Thursday, October 3, 2013

மோடி துதிபாட கையாட்கள் நியமனம்



குஜராத் மாநிலத்திலிருந்து 700 பாஜக ஊழியர்கள் ‘மோடியின் புகழ்’பாடுவதற்காக நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்பட இருக்கிறார்கள் என்று ‘ஓபன்’ என்னும் வார இதழில் திரேந்திரா கே ஜா என்பவர் எழுதியிருக்கிறார்.பாஜக-வின் மத்தியத் தலைமை நரேந்திர மோடியின் பெயரை பிரதமர் பதவிக்கு அறிவித்ததைத் தொடர்ந்து கட்சிக்குள் குடுமிபிடிசண்டை இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அதே சமயத்தில்,நரேந்திர மோடியின் லெப்டினன்டுகள் நாடு முழுவதும் உள்ள மக்களின்மனங்களில் ‘நரேந்திரமோடி இந்துத்துவாவின் சின்னம் மட்டும் அல்ல, ‘வளர்ச்சி’யின் நாயகனுமாவார்’ என்று பதிய வைப்பதற்காக கட்சி ஊழியர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்ப இருக்கிறார்கள். நன்கு பொறுக்கி எடுக்கப்பட்ட இவர்கள் அனைவரும் நரேந்திரமோடியின் நேரடிக் கட்டுப்பாட்டின்கீழ் செயல்படுவார்கள் என்றுகுஜராத் மாநில பாஜக தலைவர் ஒருவர் தெரிவிக்கிறார்.
தேர்தலையொட்டி மோடி நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொள்வதற்குமுன் இவர்கள் அவர் குறித்து மக்கள் மனதை நன்கு பதப்படுத்தும்வேலையைச் செய்ய வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.நரேந்திர மோடியைத் துதிபாடி துண்டுப்பிரசுரங்கள், குறுந்ததடுகள்தயாராக இருக்கின்றன. ‘‘குஜராத் வளர்ச்சிக்கான சிறந்த முன்மாதிரி(ரோல் மாடல்) மாநிலம் என்று உயர்த்திப்பிடிக்கும் வண்ணம் பதிவுசெய்யப்பட்ட துண்டுப்பிரசுரங்கள், குறுந்தகடுகள் தயாராக இருக்கின்றன. இவைகள் பாஜக-வின் மத்தியத் தலைமை ஒப்புதலுக்குப்பின்இவ்வாறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட ஊழியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று பாஜக-வின் குஜராத் மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.மோடிக்கு ஆதரவு நாடு தழுவிய அளவில் ‘அலை’யை உருவாக்குவதற்காகஅனுப்பப்படும் இத்தகைய ஊழியர்கள் ‘செய்ய வேண்டியதுஎன்ன?’, ‘செய்யக்கூடாதது என்ன?’ என்று ஒரு பட்டியலே கொடுக்கப்பட்டிருக்கிறது.
எடுத்துக்காட்டாக, இந்த ஊழியர்கள் கார்களில் பயணம்செய்யக்கூடாது என்றும், மக்கள் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்துவசதிகளையே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். அதேபோன்று ஓட்டல்களில் தங்குவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் முடிந்த அளவிற்கு கட்சி ஊழியர்களின்இல்லங்களிலேயே தங்கிக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டிருக் கிறார்கள். இவ்வாறு அனுப்பப்படும் ஊழியர்கள் பெரும்பாலும் கிராமப்பகுதிகளுக்கே சென்று வேலை செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தபோதிலும், குர்ஷீத் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோமற்றும் வாரணாசி செல்வதற்குத் தயாராக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார். ‘‘எங்களில் பலர் கிராமங்களில்தான் வேலை செய்யப் போகிறோம்,’’ என்று கூறிய குர்ஷீத், ‘‘நானும், வேறு சிலரும் மட்டுமே நகரங்களில் வேலை செய்யக் கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறோம்,’’ என்றும் கூறினார். காந்திநகரில் கட்சி வட்டாரங்களிலிருந்து வந்த தகவல்களின்படி மேற்படி ஊழியர்களின் பட்டியல் தில்லிஅசோகா ரோட்டில் உள்ள மத்திய அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும், அங்கிருந்து செயல்படுத்துமாறு கட்டளை வந்தபின் இவர்கள் புறப்பட்டுச் செல்வார்கள்என்றும் தெரிகிறது. இவர்களுடன் வைக்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்களும், குறுந்தகடுகளும் அனுப்பி வைக்கப்படும் என்றும் தெரிகிறது.மோடி இவ்வாறு நாடு முழுவதும் ஊழியர்களைத்தன் மாநிலத்திலிருந்தே அனுப்பி வைப்பதற்கு முக்கியகாரணம் என்ன? அவர் நாட்டின்பிற பகுதிகளில் உள்ள பாஜக எந்திரத்தை முழுமையாக நம்பாததே காரணமாகும். பாஜகவிற்குள் பிரதமர் வேட்பாளராக அறிவித்தது தொடர்பாககுடுமிபிடி சண்டை இப்போதும் நடந்து கொண்டிருந்தபோதிலும், தலைமை, மோடியைத்தான் பிரதமருக்கான வேட்பாளர் என்றுஅறிவித்துவிட்டது. அகில இந்திய அளவில் மற்ற மாநிலங்களில் உள்ளபாஜகவினரை கட்டுப்பாட்டில் வைத்திருக்கக்கூடிய அளவிற்குத் தனக்குப் பலம் இல்லை என்று மோடி கருதுவதுபோல் தோன்றுகிறது. அதன்காரணமாகத்தான் அவர் தன் மாநிலத்திலிருந்து ஆட்களை அனுப்பிவைக்கிறார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவின் தலைவராக தனக்குமிகவும் நெருங்கிய சகாவான அமித் ஷாவை மோடி அனுப்பி வைத்ததற்கு அதுதான் காரணம். அவர் சென்றபின்னர்தான் முசாபர்நகரில் முஸ்லிம் மக்கள் மீதான வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றன. அகில இந்தியஅளவில் தேர்தலில் வெற்றி பெறுவதற்குத் தனக்கு உத்தரப்பிரதேச மாநிலத்தில் கணிசமான இடங்கள் கிடைக்க வேண்டும் என்றநோக்கத்தோடுதான் அமித் ஷா அங்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அமித் ஷாவை உத்தரப்பிரதேச மாநிலத்திற்கு அனுப்பி வைப்பதுதொடர்பாக மத்தியத் தலைமை சென்ற மே மாதத்தில் அனுமதிஅளித்தபோது, பாஜகவிற்குள் இருப்பவர்கள், இல்லாதவர்களில்பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது. ஏனெனில் பின்பற்றப்பட வேண்டியதேர்தல் உத்திகள் என்பது இரு மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியானவை அல்ல. ஆயினும் மோடி அமித் ஷாவை அனுப்புவதில் மிக உறுதியாக இருந்தார்.
குஜராத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்கள் அனைத்திற்குப் பின்னாலும் அமித் ஷா இருந்தார். அதேபோன்று உத்தரப்பிரதேசத்திலும் உருவாக்குவதற்கான பொறுப்பு அமித் ஷாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவின் அரசியல் பொறுப்பை அமித் ஷா ஏற்றுக்கொண்டபின்னர்தான் மாநிலத்தில் முஸ்லீம் மக்களுக்கு எதிரான வகுப்புக் கலவரங்கள் நடைபெறத்துவங்கின. இதேபோல் மோடியின் ஆட்கள் 700 பேரும் நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும்அனுப்பி வைக்கப்பட்டு அவர்களும் தங்கள் செயல்களில் இறங்கிவிட்டால் நாடு என்னாகுமோ என்று அரசியல் நோக்கர்கள் அஞ்சுகிறார்கள்.- ச.வீரமணி.

No comments:

Post a Comment