திவாலாகிறது அமெரிக்கா? : அரசு நிறுவனங்களைமூட வெள்ளைமாளிகை உத்தரவு
8 லட்சம் அரசு ஊழியர்கள் வெளியேற்றம்
வாஷிங்டன், அக்.1-
அமெரிக்காவில் அடுத்தாண்டிற்கான பட்ஜெட்டிற்கு போதிய நிதியில்லாத காரணத்தால் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் ‘ஒபாமா கேர்’ என்று அழைக்கப்டும் தனி நபர் சுகாதார காப்பீட்டு திட்டத்திற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய குடியரசுக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் வரவு செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.
குறிப்பிட்ட காலத்திற்குள் மசோதா நிறைவேறாத காரணத்தால் அத்தியாவசிய அரசுநிறுவனங்கள் தவிர மற்ற அரசு நிறுவனங்களை மூட வெள்ளை மாளிகை உத்தரவிட்டுள்ளது. இதனால் 8 லட்சம் அரசு ஊழியர்கள் சம்பளமின்றி கட்டாய விடுப்பில் அனுப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் தேதியன்று அமெரிக்காவின் நிதியாண்டு துவங்கும். அதற்கு முன்னதாக செப்டம்பர் 30ம் தேதி நள்ளிரவிற்குள், வரவு செலவுத் திட்டத்திற்கான ஒப்புதலை அந்நாட்டின் மேல்சபை எனப்படும் செனட் மற்றும் காங்கிரஸ் என்றழைக்கப்படும் பிரதிநிதிகள் சபை ஒப்புதல் அளிக்க வேண்டும்.
அதன் பின்னர் ஜனாதிபதி ஒப்புதலுடன் வரவு செலவுத் திட்டம் செயல்படுத்தப்படும். ஒரு வேளை ஒப்புதல் கிடைக்காத பட்சத்தில் அதிபர் தனக்கிருக்கும் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த திட்டத்தை அமலாக்கம் செய்ய முடியும். ஆனால் இந்த நடவடிக்கை எல்லாம் செப்டம்பர் 30ம் தேதி நள்ளிரவிற்குள் முடிந்து விட வேண்டும். தவறும் பட்சத்தில், முதல் கட்டமாக ’ஷட் டவுன்’ என்ற அடிப்படையில் நாட்டில் இருக்கும் அத்தியாவசியத் துறைகள் தவிர்த்து மற்ற துறைகள் மூடப்படும். அதில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்படுவார்கள்.
தற்போதைய நிலவரப்படி செனட் சபையில் ஒபாமாவின் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மையாகவும், பிரதிநிதிகள் சபையில் குடியரசுக் கட்சியினர் பெரும்பான்மையாகவும் இருந்து வருகின்றனர். இதனால் குடியரசுக் கட்சியினர் ஒப்புதலுடனே எந்த ஒரு மசோதாவையும் நிறைவேற்ற முடியும். தேவைப்படும் பட்சத்தில் ஜனாதிபதி தனக்குரிய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி மசோதாவை செயல்படுத்தலாம். பொருளாதார நெருக்கடிஅமெரிக்காவில் கடந்த சில மாதங்களாகவே பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருகிறது. அந்நாட்டின் கருவூலத்துறைச் செயலாளர் ஜேக் லீ, “அக்டோபர் 17ம் தேதி வரைதான் அரசின் செலவினங்களுக்கு பணம் கையில் இருக்கிறது.
தற்போது இருக்கும் அமெரிக்காவின் கடன் உச்சவரம்பான 16 லட்சத்து 70 ஆயிரம் கோடி டாலர் என்ற அளவை, 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி டாலர் அளவிற்கு உயத்தினால்தான் தாக்குப் பிடிக்க முடியும்” என்று கூறியிருந்தார் அல்லது கடுமையான நெருக்கடிகளை அமெரிக்க சந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து அந்நாட்டின் பட்ஜெட் அலுவலகக் குழுவும் இது குறித்து ஆராய்ந்தது. கருவூலத்துறையின் கூற்று சரியானதுதான். உடனே கடன் உச்ச வரம்பை உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து அந்நாட்டின் அதிபர் ஒபாமா குடியரசு கட்சியினருடன் கடன் உச்ச வரம்பை உயர்த்துவதற்கான பேச்சுவார்த்த்தையில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அதனை குடியரசு கட்சியினர் ஏற்றுக் கொள்ளவில்லை. பட்ஜெட் மசோதா தோல்விஇந்நிலையில் பிரதிநிதிகள் சபையில் செனட் குழுவால் தயாரிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டம் முன்மொழியப்பட்டது. எதிர்பார்த்தது போலவே குடியரசுக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக கடன் உச்சவரம்பை உயர்த்துவது, ‘ஒபாமா கேர்’ என்றழைக்கப்படும் சுகாதர காப்பீட்டு திட்டத்திற்கு நிதி ஒதுக்குவது உள்ளிட் விவகாரங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒபாமா முன்வைத்த மசோதாவிற்கு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 9 பிரதிநிதிகள் உள்ளிட்டு 228 பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். 221 பிரதிநிதிகள் ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் ‘ஒபாமா கேர்’ திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ரத்து செய்து, வரவு செலவுத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கும் தீர்மானம் நிறைவேறியது. ஆனால் இதனை ஒபாமாவின் ஜனநாயகக் கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்நிலையில் செனட்டின் ஒப்புதலுக்கு இந்த மசோதா கொண்டு செல்லப்பட்டது. அங்கு பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிராகரித்தனர்.
அங்கு நடைபெற்ற வாக்கெடுப்பில் ஒபாமா முன்வைத்த வரவு செலவுத் திட்டத்திற்கு 54 வாக்குகளும், பிரதிநிதிகள் சபையில் திருத்தப்பட்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக 46 வாக்குகளும் கிடைத்தன. இந்நிலையில் செப்டம்பர் 30ம் தேதி நள்ளிரவு வரை ஒருமித்த கருத்து ஏற்படவில்லை. எப்படியாவது குடியரசு கட்சியினரை சமாதனப்படுத்தி வரவு செலவு திட்டத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும் என ஒபாமா தரப்பில் முயற்சி செய்யப்பட்டது.
ஆனால் பலனளிக்கவில்லை. அரசு நிறுவனங்களை மூட உத்தரவு இந்நிலையில் அக்டோபர் 1ம் தேதி பிறப்பதற்கு சில மணித்துளிகள் இருக்கையில் வெள்ளை மாளிகையின் பட்ஜெட் இயக்குநர் சில்வியா மேத்யூஸ் பர்வெல், அரசு நிர்வாகங்களுக்குஒரு உத்தரவைப் பிறப்பித்தார். அதில் அமெரிக் காவில் உள்ள அத்தியாவசியத் துறைகளை
தவிர இதர அரசுத்துறைகள் படிப்படியாக மூடுவதற்கான நடவடிக்கையை தொடங்குங்கள் என உத்தரவிட்டார். அதன்படி மொத்தமுள்ள 21 லட்சம் அரசு ஊழியர்களில் 8 லட்சம் பேர் வேலையை விட்டு அனுப்பப்படுகின்றனர்.
பாதுகாப்புத் துறையில் பணிபுரியும் 4 லட்சம் பேரும், வணிகத்துறையில் உள்ள 40 ஆயிரத்து 200 பேரும், எரிசக்தித் துறையில் பணியாற்றும் 12 ஆயிரத்து 700 பேரும், போக்குவரத்துத் துறையில் உள்ள 18 ஆயிரத்து 500 பேரும் வெளியேற்றப்படுவார்கள்.மேலும், வெள்ளை மாளிகையில் பணியாற்றி வந்த 1265 பேரும், சுகாதாரத்துறையில் பணியாற்றும் 40 ஆயிரம் பேரும், உணவு மற்றும் மருத்துவ நிர்வாகத்துறையில் பணியாற்றுபவர்களில் 55 சதவீதம் பேரும் கட்டாய விடுப்பில் சம்பளமின்றி வீட்டுக்கு அனுப்படுகின்றனர்.
கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் சம்பளமின்றி பணியாற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் அரங்கேற்றப்படுகின்றன.இதற்கு முன்பு 1995 மற்றும் 1996ம் ஆண்டுகளில் பில்கிளிண்டன் ஆட்சியின் போது இதே நிலை ஏற்பட்டது. தொடர்ந்து 21 நாட்கள் நீடித்த இந்த நிலை, பின்னர் சரி செய்யப்பட்டது. அதே போன்று ஒபாமாவும் குடியரசுக் கட்சியினருடன் பேச்சு வார்த்தை நடத்தி, பல திட்டங்களை விட்டுக் கொடுத்து சமாதானத்தில் ஈடுபடுவார்.
அதன் பின்னர் புதிய வரவு செலவு திட்டத்துடன் நிலைமை சரி செய்யப்படும். ஆனாலும் அமெரிக்கா சிக்கியிருக்கும் பொருளாதார நெருக்கடியில் இருந்து நிரந்தரமாக மீண்டு வரமுடியாது. கடுமையான நெருக்கடியை சந்தித்தே தீர வேண்டும் என உலக பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment