உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் பாஜக!
உள்ளொன்று
வைத்துப் புறமொன்று பேசுவது என்பதே ஆர்எஸ்எஸ்/பாஜக தலைவர்களின்
முத்திரையாகும். இவ்வாறு அவர்கள் பேசுவதென்பது ஒன்றும் புதிதல்ல. பாபர்
மசூதி இடித்துத் தரை மட்டமாக்கப்படுவதற்கு முன்பு தன் ‘‘ரதயாத்திரை’’யைத்
துவங்கும்போது எல்.கே. அத்வானி மக்கள் மத்தியில் ஆவேசத்தைக் கிளப்பும்
வகையில் பேசிய பேச்சுக்களை எல்லாம் நினைவு கூர்க. ‘‘இராமர் கோவில் அங்கே
கட் டியே தீருவோம்’’ என்று செல்லும் இடங் களில் எல்லாம் அவர் இடிமுழக்கம்
இட்டதை நாமறிவோம்.
பாபர் மசூதி இடிக் கப்பட்டபின்னர்தான் இந்தப்
பேச்சு நின்றது. பல நூற்றாண்டுகளுக்குமுன் கட்டப்பட்ட, மிகவும் சிறப்பு
வாய்ந்த, பாபர் மசூதியை கரசேவகர்கள் இடித்துத் தரைமட்டமாக்குவதற்கு இவரது
ஆத்திரமூட்டும் பேச்சுக்கள் நேர டியாகவே உதவின. பாபர் மசூதி இடித்துத்
தரைமட்டமாக்கப்பட்டதற்குப்பிறகு, அத்வானி என்ன கூறுகிறார்? 1992 டிசம்பர் 6
தன்னுடைய வாழ்நாளிலேயே மிகவும் துக்ககரமான நாள் என்று
கூறிக்கொண்டிருக்கிறார்.
மேலும் ரத யாத்திரையைத் துவங்குவதற்கு முன்
எல்.கே. அத்வானி ‘மதச்சார்பின்மை குறித்து தேசிய அளவில் விவாதம் நடத்த
வேண்டும்’ என்று கூறிக் கொண் டிருந்ததையும் நாம் பார்த்தோம்.இவை மட்டுமல்ல,
ஆர்எஸ்எஸ்/பாஜகவின் தற்போதைய பிரதமர் வேட்பாளரும், அத்வானியைப் போன்றே
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதில் வல்லவராக இருக்கிறார். குஜராத்தில்
2002 முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனப் படுகொலைகளுக்குத் தலைமை தாங்கிய
இந்த மனிதர், இப்போது தில்லியில் மாணவர்கள் மத்தியில் ஒரு கூட்டத்தில் உரை
நிகழ்த்துகையில், ‘‘கழிப்பறைகளே முதலில், கோவில்கள் பின்னர்தான்’’ என்று
கூறியிருக்கிறார். இந்த ஆண்டு ஏப்ரலில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர்
ஜெய்ராம் ரமேஷ் கூறியதுபோன்றே இவரும் எதிரொலித்திருக்கிறார்.கழிப்பறைகள்
கட்டுவோம் போன்றுவாக்குறுதிகள் வருவது நல்ல விஷயம்தான்.
ஆனால்
குஜராத்தில் பாஜகவின் ஆட்சியின் கீழ் சுகாதாரம் சம்பந்தமான திட்டங்கள்
அப்படி ஒன்றும் சிறப் பானமுறையில் இல்லை என்பதே எதார்த்த நிலை. 2012-13
இந்திய ஊரக வளர்ச்சி அறிக்கையின்படி நாட்டில், கிராமப்புறங்களில் உள்ள
குடும் பங்களில் ஐந்தில் ஒன்றில், மூன்று அடிப்படை வசதிகளான - குடிநீர்
வசதி, மின்சார வசதி, சுகாதார வசதி - ஆகிய மூன்றும் இல்லாதிருக்கின்றனர்
என்றும் கிராமப்புறத்தில் உள்ளோரில் 18 விழுக் காட்டினருக்கு மட்டுமே
இம்மூன்றையும் பெறக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறியிருக்கிறது.
குஜராத்திலும் நிலைமை அப்படி ஒன்றும் சிறப்பானதாக இல்லை. இம்மூன்று
வசதிகளும் பெற்ற குடும்பங்கள் நான்கில் ஒன்று கூட அங்கே கிடையாது.
கேரளாவில்
71 விழுக்காட்டினர் இவ்வசதிகளைப் பெற்றிருக்கின்றனர். வேறு மாநிலங்களில்
13 மாநிலங்கள் இதனைவிட அதிகமான அளவில் பெற்றிருக்கின்றன. மலம் அள்ளும்
இனத்தினரின் (அருந்ததியினரின்) உரிமைகளுக்காகப் போராடிக் கொண்டிருக்கும்
மணவ் கரிமா என்னும் ஸ்தாபனம், சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் ஓர் ஆய்வினை
மேற் கொண்டு, அகமதாபாத் மாநகராட்சியின் ஆதரவின் கீழ் 126 இடங்களில்
மலத்தைத்தலையில் சுமக்கும் பணியாளர்களால் மலம் அள்ளுவது நடைபெற்றுக்
கொண்டிருப்பதாக அம்பலப் படுத்தியிருக்கிறது. இந்த நடைமுறை 1993ஆம்
ஆண்டுசட்டத்திற்கு விரோதமாக அங்கேதொடர்ந்து இருந்து வருகிறது. இவ்வாறு மலத்
தைத் தலையில் சுமக்கும் பணியாளர்களை வேலைக்கு அமர்த்தினால் அவ்வாறு
வேலைக்கு அமர்த்துவோரை இச்சட்டத்தின்படி தண்டிக்க முடியும்.
தேசிய
மனித உரிமைகள் ஆணையம் இதுதொடர்பாக ஆட்சேபணை எழுப்பியபோது, அதற்கு குஜராத்
அரசு என்ன பதில் அளித்தது தெரியுமா? குஜராத் அரசு 1993ஆம் ஆண்டு சட்டத்தை
அமல்படுத்துவதில் மிகவும் அக் கறையுடன் இருக்கின்றதாம், குஜராத்தில்
மலத்தைத் தலையில் சுமப் போரே கிடையாதாம். இவ்வாறு அளந்து விட்டிருக்கிறது.
இவை அனைத்தும் குஜராத் முதல்வரின் கூற்றுகளில் உள்ள வெறுமையை வெட்ட வெளிச்ச
மாக்குகின்றன. ஆர்எஸ்எஸ்/பாஜகவினரால் மிகவும் தம்பட்டம் அடிக்கப்பட்ட
‘‘வீர்யம் மிகுந்த குஜராத்’’ என்னும் பிரச்சாரமும், குஜராத் அனைத்து மனிதவள
வளர்ச்சிக் குறியீடுகளின் தேசிய சராசரியைவிட கீழான நிலையில் இருக்கிறது
என்று வெளிவந்துள்ள உண்மைகளின் மூலம் புஸ்வானமாகிப் போனது. தேசிய
சராசரியில் குஜராத் மிகவும் பின்தங்கியிருப்பது வெளிச்சத்திற்கு
வந்திருக்கிறது. மேலும் தற்போது வெளியாகியுள்ள, இந்திய ரிசர்வ் வங்கி
ஆளுநரின் தலைமையில் இயங்கிய ‘மாநிலங்களின் பலவகை வளர்ச்சி அட்டவணைகளைப்
பரிசீலனை செய்த குழுவின் அறிக்கையானது, பலமுனைகளில் குஜராத்
முன்னேறியிருப்ப தாகத் தம்பட்டம் அடிக்கப்பட்டதையும் தரைமட்ட
மாக்கியுள்ளது.
அந்த அறிக்கையில், நாட்டின் வளர்ச்சி அட்ட வணையில்
குஜராத் 12ஆவது இடத் தினை வகிப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறது. இதுதான்
பாஜக மாநில அரசான குஜராத்தின் ‘‘வீர்யம்’’ ஆகும். மோடி இப்போது
கூறியதைப்போன்ற ஒரு கருத்தை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியபோது அதனைக்
கண்டித்து, ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் அவரது இல்லத்திற்கு முன்பு
எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது நினைவுகூரத்தக்கது. அப்போது
இதுதொடர்பாகப் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர், இத்தகைய கருத்துக்கள்
‘‘மதம் மற்றும் மக்களின் நம்பிக்கைகள் என்னும் அற்புதமான மாண்பினை
அழித்துவிடும்” என்றும் குறிப்பிட்டார். எதிர்பார்த்ததைப் போலவே, விஸ்வ
இந்து பரிசத் தலைவரான பிரவீண் தொகாடியாவும், ``இந்து சமூகத்திற்கு இதைவிட
அவமானம்”வேறெதுவும் இருக்க முடியாது என்று குஜராத் முதல்வர் மோடியின்
‘கழிப்பறைகள்/கோவில் கள்’ கருத்தைக் கடுமையாகக் கண்டனம் செய்திருக்கிறார்.
அவர் மேலும்,“கோவில்கள் குறித்து இவ்வாறு தேவையற்ற கருத்துக்கள் பற்றிக்
கேள்விப் பட்டதும் அதிர்ச்சியடைந்தோம், நிலைகுலைந்து நிற்கிறோம், ...
சிறந்தமுறையில் சுகாதார வசதிகள் செய்யப்பட வேண்டியது தேவைதான் என்று
நாங்களும் நம்புகிறோம். ஆனால் அதற்காக கோவில்களை இழுத்திருப்பது
தேவையில்லாதது” என்று குறிப் பிட்டிருக்கிறார். இதேபோன்று மத்திய அமைச்சர்
கூறியபோது கிளர்ச்சிகள் நடத்தியதை நினைவுகூர்ந்த அவர், மேலும்
கூறுகையில், ``இந்த சமயத்தில் பாஜக மீண்டும் ஒருமுறை முன்வந்து தன்னுடைய
சொந்தப் பிரதமர் வேட் பாளர் அளித்துள்ள அறிக்கையைக் கண்டிக்க வேண்டும்
என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்” என்றார். உள்ளொன்று வைத்துப் புறமொன்று
பேசும் இத்தகைய பேச்சுக்களை, கார்ப்பரேட்டுகளில் சில பிரிவினர்
மோடிக்குஅளிக்கும் ஆதரவுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். அவை, மோடியை,
நவீன தாராளமய பொருளாதாரச் சீர்திருத்தங்களை முன்னிலும் மிகத்தீவிரமாக
முன்னெடுத்துச் செல்லக் கூடிய நபராக சித்தரித்துக் கொண் டிருக்கின்றன.
வாஜ்பாயின் தலை மையில் அமைந்திருந்த பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயகக்
கூட்டணி ஆட்சிக்காலத்தின்போது ‘இந்தியா ஒளிர்கிறது’ என்றும் ‘எல்லாம்
நன்றாகவே நடக்கிறது’ என்றும் அறிவிக்கப்பட்டவைகளை நினைவுகூர்க.
இவ்வாறு, அவர்கள் இரு இந்தியர்களுக் கும் இடை யிலான ஏற்றத்தாழ்வு வளர்ந்து
கொண் டிருப்பதுடனேயே அவர்களை ஒருங் கிணைப்பதற்கான வேலையையும் செய்தார்கள்.
பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக்கிடவும்ஏழைகளை மேலும் பரம ஏழைகளாக
மாற்றிடவும் நடவடிக்கைகளை அவர்கள் தொடர்ந்து எடுத்துக்கொண்டுதான்
இருந்தார்கள். அதனை இப்போதும் அவர்கள் தொடர்கிறார்கள். 2013 செப்டம்பரில்
ஊடகங்களில் வெளியான இரு செய்திகள் இதனை மேலும் உறுதிப்படுத்துகின்றன.
முதலாவது, உலக அளவிலான செல்வந்தர்களை உருவாக்கியதில், உல கில் ஒரு
மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் சொத்துக்கள் வைத்திருப்பவர்களில் (
ஸ்ரீ 1 அடைடiடிn = சுமார்5 ஆயிரம் கோடி ரூபாய்) இந்தியா இரண்டாவது
இடத்திற்கு வந்திருக்கிறது.2012இல் இவர்களின் எண்ணிக் கை 22.2 விழுக்காடாக
இருந்ததுதற்போது 23.4 விழுக்காடாக அதி கரித்திருக்கிறது. இவ்வாறு நாட்டில்
உள்ள 1,53,000 உலக அளவிலான செல் வந்தர்களின் சொத் துக்கள் 589 பில்லியன்
டாலர்கள் மதிப்புடையதாகும்.
இரண்டாவது செய்தி அகிலஇந்திய ஊரக
வளர்ச்சி அறிக்கைதொடர்பானதாகும். இது கிராமப்புறங் களில் சுயமாக வேலை
பார்த்து வந்த விவசாயிகளின் எண்ணிக்கை மிகவும் சுருங்கிவிட்டதாகவும்,
இவர்கள் விவ சாயம் அல்லாத வேலைக்கு மாறி விட்டதாகவும்
குறிப்பிட்டிருக்கிறது. இவ்வாறு விவசாயம் அல்லாத வேலைக்கு மாறியவர்களில் 42
விழுக்காட்டினர், தொழில்திறமை தேவைப்படாத வேலைகளான கட்டிடத்தொழிலாளர்கள்
மற்றும் வர்த்தகங் களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் எந்தப் பாதுகாப்புமின்றி கேசுவல் தொழிலாளி களாகவே வேலை செய்து
கொண்டிருக் கிறார்கள். அறிக்கை மேலும், கடந்த பத்தாண்டு களில் வேளாண்மையில்
பொது முதலீடு என்பது தேக்க நிலையில் இருப்பது தொடர்கிறது என்றும் அதாவது
வேளாண் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 விழுக்காடு அளவிற்குத்தான்
இருக்கிறது என்றும், இதன்காரணமாக எழுந்துள்ள விவசாய நெருக்கடியின் விளைவாக
விவசாயிகள் தற்கொலைகள் செய்துகொள்வது அதிகரித்திருப்பதில் பிரதிபலிக்கிறது
என்றும் குறிப்பிட்டுள் ளது.
1995ல்10ஆயிரத்து 700 விவசாயிகள்
என்றிருந்தது, 2009ல் 17 ஆயிரமாக அதிகரித்திருக்கிறது. கடன்களைக் கட்ட
முடியாமை, பயிர்களின் விளைச்சலின்மை பெரும்பாலான தற்கொலை களுக்குக்
காரணங்களாகும். அரசாங் கத்தின் உதவிகள் மக்களுக்கு நேரடி யாக மாற்றம்
செய்யப்படும் என்று அரசுத்தரப்பில் பலமான முறையில் தம்பட்டங்கள்
அடிக்கப்பட்டு வந்த போதிலும், கிராமப்புறங்களில் வங்கி சேவை யைப் பெற்ற
குடும்பங்கள் என் பவை 2011ல் 54 விழுக்காடு மட்டுமே என்று இந்த அறிக்கை
தெரிவிக்கிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், விவசாயிகளுக்கு அளித்துள்ள
வங்கிக்கடன்கள் குறித்து ஆய்வு செய்தோ மானால், சிறு விவசாயிகள் 42,600 கோடி
ரூபாய் கடன் உதவி பெற்றிருக்கிறார்கள், நடுத்தர மற்றும் பணக்கார
விவசாயிகள் 73 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவி பெற்றிருக்கிறார்கள். இதுதான்
இவர் கள் ஏழை மக்கள் மீது காட்டும் கரிசனமாகும்.குழந்தைகள் ஊட்டச்
சத்தின்றி வாடுவது என்பது கிராமப்புறங்களில் இன்னமும் தொடர்கிறது. ஒவ்வொரு
தனி நபரும் 2,153 கலோரி உணவு உட்கொண்டு வந்த நிலைமைகள் 2009-10ஆம்
ஆண்டில் 2,020 கலோரியாகக் குறைந்துள்ளது.
சுகாதாரம் தொடர்பாகவும்,
கிராமப்புற இந்தியா கடுமையாகப் பாதிக்கப் பட்டிருக்கிறது. உடல்
நலிவுற்றவர்களில் 28 விழுக்காட்டினர் எவ்விதச் சிகிச்சையும்
எடுத்துக்கொள்வதில்லை. ஏனெனில் அதற்கான வசதிகள் அவர் களிடம் இல்லை. இது
தலித்துகள் மத்தி யில் 37 விழுக்காடாகவும், பழங்குடியினர் மத்தியில் 32
விழுக்காடாகவும் இருக்கிறது. இவர்களில் பெரும்பான்மையினர் அரசின் சுகாதார
வசதிகளைத்தான் பயன் படுத்தி வந்தார்கள். சுகாதார மையங்களில் போதிய
உள்கட்டமைப்பு வசதி இல்லாமையும், சுகாதாரத்துறை பெரிய அளவிற்கு
தனியார்மயத்தை நோக்கித் தள்ளிவிட்டிருப்பதும், இவர்களைக் கடுமையாகப்
பாதித்திருக்கின்றன. தேசிய கிராமப்புற சுகாதார நிறுவனம் என்று ஒன்று
செயல்பட்ட போதிலும், கிராமப்புற சுகாதாரப் பாதுகாப்பு என்பது தகுதிவாய்ந்த
மருத்துவர்கள் மற்றும் மருத்துவர் அல்லாத பணியாளர்கள் ஒவ்வொரு மட்டத்திலும்
போதிய அளவிற்கு இல்லாமல் இருப்பதால் மிகவும் நலிவடைந்துதான்
காணப்படுகிறது. இவற்றை வலுப்படுத்திட க்கூடிய விதத்தில் மிகப்பெரிய
அளவிற்கு முதலீடுகள் தேவைப்படுகின்றன.
கிராமப்புறங்களில்
பள்ளிகளுக்குச் செல்லும் குழந்தைகளின் பதிவு அதிகரித்துள்ள போதிலும்,
ஆரம்பக் கல்வியைக் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 78 விழுக்காட்டிலிருந்து
இடைநிலைக்குச் செல்கையில் 29 விழுக்காடாக சரிந்துள்ளது என்று 2009-10
ஆண்டின் ஆய்வுகள் காட்டுவதாக அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
மாணவர்களின் கற்றறிந்த நிலையும் மிகவும் மோசமாக இருப்பதாகவும் ஐந் தாம்
வகுப்பு படிக்கும் மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாம் வகுப்பு,
இரண்டாம் வகுப்பு பாடங்களைக் கூட படிக்க முடியாமல் திணறுகிறார்கள் என்றும்
அறிக்கையில் சுட்டிக் காட்டப் பட்டிருக்கிறது. எட்டாம் வகுப்பு படிக்கும்
மாணவர்களில் பாதிக்கும் மேற் பட்டவர்களுக்கு கூட்டல், கழித்தல் கணக்குகளைக்
கூட போட முடியவில்லை என்றும் சுட்டிக்காட்டி இருக்கிறது.அதிகாரப்பூர்வமான
அறிக்கை களின்படி இருவித இந்தியர்களின் எதார்த்த நிலை இதுதான். இத்த
கையதோர் அமைப்பைதான் இந்தியக் கார்ப்பரேட்டுகள் முன்னெடுத்துச் செல்ல
விரும்புகிறார்கள். இத்தகைய அமைப்பைத்தான் பாஜகவின் பிர தமர் வேட்பாளர்
மிகச் சிறப்பாக மேற்கொள்வார் என்று இவர்கள் நம்புகிறார்கள்.மதவெறித் தீயைக்
கொழுந்து விட்டெரியச் செய்வதும், நவீன தாராளமயப் பொருளாதார
சீர்திருத்தங்களைத் தீவிரமாகப் பின்பற்றுவதும் நாட்டு மக்க ளின்
வாழ்வாதாரங்களைக் கடுமையாகத் துன்பத்திற்குள்ளாக்கும் என்பதிலும், நம் நவீன
குடியரசின் மதச்சார்பற்ற ஜனநாயக அடித்தளங்களை வேர றுத்து நாட்டின்
ஒற்றுமையையும் ஒரு மைப்பாட்டையும் குலைத்துவிடும் என்பதிலும் சந்தேகமில்லை.
எனவே, நம்மக்களுக்கும், நம் நாட்டிற்கும் சிறந்த தோர் இந்தியாவை
உருவாக்கிட நம் போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றிட வேண்டுமானால்
இவர்களின் இத்தகைய இழி நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.
(தமிழில்: ச.வீரமணி