நீங்களும் மீளலாம்
எங்களால்
மீள முடியும் என்றால் நீங்களும் மீளலாம் என்று புற்றுநோயால் அவதிப்படும்
பலலட்சம் நோயாளிகளுக்கு உற்சாகமான ஊக்கக்குரல் கொடுத்துள்ளனர் புற்றுநோயில்
இருந்து மீண்ட இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கும், பாலிவுட் நடிகை
மனீஷா கொய்ராலாவும் . அவர்கள் இருவரும் புற்றுநோய்க்கு மருந்தில்லை என்ற
வாதத்தை இருவரும் நிராகரித்துள்ளனர். எந்த கட்டத்தில் வியாதி
கண்டறியப்பட்டிருந்தாலும், நீங்கள் உடைந்து போகலாம். ஆனால் நீங்கள்
அதைப்பற்றிக் கவலைப்படாமல் மனதை திடப்படுத்தி எதிர் போராட்டம் நடத்துங்கள்
யுவியால் முடியும் என்றால் உங்களாலும் முடியும் என்று யுவ்ராஜ்சிங்
கூறினார். கொல்கத்தா ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நடந்த ‘பிரதிக்யா,
கேன்சர் மித்ஸ் ரியலிட்டி’ என்ற தலைப்பில் நடந்த கலந்துரையாடல்
நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொண்டனர். புற்றுநோயில் பிழைத்தவர் என்று
தான் அழைக்கப்படுவதை மனீஷா விரும்பவில்லை என்று கூறினார். அது கோழைத்தனமான
வார்த்தை என்று குறிப்பிட்ட அவர் தன்னை ஒரு புற்றுநோய் எதிர்போராளி என்று
அழைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். புற்றுநோய்க்கு ஆளாகி, சிகிச்சைக்குப்
பின் நலமாக இருக்கும் பலரை தனக்கு தெரியும் என்றும் அவர் கூறினார். எனவே
எந்தவொரு சவாலையும் எதிர்த்து போராடுவோம் என்று மனீஷா கொய்ராலா
தெரிவித்தார்.
Friday, October 4, 2013
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment