்டவர் தமிழ்ஒளி. அன்று இடது சாரிகள் மீது அடக்குமுறைகள் ஏவப்பட் டக் காலத்தில்,இப்படி ஓர் இலக்கிய அமைப்பு இயங்கியது பற்றியும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக அது குரல் கொடுத்ததையும் குறித்த வரலாற்றை நாம் திரட்டியாக வேண்டிய தேவையிலும் இருக்கிறோம். இது போல் முன்னணியில் வெளிவந்த படைப்புகளை பதிப்பித்து தமிழ்மக்களிடம் சேர்ப்பிக்க வேண்டிய பொறுப்பும் முற்போக்கு அரசியல் அமைப் பிற்கும், இலக்கிய அமைப்பிற்கும் உள்ளது.தமிழ்ஒளியும் அவரது எழுத்தும் அறு பத்து மூன்று ஆண்டுகளாக தமிழ் மக்கள் மத்தியில் புழக்கத்தில் இருப்பதை நாம் மேலும் பரவலாக்க வேண்டும். புதிய பொருளாதாரச் சூழல் காலத்தில் வரு வதை ஏற்கும் மக்களின் மனநிலையில் மாற்றம் வர, உண்மையை யோசிக்க வைக்க,பிரிட்டிஷ் அடக்குமுறைகள் கோலோச்சிய காலத்தில், புதிய இந்தியா உருவாகிவிட்டது என்று மக்களிடம் இருந்த ஏற்கும் மனநிலையைப் பயன் படுத்தி நேரு அரசு அராஜகத்தை கட்ட விழ்த்த காலத்தில் , நீ எந்தப் பக்கம் என்று அறைகூவிய படைப்புகளை மனதிற்கு எழுச்சியூட்டிய தமிழ் ஒளி படைப்புகளை இன்று பரவலாக்க வேண்டும்.
தமிழ்ஒளியை ஒடுக்கப்பட்டவர் என்று சொல்லி அவரின் கொள்கையை அரசியல் நோக்கை பின்னுக்கு தள்ளவும் இதன் வழி இடதுசாரிகள் முற்போக்கு இலக்கிய அமைப்புகள் மீது அவச்சொல் சுமத்தவும் இன்று சிலர் கிளம்பியுள்ள காலத்தில் தமிழ்ஒளியின் அரசியலை பாதுகாக்க அவரின் படைப்புகளை பாது காக்க மேலும் கவனத்தோடு முற்போக் காளர்கள் இருக்க வேண்டியது தேவை என்றாகிறது.தமிழ் ஒளி ஓர் இடதுசாரி படைப்பாளி யாக முகிழ்த்த பொழுதும் அதன்பின் வந்த காலங்களும் அவர் இறக்கும் கால மும் கம்யூனிஸ்ட் அமைப்பிற்கு மிகுந்த சோதனைகளும் ஒடுக்குமுறைகளும் ஏற் பட்ட காலம். எளிய மக்களின் அன்பும் ஆதரவும் தவிர, வேறெந்த வாய்ப்புகளும் இல்லாத காலம். அமைப்பு தலைமறை வாக இருந்து மக்கள் பணியைச் செய் திருந்த காலம். மக்களைப் போலவே அமைப்பு சார்ந்த ஊழியர்களும் குறைந்த வருவாயில் வாழ்வை நடத்திய காலத்தில் தமிழ் ஒளியும் இருந்தார். இந்தச் சூழல் தமிழ் ஒளியையும் பாதித்தது. படைப் பாளியாக இருந்து படைப்பதற்கான சூழல் அவருக்கு வாய்க்கவில்லை. தமிழ் ஒளி நிழலடிப்பு செய்யப்பட்டார் என்றும் கவ னிக்கப்படவில்லையென்றும் இடதுசாரி களை ஏற்றுக் கொள்ள இயலாதவர்கள் மறைந்த தமிழ் ஒளியை பயன்படுத்தி காழ்ப்பை முன் வைக்கிறார்கள். இது உண்மையல்ல. தமிழ் ஒளியைப் பரப்பு வதும் அவர் படைப்பை முன்னெடுக்க வேண்டியதும் ஒவ்வொரு முற்போக் காளரின் கடமையாகும்.
‘காற்றில் நெருப்பாய் கடலில் அலைப் பெருக்காய்ஆற்றில் புனலாய்தேக்கிலை போல் காதுடைய யானைக் கூட்டத்திரள்போன்று புறப்படுவோம்’(தமிழ் ஒளி).
கட்டுரையாளர் : துணைப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கம்.

Wednesday, September 18, 2013

தோழர் பசவபுன்னையாவின் மனைவி : தோழர் ஜெகதாம்பா மறைவு



பேரக்குழந்தைகளுடன் தோழர்கள் ஜெகதாம்பா - எம்.பசவபுன்னையா(கோப்பு படம்)
ஐதராபாத், செப். 18 -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான எம்.பசவபுன்னையா வின் மனைவி தோழர் ஜெகதாம்பா ஐதராபாத்தில் செவ்வாயன்று கால மானார். அவருக்கு வயது (94). தோழர் பசவபுன்னையா - ஜெகதாம்பா தம்பதியின் ஒரே மகனான தோழர் டாக்டர் ஜஸ்வந்த் ஏற்கனவே காலமாகிவிட்டார்.தோழர் ஜெகதாம்பா ஒரு உறுதிமிக்க கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்தவர்.
இளம்வயதிலேயே சமூக - அரசியல் பிரச்சனை களில் ஆர்வத்துடன் பங்கேற்று செயல்பட்ட தோழர் ஜெகதாம் பாவை, அவரது சகோதரரான எல்.பி. கங்காதரராவ் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அறிமுகப்படுத்தினார்.தோழர் எல்.பி.கங்காதரராவ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராக பிற்காலத்தில் செயல்பட்ட மாபெரும் தலைவராவார்.
1943ல் விஜயவாடாவில் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய பெண் ஊழியர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்ற தோழர் ஜெகதாம்பா, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்கள் பி.சுந்தரய்யா மற்றும் சி.எச்.ராஜேஷ்வரராவ் ஆகியோர் எடுத்த கம்யூனிஸ்ட் தத்துவம் தொடர்பான வகுப்புகளால் ஈர்க்கப்பட்டார். வரலாற்றுப் புகழ்பெற்ற தெலுங்கானா ஆயுதப்புரட்சியில் தலைவர் களிடையே தகவல்களைப் பரிமாறும் ‘கூரியராக’ ஜெகதாம்பா செயல்பட்டார்.
சென்னையிலிருந்து ஒரு சாதாரணப் பெண்ணாக ரயில்களில் ஆயுதங்களைக் கொண்டு சென்று தெலுங்கானா புரட்சியாளர்களுக்கு சப்ளை செய்யும் பணியையும் உயிரையும் பொருட்படுத்தாமல் அவர் மேற்கொண்டார். அந்த சமயங்களில் தெலுங்கு, ஆங்கிலம், இந்தி, மராத்தி என பல மொழிகளிலும் பேசி பிரிட்டிஷ் போலீசாரிடமிருந்து மிக எளிதாக தப்பித்தும் வந்தார்.
தனது வாழ்நாள் முழுவதையும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்காக அர்ப்பணித்த தோழர் ஜெகதாம்பா, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவராக வலம்வந்த தோழர் பசவபுன்னையாவின் வாழ்க்கைத் துணையாக கட்சிப்பணிகளுக்கு ஊக்கமளித்தார்.ஐதராபாத்தில் தனது பேரக் குழந்தைகளின் பராமரிப்பில் வசித்துவந்த தோழர் ஜெகதாம்பா மறைந்த செய்தி அறிந்து கட்சியின் மாநிலச் செயலாளர் பி.வி.ராகவலு அவரது இல்லத்திற்கு விரைந்தார்.
கட்சியின் தலைவர்கள் மற்றும் தோழர்களின் அஞ்சலிக்குப் பிறகு ஜெகதாம்பாவின் உடல் ஐதராபாத் பஞ்சகட்டா மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்ச்சியில் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லு சுவராஜ்யம், பட்டூரு ராமையா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.ஜெகதாம்பாவின் மறைவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பல்வேறு கட்சியின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்தனர்.(ஐஎன்என்)
                                               ************************
    தோழர் ஜெகதாம்பா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.ஒரு மறக்க முடியாத நினைவலை.தஞ்சையில் நடந்த கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொள்ள தோழர் பசவபுன்னைய்யா தோழர் ஜெகதாம்பாலுடன் வந்திருந்தார்.இருவருக்குமே உடல் நலம் சரியில்லை.இருந்தாலும் மாநாட்டில் கலந்துகொள்ள புறப்பட்டபோது,தோழர் எம்.பி,அவர்களை கவனித்து வந்த என்னையும் தோழர் கே.ரமேசையும் அழைத்து என் மனைவியும் கட்சி உறுப்பினர்தான் என அவரது கட்சி உறுப்பினர் அட்டையை காண்பித்து அவரையும் மாநாட்டு மண்டபத்தில் அனுமதிப்பீர்களா? எனக்கேட்டார். அவருக்கு உடல் நலம் சரியில்லை என்னுடனேயே இருக்க விரும்புகிறார் எனக்கேட்டார்.நானும் ரமேசும் ஒரு அரசியல் தலைமைக்குழு தோழரின் இந்தக்கட்டுப்பாட்டை பார்த்து நெகிழ்ந்துவிட்டோம்.பின்பு வரவேற்பு குழுவிடம் முறைப்படி தகவல் தெரிவித்து அழைத்துச்சென்றோம்.இருவருமே மிகவும் எளிமை.காலையில் ஆளுக்கு ஒரு இட்லி மற்றும் ஒரு தோசையில் பாதி,பாதி,வேறு எதுவும் கிடையாது.எங்களிடம்  இருவருமே தஞ்சை பெரியகோவிலிலையும் அதன் கட்டட நுணுக்கத்தையும் காணவேண்டும் என்றனர்.அழைத்துச்சென்றோம்.பொறுமையாக சுற்றிப்பார்த்தனர்.ஆனால் சுவாமியை மட்டும் தரிசிக்கவில்லை.
                                                                        சோ.சுத்தானந்தம்.
பூமிப்பந்தின் போர்வையை பாதுகாப்போம்



அண்டார்டிகா கண்டத்தில் உள்ள ஓசோன் மண்டலத்தில் உருவாகியுள்ள துவாரம்.
ஆதவனின் கதிர்களில் இருந்து வெளிப்படும் அல்ட்ராவயலட் கதிர்வீச்சு , யுவி - பி கதிர்களில் இருந்து மனித இனத்தை பாதுகாக்கும் போர்வையாக ஓசோன் மண்டலம் செயல்பட்டு வருகிறது. இந்த போர்வை மண்டலம் பூமியில் இருந்து பத்து முதல் ஐம்பது கிலோமீட்டர் உயரத்தில் பூமியைச் சூழ்ந்துள்ளது. வேதி இயற்பியல்படி ஆக்சிஜன் எனப்படும் உயிர்வாயு இரண்டு அணுக்களைக் கொண்டது. வளிமண்டலத்தில் மூன்று அணுக்களைக் கொண்ட உயிர்வாயு இயற்கையாக உருவாகிறது. இதைத்தான் ஓசோன் என்று அழைக்கிறார்கள்.
இது ஒரு போர்வையாக பூமியை மூடி நிற்கிறது. இந்த மண்டலம் மெலிந்து வருவதாக 1970ம் ஆண்டில் அறிவியலாளர்கள் கண்டு பிடித்தனர். பூமியில் மனிதர்கள் நிறுவியுள்ள தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கார்பன், புளோரின், குளோரின், ஃப்ரியோன், ஹாலோன் ஆகிய நச்சு வாயுக்களால் ஓஸோன் மண்டலம் மெலிவடைவதாக அவர்கள் காரணம் கூறினர்.தற்போது ஓசோன் மண்டலத்தில் துவாரம் ஏற்பட்டுள்ளதாகவும் கண்டறிந்துள்ளனர். அண்டார்டிகாவில் உள்ள ஓசோன் மண்டலத்தில் உள்ள துவாரம் ஆஸ்திரேலியா கண்டத்தை நுழைத்து மறுபுறம் உருவிவிடும் அளவுக்கு பெரிதாக உள்ளது என்றும் கூறப்படுகிறது.
1985ம் ஆண்டில் உலகில் உள்ள நாடுகள் வியன்னாவில் ஓசோன் துவாரம் பற்றி விவாதிக்க கூடின. ஓசோன் மண்டலத்தை பாதுகாக்க உருவாக்கப்படும் கூட்டுறவு நடவடிக்கைகளின் நடைமுறையை தீர்மானிக்கும் முயற்சியில் இந்த மாநாடு ஈடுபட்டது. இந்த மாநாட்டில் ஒரு சாசனம் கையெழுத்திடப்பட்டது. ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் வியன்னா சாசனம் என்று இதற்கு பெயரிடப்பட்டது.சர்வதேச அளவில் வெற்றி பெற்ற சாசனங்களில் இதுவும் ஒன்றாகும். 193 ஐநா உறுப்பு நாடுகளும், வாட்டிகன் உள்ளிட்ட மூன்று சிறுநாடுகளும் இதில் கையொப்பமிட்டுள்ளன. அனைத்து நாடுகளும் கையொப்பமிட்ட வகையில் இது ஒரு வெற்றிச்சாசனம் என்ற போதும் நடைமுறையில் இது முழுவெற்றி பெறவில்லை. ஓசோன் மண்டல பாதுகாப்பு நாள் ஆண்டு தோறும் செப்டம்பர் 16 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 1987ம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று மாண்ட்ரீல் நகரில் ஓசோன் மண்டல பாதுகாப்புக்கான மாண்ட்ரீல் ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஓசோன் மண்டலத்தை பாதுகாப்பதற்கான பல்வேறு முன்னேற்ற நடவடிக்கைகளை இந்த ஒப்பந்தம் தொடக்கி வைத்தது.2030ம் ஆண்டுக்குள் ஹைட்ரஜன், கார்பன், புளோரின், வாயுக்களின் உற்பத்தியையும் பயன்பாட்டையும் நிறுத்துவது என்று காலவரையறை இந்த ஒப்பந்தத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. தீர்மானத்தின்படி செப்டம்பர் 16 உலக ஓசோன் மண்டல பாதுகாப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டு தோறும் ஒரு முழக்கத்துடன் இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு முழக்கமாக ‘ஒரு ஆரோக்கியமான வளிமண்டலம் - நாம் விரும்பும் எதிர்காலம்’ அறிவிக்கப்பட்டுள்ளது. திங்களன்று உலகெங்கும் இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டது.ஆதவனின் கதிர்வீச்சு ஓசோன் மண்டலத்தால் தடுக்கப்படுகிறது. அந்த மண்டலம் அழிக்கப்பட்டால், கதிரவனில் இருந்து வெளிக்கிளம்பும் அல்ட்ராவயலட் கதிர்களும், யுவி-பி கதிர்களும் நேரடியாக மனித இனத்தை தாக்கும்.
இவை மனிதர்களின் உடலில் வெப்பக்கொப்பளங்களை உருவாக்கும். இந்தக் கொப்பளங்கள் பல்வேறு தோல் புற்றுநோய்களையும், கண்புரை நோயையும் உருவாக்கும். மனித உடம்பின் அடிப்படைக்கட்டுமான பொருளான டிஎன்ஏ (deoxyribic nucleic acid) வை சேதப்படுத்தும். மனிதனின் டிஎன்ஏ சேதமடைவதால் பல அபாயவிளைவுகள் ஏற்படும். சிறுவர்களும், விடலைப்பிள்ளைகளும் தோல் புற்று நோயால் பாதிக்கப்படுவார்கள் . முதிர்ச்சி அடைந்த மக்களும் பின்னால் பாதிக்கப்படுவார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே ஓசோன் மண்டலத்தை பாதுகாக்கும் அவசியம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. சுகவாசிகளான நாம், நமது ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்படுத்தும் பல பொருட்கள் ஓசோன் மண்டலத்துக்கு எதிரிகளாக உள்ளன. நாம் பயன்படுத்தும் பொருட்களால் உருவாகும் தூசுப்படலம், பிளாஸ்டிக் பொருட்கள், குளிரூட்டிகள், மற்றும் குளிர்சாதனப்பெட்டி ஆகியவற்றில் உருவாகும் குளோரின், புளோரின், கார்பன் வாயுக்கள் ஓசோன் மண்டலத்தில் நுழைகின்றன.
இவை ஓசோன் வாயுவுடன் வேதியியல் வினை புரிவதால் ஓசோன் மண்டலத்தில் முதலில் துளையும், பின்னர் துவாரங்களும் உருவாகின்றன. ஓசோன் மண்டலத்தை பாதுகாக்க அறிவியலாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆதரவாளர்களின் முயற்சிகள் மட்டும் போதாது. தன்னைப்பற்றியும், தான் வாழும் சமுதாயத்தைப் பற்றியும், தனக்கு வாழ்வளித்து வரும் இயற்கையின் மேம்பாடு பற்றியும் கவலைப்படும் அனைவரின் ஒட்டுமொத்த முயற்சியும் தேவைப்படுகிறது. ஓசோன் மண்டலம் உள்ளிட்ட சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம்முடைய நெடுங்கால நலன்களுக்கு அவசியமானதாகும்.
நமக்கு மட்டுமல்லாது, நமது வருங்கால தலைமுறையினருக்கும் இது நன்மையளிக்கும். நமது சந்ததியினருக்கும், அனைவரையும் வாழவைக்கும் பாதுகாப்பான பூமியில் வாழும் உரிமை உண்டு என்பதை நாம் மறந்து விடக்கூடாது. அவர்களுக்கு பாதுகாப்பான பூமியை நமது அன்பளிப்பாக விட்டுச் செல்வோம்.
தேரிக்காட்டு முதலைகள்
- அ.வ.பெல்லார்மின்


தற்போது தூத்துக்குடியில் வெளிச்சத் திற்கு வந்திருக்கும் மணல் கொள்ளை நமக்கு பல விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. அரசு நிர்வாகமும், மாவட்ட ஆட்சியர்களும், பல்வேறு அரசுத் துறைகளும் நிர்வாணப்பட்டு நிற்கின்றன. லட்சம் கோடி அளவிற்கு கனிம மணலை ஒரு தனியார் நிறுவனம் அபகரிக்கும் வரை இந்த நிர்வாகங்கள் என்ன செய்து கொண் டிருந்தன என்ற கேள்வியை எழுப்பி, விடை தேடினால் நம்முடைய நிர்வாக அமைப்பின் லட்சணம் தெரியும்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியா குமரி கடற்கரைப் பகுதிகளை ஆக்டோப ஸாக வளைத்து, எங்கெல்லாம் மணல் இருக்கிறதோ அங்கெல்லாம் ராட்சச இயந்திரங்களோடு அலையும் விவிமின ரல்ஸ் எனும் தனியார் நிறுவனம் தனி ராஜாங்கமே நடத்தி வருகிறது. இந்த நிறு வனம் செய்யாத சட்ட விரோத செயல்கள் எதுவும் இல்லை. அரசு, தனியார் நிலங் களை வளைப்பது, தர மறுப்போரை அடித்து துவைப்பது, வெடிகுண்டுகளை வீசி கலைப்பது, ரவுடி கூட்டத்தை சேர்த்து கலவரங்களை ஏற்படுத்துவது, அச்சுறுத்தியும் கணிசமாக எலும்பு துண்டுகளை வாரி வீசியும், சுயமரியாதை யற்ற அரசியல்வாதிகளை, அதிகாரிகளை அடிமைகளாக்குவது, சாதி-மத உணர்வு களை பயன்படுத்துவது என ஆயக்கலை கள் அனைத்தையும் நடத்தி வரும் இந்த நிறுவனம் அசுர பலம் கொண்டது.
கண் அசைவுக்கு அனைத்து துறைகளையும் கட்டி இழுக்கும் இந்த சர்வ வல்லமை இந்த நிறுவனத்திற்கு எப்படி வந்தது. அது ஒரு அபூர்வ கதை.அபூர்வ மணல்களாக சொல்லப்படும் இல்மனைட், ரூட்டைல், சிர்கான், மோனோசைட், சிலிமனைட், கார்னெட் மணல் வகைகள் இந்திய கடற்கரையில் கொட்டிக் கிடக்கின்றன. இதில் இல் மனைட், ரூட்டைல், சிர்கான், மோனோ சைட் ஆகியவை அணு ஆற்றலை உள்ளடக்கிய அதிமுக்கியமான மணல் வகைகள். இந்த அபூர்வப் பொருளை முத லில் கண்டுபிடித்து சொன்னவர் ஹெர்ஸ் கோம்பெர்க் என்ற ஜெர்மானியர்.
1900 காலக்கட்டத்தில் கன்னியாகுமரி, கேரள கடற்கரை பகுதிகளிலிருந்து ஏற்றுமதி யாகி போன கயிறு கட்டுகளோடு ஒட்டிக் கொண்டு போன பல நிற மணல் வகை களை ஆராய்ந்த அந்த வேதியியல் அறி ஞர் மோனோசைட் எனப்படும் அணு மூலப்பொருள் அதில் இருப்பதை கண்டு பிடித்தார். கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் 1910ல் இம்மண லை பிரித்தெடுப்பதற்கான ஒரு ஆலை யை துவங்கினார். 1950 ஆகஸ்ட் 18ல் இந்திய அரசும், அன்றைய கேரள திருவாங்கூர் கொச்சி அரசும் இணைந்த கூட்டு ஆலையாக, இந்திய அரிமணல் ஆலை ஒன்று கேரள மாநிலம் ஆலுவாயில் துவங்கப்பட்டது. அணுசக்தி மூலப்பொருளான தோரியத் தை, மோனோசைட் மணலிலிருந்து பெரிய அளவில் பிரித்தெடுக்கும் ஆலை யாக அது அமைக்கப்பட்டது.
1963ல் இந்த ஆலை முழுவதும் மத் திய அரசின் நிறுவனமாக்கப்பட்டு, பிரத மரின் நேரடி கட்டுப்பாட்டிலுள்ள அணு சக்தி துறையின் கீழ் கொண்டுவரப் பட்டது. தமிழ்நாட்டில் மணவாளக்குறிச்சி, கேரளாவில் சவரா, ஆலுவா, ஒரிஸாவில் பெர்காம்பூர் பகுதிகளில் ஆலைகள் துவங் கப்பட்டு மணல் வகைகளை பிரித்து, வகைப்படுத்தி ஏற்றுமதிக்கானவை களை ஏற்றுமதி செய்தும், பயன்படுத்த வேண்டியதை பயன்படுத்தியும் கோடி கோடியாக லாபமீட்டி இந்திய அரசாங்கத் தின் கஜானாவை நிறைத்தன இந்த ஆலைகள். மட்டுமின்றி, நேரடியாக, மறை முகமாக பல்லாயிரம் வேலை வாய்ப்பு களை உருவாக்கி அந்தந்த பகுதிகளின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி வந்தன. அரசு கட்டுப்பாட்டிலுள்ள ஆலைகள் என்பதால், மாசுக்கட்டுபாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தொழிலாளர் நல சட்டங்கள் அமலாக்கம், சுற்று வட்டார வளர்ச்சி திட் டங்கள் மணலை எடுத்த பகுதிகளில் கழிவு மணலை போட்டு நிரப்பி சமூக காடுகளை வளர்ப்பது என சமூக பொறுப்போடும், செயலாற்றி வருகின்றன.
தாராளமயம், தனியார்மயம், உலகமயம் என்ற கொள்கைகளை வரைமுறை இல் லாமல், கண்மூடித்தனமாக பின்பற்றத் துவங்கிய மத்திய ஆட்சியாளர்கள் 1998 அக்டோபர் 6ல் ஒரு விபரீதமான, பொறுப் பற்ற கொள்கை முடிவை எடுத்தனர். அபூர்வ தாதுக்களையும், சுரங்கங்களை யும் சிலர் அபகரிப்பதற்கு ஏதுவாக, இந்த இயற்கை பொக்கிஷங்களை தனியாரும் கையாளலாம், அந்நிய நேரடி முதலீட்டை யும் அனுமதிக்கலாம் என முடிவெடுத் தார்கள். மோனோசைட் போன்ற அணு சக்தி மூலப்பொருள் தவறானவர்களின் கையில் போனால் உலகிற்கு அதனால் ஏற்படும் ஆபத்துக்களை கூட கணக்கிலெடுக் காமல் முடிவெடுத்தது மட்டுமின்றி தங்கள் கூட்டாளிகளுக்காக சட்டங் களையும், விதிமுறைகளையும் கூட வளைத்தார்கள். பாரத பிரதமரின் நேரடி கட்டுப்பாட்டி லுள்ள அணுசக்தி துறை 2006 ஜனவரி 18ம்தேதி ஒரு சட்டப்பூர்வமற்ற அறிவிக் கையை வெளியிட்டது.
S.G.61(E) என எண் கொண்ட இந்த அறிவிக்கை இரண்டே நாளில் அரசிதழி லும் வெளி யிட்டப் பட்டது. நாடாளுமன்றத்தின் ஒப் புதலின்றி, சுரங்கம் மற்றும் கனிமப் பொருட்களின் ஒழுங்குப்படுத்துதல் சட்டம் 1957ல் எந்த திருத்தமும், செய் யப்படாமலேயே கனிமங்கள் குறித்த, மறுவரையறையை செய்து தனியார் கம்பெனிகள் கொள்ளையடிக்க இதன் மூலம் வகை செய்யப்பட்டது. இது முற்றி லும் நாடாளுமன்ற அவமதிப்பு, ஆக்கிர மிப்பு நடவடிக்கையாகும். இந்த அறிவிக் கையை ரத்து செய்ய வேண்டும். நாடாளு மன்றத்தின் உரிமை மீது ஆக்கிரமிப்பு செய்தோரை தண்டிக்க வேண்டும் என நேரில் சென்று துறை தலைவர்களை, அன்றைய அமைச்சர்களை இடது சாரிகள் வலியுறுத்தினோம். என்றாலும் பாதாளம் வரை பாயும் பணமும் பொறுப் பான நாற்காலிகளில் இருந்த பொருத்த மற்ற நபர்களும் அவைகளை கண்டு கொள்ளவில்லை.
இப்படி கதவுகள் அகலத் திறக்கப் பட்டதும், வாய்ப்பை எதிர்பார்த்து காத் திருந்த முதலைகள் அசுர பாய்ச்சலில் கடற்கரையை ஆக்கிரமிக்க துவங்கின. குவாரி நிலங்களை பெறுவதில், அதில் தாதுவை எடுப்பதில் பல விதி முறைகள் உணடு. பல துறைகளின் அனுமதியும் வேண்டும். ஆனால் விவிஎம்-க்கு அவை ஒரு பொருட்டாக இருக்கவில்லை. தனது சாகசங்களால் அனைத்தையும் வளைத்து, அனைவரையும் கவிழ்த்து, வளைய மறுத்தவர்களை துரத்தியடித்து அனுமதிகளை பெற்றது. பண்டித நேரு சொன்ன நாட்டின் திருக்கோயிலாம் பொதுத்துறை ஆலைக்கு அனுமதிகள் கிடப்பில் கிடந்த போது விவிஎம் கோப்பு கள் வேகமாக நகர்ந்து அனுமதிகளைப் பெற்றது. அனுமதிக்கப்பட்ட நிலங்களுக் கும் அளவுகளுக்கும் சம்பந்தமே இல்லாத வகையில் கடற்கரைகள் தனியார் கம்பெனியால் மொட்டையடிக்கப்பட்டன. தொலைபார்வையற்ற, பதவி சுகங் களை மட்டுமே அனுபவித்த ஐஆர்இ-ன் சில அதிகாரிகளும், உள்ளுக்குள்ளேயே இருந்து தனியார் கம்பெனிக்காக வேலை செய்த சில எட்டப்பன் வகை அதிகாரி களும் தேவையான நிலங்களை கையகப் படுத்தி, அரசு ஆலையின் சுரங்க இருப் பை ஏற்கனவே வலுப்படுத்த தவறியிருந் தார்கள்.
இந்த பலவீனத்தை பயன் படுத்திக் கொண்டு ஐஆர்இ ஆலையை ஒட்டிய நிலங்களைக் கூட ஆக்கிரமித்தது விவிஎம். ஒரு கட்டத்தில் “உனது நிலங் கள் எல்லாம் கடலுக்குள் மூழ்கிவிட்டன”. இருக்கும் இடமெல்லாம் எனது சுரங்கம் என ஐஆர்இ-யே கடலுக்குள் தள்ள முயற்சித்தது. தனது பணபலத்தை, அதிகார பலத்தை தவறான அதிகாரி களின் கூட்டை பயன்படுத்தி ஐஆர்இ-ன் தலைமையையே அச்சுறுத்தியது. என்ன வேடிக்கை பாருங்கள்… தனது நிலத்தில் உள்ள மணலை ஐஆர்இ-ன் தலைமை அதிகாரியும் மற்றும் அதிகாரி களும் திருடியதாக 03-01-2003 கருங்கல் காவல் நிலையத்தில் புகார் செய்தது விவிஎம். அந்த நகைப்புக்குரிய புகாரின் மீது கருங்கல் காவல் நிலையம் அதி வேகமாக எப்ஐஆர் பதிவு செய்து குற்ற எண் 4-2003ன் படி பல பிரிவுகளில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தது.
பெரும் முயற்சிகளுக்கு பின்னர் அந்த எப்ஐஆர் அரசால் திரும்பப் பெறப்பட்டது, என்றால் காவல்துறை எந்த அளவுக்கு அடிமையாகி கிடந்தது என்பதை புரிந்து கொள்ளலாம். இப்படி பொதுத்துறை நிறுவனத் தையே உண்டு இல்லை என்றாக்கி, சிதம் பரத்தின் நலிந்த ஆலைகள் பட்டியலில் தள்ளி, அடிமாட்டு விலைக்கு அதையும் வாங்கி விடலாம் என கனவு கண்டது வி.வி.எம். ஆனால் அதிர்ஷ்டவசமாக 2004-2009 ஆட்சி காலத்தில் மத்தியில் இடது சாரிகள் வலுவாக இருந்ததாலும், நாகர்கோவில் நாடாளுமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வசம் இருந்ததாலும் அது அன்று தடுத்து நிறுத்தப்பட்டது. மாவட்டத்தின் ஒரே பொதுத்துறை ஆலை பாதுகாக்கப்பட்டது. மட்டுமன்றி ஆலை யை பலப்படுத்த புனரமைப்பு நிதி ரூபாய் 64 கோடி பெறப்பட்டு மத்திய இணை யமைச்சர் பிருதிவிராஜ்சவான் அவர் களால் 11-09-2006ல் புனரமைப்பு பணிக் கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது. நாட்டின் நலனை விட நபர்களின் நலனே பெரிது எனக் கருதும் மத்திய ஆட்சி யாளர்கள் தற்போது அத்திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர்.
கடற்கரை பகுதி முழுவதும் இத் தாதுக்கள் இறைந்து கிடந்தாலும், கன்னி யாகுமரியின் மிடாலம் பகுதிகளில் அதன் தாது அடர்த்தி அதிகமாயிருந்தது. இதை மோப்பம் பிடித்து விட்ட விவிஎம் அங்கே கடற்கரை நிலங்களை வாங்கி பிடித்தது. சிறு ஆலையும் அமைத்தது. இயல் பாகவே கடும் கடல் சீற்றமும் நில அரிப்பு களும் இருக்கும் இப்பகுதிகளில், இருக் கும் கரைகளையும் குடைந்து மணலை அள்ளி குவிக்க முயற்சியை துவங்கியது. தங்கள் உயிரையும், வாழ்விடத்தையும் பாதுகாக்க முனைந்த மக்கள் இம்முயற் சியை எதித்தார்கள். எதிர்த்தவர்களை முறியடிக்க ஏராளமான வாகனங்களில் அடியாட்களையும், குண்டர்களையும் கொண்டு இறக்கி பலாத்காரமாக மண லை அள்ள முயற்சித்தபோது, மேற்படி கூலிப்படைகளுக்கும், பொதுமக்களுக் கும் இடையே ஒரு யுத்தமே நடந்து முடிந்தது. ஓட்டுமொத்த கிராமங்களும் ஒன்றாக நின்று எதிர்த்ததால் விவிஎம் பின்வாங்கியது.
தோல்வி ஆவேசத்தில் காவல்துறையை பயன்படுத்தி அம்மக் களை பழிவாங்க துடித்தது. மேல் மிடாலம், கீழ்மிடாலம், குறும்பனை கிராம மக்கள் மீது அனைத்து பிரிவுகளிலும் வழக்குகள் கருங்கல் காவல் நிலையத்தால் பதிவு செய்யப்பட்டன. ஆனால் இடதுசாரிகள் அம்மக்களோடு இணைந்து நின்றதால் அண்ணாச்சியின் முயற்சி வெற்றி பெற வில்லை. நூறு விழுக்காடு கல்வியறிவும், போர்குணமும் மிக்க கன்னியாகுமரி மாவட்டத்திலேயே இப்படியெல்லாம் அண்ணாச்சி ஆட்டம் போட்டாரென்றால் மற்ற பகுதிகளைப் பற்றி சொல்லவா வேண்டும்?. புகுந்து விளையாடிவிட் டார்கள். வந்து கொண்டிருக்கும் புள்ளி விபரங்கள் வாயை பிளக்க வைக்கின்றன. லட்சம் கோடி வரை தாதுக்கள் கொள்ளை யிடப்பட்டுள்ளது. உலகச் சந்தையில் இல்மனைட் ரூ.11800, சிர்கான் ரூ.75000, ரூட்டைல் ரூ.80000, கார்னெட் ரூ.5600, மோனோசைட் ரூ.5லட்சம் என டன் னுக்கு விலை போகிறது. இதில் மோனோ சைட் என்ற அணு மூலகத்தை தனியார் கையாளக் கூடாது, பிரித்தெடுக்கும் போது கிடைக்கும் மோனோசைட் மணலை அரசு துறை ஆலையிடம் தந்து விட வேண்டும் என விதி இருக்கிறது.
ஆனால் இன்றுவரை ஒரு பொடி மோனோசைட் மணலை கூட விவிஎம் அரசிடம் ஒப்படைக்கவில்லை என்றால் ஆபத்து புரிகிறதா? ஆந்த அணு மூலகம் எங்கே போனது? யாருக்கு போனது? கண்காணிக்க வேண்டியவர்கள் எங்கே போனார்கள்? என்பதெல்லாம் அணு குண்டு கேள்விகள். இப்படியெல்லாம் ஏற்றுமதி செய்து தூத்துக்குடி துறை முகத்தில் பெரிய ஏற்றுமதியாளராகவும் வைகுண்டராஜன் விளங்கினார். இந்த பிரச்சனையில் இன்னொரு கோணமும் இருக்கிறது. விவிஎம் போன்ற மோசடி கம்பெனிகளுக்கு ஆஸ்தான ஆலோசகர்களாக, தொழில்நுட்ப, வியா பார உதவியாளர்களாக இருப்பவர்கள் ஐஆர்இ-ல் பணியாற்றி ஓய்வு பெற்ற சில நபர்கள் வாழ்நாள் முழுவதும் பொதுத் துறை நிறுவனமான ஐஆர்இ-ல் சம்பளம் பெற்று சுகவாழ்க்கை வாழ்ந்து விட்டு, தாதுக்களை கையாளுவது குறித்த அனைத்து பயிற்சிகளையும் அரசு சார்பில் பெற்று, அனைத்து தொழில்நுட்பங்களை யும், வியாபார ஏற்றுமதி ரகசியங்களையும் தெரிந்த இந்த அதிகாரிகள்; ஓய்வுக்கு பின்னர் (ஓய்வுக்கு முன்னரே இவர் களுக்கும் விவிஎம்-க்கும் உள்ள தொடர்பு கூட ஆராயப்பட வேண்டும்) விவிஎம்-மோடு சேர்ந்து, “உண்ட வீட்டுக்கு இரண் டகம் செய்பவர்களாக” மாறி சுய ஆதாயத் திற்காக ஆலையின் பலவீனம், தொழில் ரகசியங்களை, விலை விபரங்களை, வாடிக்கையாளர்கள் விபரங்களை எல் லாம் கொடுத்து பொதுத்துறை ஆலை யினை வீழ்த்தும் பாவச்செயலை செய்து வருகின்றனர்.
இன்னும் சிலர் பொதுத் துறை ஆலையில் பணியிலிருக்கும் போதே, தாங்கள் நெருங்கிய உறவினர்கள் மூலமாக இது போன்ற தொழில் ரகசியங் களை பகிர்ந்து வருகின்றனர். இது மக் களுக்கும், நாட்டிற்கும் செய்யும் பெரும் துரோகமாகும். இப்படிப்பட்ட, காசுக்காக எதையும் செய்யும் நபர்களுக்கு வழங்கப் பட்ட சம்பளம், இதர சலுகைகள், தற் போது பெற்று வரும் சலுகைகள் எல்லா வற்றையும் அரசு திரும்ப பெற வேண்டும்.
கட்டுரையாளர் : நாடாளுமன்ற மக்களவை முன்னாள் உறுப்பினர்

Monday, September 16, 2013

உலகைச்சுற்றி-- எஸ்.பி.ராஜேந்திரன்
ஹிட்லரின் குரல்...

1933.“உலக மனிதர்களிலேயே நாங்கள் வேறுபட்டவர்கள்; தனித்துவம் மிக்கவர்கள்; உயர்ந்தவர்கள்” என்று எக்காளமிட்டு, ஜெர்மானிய இனமே உலகில் உயர்ந்த இனம் என்ற வெறியுணர்வு கொண்டு, உலகையே அழிக்கத் துடித்தான் பாசிசத்தின் விளை நிலமாம் ஹிட்லர்.வெறும் 6 ஆண்டுகள். இரண்டு பெரும் உலகப் போர்கள். 5 கோடி மக்களை கொன்றொழித்தான் அந்த மாபாதகன் ஹிட்லர்.
2013.சரியாக 80 ஆண்டுகள் கழித்து, ஹிட்லரின் அதே குரல். ஒபாமாவின் வாயிலிருந்து தெறித்து விழுகிறது.“நாம் வேறுபட்டவர்கள்; நாம் தனித்துவம் வாய்ந்தவர்கள்; இது அமெரிக்காவின் தனித்துவம்” என்று அமெரிக்க மக்களிடம் அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.உலகில் எந்த நாடேனும் தவறிழைப்பதாகத் தெரிந்தால் அந்நாட்டிற்கு தண்டனை தர கடவுளால் ஆசீர்விதிக்கப்பட்டவர்கள் அமெரிக்கர்கள் என தனக்கு முன்பு போர்வெறியன் ஜார்ஜ் புஷ் சொன்னதையே, ஒபாமாவும் சொல்கிறார்.
சிரியா மீது வன்மம் கொண்டு கொக்கரிக்கிறார்.உண்மைதான்.தனித்துவம் மிக்கவர்கள்தான் அமெரிக்கர்கள்!கடந்த 12 ஆண்டுகளில் 8 நாடுகள் மீது போர் நடத்தி, பல்லாயிரக்கணக்கான பச்சிளம் குழந்தைகள் உட்பட லட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்றொழித்தவர்கள் அமெரிக்க ஆட்சியாளர்கள்!உலகில் வேறு யாரும் இத்தனை பெரிய ரத்தவெறியாட்டத்தை நடத்தியதில்லை. அந்த வகையில், அமெரிக்கர்கள் ‘தனித்துவம்’ வாய்ந்தவர்கள்தான்.அதனால்தான், மனிதகுல வரலாற்றால் மிக அதிகமாக வெறுக்கப்பட்ட ஹிட்லரைப் போலவே, இன்றைக்கு சிரியா விவகாரத்தில் உலக மக்கள் அனைவராலும் வெறுக்கப்படக்கூடிய நபராக மாறிப்போயிருக்கிறார் ஒபாமா. அவரது சொந்த நாட்டிலேயே மரியாதை தேய்ந்து கொண்டிருக்கிறது.அதை உணராமல் அவர்களை உசுப்பேற்ற முயற்சிக்கிறார் ஒபாமா.
அதைத்தான் மிக அற்புதமான வார்த்தைகளிலும், கடுமையான எச்சரிக்கையோடும் சாடியிருக்கிறார் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின்.“நோக்கம் எதுவாக இருப்பினும், `நாம் வேறுபட்டவர்கள்; நா மே உயர்ந்தவர்கள்’ என்று சொல்லிச் சொல்லி மக்களைத் தூண்டுவது ஆபத்தானது. இறைவனால் படைக்கப்பட்ட மக்கள் அனைவரும் சமமானவர்களே” என்று சாட்டையடி கொடுத்திருக்கிறார் புடின்.
உண்மையில் “அமெரிக்காவின் தனித்துவம்” என்ற பதத்தை முதன்முதலில் பயன்படுத்தியவர் மாவீரர் ஸ்டாலினே!அமெரிக்காவுக்கு பெருமைதரும் வகையில் அல்ல... அமெரிக்காவை எள்ளி நகையாடும் பொருட்டே ஸ்டாலின் அந்த வார்த்தையைப் பிரயோகித்தார்.1930களில் இந்த உலகைக் குலுக்கிய ‘பொருளாதாரப் பெருமந்தம்’ 1920களிலேயே துளிர்விட ஆரம்பித்திருந்தது.ஜெர்மனி உட்பட ஐரோப்பாவின் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுகள் எல்லாம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணற ஆரம்பித்தன.
அனைத்து நாடுகளிலும் உழைக்கும் வர்க்கம் வீதியில் இறங்கிப் போராடத் துவங்கியது. முதலாளி - தொழிலாளி வர்க்க மோதல் மிகக் கூர்மையாக எழுந்தது. ஆஹாவென்று எழுந்து வெற்றிபெற்றிருந்த ரஷ்யப்புரட்சி, உலகப் பாட்டாளி வர்க்கத்தை ஈர்த்தது. செங்கொடியின் கீழ்தான் உலகிற்கு விடுதலை பிறக்கும் என்று பெருவாரியான மக்கள் உறுதியாக நம்பினார்கள்.
அதன்பால் அணிதிரண்டார்கள். கம்யூனிஸ்ட் அகிலம் உதயமானது.ஆனால், அமெரிக்கர்கள் மட்டும் இதுபோன்ற புரட்சியில் ஆர்வம் கொண்டவர்களாக இல்லை. 400 ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டுண்ணி வாழ்க்கை வாழ்ந்து, பிறரை உறிஞ்சிப் பிழைத்த அமெரிக்க சமூகம், லாபம் சார்ந்த - தனிநபர் நலன் சார்ந்த - சமூக ஏற்றத்தாழ்வை சகித்துக் கொள்ளப் பழகிவிட்ட பரவலான நடுத்தர வர்க்க சமூகம் அது.1929ம் ஆண்டுஓர் நிகழ்வில் இதுபற்றி பேசிக் கொண்டிருந்த போது, அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜேஸ் லவ்ஸ்டன், ஸ்டாலினிடம், புரட்சியில் அமெரிக்கர்களின் ஆர்வமின்மையைக் குறிப்பிட்டுப் பேசினார். அப்போது, “ஆமாம், அமெரிக்கர்கள் தனித்துவம் மிக்கவர்கள்” என்று ஸ்டாலின் நையாண்டியாக இடித்துரைத்தார்.“அமெரிக்கர்களின் இப்படிப்பட்ட தனித்துவம் ஒரு பயங்கரமான நோய்; தீர்க்க முடியாத நோய்” என்று 1930ல் சிகாகோவின் கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.மில்க்ராம் என்பவர் கூறினார்.
சுயநலம் - லாபவெறி- ஆதிக்க உணர்வு என்ற அந்த நோய் வளர்ந்து வளர்ந்து, அமெரிக்க ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் தாரக மந்திரமாய் இன்று மாறியிருக்கிறது.உலகையே ஆளப்பிறந்தவர்கள் நாம்; ஏனென்றால் அமெரிக்கர்களாகிய நாம் வேறுபட்டவர்கள்; தனித்துவம் வாய்ந்தவர்கள்” என்ற வெறி முழக்கம் அமெரிக்க ஊடகங்களிலும், அமெரிக்க அரசியல் தலைவர்களின் பேச்சுக்களிலும் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன. முதலாளித்துவ பொருளாதார நெருக்கடி தீவிரமாகும் போதெல்லாம் அமெரிக்காவின் இந்த முழக்கமும் தீவிரமடைகிறது; அன்றைக்கு ஸ்டாலின் நையாண்டி செய்ததைப் போல இன்று உலகமே எள்ளி நகையாடுகிறது என்பதை உணராமல்!
முசாபர் நகர் - ஓர் எச்சரிக்கை மணி
தலையங்கம்
முசாபர்நகர் கலவரம் சமீப ஆண்டு களில் நடைபெற்ற மிக மோசமான வகுப்புக்கலவரமாகும். முப்பத்திரண்டு பேர் கொல்லப் பட்டிருக்கிறார்கள். இளம் சிறார்கள் உட்பட ஏராளமானோர் காயம் அடைந்திருக்கிறார்கள். மிகவும் சங் கடத்திற்குரிய அம்சம் என்னவெனில், வன்முறை கிராமங்களுக்கும் விரி வடைந்து ஏராளமானோர் தங்கள் வீடு களைத் துறந்து ஓடி ஒளிந்திருப்பதாகும். ஒரு கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஒரு பெண் கேலி செய்யப்பட் டதை அடுத்து, ஒரு முஸ்லிம் இளைஞர் கொல்லப்பட்டிருக்கிறார்.
இதனை அடுத்து, இதற்குப் பழிவாங்கும் முறையில் இரு இந்து இளைஞர்கள் கொல்லப் பட்டதுதானது, வகுப்புக் கலவரம் காட் டுத் தீ போல் பரவக் காரணமாகிவிட்டது.கடந்த ஓராண்டு காலமாகவே மாநி லத்தில் தொடர்ச்சியாக வகுப்புத் துவேஷ நிகழ்ச்சிகள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்து வந்ததை அடுத்து முசாபர்நகர் கலவரம் நடைபெற்றிருக்கிறது. 2012 பிப்ரவரியில் சமாஜ்வாதிக் கட்சி அரசாங்கம் அமைந்த பின்னர், கோசிகலான், பரேலி, பிரதாப்கார், பைசாபாத் மற்றும் பல இடங்களில் மத வன்முறை நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.
இந்நிகழ்வுகள் பலவற்றின்போதும். கோசி கலான் மற்றும் பைசாபாத் ஆகிய நிகழ்வு களின்போது நடைபெற்றதுபோன்று, மதவெறித் தீயை சுற்றிலும் உள்ள கிராமங் களுக்கும் எடுத்துச் செல்ல முயற்சிகள் நடைபெற்றன.முசாபர்நகரில் நிலைமையைச் சமாளிப்பதில் நிர்வாகம் நிச்சயமாக மிகவும் மந்தமாக இருந்துவிட்டது. ஆகஸ்ட் 27 அன்று முதல் நிகழ்வு நடை பெற்ற பின்னர், நிலைமையைப் பயன் படுத்திக் கொள்ள மதவெறி சக்திகளுக்கு முழுமையாக பத்து நாட்கள் கால அவ காசம் தரப்பட்டிருக்கிறது.
ஜாட் வகுப் பினரின் கட்டைப் பஞ்சாயத்துக்கள் நடை பெற்றிருக்கின்றன. மேலும் செப்டம்பர் 7 அன்று நடைபெற்ற மகா கட்டைப் பஞ் சாயத்தும் மதவெறித் தீயை உசுப்பிவிடப் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அதன் பின்னர்தான் வகுப்புக் கலவரங்கள் வெடித்தன. கடந்த ஓராண்டாகவே மதவெறியைக் கிளப்பும் நிகழ்வுகள் ஒன்றன்பின் ஒன்றாக நடந்துவந்ததைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, இவ்வாறு ஆத்திரமூட்டும் நிகழ்வுகள் நடைபெறக்கூடிய சமயத்தில், உத்தரப்பிரதேச அரசு மிகவும் விழிப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும்.
நிர்வாகம் காலத்தே செயல்படத் தவறியதைச் சுட்டிக்காட்டும் அதே சமயத்தில், ஆர் எஸ்எஸ் / பாஜக கூடாரம் இந்நிகழ்ச்சி களைப் பயன்படுத்தி மதவெறித் தீயை விசிறிவிட மேற்கொண்ட நடவடிக்கை களையும் காணத் தவறிவிடக்கூடாது. நான்கு பாஜக எம்எல்ஏ-க்கள், மக்கள் மத்தியில் மதவெறித் தீயைக் கிளறி விட்ட தாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள். இவர்களில் ஒரு எம்எல்ஏ, ஒரு போலி வீடியோ காட்சியை தொலைக்காட்சி அலைவரிசைகளில் பதிவேற்றம் செய்த தாகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார். அந்த போலி வீடியோ காட்சியில் முஸ் லீம்கள் இந்துக்களைக் கொல்வது போல் காட்டப்படுகிறது.
உண்மையில் இந்த வீடியோ சில ஆண்டுகளுக்கு முன் பாகிஸ்தானில் பதிவு செய்யப்பட்ட ஒன்றாகும். கடந்த ஓராண்டு காலத்தில், ஆர் எஸ்எஸ் இயக்கமும் அதன் துணை அமைப்புகளும் மதவெறி அடிப்படையில் மக்களின் உணர்ச்சிகளைக் கிளப்பிடும் பிரச்சனைகளைத் திட்டமிட்டு உரு வாக்கி, மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற் படுத்தி வந்தன. சென்ற ஆண்டு மேற்கு உத்தரப்பிரதேசத்தில் மேற்கொள்ளப் பட்ட பசுவைக் கொல்லுவதற்கு எதிரான பிரச்சாரம் இத்தகைய நிகழ்வுகளில் ஒன்று. வன்முறை வெடிப்பதற்கு முன்பு, பைசாபாத்தில் யோகி ஆதித்யநாத் என்பவரால் மேற்கொள்ளப்பட்ட ஆத்திர மூட்டும் வகையிலான பேச்சுக்கள் மற் றோர் எடுத்துக்காட்டாகும்.
2014இல் நடைபெறவிருக்கும் மக்களவைத் தேர் தலின் போது பாஜக பயனடைய வேண் டும் என்பதற்காக, மதவெறித் தீயை உரு வாக்கும் விதத்தில் ஆர்எஸ்எஸ் தன் அமைப்புகளைச் செயல்படுமாறு முழு மையாக இறக்கிவிட்டுள்ளது. முசாபர் நகரில் நடைபெற்றுள்ள கலவரங்களும் ஜாட் இனத்தினரை பாஜக முகாமிற்குள் இழுப்பதற்குப் பயன்படுத்திக் கொள்ளப் படும்.இரு மாதங்களுக்கு முன்பு, உத்தரப் பிரதேசத்தில் கட்சி விவகாரங்களைக் கவனிப்பதற்காக, குஜராத்தில் நரேந்திர மோடியின் வலதுகரமாக விளங்கிவந்த அமித் ஷாவை அனுப்பிவைத்திட, பாஜக தீர்மானித்தது. அமித் ஷாவும் அயோத்தி யில் ராமர் கோவில் கட்டுவதற்காகத் தற் காலிகமாக ஒதுக்கப்பட்டிருக்கும் இடத்தி லிருந்து தன் பயணத்தைத் துவக்கினார்.
அப்போதிருந்தே இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துச் செல்ல வேலை யைக் கடுமையாகத் துவக்கிவிட்டார். கடந்த சில மாதங்களாகவே மதவெறி வன்முறைச் சம்பவங்கள் கணிசமான அளவிற்கு அதிகரித்து வந்தன. ஜம்முவில் கிஷ்ட்வார், பீகாரில் நவாடா மற்றும் பெட்டியா ஆகிய நகரங்களில் ஆர்எஸ் எஸ்/பாஜக கூடாரத்தின் வெறித்தனமான நடவடிக்கைகள் மூலம் இந்து - முஸ்லீம் மோதல்கள் உருவானதைப் பார்த்தோம்.
உண்மையில், பெட்டியா மற்றும் நவாடா நகரங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்ற சமயத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் ‘நரேந்திரமோடி வாழ்க’ என்று கோஷமிட்டதாகவும் அதற்குப் பிறகு அவர்கள் வன்முறை வெறியாட்டங் களில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளும் தில்லியில் செப்டம்பர் 8 மற்றும் 9 தேதிகளில், நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்திகளை உருவாக்கு வதற்காக ஒரு ரகசியக் கூட்டத்தை நடத்தி யிருப்பதிலிருந்து, ஆர்எஸ்எஸ், பாஜகவை 2014ல் நடைபெறவுள்ள தேர்தலுக்குத் தயாராகுமாறு கட்டளை யிட்டிருப்பது தெளிவாகிறது.
இந்தக் கூட்டத்தில் ராஜ்நாத் சிங், எல்.கே.அத் வானி, நரேந்திர மோடி உட்பட பாஜகவின் அனைத்துத் தலைவர்களும் கலந்து கொண்டிருந்திருக்கிறார்கள். ஆர்எஸ் எஸ்சின் கட்டளையின்படி, பாஜக நரேந் திர மோடியை அதன் பிரதமர் வேட்பாள ராக அறிவித்திடப் பணிக்கப்பட்டிருக் கிறது. நாட்டில் மதவெறி வன்முறை நிகழ்வு கள் அதிகரித்து வருவது குறித்தும், இவற் றில் இந்துத்வா சக்திகளின் பங்கு குறித் தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து எச்சரித்து வந்திருக்கிறது. அடுத்த மாதம் அக்டோபரில் தசரா, துர்கா பூஜா, பக்ரித் பண்டிகைகள் வரவிருக் கின்றன. அந்த சமயத்தில் மத ஊர்வலங் கள் மிகவும் பதற்றமான பகுதிகளில் செல்லும்போது மதவெறியர்களால் வகுப்புக் கலவரங்கள் உருவாக்கப்படக் கூடும்.
மத்திய அரசும், மாநில அரசு களும் மிகவும் விழிப்புடனிருந்து முன் னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத் திட வேண்டும். மதவெறியர்களின் நட வடிக்கைகளை உன்னிப்பாகக் கவனித்து அவர்களது சதிகளை முளையிலேயே கிள்ளி எறிந்திட வேண்டும். முசாபர்நகர் நிகழ்வுகள் ஓர் எச் சரிக்கை மணியாகும். மதவெறி சக்தி களை - அவை எந்த இனத்தைச் சேர்ந்த வையாக இருந்தாலும் சரி - தனிமைப் படுத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.
ஆர்எஸ்எஸ்/பாஜக கூடாரத்தின் தில்லுமுல்லு களைத் தோலுரித்துக்காட்டிட ஜனநாயக, மதச்சார்பற்ற, இடதுசாரிக் கட்சிகள் ஒன்றுபட்டு முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். - தமிழில்: ச.வீரமணி

Wednesday, September 11, 2013

தனியார் பொதுக்காப்பீட்டு நிறுவனத்தின் தில்லுமுல்லு
பல ஆயிரம் கோடி மக்கள் பணம் சுருட்டல்!!

இந்தியாவின் மிகப்பெரிய தனியார் காப்பீட்டு நிறுவனமான ‘ஐசிஐசிஐ லம்பார்டு’ மூலம் செயல்படுத்தப்பட்ட பயிர் காப்பீட்டுத் திட்டங்களில் போலியான பயனாளிகளை இணைத்து கோடிக்கணக்கான ரூபாய்களை சுருட்டி வந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மத்திய அரசினுடைய மக்கள் நலத்திட்டங்களான ராஜீவ்காந்தி சில்பி சுவஸ்திய பீமா யோஜனா ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டுத் திட்டம் மற்றும் ஆர்எஸ்பிஒய் மற்றும் டபிள்யுபிசிஐஎஸ் போன்ற திட்டங்களை ஐசிஐசிஐ லம்பார்டு காப்பீட்டு நிறுவனத்துடன் ஒப்பந்த முறையில் அரசு அமல்படுத்த ஏலமுறையின் மூலம் முடிவு செய்தது. இந்த காப்பீட்டுத் திட்டத்தில் 75-90 சதவீத காப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு செலுத்திவிடும். மீதமுள்ள தொகையை பயனாளியோ அல்லது சம்பந்தப்பட்ட மாநில அரசோ செலுத்திவிடும் என்பது நடைமுறை. உண்மையான பயனாளிகளை அடையாளம் கண்டு தெரிவு செய்ய வேண்டிய பொறுப்பு ஐசிஐசிஐ லம்பார்டு காப்பீட்டு நிறுத்தினத்தின் கடமையாகும்.
அப்படி தெரிவு செய்யப்படுகிறவர்கள் அரசினால் அங்கீகரிக்கப்பட்டவர்கள் ஆவார்கள். ஐசிஐசிஐ லம்பார்டு காப்பீட்டு நிறுவனத்திற்கு குறைந்தபட்ச பயனாளிகளை அடையாளம் காண்பதற்கு வருட இலக்கீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை பூர்த்தி செய்வதன் அடிப்படையில்தான் அடுத்த ஆண்டிற்கான காப்பீட்டு ஒப்பந்தம் ஐசிஐசிஐ லம்பார்டு நிறுவனத்திற்கு வழங்குவதற்கான தகுதி நிர்ணயிக்கப்படும் என்ற முடிவும் அறிவிக்கப்பட்டது.2011ம் வருடம், பயனாளிகளைத் தெரிவு செய்ய வேண்டிய இலக்கை எட்டாத நிலையில் ஐசிஐசிஐ லம்பார்டு காப்பீட்டு நிறுவனம் பயனாளிகளை தெரிவு செய்ததாக போலியாக கணக்கு காட்டி அரசிடமிருந்து கோடிக்கணக்கான ரூபாய் காப்பீட்டுத் தொகையை கபளீகரம் செய்தது.இதுகுறித்து இன்னும் ஆழமாக விசாரிக்கும் போது, வருடக்கணக்காக அரசிற்கு ஏழை பயனாளிகள் தெரிவு சம்பந்தமாக தவறான தகவல்களையே இந்நிறுவனம் தந்துள்ளது.
பருவ நிலை சார்ந்த விவசாய காப்பீட்டுத் திட்டம் WBCIS சம்பந்தமான போலி பயனாளிகளை உருவாக்கி, பல்வேறு திசை திருப்புகின்ற கடிதங்களை அரசிற்கு அளித்துள்ளது. தவறு செய்ததாக குற்றம் சாட்டப்படும் முகவர்கள் மீது ஒருபோதும் நடவடிக்கை எடுத்ததில்லை.2011 ம் ஆண்டு ராஜீவ்காந்தி சில்பி திட்டம் ராஜஸ்தானில் 4 வது வருடமாகஅமலாக்கப்பட்டபோது (2009-10),போலி பயனாளிகளை கணக்கு காட்டியது சம்பந்தமாக புகார்ஒன்று பெறப்பட்டது. பல்வேறு நிறுவன கணக்குகள் போலியாக மாற்றப்பட்டு திருத்தப்பட்டுள்ளன. இந்த கணக்குகள் ஜவுளி அமைச்சகத்திற்கு அளிக்கப்பட்டுள்ளன. இந்த போலியான கணக்குகள் மூலம் அரசிடமிருந்து கோடிக்கணக்கில் காப்பீட்டுத் தொகை பெறப்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் ஜவுளி அமைச்சகம் போலி பயனாளிகள் ஐசிஐசிஐ லம்பார்டு நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளனர் என்பதைக் கண்டுபிடித்து 11,000 போலி பயனாளிகளுக்காக பெறப்பட்ட காப்பீட்டுத் தொகையை 10 சதவீத வட்டியுடன் திரும்பச் செலுத்துமாறு ஐசிஐசிஐ லம்பார்டு நிறுவனத்திற்கு தாக்கீது அனுப்பியது. ஆனாலும் இருதரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு லம்பார்டு நிறுவனத்தை தடை செய்யலாம் என்ற முடிவை ஜவுளி அமைச்சகம் அமல்படுத்தவில்லை.பருவ நிலை சார்ந்த விவசாய காப்பீட்டுத் திட்டம் மத்திய - மாநில அரசுகளின் நிதியால் நடத்தப்படுகின்ற திட்டம். இத்திட்டத்தின்படி பயனாளிகள், வறட்சி, வெள்ளம், தொடர்மழை மற்றும் தட்பவெப்பம் காரணமாக அவர்களுடைய விவசாயம் பாதிக்கப்பட்டால் உடனடியாக இழப்பீடு பெறுவதற்கு தகுதியுடையவர்கள் ஆவார்கள். தட்பவெப்பநிலை கண்காணிப்பு அலுவலகம் அவ்வப்போது தட்பவெப்பநிலை மாற்றம் சம்பந்தமான தகவல்களை அரசிற்கும், காப்பீட்டு நிறுவனத்திற்கும் கடிதம் மூலம் தெரியப்படுத்தி தகுதியுள்ள பயனாளிகளுக்கு இழப்பீட்டு தொகையை வழங்குமாறு அறிவுறுத்தி உள்ளது. ஆனால் ஐசிஐசிஐ லம்பார்டு நிறுவனம் இராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் 3158 பயனாளிகளை கணக்கு காட்டியிருந்தபோதும், ஒருவருக்குக் கூட காப்பீட்டு இழப்பீட்டை வழங்க முன்வரவில்லை.
மாநில அரசு அறிவுறுத்தியும் கூட அந்நிறுவனம் செவிசாய்க்கவில்லை.இது தொடர்பாக புகார்கள் குவிந்த நிலையில், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. உண்மையான பயனாளிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கு மாறாக போலியாக குறிப்பிடப்பட்ட பயனாளிகளுக்கு ரூபாய் 13 கோடி அளவிற்கு இழப்பீடு வழங்கியதாக கணக்கு காண்பித்து விசாரணையில் இருந்து தப்பிக்க மேற்படி நிறுவனம் முயன்றது. ராஜஸ்தான் மாநிலஅரசு கடந்த சம்பா மற்றும் குறுவை காலங்களில் ஐசிஐசிஐ லம்பார்டு நிறுவனத்திற்கு வழங்கிய காப்பீட்டு பிரிமீயத் தொகை ரூ.85 கோடியாகும். சிபிஐ இது சம்பந்தமாக ஆரம்பகட்ட விசாரணைகளை நடத்தி வருகிறது. ஆனால் இதுவரை முறையான குற்றச்சாட்டை பதிவு செய்யவில்லை.
அதேபோல் விவசாயிகளுக்கு மகாராஷ்டிரா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் காப்பீட்டுத் திட்டத்தில் நஷ்டம் என்று காரணத்தை சொல்லி உண்மையான பயனாளிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்காமல் விவசாயிகளின் மனுக்களை அற்பக் காரணங்களை கூறி தள்ளுபடி செய்தது. நீதிமன்றத்தின் தலையீட்டின் அடிப்படையில் ஒருசில பயனாளிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது. ஆனால் இன்னும் பெருவாரியான பயனாளிகளுக்கு இழப்பீடு வழங்காத நிலைமை தொடர்கிறது.ரூபாய் 22 கோடி இழப்பீடு கேட்டு மகாராஷ்டிரா அரசு ஐசிஐசிஐ லம்பார்டு நிறுவனத்தின் மீது நுகர்வோர் அமைப்பில் வழக்கு தொடுத்தது. வழக்கின் அடிப்படையில் தேசிய உபயோகிப்பாளர் அமைப்பு உடனடியாக 800 இழப்பீடுகளை வழங்குமாறு (ரூபாய் 8 கோடி அளவில்) ஆணை பிறப்பித்தது.
ஆனால் இதுவரை இந்த ஆணையையும் செயல்படுத்த ஐசிஐசிஐ லம்பார்டு நிறுவனம் தயாராக இல்லை.மகாராஷ்டிரா அரசு இந்த விஷயத்தை காப்பீட்டு வளர்ச்சி மற்றும் நெறிப்படுத்தும் ஆணையத்திடம் (ஐஆர்டிஏ) புகார் செய்தது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை.உத்தரப்பிரதேசத்தில் விவசாயிகள், காப்பீட்டு திட்டத்தில் ரூ.25 கோடி அளவிலான உண்மையான இழப்பீடுகள், லம்பார்டு நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்கள், செப்டம்பர் 2 அன்று இந்து ஏட்டில் வெளியாகியுள்ளன.
ஐசிஐசிஐ நிறுவனம் குறித்து தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள உண்மைகள், லாப வெறி ஒன்றை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்டுள்ள தனியார் நிறுவனங்களின் தகிடுதத்தங்களுக்கு ஒரு நேரடியான எடுத்துக்காட்டு என்று சொன்னால் அது மிகையல்ல.மத்திய - மாநில அரசுகளின் மக்கள் நலத் திட்டங்கள், பொதுத்துறையில் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மூலமாகவே அமல்படுத்தப்படுவதே இதற்கு சரியான தீர்வு!
-பி.இராஜமகேந்திரன்(இணைச் செயலாளர்,
மதுரை மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்)




பிரான்சில் கடன் சுமையை காரணம் காட்டி ஓய்வூதியத் திட்டத்தில் சீர்திருத்தம் கொண்டு வந்த கடன் சுமையை ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள் மீது திணிக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பிரான்ஸ் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசின் முடிவைக் கண்டித்து நாடு தழுவிய அளவில் போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, தெற்கு பிரான்சின் மார்சிலியில் இடதுசாரி சங்கங்கள், மாணவர் அமைப்புகள் பிரம்மாண்ட பேரணி நடத்தியது. இதில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
ரூபாய் வீழ்ச்சி : குற்றவாளி யார்?
- என்.பி. ரமேஷ் கண்ணன்
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. ஆகஸ்ட் 2011ல், ஒரு அமெரிக்க டாலருக்கு ரூ.45 என்று இருந்த ரூபாய் மதிப்பு, ஆகஸ்ட் 2013ல் ரூ.68 எனக் கடுமையாகச் சரிந்துவிட் டது. இதனால் அனைத்து பகுதி மக்களும் பாதிப்பிற்கு உள்ளாவார்கள்.
அந்நிய முதலீட் டாளர்களும், வெளிநாட்டுக் கடன் பெறும் நிறு வனங்களும், இறக்குமதியாளர்களும், ஆடம் பரப் பண்ட இறக்குமதி இன்றி வாழவே முடி யாது என்று திணறுபவர்களும் இது குறித்து அதிகம் கவலைப்படுகிறார்கள். பணவீக்கம் காரணமாக வீழ்ச்சியடைந்திருக்கும் ரூபாயின் உள்நாட்டு மதிப்பு, சாமானிய மக்களின் வாங் கும் சக்தியினையும், வாழ்க்கைத் தரத்தினை யும் ஏற்கனவே பெருமளவு பாதித்திருக்கிறது. இத்தகைய நிலையினைக் கூட, ரூபாயின் வெளிநாட்டு (செலாவணி) மதிப்பின் வீழ்ச்சி மறக்கடித்துவிட்டது.
ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கான காரணம் குறித்து பல்வேறு வியாக்கியானங்களைச் செய்து வரும் ஆட்சியாளர்களும், முதலாளித் துவ பொருளாதார வல்லுனர்களும், முழு உண் மையினையும் கூற மறுக்கிறார்கள்.
உடனடி அபாயம் : மார்ச் 2013ல் முதிர்வடைந்த இந்தியாவின் குறுகிய கால அந்நிய கடன் தொகை 172 பில்லியன் டாலர்கள். இன்று இதைத் திருப்பிச் செலுத்துவதானால், இந்தியா தனது 298 பில்லியன் டாலர் அந்நியச் செலாவணிக் கை யிருப்பில் 60 சதவீதத்தினை இழக்க வேண்டி வரும். மார்ச் 2014 க்குள் இந்த தொகைகள் திருப்பி செலுத்தப்படவேண்டும்.
மார்ச் 2008ல் வெறும் 54.7 பில்லியன்களாக இருந்த அந்நிய கடன் 6 ஆண்டுகளில் மூன்று மடங்கு உயர்ந் துள்ளது. இந்தியாவின் மொத்த குறுகிய கால அந்நிய கடனில் (390பில்லியன்), 44 சதம் இந்திய பெருநிறுவனங்களின் கடன்களே யாகும். இன்று இந்திய பெருநிறுவனங்கள் சில கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன. கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் உள்ள சில நிறுவனங்கள், தங்களின் பங்குகளை வெளி நாட்டு நிறுவனங்களுக்கு விற்கத் துவங்கி விட்டதாக தகவல்கள் கசியத் தொடங்கியுள் ளன.
காற்றாலை உற்பத்தியில் உலகின் ஐந் தாவது இடத்தினை வகிக்கும் இந்திய பன் னாட்டு நிறுவனமான சுஸ்லான் (ளரணடடிn) தன்னுடைய இந்தியச் சொத்துக்களில் 70 முதல் 75 சதவீதத்தினை விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறு வனம், அபுதாபியின் எட்டிஹாட் ஏர்வேஸ் நிறு வனத்திடம் தனது பங்குகளை விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக் கிறது.இதில் மேலும் கவலையளிக்கும் அம்சம் என்னவெனில், இந்திய வங்கிகள் வழங்கியுள்ள கடனில் 70 சதவீதக் கடன்கள் இப்பெரும் நிறு வனங்களுக்கு வழங்கப்பட்டவையேயாகும்.
எனவே, இந்நிறுவனங்கள் நெருக்கடிக்கு உள் ளானால், அது அடுத்த கட்டத்தில், இந்திய வங்கித் துறையின் நெருக்கடியாக மாறும் அபாயம் உள்ளது. பிரதமரின் பொருளாதார ஆலோசனை கவுன்சில் குறிப்பிட்டுள்ளபடி, நடப்புக் கணக்குப் பற்றாக்குறையினை சமாளிக்க 90 பில்லியன் டாலர்கள் உடனடியாக தேவைப் படுகிறது.
தவறான விளக்கங்கள் : அமெரிக்க மத்திய வங்கியின் தலைவர், பெர்னர்ட் பெர்னன்கே “அமெரிக்கா தன்னு டைய தாராள பணப்புழக்க நடைமுறையினை (ணுரயவேவையவiஎந நயளiபே) முடிவுக்குக் கொண்டு வரும் நேரம் வந்துவிட்டது” என்று 22.05.2013 அன்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பு தான் இந் திய ருபாயின் வீழ்ச்சிக்கு காரணம் என்று இந் திய ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னர் ரகுராம் ராஜன் குறிப்பிட்டுள்ளார்.இது முற்றிலும் தவ றான வாதமாகும். ஏனென்றால், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவோ ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி துவங்கிவிட்டது. அது மட்டு மன்றி, மே 22க்கு பின்னரும் கூட, அமெரிக்கா தனது நீண்டகால கடனுக்கான வட்டி விகி தங்களை கட்டுக்குள் வைப்பதற்காக, சந்தை யிலிருந்து அரசின் கருவூலப் பத்திரங்களை வாங்கி டாலரின் புழக்கத்தை அதிகப்படுத்தி கொண்டுதான் இருக்கிறது. இருந்த போதும், பெர்னன்கேயின் அறிக்கை சில ஊக எதிர் பார்ப்புக்களை உசுப்பிவிட்டிருக்கும் நிலை யில் அமெரிக்காவின் நீண்டகாலக் கடனுக் கான வட்டி விகிதங்கள் உயரத் தொடங்கியுள் ளன. இதனால் வெளிநாடுகளில் முதலீடு செய்யப்பட்டிருந்த டாலர்கள் அமெரிக்கா நோக்கி வரத் துவங்கியுள்ளன.
இதன் விளை வாக தான், இந்தியா மட்டுமன்றி, பிரேசில், தென் ஆப்பிரிக்கா, இந்தோனேசியா போன்ற நாடுகளின் நாணயமும் டாலருக்கு எதிராக மதிப்பிழந்து வருகின்றன.
உலகளாவிய நெருக்கடி! : 2008 முதல் நீடித்து வரும் உலக நெருக் கடிக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக,அதே கொள்கைகளை அமல்படுத்துவது தான் பண வீக்கமும், நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் உயர்ந்து வருவதன் காரணம் ஆகும்.
நீடித்து வரும் உலகப் பொருளாதார நெருக்கடியும், இந் திய அரசு அமலாக்கி வரும் நவீன- தாராள வாதக் கொள்கைகளுமே ரூபாய் மதிப்பு வீழ்ச் சிக்கான உண்மையான காரணங்கள் ஆகும்.அமெரிக்கப் பொருளாதாரம் மீட்சி பெறுவது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது.
எப் போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ அப் போதெல்லாம் அமெரிக்காவிற்கு போர் தேவைப்படும். இன்று சிரியா மீது அமெரிக்கா தொடுக்க நினைக்கிற போர் அத்தகையதே யாகும். இது தவிர, ஐரோப்பிய பொருளாதாரம் இடியாப்பச் சிக்கலாக மாறி வருகிறது. சீனா வின் வளர்ச்சி விகிதமும் குறைந்துள்ளது. அத னால் சீனாவின் முக்கிய ஏற்றுமதி நாடு களான பிரேசில் மற்றும் லத்தீன், அமெரிக்க நாடுகளின் பொருளாதாரமும் பாதிப்படைந் துள்ளது.
பொருளாதார மந்தம் என்பது உலகம் முழுவதும் விரிவடைந்துகொண்டே வருகிறது. வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி விகிதம் குறைந்து விட்ட போதிலும் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் ஓரளவு வளர்ச்சி விகிதங்கள் தொடர்ந்து வருகின்றன. இது எப்படி சாத்தியம்? மேலை நாடுகளின் பொருளாதார வீழ்ச்சியினால் அந்நாடுகளுக் கான ஏற்றுமதி குறைந்து விட்டது. ஆனால், ஆடம்பரப் பொருட்கள், வெளிநாட்டுக் கார்கள், தங்கம் என்று இறக்குமதி உயர்ந்துகொண்டே செல்கிறது. இதுதான் வளரும் நாடுகளின் வளர்ச்சியாக வெளிப்படுகிறது.
ஏற்றுமதியை விட இறக்குமதிகள் உயர்ந்த காரணத்தால் நடப்புக் கணக்குப் பற்றாக்குறையும் உயர்ந்து கொண்டே செல்கிறது.
மூலதனத்தின் பயணத் திட்டம் : இன்றைக்கு மூலதனத்தின் தாயகமும் மையமும் அமெரிக்கா என்பதில் இரு வேறு கருத்துக்கள் இல்லை. பிற நாடுகள் மூல தனத்தின் அதன் வெளிவட்டத்தில் உள்ளவை. இதில் மையத்திற்கும் வெளிவட்டத்திற்கும் பெருமளவில் வேறுபாடுகள் உண்டு.
வெளிவட்டத்தில் லாபம் அதிகம் கிடைக் கும் என்றால் மூலதனம் அங்கே பாய்ந்து ஓடும். ஆனால், அங்கு லாபம் குறைந்தாலோ, அல்லது அந்த நாடுகளில் நெருக்கடி தோன்றினாலோ அது மையத்திற்குத் திரும்பி விடும். மையத்தில் லாபம் குறைவாக இருந்தா லும் கூட அது மையத்திற்குத்தான் திரும்பும். ஏனெனில் அப்போது அது மூலதனத்தின் பாதுகாப்பு குறித்த பிரச்சனையாக மாறி விடுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்தி யாவிற்குள் மூலதனம் வந்ததும் அப்படித்தான். இன்று வெளியேறிக் கொண்டிருப்பதும் அப்ப டித்தான்.
ஒரு நாட்டிற்குள் டாலர், அளவிற்கு அதிகமாக நுழையும் போது, அந்நாட்டின் கரன்சி மதிப்பு உயர்ந்து அது அந்நாட்டின் ஏற்றுமதிச் சந்தையில் சில பிரச்சனைகளை உருவாக்கும். அதே போன்று அளவிற்கதிக மாக டாலர் நாட்டை விட்டு வெளியேறும் போது அந்நாட்டு நாணயத்தின் மதிப்பை மட்டுமல்லாது, உற்பத்தியினையும் வீழ்ச்சி யுறச் செய்யும். இந்திய நாடு இத்தகைய இரண்டு பிரச்சனைகளையும் தொடர்ந்து சந்தித்து வந்திருக்கிறது.
இவர்கள் குற்றம் குறைந்ததல்ல! : உலகப்பொருளாதார மந்தமும் நிதி மூலதனத்தின் போக்கும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சிக்கான சர்வதேசக் காரணிகள் எனி னும், இதில் இந்திய அரசின் குற்றம் எவ் வகையிலும் குறைந்ததல்ல. பொருளாதார மேதையான பிரதமருக்கும், உலகமயக்கொள் கையின் ஊதுகுழலான நிதியமைச்சருக்கும் அவரது படைப் பரிவாரங்களுக்கும் இதில் கணிசமான பங்கு உண்டு.
இன்று நடப்புக் கணக்குப் பற்றாக்குறை குறித்து வாய் கிழியப் பேசுபவர்கள், 2010 - 2011ல் பற்றாக்குறை உயரத் துவங்கியவுடன் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. தங்கம், சொகுசுக் கார்கள் என ஆடம்பரப் பண்ட இறக்குமதி எதற்கும் தடையில்லை. இப்போதும் கூட இறக்குமதி வரி உயர்வினைத் தவிர வேறு நடவடிக்கைகள் எதுவுமில்லை. உள்நாட்டில் முதலீட்டிற்கான பணம் இருந்த போதும் இந்திய நிறுவனங்கள் தங்களின் உள்நாட்டு தேவைகளுக்காக அந்நிய கடன் களாக கோடிக்கணக்கான டாலர்களை திரட்ட அனுமதித்தது இவர்கள் தானே? நிதிப்பற்றாக் குறை அளவிற்கும் மேலாக வரிச்சலுகை அளித்த பணம் இந்தியப் பெருமுதலாளி களின் லாபத்திற்கும், உயர் செல்வந்தர்களின் இறக்குமதி வெறிக்கும் தானே உதவியது? எண்ணெய் விலையின் ஒரு பகுதியை ரூபாயாகத் தரலாம் என்ற ஈரானின் சலுகை காரணமாக, இந்தியாவிற்கு இன்று 8.5 பில்லியன் டாலர் வரை, அந்நியச் செலாவணி அனுகூலம் கிடைத்துள்ளது.
அன்று அதை உதறித் தள்ளியது இதே மன்மோகன் அரசு தானே? நடப்புக் கணக்குப் பற்றாக்குறை உயர்வில் சாமானிய மக்களின் பங்கு எதுவுமில்லை. ஆனால் அது உருவாக்கியிருக்கும் நெருக் கடிச் சுமையினை சுமப்பதில் அவர்கள் பங்கு மிக மிக அதிகம். ரூ. 5 லட்சம் கோடிக்கு மேல் முதலாளிகளுக்கும் செல்வந்தர்களுக்கும் சலுகை அளிக்கும் போது சரியாத பங்குச் சந் தை, சாமானிய மக்களின் உணவுப் பாது காப்பிற்காக ரூ.1.25 லட்சம் கோடி ஒதுக்கும் வகையில் (இதுவே போதுமானதல்ல என்பது வேறு விஷயம்) சட்டம் இயற்றினால் சரியு மாம்.
உடனே, இது பொருத்தமான நேரமல்ல என முதலாளித்துவ ஊதுகுழல்கள் அனைத் தும் ஒரே குரலில் ஊதுகின்றன.
சரியான தீர்வு! : மூலதனப் போக்குவரத்து மீது கட்டுப் பாடுகள், தேவையற்ற இறக்குமதிகளுக்குத் தடை போன்ற பல்வேறு நடவடிக்கைகள் வாயிலாக நடப்புக் கணக்குப் பற்றாக்குறை யினை குறைக்க முடியும். ஆனால், அதுவும் கூட மக்களின் வாங்கும் சக்தியினைத் தீர் மானிக்கின்ற ரூபாயின் உள்நாட்டு மதிப்பு வீழ்ச்சிக்குத் தீர்வாகாது.
உலகமயக் கொள்கை களுக்கு விடை கொடுப்பது ஒன்றுதான் இறுதி யான தீர்வாகும். அது வரை ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட பல நெருக்கடிகள் மீண்டும் மீண்டும் வரவே செய்யும். எனினும் வேலை வாய்ப்புக்களை உருவாக்கி, அதன் மூலம் மக்களின் வாங்கும் சக்தியினை அதிகரிக்கும் வகையில் பொது முதலீடுகள் மூலம் அரசு தலையிட வேண்டும். இந்தக் கோரிக்கை யினை முன் வைத்துப் போராட வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயம்.