Tuesday, September 10, 2013

இந்திய அரசியலில் ஓர் அபூர்வ மனிதர் ஜோதிபாசு
நூற்றாண்டு விழாவில் அ.சவுந்தரராசன் புகழாரம்

திருவாரூரில் நடைபெற்ற ஜோதிபாசு நூற்றாண்டு விழாவில் அ.சவுந்தரராசன் உரையாற்றுகிறார்.
திருவாரூர், செப். 9-
இந்திய அரசியலில் பன் முகத்தன்மையோடு செயல் பட்டு எளிமையாய் மக்க ளோடு வாழ்ந்த ஓர் அபூர்வ மனிதர் ஜோதிபாசு என திருவாரூரில் நடைபெற்ற தோழர் ஜோதிபாசு நூற்றாண்டு விழாவில் பங் கேற்று பேசிய சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தர ராசன் எம்எல்ஏ புகழாரம் சூட்டினார்.திருவாரூரில் இந்திய தொழிற்சங்கமைய (சிஐடியு) மாவட்டக்குழு வின் சார்பில் ஏற்பாடு செய் யப்பட்டிருந்த தோழர் ஜோதிபாசு நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசியதா வது,
மாணவர் ஜோதிபாசு:இந்திய விடுதலைப் போ ராட்டம் உக்கிரமாக நடை பெற்றுக்கொண்டிருந்தபோது தோழர் ஜோதிபாசு ஒரு மாணவர். இந்திய விடுதலை க்கு முன்பே இந்திய மக்க ளுக்கு பொதுவுடமை பாதைதான் அவர்களுக் கான வாழ்வுரிமையை பெற் றுத்தரும் என தீர்க்கதரிசன மாக முடிவெடுத்தார்.
தோழர் ஜோதிபாசு ஒரு மாணவராக இருந்தபோதே அவரால் இந்த முடிவை எடுக்க முடிந்தது என்பது அவரது தொலைநோக்கு பார்வைக்கு ஓர் எடுத்துக் காட்டு. அதேபோன்று 1962 களில் பொதுவுடமைக் கட் சிக்கு பெரும் நெருக்கடிகள் வந்தகாலத்திலும் கட்சியில் மிகச்சிறப்பாக பணியாற் றினார்.இரண்டாம் உலகப்போ ரில் ஹிட்லருக்கு எதிராக போராடி சோவியத்யூனியன் மக்கள் 2 கோடி பேர் உயிர் தியாகம் செய்தார்கள். ஹிட்லரின் பாசிசத்தை எதிர்த்து நடந்த இப்போ ரின் போது கம்யூனிஸ்ட் கட்சி கடுமையான அவ தூறுக்கு ஆளானது. கம்யூ னிஸ்ட் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டார்கள்.
அன்றைய நெருக்கடியான சூழலில் சட்டக்கல்வி பயின் றவரான பாரிஸ்டர் ஜோதி பாசு கோடிக்கணக்கில் சம் பாதிக்கும் வாய்ப்புள்ள தொ ழிலை உதறிவிட்டு கம்யூ னிஸ்ட் கட்சிக்குள் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டார். அவரது இந்த செயல்தான் அவரை ஓர் அபூர்வ மனித ராக உலகிற்கு அடையா ளம் காட்டியது.
தொழிற்சங்கப்பணி : கட்சியில் இணைந்த அவருக்கு அப்போது கட்சி கொடுத்த பணி இரயில்வே தொழிலாளர்களை சங்க மாக்கும் பணி. இவரது இந்த நடவடிக்கையை அவரது தந்தையாரும், குடும்பத்தின ரும் விரும்பாத நிலையிலும் அவர் எடுத்த முடிவில் பின் வாங்காமல் மக்களுக்காக உழைக்கத் தொடங்கினார்.
தொழிலாளர்ளிடம் நம் பிக்கையை பெற்று தொழிற் சங்க தலைவராக உயர்வது என்பது அவ்வளவு எளி தான காரியமல்ல. இப் போது போன்று அவர் தொழிற்சங்க பணி ஆற்றிய காலத்தில் நவீன வசதிகள் கிடையாது. கிழக்கு பிராந் திய ரயில்வேயில் சங்கம் அமைப்பதற்காக பல மைல் தூரம் தண்டவாளப்பாதை யில் நடந்து சென்றே சங்கம் கட்ட வேண்டியிருந்தது. மேலும் இரயில்வே தொ ழில் என்பது பிரிட்டிஷா ரின் கைப்பிடியில் இருந்த நேரம் அது.
அந்த நெருக் கடிக்கிடையில் அவர் ரயில் வே தொழிலாளர்களோடு இரண்டறக்கலந்து பணி யாற்றி சங்கத்தை கட்டினார். அப்போது இரயில்வே தொழிலாளர்களுக்கென்று தனியாக நாடாளுமன்ற, சட்டமன்ற தொகுதிகள் இருந்தன. அப்போது தோழர் ஜோதிபாசு சட்டமன்ற தொகுதி வேட்பாளராக போட்டியிட்டு இளம் வயதிலேயே சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய் யப்பட்டார். கிடைத்த வாய் ப்பை தனக்கென பயன்படுத் திக்கொள்ளாமல் தொழிலா ளர் நலனுக்காக உழைத்தார். இன்று சாதாரண பதவிக ளில் இருப்பவர்கள் எப்படி யெல்லாம் நடந்து கொள் கிறார்கள் என்பது நாம் அறிந்ததுதான்.
ஆனால் அவர் வாழ்வின் எத் தகைய உயர் பொறுப்புகளுக்கு வந்த போதும் அவரால் அந்த பொறுப்புகளுக்கு மரியாதை ஏற்படும் வண் ணம் வாழ்ந்து காட்டினார். அவர் எனக்கு பதவி வேண் டாம் என்று சொன்ன காலம் வரையில் தொடர்ந்து தான் போட்டியிட்ட தொ குதிகளில் வெற்றி பெற்று சாதனை மனிதராக திகழ்ந் தார்.அது மட்டுமல்ல. அவர் தனது உடல்நிலையை கார ணம் காட்டி சுமார் ஏழு ஆண்டுகாலம் தன்னை முதல்வர் பதவியிலிருந்து விடுவிக்கக் கோரி கட்சி யுடன் போராடினார். தான் இருக்கும்போது மாற்றுத் தோழரை முன்னிறுத்தி அந்த தோழருக்குப்பின் னால் பணியாற்றினார்.
இதன் காரணமாகவும் அவர் பெருமை மிக்க மனி தரானார். இன்றைய அரசி யல் உலகில் இப்படி ஒரு மனிதரைக் காணமுடியுமா? தனக்கு வந்த பிரதமர் வாய் ப்பைக்கூட கட்சியின் முடி வை ஏற்று, ஏற்க மறுத்தார். ஒரு மாபெரும் தலைவர் கட்சிக்கு கட்டுப்பட்டு நடந்தார்.
வெண்மணி : கீழவெண்மணியில் 44 உயிர்கள் நிலப்பிரபுக்களால் தீயிட்டுக் கொளுத்தி எரிக் கப்பட்டபோது அப்போ தைய காவல்துறை என்ன செய்தது? கைகட்டி வேடிக் கை பார்த்தது. காவல்துறை யின் கண்பார்வையிலேயே அந்தக் கொடூர படுகொலை நிகழ்த்தப்பட்டது.
1957 ஆம் ஆண்டு உலக வரலாற் றில் முதன்முறையாக தேர் தல் மூலம் ஆட்சியைப் பிடி த்து கேரளத்தின் கம்யூனி ஸ்ட் கட்சியின் அரசை நிறுவி முதலமைச்சரான தோழர் இ.எம்.எஸ் நம் பூதிரிபாடு, 1967 ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் துணை முதல்வராகவும், காவல்துறை அமைச்சரா கவும் பொறுப்பேற்று செயல்பட்ட ஜோதிபாசு ஆகியோர் செய்த முதல் வேலை போலீஸ் கொள்கை யில் மாற்றம் கொண்டு வந்ததுதான். முதலாளிகளுக் கும், தொழிலாளர்களுக்கு மிடையே தாவா ஏற்பட் டால் காவல்துறை போரா டும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
சட்டம், ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் மட்டுமே தலையிட வேண் டும் என உத்தரவு பிறப்பித் தார்கள்.ஒரு கட்டத்தில் ஜோதி பாசுவிற்கு எதிராக காவல் துறையே போராட்டம் நடத்தியபோது அவர்களை சங்கம் அமைக்க சொல்லி அவர்களையும் தொழிலா ளர்களாக பாவித்து நன் மைகளை செய்தார் தோழர் ஜோதிபாசு. அதேபோன்று அவரது ஆட்சிக்காலத்தில் தான் உள்ளாட்சி மன்றங் களுக்கு முறையாக தேர்தல் கள் நடத்தப்பட்டு மக்களு க்கு அதிகாரம் வழங்கப்பட் டது. அதைப்பார்த்துதான் மறைந்த பிரதமர் ராஜிவ் காந்தி நகர்பாலிகா சட்டத் தை கொண்டு வந்தார். இதன் காரணமாக தலித்துகள், பெண்கள், மலைவாழ்மக் கள் அதிகளவில் அதிகாரத் துக்கு வந்தனர். அதேபோன்று அவரது முக்கியமான சாதனை நிலச் சீர்திருத்தம் ஆகும்.
கங்கை நதி பாய்ந்தோடும் கடைசி மாநிலம் மேற்குவங்கம். இதன் காரணமாக அங்கு விவசாயம் செழித்தோங்கி யது. ஆனால் உழைக்கும் மக்களிடம் நிலம் இல்லை. நிலச்சுவான்தார்களிடம் நிலக்குவியல் இருந்து. நிலங் கள் பினாமியாக பெயர் மாற்றம் செய்யப்பட்டன. மத்திய அரசு வகுத்திருந்த சட்டத்தின் அடிப்படையி லேயே நிலக்குவியலை உடைத்து ஏழை எளிய, உழைப்பாளி மக்களுக்கு நிலங்களை பிரித்து வழங் கினர். நிலங்களை எடுத்துக் கொள்வதற்கான அதிகாரங் களை உள்ளூர் விவசாய சங்கங்களுக்கு அளித்தார்.
பிரிட்டிஷ் ஆட்சியாளர் கொண்டு வந்த சட்டம் என்பது இன்றளவும் முத லாளிகளுக்கு ஆதரவாகத் தான் உள்ளது. விடுதலை பெற்ற இந்தியாவிலும் நாம் இன்றும் தொழிற்சங்க உரி மைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறோம்.இந்திராகாந்தி படுகொ லை செய்யப்பட்டபோதும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போதும் எந்த ஒரு சட்டம் ஒழுங்கு பிரச்சனையும் மேற்கு வங்க மாநிலத்தில் உருவாகாமல் பார்த்துக் கொண்டார் ஜோதிபாசு. தனது செல்வாக்கை எந்த ஒரு சூழ்நிலையிலும் தனது குடும்பத்தினருக்காக பயன்படுத்திக்கொள்ளாத மாசற்ற தலைவராக அவர் வாழ்ந்தார்.
அவர் மறைந்த போதும் அவரது உடலை மருத்துவ ஆராய்ச்சிக்காக தானமாக வழங்கினார். அந்த அபூர்வ மனிதரின் பார்வையில் நமது பயணத் தை தொடருவோம். மக்க ளுக்காக நம்மை அர்ப் பணிப்போம். இவ்வாறு அ.சவுந்தரராசன் எம்எல்ஏ பேசினார்.

No comments:

Post a Comment