Tuesday, September 10, 2013

எல்ஐசி முகவர்கள் சென்னையில் தர்ணா

சென்னை, செப். 10-இன்சூரன்ஸ் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பதை கண்டித்து சென்னையில் செவ்வா யன்று (செப். 10) எல்ஐசி முக வர்கள் தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர்.அகில இந்திய ஆயுள் காப்பீட்டு கழக முகவர் சங்கம் (லிகாய்) சார்பில் சென்னை அண்ணாசாலை யிலுள்ள எல்ஐசி தென் மண்டல அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடத் தினர்.
இதில், எல்ஐசி பங்களிப் புடன் முகவர்களுக்கு பென் சன் வழங்க வேண்டும், முக வர் நலன் நிதி மற்றும் பிஎப் உரிமம் வழங்க வேண்டும், பாலிசிதாரர்களை பாதிக் கும் வங்கிக் கணக்கு கேட் பதை திரும்பப் பெற வேண் டும், புதிய மன்ற விதிகளை ரத்து செய்ய வேண்டும், பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண் டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடைபெற் றது.
சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.ஏ.கலாம் தலை மையில் நடைபெற்ற போராட் டத்தில் லிகாய் சங்கத்தின் தென்மண்டல தலைவர் ஏ.வி.பெல்லார்மின், தென் மண்டல செயலாளர் எம். செல்வராஜ், அகில இந்திய செயல் தலைவர் எஸ்.எஸ். போத்தி, அகில இந்திய செய லாளர் பி.ஜி.திலிப், தமிழ் நாடு மாநில செயலாளர் எஸ்.சுதானந்தம், கேரள மாநில செயலாளர் டி.கே. விஸ்வன், சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் எம்எல்ஏ, தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்க பொதுச் செயலாளர் கே. சுவாமிநாதன், பொது காப்பீட்டு ஊழியர் சங்க பொதுச் செயலாளர் ஜி. ஆனந்த், ஃபெபி பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ் ணன், பிஎஸ்என்எல்யு உதவி செயலாளர் ஏ.ஜி.ஜெய வேல், லிகாய் சங்க சென்னை கோட்ட 2ன் செயலாளர் டி.ஜெயபாலன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலி யுறுத்திப் பேசினர்.இந்த தர்ணா போராட் டத்தில் தமிழகம், கேரளா, புதுச்சேரி மண்டலங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற் பட்ட முகவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment